பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கிழக்கு வாசல்
இன்று (ஜூன் 4) பிறந்த நாள் கொண்டாடும் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜூன் 2 பிறந்த இளையராஜாவின் கூட்டணி கோலோச்சும் ஒரு பாடல்:
பச்ச மலப் பூவு
நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறையேது
நீ நந்தவனத்தேரு
அழகேப் பொன்னுமணி
சிரிச்சா வெள்ளிமணி
கிளியேக் கண்ணுறங்கு
தூரி... டூரி...
---
காற்றோடு மலராட
கார்குழலாட
காதோரம் லோலாக்கு
சங்கதி பாட
பஞ்சணை நேரம் ('தரவும் தெரவும் உதவட்டுமே' மாதிரி உறுதியில்லை)
கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க
கொண்டு வரும் ராகம்
நிலவ வான் நிலவை நான் புடிச்சுத் வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன்
---
பூநாற்று முகம் பார்த்து
வெண்ணிலா நாண
காணாமல் தடம் பார்த்து
வந்தவழி போக
சித்திரத்து சோலை
முத்து மணி மாலை
மொத்தத்திலே தாரேன்
துக்கம் என்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணிலே மீன் பிடிச்சு சேலை தெச்சு தாரேன்
('மன்றம் வந்த தென்றலுக்கு' மற்றுமொரு ரசனையான பாடல். எஸ்.பி.பி+இளையராஜா என்றவுடன் உங்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும் பாடல் எது?)
ஒண்ணா, ரெண்டா?
வுட்டா "மடை திறந்து" பாடிபுடுவேன் ஜாக்ரதை :-)
சொன்னது… 6/04/2004 01:26:00 PM
எனக்கு எல்லாம் மற்ற காம்பினேஷனில் மட்டுமே தோன்றியது... 'வண்ணங்கொண்ட வெண்ணிலவே' (எஸ்.பி.பி.), 'பௌர்னமி நேரம்' (சங்கர்-கனேஷ்), சிப்பி இருக்குது, கடவுள் அமைத்து வைத்த மேடை, (எம்.எஸ்.வி.), காதல் ரோஜாவே, ஒருவன் ஒருவன் முதலாளி, (ரெஹ்மான்)தான் டக்கென்று தோன்றுகிறது...
சொன்னது… 6/04/2004 01:58:00 PM
Save us a click. Add "Post a comment" link :(
சொன்னது… 6/04/2004 03:36:00 PM
பாடகர் எஸ் பி பி க்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக .. :)
சொன்னது… 6/04/2004 04:22:00 PM
எஸ்.பி.பி + இளையராஜாவிலே புடிச்ச பாட்டுன்னு ஒண்ணை மட்டும்
கேக்கறீங்களே? நியாயமா? :-) சட்டுனு நினைவுக்கு வருவது " இளமை எனும் பூங்காற்று"
சொன்னது… 6/04/2004 06:21:00 PM
என் நினைவில் நிற்பவை: "மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..? ","பனி விழும் மலர்வனம்"," மற்றும் எண்ணிலாடங்கா " நிலவுப் பாட்டுக்கள் "...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலா & ராஜா !
சொன்னது… 6/05/2004 01:35:00 AM
கருத்துரையிடுக