திங்கள், ஜூன் 07, 2004

பாரா-க்களுக்கு பத்து கட்டளைகள்

குறிப்பு: எழுதுவதற்கு எவ்வளவோ முக்கியமான விஷயம் இருக்கிறது. சனிக்கிழமை பார்த்த குறும்பட விழா, அவற்றை குறித்த பிரதிபலிப்புகள், தொலைந்துபோன தாகூரின் மெடல்களின் கண்டுபிடிப்பு, காஷ்மீரில் கல்யாணச் செலவுகளுக்கு விதித்த தடா, தவணை அட்டைகளைத் திருடும் புதிய கணினி வைரஸ், குல்தீப் நய்யாரின் ராஜ்ய சபா எம்பி தேர்தலுக்கான நியாயமான மனு, இஷா கோபிகர் நடிக்கும் கேர்ள்ஃப்ரெண்ட், வாரசுரபி அனுப்பியது எரிதமா என்னும் எண்ணம், சென்னைக்கு வரும் இண்டெல் தொழிற்சாலையும் அதனால் என்ன நனமை என்னும் கேள்வி, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் #8 என்று வரிசைப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி ரேகனின் வாழ்க்கை+மரணம், என்.ஆர்.ஐ. எம்பி மது யக்ஷி குறித்த மனவோட்டங்கள், தலைபத்து 'போதை தெய்வங்கள்' வரிசையில் இடம்பிடித்த இந்தியர், நியு ஜெர்ஸிக்குப் போகும்பொழுது 'பிபி துப்பாக்கி'யால் சுடப்பட்டதால் உடைந்த ரியர் வ்யூ கண்ணாடியின் சோகக் கதை, பயணத்தின் போது வாசித்த ஹார்வார்ட் கல்லூரி பத்திரிகை 'எச்-பாம்ப்', அதற்கு முன் ஊர் சுற்றிய வேகாஸ், என்று எக்கச்சக்க அனுபவம் இருக்க, பாராவுக்கு ஒரு பதில் பத்து:

1. சன் டிவி நியுஸ், ஹிந்து தலையங்கம், ரீடிஃப் செய்திகள் எல்லாம் அனைவருக்கும் இணையத்தில் கிடைக்கும். அதன் மறுபிரதிபலிப்பாக வலைப்பதிவு வைத்துக் கொள்ளாதீர்கள்.

2. என்.பி.ஆர். நடத்தும் 'கனெக்ஷன்',ஃபாக்ஸ் கொடுக்கும் 'ஓரெய்லி ஃபாக்டர்', பிபிசி ஒளிபரப்பும் 'உலகக் காதல் திருமணங்கள்', எண்டிடிவி நிகழ்ச்சிகள் போன்றவை இணையத்தில் எளிதாகத் தட்டுப்படாது. அதை வைத்து வலைப்பதியுங்கள்.

3. இருபத்தோராவது பதிவு, எழுபத்தி எட்டாவது பதிவு போன்றவை நல்ல விஷயம்தான். ஆனால், கட் அவுட் வைத்து marquee எல்லாம் போட்டு விளம்பரபடுத்தாமல் ஒரு ஓரத்தில் அதை சொன்னால் போதும்.

4. இணையத்தில் படிக்கும்போது நாலு கிலோபைட்களுக்கு மேல் ஒரே தடவையாகப் படிப்பது கொஞ்சம் சிரமம். அந்தப் பக்கம் பாஸ் வருவார்; இந்தப் பக்கம் மின்னஞ்சல் வரும்; ஆபீஸ் ஃப்ரிட்ஜில் இலவச டோனட் (இனிப்பு வடை) இருப்பதாக அறிவிப்பு வரும் - பத்தி நிமிடத்திற்குள் பறக்காவெட்டியாக கொத்தாக விட்டால் மற்ற சகாக்கள் ஏப்பம் விட்டு விடுவார்கள். இந்த மாதிரி இடைஞ்சல்களுக்கு நடுவில் பொம்மையே இல்லாமல் நாற்பது கிலோபைட் படிப்பதற்கு பதில், பகுத்து வெளியிடுங்கள். எங்கே விட்டோம் என்பதும் எளிதில் பிடிபடும்.

5. இன்னொருவர் கருத்தை எதிர்க்க வேண்டுமானால் உங்க எழுத்திலேயே மறுத்து எழுதுங்கள். ஆதாரபூர்வமான வாதங்கள் எடுத்து வைக்காமல், 'வாய்மை எனப்படுவது...' என்று குறளையும், சீவக சிந்தாமணியையும், இன்னா நாற்பதையும் துணைக்கு அழைக்காதீர்கள்.

6. எப்பொழுதாவது ஒரு மாட்ச்சுக்குக் காப்டன் ஆகும் ட்ராவிட் போல், என்றாவது ஒரு பதிவு எழுதிவிட்டு, அதை தமிழில் இயங்கும் அத்தனை குழுமங்களுக்கும் பிட் நோட்டிஸ் அனுப்பாதீர்கள்.

7. முகம் தெரியாமல் எழுதத் விரும்பினால், பிறரின் ட்ரேட்மார்க் உபயோகங்களை அள்ளித் தெளித்து விடுங்கள். ஆனந்த் ராகவின் 'அபிவாதயே', எல்லே ராமின் 'கபாலி', போன்ற பிரயோகங்கள் வைத்துக் கொண்டு, அவர்தானா இவர் என குழப்படியுங்கள்.

8. வலைப்பூ ஆசிரியர் ஆனால் சன் டிவி டாப் 10 போல் இல்லாமல், ஜெயா டிவி தொகுப்பாளர் போல் வலைப்பதிவுகளை விமர்சியுங்கள்.

9. உங்களுக்கு பத்து மாதம் முன்பு வந்த ஈமெயில், எட்டு நாள் முன்பு வந்த தொலைபேசி உரையாடல், முந்தாநாள் அடித்த அரட்டை எல்லாம் நண்பர்களின் அனுமதி வாங்கி கொண்டு பொதுசபையில் போடுங்கள்.

10. இந்த மாதிரி தலை பத்து முதல் எந்த விதமான அட்வை?களையும் சீரியசாக அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள்.


6 கருத்துகள்:

ரியர்வியூ மிர்ரர் கதை என்ன?(பட்டியல் *எதையும்* படிக்கலை; படிக்கிறதாவும் இல்லை :-))

"Post a Comment" link கேட்டேனே?...

"Post a Comment" எப்படி கொடுப்பது என்று தனி மடலில் விசாரித்து இருக்கிறேன். சொல்லிக் கொடுங்க!

பிபி துப்பாக்கி குறித்து விவரம் சேர்த்து வருகிறேன்:
http://entertainment.howstuffworks.com/question649.htm
http://www.boston.com/news/local/massachusetts/articles/2004/06/02/car_damage_on_i_91_possibly_caused_by_bb_gun_police_say/

இன்சூரன்சோடு பேசி முடித்துவிட்டு எழுதுகிறேன்...

paththaavathu kattaLai yenna PAA RAA vin "Solla Marantha KattaLai" mathiri irukku?

Font sizeஐ கொஞ்சம் பெரிசா போட்டுத் தொலைங்கப்பான்னு 11-ஆவதா ஒண்ணு சேத்திடுங்க அண்ணாச்சி.

அது என்ன post a comment?

நீங்க பின்னூட்டுவதுதான் 'போஸ்ட் எ காமெண்ட்' என்று நினைக்கிறேன்... இப்படி எல்லாம் சந்தேகம் வருதே உங்களுக்கு!?

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு