புதன், பிப்ரவரி 21, 2007

என்ன எழுதுவது என்று தெரியாவிட்டால்

என்னுடைய பதிவின் அடைமொழி வாசகங்களை மாற்றலாம்.

சமீபத்தில் 'டெவில் வியர்ஸ் ப்ராடா' பார்க்கக் கிடைத்தது. தமிழுக்கு நடிப்புச் சுரங்கம் என்றால் சிம்ரன். ஹாலிவுட்டின் தங்கத் தலைவி மெரில் ஸ்ட்ரீப் நடித்த படம். சிம்ரன் போலவே என்றும் பதினாறு. பால்யகால நண்பர்கள் படித்தால், ஸ்ரீதேவியை நெருங்குவதற்கு எவரும் இல்லை என்று சண்டைக்கு வருவார்கள். விசாகப்பட்டினத்திற்கு லொகேஷன் பார்த்து வருபவர்கள், அமர் சிங்காக ஜெயப்பிரதாவிடம் சரண்டையலாம்.

Prada போன்ற காசுக்கு கேடுபிடித்ததை கவனித்தால் ஆபாசம் என்று ஜெஸிலா படம் போடலாம். ஆனால், மெரில் ஸ்ட்ரீப், ஸ்ட்ரீப்டீஸ் எல்லாம் ஆடாமல் வாழ்ந்திருக்கிறார்.

ஹாலிவுட் படங்களில் எனக்கொரு குறை உண்டு. இது டென்சல் வாஷிங்டன் படம்; இது ஜூலியா ராபர்ட்ஸ் கதை. இப்படி செக்குமாடு சுற்றுவதில்லை. மன்சூரியன் அஃபேரில் வில்லி. அடுத்த ப்ரெய்ரி படம், இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

குறிப்பிட்ட படத்தில் பல நல்ல சொற்றொடர்கள். ஐ.எம்.டி.பி.காம் போல் தமிழில் வரும் பன்ச் வசனங்களைக் கோர்த்து, விக்கிப்பிடியாவில் இணைத்து வைத்தால், வருங்கால சந்ததிக்கு அரிய பொக்கிஷம். 'வாய்ச்சொல்லில் வீரரடி' என்பது கூட பாரதி படத்தில் விஷ்க் சத்தத்துடன் வைத்திருக்கலாம். பெரியாருக்கு என்ன செய்கிறாரோ!

மீண்டும் 'டெ.வி.பி' வருகிறேன். அதில் உருவிய புகழ்பெற்ற மேற்கோளை

'India is my home country; America is my hometown.'

மாற்றி ஸ்னாப்ஜட்ஜுக்கு போட்டிருக்கிறேன்.

சமயத்தில் இரண்டாக மாட்டும்.

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவானும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்

சைவத்தைப் பரப்பும் சாக்கில் ஔவையார், 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' பாடியிருக்கிறார். சொப்ரானோஸ் பார்த்த போது இரண்டாவது கருத்து மொழி அகப்பட்டது.

அதாகப்பட்டது
“No man, for any considerable period, can wear one face to himself and another to the multitude, without finally getting bewildered as to which one is true.”

இதைத் தூக்கி Nothing Newல் போட்டு வைத்தேன்.

இந்த மாதிரி பதிவெழுதினால் விளங்குகிறதா? கொஞ்ச நேரம் கழித்து படித்து பார்த்தால், காவியத்தை உருவாக்கிய படைப்பாளிக்கு விளங்குமா?

When a man asks for your opinion, it is to endorse his mistake!

8 கருத்துகள்:

பாலா, பிரமாதமான படம் அது. புனேவில் இருந்த பொழுதே பார்த்தேன். விமர்சனம் எழுத நினைத்தேன். ஆனால் அந்தக் கதையை பேக்ரவுண்டாக வைத்து கதை ஒன்று எழுதலாம் என்று நினைத்து பின்னர் விட்டுவிட்டேன்.

மெரிஸ் ஸ்ட்ரிப்பும், அன்னா ஹாத்தவேயும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள். அப்புறம் அந்த மூன்றாவது பெண் முதல் அஸிஸ்டெண்ட் அந்தம்மாவும் நன்றாக நடித்திருந்தது.

சூப்பரான மெஸேஜ் எல்லாம் இருந்தது படத்தில் ;).

Will watch D.W.P and read this post again...Until then, I am out in Strike 1 :).

@மோகன்தாஸ்

உங்க கதையும் நன்றாக இருக்கும் என்றாலும், விமர்சனம் எழுதுங்க...

---சூப்பரான மெஸேஜ் எல்லாம் இருந்தது படத்தில் ----

என்னைக் கவர்ந்த சில...

The Devil Wears Prada (2006) - Memorable quotes:

* "The details of your incompetence do not interest me."

* "Bore someone else with your questions."

* "You sold your soul to the devil when you put on your first pair of Jimmy Choo's! "

* "No, no, that wasn't a question."

* "You used to make fun on the Runway girls, now you're one of them! "

* "Find me that piece of paper I had in my hand yesterday morning."

@ராஜேஷ்

---I am out in Strike 1---

படம் பார்த்தாலும், பதிவு விளங்குகிற மாதிரி எழுதினால்தான் அவுட்சைட் தி ஆஃப் ஸ்டம்ப் போகாமல் இருக்கும். இது கிரிக்கெட் சீஸனுங்க... பேஸ்பாலுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கே :P

தல,

இப்படி சொன்னா எப்படி இருக்கும்...

//'India is my home country; America is my hometown.'//

India is my Life...America is my Food

சும்மா விட்டு பாத்தேன்...டென்சன் ஆகிடாதீங்க :-)

என்ன ஆச்சுங்க? தமிழில் தலைப்பு?!! :))

@ஷ்யாம்

---India is my Life...America is my Food---

படத்தில் ஒரிஜினல்:
'அமெரிக்கா எனது தாய்நாடு; பாரிஸ் எனது சொந்த ஊர்'.

நம்ம உல்டா:
வாய்ப்பாட்டுக்கு அமெரிக்கா; வலைப்பதிவுக்கு இந்தியா ;)

@இ.கொ.

---என்ன ஆச்சுங்க? தமிழில் தலைப்பு?!!---

தித்திக்கும் முத்தமிழை மறவேன் நான் மறவேன்...
பதிவுக்கடனென போட்டுத் தலைப்பிட வருவேன் நான் வருவேன்

:)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு