வியாழன், ஜூன் 03, 2004

இந்தியா டுடே - ஜூன், 2, 2004

ஆசிரியரிடமிருந்து....

  • இது தியாகமா இல்லை காங்கிரசின் ஒரே பிரச்சாரகரான சோனியா காந்தி மக்களின் தீர்ப்புக்குச் செய்த துரோகமா?
  • இது உணர்ச்சிமேலீட்டால் எடுத்த முடிவா அல்லது சாதுர்யமான முடிவா?
  • இது யதார்த்தத்தைப் புரிந்து கொண்டதன் விளைவா அல்லது பதவி பயமா?
  • தனது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்தாரா அல்லது தனது வரம்பைப் புரிந்து கொண்டு விலகினாரா?

இதற்கான விடை புதிரான சோனியாவுக்கு மட்டுமே தெரியும்.


போஸ்டரில் தொடரும் தேர்தல் ரகளை - இந்து தமிழர் முண்ணனி
  • தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா
    கன்னட கோமாளி ரஜினியை தூக்கி எறிந்த தமிழ் மக்களுக்கு
    நன்றி! நன்றி! நன்றி!
  • பாசிச பார்ப்பணவெறி பிடித்த
    பா.ஜ.க. அ.தி.மு.க. ஒழிந்தது
    இனி இந்தியா ஒளிர்கிறது
    ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு
    நன்றி! நன்றி! நன்றி!



பிரமிள் படைப்புகள்
தொகுப்பாசிரியர்: கால. சுப்ரமணியம்; வெளியீடு: அடையாளம்; பக்கங்கள்: 472; விலை: ரூ. 210/-
வெங்கட் சாமிநாதன்: "60களில் 'கோடரி' என்ற தொடக்கம் ஒரு தீர்க்கமான பார்வையையும் தேச, இன, மொழி வரம்புகள் கடந்த மனிதாயத்தையும் காட்டியது. 'சந்திப்பு', 'லங்காபுரி' போன்றவை பொதுவாக எழுதிய நல்ல எழுத்துக்கள். பெரிதும் உவந்து பேசப்படுபவை 'ஆயி', 'பிரஸன்னம்', 'காடன் கண்டது' போன்றவை. நிறைய சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள், விமர்சனம் என அவர் எழுத்து பலவாறாக இருந்த போதிலும், அதிகம் கவிஞனாகவும் அதை அடுத்து விமர்சகராகவுமே அவர் அறியப்பட்டார்."


அம்பானி: ஒரு வெற்றிக் கதை - என் சொக்கன்
ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்புபவராக தன் வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் மாபெரும் தொழிலதிபராக உயர்ந்த அம்பானி, வெற்றிக்காக பின்பற்றிய வழிமுறைகள் ஒரு சினிமாவுக்கே உரிய விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கொண்டவை. அந்த விறுவிறுப்பு குறையாமல் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் சொக்கன்.

3 கருத்துகள்:

Your blog has introduced me to many new books and thoughts. I am waiting to get hold of these books. One advantage of being(or knowing) Tamil is huge number of books, diversified thoughts and cheap price! I wanted to comment in Tamil but couldnt get how :(

ஒரு தமிழ் blog ஆரம்பியுங்க சஞ்சீத் :)

தமிழில் தட்டச்ச ஈ-கலப்பை இறக்கிக் கொள்ளலாம். அல்லது சுரதா பொங்குதமிழ் உதவியை நாடலாம்.

தமிழ் சம்பந்தப்பட்ட எந்தவிதமான உதவியையும் நாட இ-உதவி யாஹு குழுமத்தில் சேர்ந்துடுங்க (http://groups.yahoo.com/group/e-uthavi/)

¸ñÊôÀ¡¸,Á¢¸ Å¢¨ÃÅ¢ø !

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு