திங்கள், ஜூலை 19, 2004

கண்ட (!) ஹிந்திப் படங்கள்

1. மர்டர் - வந்தியத்தேவன் சொல்கிறாரே என்று பார்க்காமல் இருந்துவிடாதீர்கள். ஹிந்தி சினிமாவில் ஒரு மைல்கல் முயற்சி :P

2. மே ஹூ நா? - நிச்சயம் பார்க்கலாம்; கஷ்டப்படாமல் சிரிக்கலாம்; லாஜிக் கேட்காமல் ரசிக்கலாம். ஷெட்டிக்கு பதில் கமல் ஒத்துக் கொண்டிருந்தால்....!

3. ஹம் தும் - 'When Harry met Sally' பார்க்காவிட்டால் லயிக்கலாம்; இல்லாவிட்டாலும், ஒருமுறையாவது பார்க்கலாம்.

4. யுவா - ஆய்த எழுத்துப் பார்த்துவிட்டால், தவிர்த்து விடவும்.

5. கல் ஹோ ந ஹோ - தவிர்த்து விடலாம்; காதல் படங்கள் மிகவும் விரும்புபவரைக் கூட தாலாட்டி தூங்க வைக்கும்.

6. முன்னாபாய் எம்பிபிஎஸ் - விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை; நிறையவே செண்டிமெண்ட்டலாய் தொட்டார்கள்; காதல், ஆக்ஷன் மட்டுமே வந்த ஹிந்திப் படவுலகின் சூப்பர் ஹிட்டான சாதாரண காமெடி.

காணவேண்டுமா? விட்டு விடலாமா?

1. சமேலி - கரீனா கபூர் கலக்கியிருப்பதாக பேச்சு.

2. Kyun! Ho Gaya Na... - அமிதாப், ஐஸ்வர்யா, விவேக் ஓபராய்...

3. ரெயின் கோட் - ஐஸ்வர்யா, தேவ்கன்; ஆனால்... மீண்டும் புளித்துப் போன பழைய காதலர்களின் சந்திப்பு.

4. லக்ஷ்யா - ரொம்ப நாளாச்சு ஹ்ரிதிக் படம் பார்த்து!

5. வீர் சாவர்க்கர் - அமெரிக்காவில் கிடைக்குதா?

6. மானசரோவர் - Talks about coincidences that hurt people என்கிறார்கள். கேட்க நன்றாயிருக்கிறது. பார்க்க?

7. மீனாக்ஸி - எம்.எஃப். ஹுசேன் ;-)

8. மஸ்தி - மூன்று திருமணங்கள்... ஒவ்வொன்றும் ஒரு விதம் :P பார்க்க வேண்டும்

9. அப் தக் ச்சப்பன் - நானா படேகர் + ராம் கோபால் வர்மா

10. (மலையாளம்) Vismayathumbathu - பாசில் + மோகன்லால்; Caption கிடைக்கும் டிவிடி வேண்டுமே :)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு