பாராவின் கட்டளைகளைத் தொடர்ந்து வலைப்பதிவுகளுக்கு என்று ஏதாவது தார்மீக நெறிகள் இருக்கிறதா என்று தேடியபோது, இந்த வழிகாட்டுதல்கள் கிடைத்தது.
அவர்கள் கட்டளைகளின் சாராம்சம்:
நேர்மை + நியாயம்
திருடாதே!
ஆதாரம், நன்றி, சுட்ட இடம் எங்கே என்பதை சொல்லி விடுங்கள்.
பரபரப்பு தவிர்.
வதந்தி வேண்டாம்.
எது உங்கள் கருத்து, எது பட்டாங்கு (fact) என்பதை தெளிவாக்கவும்.
தீங்கின்மை
பாதிக்கப்படுபவர்களை கருத்தில் கொள்.
தனி மனித சுதந்திரத்தில் தலையீடு கூடாது.
பொறுப்பு
தவறுகளை திருத்திக் கொள்.
விளம்பரதாரர்களுக்காக பதிவுகளை மாற்றாதே.
சக வலைப்பதிவர்களின் ஒழுங்கீனமான செய்ல்பாடுகளை அம்பலப் படுத்து.
மற்றவர்களுக்கு சொல்லும் உயரிய நியதிகளை நீ முதலில் பின்பற்று.
கொசுறு: பாரா முன்பொரு நாள் கொடுத்த பிடிக்காத பத்து
கருத்துரையிடுக