செவ்வாய், ஜூன் 08, 2004

No Judgments... Only Bull!

இணையக் குழுக்களில் கலக்குபவர்களுக்கு பத்து கட்டளைகள்

1. குழுவை வழிநடத்துபவர் டெஸ்ட் மெஸேஜ் எழுதினால் கூட அவசியம் ஒரு வார்த்தையாவது சிறப்பாக இருந்தது என்று பதில் எழுதவும்.

2. குறை கூறி எழுதுவதாக இருந்தால் பகிரங்கமாக எழுதவும். நிறையோ, நன்றியோ (விதி #1 விலக்கு) சொல்வதாக இருந்தால் தனிமடல் அனுப்பவும்.

3. 'யாருமே எழுத மாட்டேன் என்கிறீர்களே' என்று அடிக்கடி விசனப்படவும்.

4. இந்தக் குழுவில் பேசுவதை வேறொரு இடத்திலும், அங்கு நடக்கும் விவாதத்தை மற்றொரு குழுவிலும், இரண்டுக்கும் சம்பந்தமில்லாத பிறிதொரு மடற்குழுவிலும் பதிலாகவோ, forwardஆகவோ கொடுக்கவும்.

5. புதிதாக வலைப்பதிவோ, இணைய சஞ்சிகையோ, மடலாடற்குழுவோ, மூன்று கிலோபைட் வலைபக்கமோ அமைத்தால், அனைத்துக் குழுமங்களுக்கும் அறிவிப்பு செய்யவும்.

6. யாராவது #1 விதியை மீறினால், 'இந்தப் பிரச்னை இங்கு விவாதிக்க ஏற்றதல்ல' என்றோ, 'உங்களுக்குப் பண்போடு எழுதவரவில்லை' என்றோ கண்ணியமாக பதில் போடவும்.

7. குழுவில் நீண்ட காலம் வசிக்கும் இன்னொருத்தர் மூலம் அனுகூலமான இண்ட்ரோ மடல் ஒன்று அனுப்ப செய்யவும்.

8. 'எனக்குத் தமிழ் தட்டச்சே வர மாட்டேங்குது', 'நான் உங்களை அண்ணி என்று கூப்பிடலாமா' போன்ற பிரயோகங்கள் உங்கள் அறிமுக மடலில் வைத்துக் கொள்ளவும்.

9. நல்லசிவம், தா. சங்கரன் என்று முகமூடி போட்டால் கேவிஆரின் கட்டளைகளைப் பின்பற்றவும்.

10. கோபித்துக் கொண்டோ, கோபமில்லாமலோ தனிக்குழு நடத்தப் போனால், வரும் ஆரம்ப 'வாழ்த்து; மடல்களுக்கு எல்லாம் 'தங்கள் காவியம் அற்புதம்', 'உங்கள் படைப்பு இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்' என்று திக்குமுக்காட வைக்கவும். (மறந்தும் 'கவிதை' அல்லது 'கதை' நன்றாக இருந்தது என்று தவறாக எழுதி, கட்டுரையாளரை புண்படுத்த வேண்டாம்).

3 கருத்துகள்:

Paa Raa'vin 9-kattaLaikaL maathiriyO enRu payamaayirungthathu. nalla vELai. appadi yillai.

Freedom should never be compromised. I feel, blog is a private space to express oneself. The readers have to freedom to read what they want and the writers have the freedom to write what they want. If you don't like a certain blog...don't read. Blog readers have to learn to tolerate other bloggers views, writing styles, ideas, format, content. Rules. Rules are every where..lets not bring them into blogspace also.

தலைப்பை பார்த்தாலே நான் சொல்ல வந்த தொனி புரியுமே கணேஷ் ;)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு