புதன், ஜூன் 16, 2004

0.004" வாமன வித்தியாசம்

இந்தப் பதிவு வயது வந்தோர்களுக்கு மட்டுமே ஏற்றது. கணேஷ் சந்திரா போல் இருபத்தொன்று வயதுக்குக்குக் கீழ் இருப்பவர்கள் தவிர்த்து விடலாம்.


Viveka Babaji -வீட்டில் இருக்கும் கருப்பு-வெள்ளை டிவியில் அந்த விளம்பரம் வந்தால் அணைத்து விடுவார்கள். செய்திகளுக்கு முன் வரும் 'நிரோத்' விளம்பரம் சில காலத்துக்குப் பின் அனுமதிக்கப் பட்டது. என்ன சொல்ல வருகிறார்கள், எதற்கு பயன்படுத்தலாம் என்பது ஓரளவு புரிந்திருந்தாலும், சுய தேடலும் ஆர்வமும் மிகுந்தது மட்டுமே மிச்சம். செய்தித்தாள்களில், விளம்பரப் பலகையில் என்று நிறைய இடங்களில், இருவர் கை கோர்த்து - பீச் மணலில் அந்தி மயங்குவதை, ரசிப்பதை பார்க்கலாம். அதற்கும் நிரோத்துக்கும், குடும்ப கட்டுபாடுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்காத அப்பாவிகளாக நாங்கள் மூவரும் இருந்தோம். இந்த மாதிரி விஷயங்களை விளக்குவதற்காகவேனும் ஆறாம் வகுப்பில் இருந்தே செக்ஸ் எஜுகேஷன் வர வேண்டும் என்று காரசாரமாக விவாதிப்போம். எங்களுடன் வம்பு செய்யும் 10-டி பசங்களுக்குக் கூட அதில் கருத்தொற்றுமை நிலவியது.

ஸ்கூலில் இருந்து திரும்பிவரும் வழியில் உள்ள பெட்டிக்கடையில் நிரோத்தை கேட்டுப் பெறுவது என்று நண்பர்கள் முடிவெடுத்தோம். ஸ்டிக்கர்களுக்கும், ஐஸ்-க்ரீம்களுக்கும் மட்டும் செலவு செய்யும் பணத்தை சேமித்து, ஒரு பாக்கெட் வாங்கி மூவரும் அலசலாம் என திட்டம். கடைக்காரன் கை விரித்து விட்டான். ·பார்மஸியில் விசாரித்து பார்த்தவுடன், அவர், என்னுடைய அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். அந்த ·பார்மஸி எங்களுக்கு ராசியானது இல்லை. வீட்டை விட்டுத் தள்ளி மெயின் ரோடில் இருப்பதாலும், அங்கு மருந்து வாங்கிய ஒரு முறை - எனக்கு நோய் குணமாகததாலும், அந்தப் பக்கம் ·பைவ் ஸ்டார் வாங்கக் கூட கால் வைக்க மாட்டோம். அவருக்கு எப்படி என்னையும், என்னுடைய அப்பாவையும் அடையாளம் தெரிந்தது என்பது, இன்னும் எனக்குத் தெரியாது.

பிலானி போய் இறங்கி, 'மோகம் முப்பது நாள்' ராகிங் முடிந்து, சீனியர்களுடன் சமபந்தி போஜனம் ஆரம்பித்த பிறகு, என்னுடைய நெடுநாள் ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பு அரங்கேறியது. நிரோத் என்ற் அல்பதனமாய் சிந்திக்காமல், மூட்ஸ் வாங்கி ஆளுக்கொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டது குறித்து சொல்ல வெட்கமாய் இருக்கிறது. பூஜா பேடிகளும், தீப்தி பட்நாகர்களும் இருந்தால்தான் பயன்படும் என்பது வாங்கிய பிறகுதான் தெரிகிறது. இப்பொழுது இங்கு எழுத வந்தது அது குறித்து அல்ல.

ஆணுறைகளில் நடக்கும் புரட்சியை குறித்து அறிமுகம் செய்வதே இந்தப் பதிவின் நோக்கம். ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. வழக்கமான அமெரிக்க என்.பி.ஏ கூடைப்பந்து, சவுத் பார்க் சிலாகிப்பு எல்லாம் முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் ஸ்வீடனில் ஆணுறை வழங்கும் அரிய திட்டத்தை சொன்னார்கள். அமெரிக்காவின் கல்லூரிகளிலும் இது போன்ற திட்டங்கள் இருக்கிறது. இலவச ஆணுறை, சல்லிசான விலையில் கருத்தடை சாதனங்கள் என அனைத்தையும் விடுதியின் வாசலிலேயே டெலிவரி கொடுத்து விடுவார்கள். இலவசமாகக் கொடுக்கும் ஆணுறையின் அகல, நீளங்களை ஹார்வார்ட் மாணவர்களின் H-Bomb நடத்திய அலசலுக்குப் பேச்சு தாவியது. இலவசமாக தரப்படும் ஆணுறை 0.007 இன்ச் தடிமனாக இருக்கிறது என்பதே அந்தக் கட்டுரையின் முக்கிய புலம்பல். அவர்களுக்கு உலகின் தலை பத்து காண்டம் பட்டியலில் இருந்து சில ஆணுறைகள் மட்டுமாவது சகாய விலைகள் விற்கப்பட வேண்டும் என்று முழங்க ஆரம்பித்தனர். சராசரி ஆணுறையின் தடிமன் 0.003" மட்டும்தான்.

எனக்குத் தெரிந்து எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்காக, முள் வைத்து, கொம்பு கொடுத்து, முனை நீட்டி, கோடு போட்டு, இருட்டில் தகதகத்து, கலர் கலராய், டிஸைனர்களின் வரிகள் போட்டு, யானை போல், குதிரை போல் விதவிதமான வடிவங்களில் விற்பதை லோக்கல் ·பார்மஸியில் அலசியிருக்கிறேன். பாட்டுப் பாடும் ஆணுறைகள் கூட பார்த்திருக்கிறேன். சமீபத்தில் பாக்கெட் வைத்தவை கூட விற்பனைக்கு வந்ததாக கேள்பட்டிருக்கிறேன்.

ஆனால், 0.004" கொடுக்கும் அனுபவத்துக்கும்; 0.007" பயன்படுத்தினால் கிடைக்கும் அனுபவத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம், இருவருக்கும் இடையே இருந்துவிடப் போகிறது!?! தெரிந்தால் ஒரு பதில் போடுங்க :)

4 கருத்துகள்:

//எனக்குத் தெரிந்து எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்காக, முள் வைத்து, கொம்பு கொடுத்து, முனை நீட்டி, கோடு போட்டு, இருட்டில் தகதகத்து, கலர் கலராய், டிஸைனர்களின் வரிகள் போட்டு, யானை போல், குதிரை போல் விதவிதமான வடிவங்களில் விற்பதை லோக்கல் ·பார்மஸியில் அலசியிருக்கிறேன். பாட்டுப் பாடும் ஆணுறைகள் கூட பார்த்திருக்கிறேன். சமீபத்தில் பாக்கெட் வைத்தவை கூட விற்பனைக்கு வந்ததாக கேள்பட்டிருக்கிறேன்.//

ஏனுங்கண்ணா, இப்டில்லாம் மாத்திரை செய்றாங்களா என்ன?

நீங்க என்ன பேசறீங்க அங்கிள்? :-))

(ஹாஸ்டல்ல ஒர்த்தன் பொறந்த நாளுக்கு பலூன்(ஆமா இதுலதான்) கட்டி, வார்டன் தற்செயலா ரவுண்ட்ஸ் வர்றப்போ பாத்து நடந்த கூத்தெல்லாம் இங்கெ வாணாம் :-) )

பாலாஜி..
என்ன ஒரே அடல்ட்ஸ் விஷயமாவே இருக்குது..
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித்தான் உங்க " mature audience only " படித்தேன் ..

பலூன் செய்து விளையாண்ட அனுபவம் நிறைய பேருக்கு உண்டு போல..

கேவியார்: மாத்திரையா :P மாத்தி யோசிக்கிறாங்கப்பா

பரி... 'மெய்ன் ஹூ நா' பார்த்ததன் விளைவா? ஷாருக்கை எல்லாரும் 'அங்கிள்' என்றுதான் ஓட்டுவார்கள்.

முத்து: சன் டிவி படங்கள் போல் 'அடல்ட்ஸ் ஒன்லி புதன்' என்று அழைக்கலாம் ;)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு