வியாழன், ஜனவரி 08, 2009

'பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்

எழுத்தாளர் மருதன் 'பாஸ்போர்ட்' தொடரை ஆனந்த விகடனில் எழுதி வருகிறார். அவரின் வலைப்பதிவு | ட்விட்டர் | கிழக்கு பதிப்பக வெளியீடாக இதுவரை வந்துள்ள புத்தகப் பட்டியல்.

இந்த மாதிரி நூல் நிறைய எழுதிய நுட்பர், மறுமொழியை நிராகரித்து விடுவார் என்பது முதல் அதிர்ச்சி. அப்படி என்ன அபாண்டமாக அரற்றி இருக்கிறோம் என்பது இன்னொரு மருட்சி.

சென்ற முறை 'ஒபாமா, அமெரிக்கா பற்றி ஃபிடல் காஸ்ட்ரோ' சொன்னதற்கு சிம்பிளாக நாலு வார்த்தை சொல்லி இருந்தேன். அது யாதெனப்படில்:

---ஜான் மெக்கெயின் இன்னமும் மோசம். முன்னாள் போர் விமானியான இவர், வியட்நாம் மீது டன் கணக்கில் குண்டுகள் வீசியிருக்கிறார்---

நீங்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் வெளியிடும் புத்தகம் எல்லாவற்றுக்கும் நீங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது போல் அமெரிக்க படை சார்பாக அங்கு சென்றவர், இட்ட கட்டளையை நிறைவேற்றினார்.

அவரா போர் தொடுத்தார்?

சென்ற அனுபவம் கொடுத்த படிப்பினையில் இந்த முறை பதிவாக இட்டேன்: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்

இந்த முறையும் சில பல மறுமொழிகளை நிராகரித்து இருக்கிறார்.
நான் குருவி மாதிரி. படிக்க: பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

இந்த மாதிரி கீச்கீச்களை ஏன் நிறுத்தினார் என்று இப்போது ஆலோசனை நேரம்:

பாதிப் பேர் கூகிள் ரீடரிலும், மீதப் பேர் படிக்காமல் தலைப்பை மட்டும் தமிழ்மணத்தில் கவனிக்கும் இந்தக் காலத்தில், சைலன்ட்டாக காமென்ட்டை போட்டு விடலாம்.

ஆனால், ஞாநியைப் போல், சாரு நிவேதிதாவைப் போல் இணையப் புரட்சியாளராக ஆவது எங்ஙனம்?

இந்த மாதிரி மறுமொழியை மடக்கி அனுப்பினால் நாலு பேர் பேசுவார்களே!

42 கருத்துகள்:

பாலா! புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டுடன் கலக்குவீர்கள் என எதிர்பார்த்தால், நெற்றிக்கண்னுடன்...
அது சரி அண்ணாச்சி எழுதுற இடுகையை போட மறந்திட வேண்டாம்.

புள்ளிராஜா

அமெரிக்க கல்வி பத்தி நான் ரொம்ப ரொம்ப சீரியசா போட்டதை உங்க புண்ணியம் விட்டிருக்காரு

சூப்பர் ஆர்ட்டிக்கள் சார். பின்னிட்டீங்க

எனக்கு ஏன் எதுவுமே புரியல ?

நான் மப்புல கூட இல்லையே ?

மண்டை காயுது...இந்த பதிவுக்கு யாராவது விளக்கம் எழுதுனா பரவால்ல...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புள்ளிராஜா, புத்தாண்டு வாழ்த்துகள்.

நெற்றிக்கண்ணா?! வெந்த புண்ணை நக்கி விட்டுக்கறேங்க :)

செந்தழல்,
கல் தோன்றி மண் தோன்றாத மூத்தகுடியில் இருந்து தமிழனைத் துரத்தும் பிரச்சினைதான் :)

ஒரு ஃபீட்பாக் போட்டால் அப்ரூவ் செய்யாமல் அப்படி என்ன வேலை செய்து கிழிக்கிறார் என்னும் காட்டமான அறிக்கைப் போர்!

xxxx பல குட்டிகளைப் போடுவதுபோல எண்களை இலக்காக வைத்து காகிதக்குப்பைகளை உற்பத்தி செய்கிறார்கள். பழையகால ஸ்டுடியோக்களில் கதை இலாகா என்று ஒன்று இருக்கும். கதை தயாரிப்பது இந்த இலாகாவின் பணி அது போலத்தான்.

**

10 புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு அல்லது 100 அல்லது ஆயிரம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்... தனது பெயரில் அடுத்து ஒரு புத்தகம் எழுதுவதற்குப் பெயர் எழுத்தாளர் அல்ல தொகுப்பாளர்.

**

ஏதாவது ஒரு மண்ணாங்கட்டியை பதிவாக, வியபார நோக்கம் இல்லாமல் எழுதினால் யாருக்கும் கவலை இல்லை. ஆனால் விற்பனை நோக்கில் எழுதும்போது உண்மையான உழைப்பு இருக்க வேண்டும்.

**

பாரா என்று ஒருத்தர் வெளிநாட்டு அமெரிக்கா,ஈழம்,அரேபியா(பாருங்கள் இந்தியா தவிர்த்து மட்டும்) வரலாறாக எழுதிக் குவிக்கிறார். ஒரு உண்மையான படைப்பாளி ஒரு நாட்டின் அரசியல்,வரலாற்றை தொடும்முன் அந்த நாட்டில் குறைந்தது 1 வருடமாவது டெண்ட் அடிக்க வேண்டும்.

யாரோ சொன்னது,யாரிடமோ கேட்டது,எதிலோ படித்தது என்று சிலவற்றைத் தொகுத்துவிட்டு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வது , காவல் நிலைய எழுத்தரைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

இவர்களின் தொடரில்/புத்தகத்தில் இருந்து மற்ற நாடுகளின் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்பவர்கள் பாவம்.

சென்னையில் வாழ்பவர் தனது எழுத்துத்திறமையால் சென்னை பற்றிய வரலாற்றை அதன் காயங்களை அதன் மகுடங்களை எழுதினால் நல்லது அதில் இருக்கும் உண்மையை விமர்சிக்க கூட்டம் இருக்கும்.

இலங்கை போயிருப்பாரா ,புலிகளுடன் இருந்தாரா அல்லது சிங்கள அதிகாரிகளுடன் இருந்தார என்று தெரியவில்லை.ஆனால் சீசன் டயத்தில் வரும் அய்யப்பன் பக்திப்படால்கள் போல அதுபற்றி எழுத ஆரம்பித்துவிட்டார்.

**

அடுத்தவர்கள் படிக்கும் வண்ணம் சுவராசியமாக எழுதுவது ஒரு கலை.புனைவுக் கதைகளையோ அல்லது கட்டுரைகளையோ எழுதினால் தவறே இல்லை. வரலாற்றை வணிக நோக்கில் எழுதிக் குவிப்பது என்னால் ஏற்கமுடியவில்லை.

ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் எழுத்து வன்மையுள்ள ஒருவருக்கு நிதியுதவி செய்து தமிழக அரசியலையோ அல்லது நிகழ்கால விசயங்களையோ எழுதச் சொல்லலாம். வரும் சந்ததியினராவது பயன் அடைவார்கள்.

**

இந்தியாவைப் பற்றி , இந்தியாவைப் பார்க்காமலேயே அல்லது இந்தியாவில் சிலகாலம் கழிக்காமலேயே எந்த வெளிநாட்டினராவது புத்தகம் போட்டுருந்தால் சொல்லவும். ஏன் என்றால் அவர்கள் எல்லாம் செய்கிறார்கள் நாங்கள் செய்தால் என்ன என்று இந்தியவாவின் குடும்ப அரசியல் கேள்விக்கு விடைதரும் அரசியல்வாதிகளைப் போல இவர்களும் பதில் சொல்ல வசதி இருக்கும்.

கல்வெட்டு, நன்றி.

இது தொடர்பாக உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் எழுதியதைப் படித்தது உண்டா? சென்ற ஆண்டில் புத்தகக் கண்காட்சி முடிந்தவுடன் பத்திரிகை தலையங்கமாக இடம் பெற்றிருந்தது.

இணையத்தில் இருக்கலாம். தேடிப் பார்க்கிறேன். கிடைக்காவிடின் தட்டச்சு செய்து இடுகிறேன்.

/சென்னையில் வாழ்பவர் தனது எழுத்துத்திறமையால் சென்னை பற்றிய வரலாற்றை அதன் காயங்களை அதன் மகுடங்களை எழுதினால் நல்லது அதில் இருக்கும் உண்மையை விமர்சிக்க கூட்டம் இருக்கும்./

ஹிஹி!! அதுக்கு இலங்கையிலிருந்து போயிரூக்கும் மட்ராஸ் ம்யூசிங் முத்தையா வேணும். அல்லது ராண்டர்கை வேணும்

அதுக்காக வியாழன் கிரகத்தை பத்தி புக்கு எழுதனும்னா பாராகவன் வியாழனுக்கு போவனுமா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

இப்ப ஆரம்பிச்சார்னா கிழக்கு பதிப்பகத்தின் நூற்றாண்டு விழா மலராத்தான் வெளிய உடமுடியும்...

எப்பிடி மடக்குனேன் பத்தீங்களா கல்வெட்டு ஹி ஹி

///கிடைக்காவிடின் தட்டச்சு செய்து இடுகிறேன்.///

ஸ்கேன் பண்ணி போடுங்களேன்...எதுக்கு டைமை வேஸ்ட் பண்றீங்க ???

///சூப்பர் ஆர்ட்டிக்கள் சார். பின்னிட்டீங்க///

எதாவது ஒன்னு சூப்பர்னா பின்னிட்டீங்க அப்ப்டீன்னு சொல்லறாங்களே ஏன் ?

இதுக்கு யாராவது விளக்கம் சொன்னா பரவால்ல...

டியர் கல்வெட்டு,

கிழக்கு சார்பாக ஒரு புத்தகம் எழுதமுடியுமா ?

//அதுக்காக வியாழன் கிரகத்தை பத்தி புக்கு எழுதனும்னா பாராகவன் வியாழனுக்கு போவனுமா ?//

:-)))))

ரவி,

நான் சொல்வது உண்மையான வரலாற்று எழுதாளர்களுக்கு.

ஈழத்தில் பிரச்சனை அதிகமாயிருச்சா , போடு ஈழம் தோசையை.
அரபில் ஆயில் பிரச்சனையா போடு ஆயில் இட்லியை.
அமெரிக்காவில் கட்டடம் சரிந்தாத போடு அமெரிக்க இடியாப்பத்தை ..இப்படி சும்மா சீசன் டயத்தில் கதை எழுதுபவர்களுக்கு அல்ல. :-))

**

எங்கேயிருந்து வேணுமின்னாலும் எதையும் எழுதலாம் ரவி. ஆனால் வரலாற்று விசயங்களில் ஆராய்ச்சித்தன்மை நிச்சயம் வேண்டும். 100 புத்தகங்களைப் படித்துக் கிடைக்கும் வாசிப்பு அனுபவம்/அறிவு மட்டுமே வரலாற்றை எழுத போதும் என்றால். நான் ஜூட்.

**

சாவைப்பற்றி எழுத செத்துப்பார்த்து எழுதச் சொல்லவில்லை. ஆனால் அதையே புனைவு என்று எழுதலாம். ஊகம் என்று எழுதலாம். அறியும் முயற்சி, ... என்று எழுதலாம்.

ஆனால்,நடந்து முடிந்த வரலாற்றை அவை பல ஆதாரங்களுடன் கிடைக்கும் போது, சரியான கள ஆய்வுகள் இன்றி, படித்த 100 புத்த்கங்களின் தொகுப்பாக மட்டும் , நேரடிப்புரிதல் இல்லாமல் எழுத்து இயந்திரமாக எழுதிக்குவிக்கக்கூடாது.

**

சோழர்கால வரலாற்றில் மட்டுமே எண்ணற்ற விசயங்கள் இருக்க 'மதன்' என்ற ஒருத்தர் தமிழனுக்கு வரலாறே இல்லை என்று அருளுரை சொன்னார்.

இன்னும் சராசரித்தமிழன் பொன்னியின் செல்வன் வழியாகவே சோழர்காலத்தை அறிய முயல்கிறான். நல்லவேளை கல்கி அதை நாவல் என்று சொன்னார். 'குதிரை தேசம்' அல்லது 'சோழச் சோறு' என்று கவர்சியான எதுகை மோனைத் தலைப்பு வைத்து , 'உண்மையைச் சொல்லும் நடுநிலையான தொடர்' என்று சொல்லயிருந்தால் என்னவாகி இருக்கும்?

எல்லாத்தையும் உண்மை என்று நம்பி நம்மாள் பாக்குற கண்மாயில் எல்லாம் வந்தியத்தேவனின் குதிரைச் சத்தம் கேட்கிறது என்று எம்.ஜி.ஆர் சாமாதி கடிகார ரேஞ்சில் , கவுந்திருப்பான்.

**

எழுத்தை ஆளுமைப்படுத்தி, சுவராசியமாக கதை சொல்லும் தகுதி உள்ள ஒரு நபர் இப்படி இருக்கிறாரே என்ற வருத்தம்தான் :-))

ஒரு காலத்தில் இணையப்படங்களைச் எடுத்து அட்டைப்படமாக்கி வணிக நோக்கில் விற்றார்கள். பதிவுகளின் வழியாக ஏன் என்று கேட்டபோது "பதிப்புலகில் இது எல்லாரும் செய்வதுதான் " என்று சொன்னவர் தான் பாரா என்பவர். காப்பிரைட் சட்டங்கள் என்ன என்று தெரியாமல் பதிப்புலகில் முன்னோர் செய்ததை பாடமாகக் கொண்டவர்கள் இவர்கள் . வரலாற்றையும் சிதைத்துவிடக்கூடாது. ஏதோ நம்மால் முடிந்த பதிவுவழிக் கண்டனக்குரல்கள். வேறு என்ன செய்ய முடியும்?

***

'வரலாறு' வரலாறு தெரிந்தவர்களால் எழுதப்படவேண்டும். ஆகா நல்லா கதை எழுதுறாரே என்று வரலாறு,புவியியல்,மருத்துவம் எல்லாம் எழுதலாம் என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை குறைய வேண்டும்.

மதன் இப்படித்தான், படங்களில் வரைவதில் கிடைத்த புகழில், கேள்வி பதில், அப்புறம் 'வந்தார்கள் வென்றார்களாக' வரலாற்று சிங்கமானார்.

ஞாநி விகடன் ஓ பக்கங்களில் கிடைத்த புகழில் பாலியல் கல்வி பாடம் எடுக்க ஆரம்பித்தார்.

சுதந்திரதினத்தில் குஜ்லி நடிகையிடம், "சுதந்திரம் வாங்கினதப்பத்தி என்ன நினக்கிறீங்க ?" என்று கேட்பதும் ஞாநியிடம் மருத்துவம் கேட்பதும் சப்பிரதாயக் கேள்விகள். அல்லது ஒரு இடத்தில் கிடைத்த புகழில் எல்லாத்தையும் விற்கப்பார்ப்பது.

**
யுவான் சுவாங் இந்தியாவைப்பற்றி எழுத வேண்டும் என்று இந்தியா வரவில்லை. இந்தியாவில் பார்த்ததை எழுதினார். பண்டைய இந்தியாவின் நிலையை அவரது எழுத்துக்களின் வழியாக அறிய முடியும். மாதம் இவ்வளவு எழுதவேண்டும் என்பது அவருக்கு இலக்காக இருந்தால் அவரால் 15 (??) ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே இருந்திருக்க முடியாது.

அறியவேண்டும் என்பது முதலாவதாகவும், அறிந்ததைப் பகிர்வது என்பது இரண்டாவதாகவும் இருக்கவேண்டும்.

Don't Sleep, There are Snakes: Life and Language in the Amazonian jungle (http://www.amazon.co.uk/gp/reader/1846680301/ref=sib_dp_pt/275-9494948-6592634) என்று ஒரு புத்தகம். இதை எழுதியவர் பதிப்பக மேசையில் இருந்துகொண்டு முன்னோர்களின் புத்தகத்தை வாசித்து புத்தகம் போட வில்லை. காட்டில் வாழ்ந்து பழகி , தனது அனுபவத்தை எழுதுகிறார்.

உங்களை யாரு வார்த்தைகளால் பின்னூட்டம் போட சொன்னது?

ஒரு வேளை இந்த புத்தாண்டில் நீங்க திருந்திட்டீங்களா? :))

// அதுக்காக வியாழன் கிரகத்தை பத்தி புக்கு எழுதனும்னா பாராகவன் வியாழனுக்கு போவனுமா ? //

அவசியமில்லை.. ஆனால் ஒரு தடவையாவது தொலைநோக்கி வழியாக வியாழன் கிரகத்தை பார்க்க வேண்டும் என்பது ஒரு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. வியாழன் உட்பட்ட கிரகங்களை பற்றி கோளரங்கங்கள் வெளியிட்ட அறிக்கைகள் சிலது, கோழியூர் நாராயணன் மற்றும் ஸ்ரீரங்க சுத்த வாக்கிய பஞ்சாங்க கம்பேனி வெளியிட்ட வியாழபெயர்ச்சி கையேடுகள் சிலது என்று கலந்து கட்டி வைத்துக்கொண்டு வியாழன் கிரகத்தை பற்றி நடு மத்தி யுத்தி வைத்து இலக்கியம் படைக்ககூடாது.

போன வாரம் எங்க வூட்டுல நடந்த உரையாடல் ::

டூரிஸ்டு விசாவுல இங்க வந்திருக்கிற என் நைனா :: ஏண்டா ஒபாமா பிரண்டு யாரோ anti-ப்ளாக் கொள்கை கொண்டவரு எஜுகேசன் மினிஸ்டரா வந்து எல்லா பப்ளிக் ஸ்கூலையும் ப்ரைவேட்டுக்கு மாத்தி டெண்டர் உடப்போறாராம். அதுனால பீஸ் கட்ட முடியாம அப்படி இப்படின்னு ப்ளாக்ஸ் எல்லாம் ட்ராப் அவுட் ஆகிடுவாங்களாம்.. இந்த திட்டத்துக்கு ஒபாமாவும் அக்ரி பண்ணிகிட்டாராம். ஏன் ஒரு ப்ளாக்கா இருந்துகிட்டு ப்ரஸிடண்டு இப்படியெல்லாம் பண்றாரு.

நான் :: ஜூனியர் விகடனா?

டூ.வி.இ.வ.எ.நைனா :: இல்ல ஆ.வி.

நான் :: நம்மூர்ல உக்காந்துகிட்டு எதையாவது அரைகுறையா படிச்சிட்டு இஷ்டப்படி கத வுடுறதே இவனுங்களுக்கு வேலையா போச்சி. இதயெல்லாம் படிக்காதீங்கன்னா நீங்களும் கேக்க மாட்றீங்க.

முந்தியெல்லாம் இது போன்ற கட்டு கதைகளென்றால் நக்கீரனா என்று கேட்ட நிலை இப்பொழுது தினமலரா, குமுதமா, விகடனா என்று கேட்கும் அளவு விஸ்தாரித்துக்கொண்டு ஹவுசிங் மார்க்கெட், ஸ்டாக் மார்க்கெட், பொலிடிகல் க்ளைமேட் என்று புரிகிறதோ இல்லையோ தினப்படி அமெரிக்க நடவடிக்கைகளை அமிஞ்சிகரை அண்ணாசாமிகளுக்கு கொண்டு சேர்த்தே தீருவது என்று வெறி கொண்டு அலைகிறார்கள்...

கல்வெட்டு,

விளங்குகிறது....!!!!!
உறைக்கிறது...!!!!
தெரிகிறது...!!!!
புரிகிறது...!!!!

பாபா...

நாங்க எப்பவுமே அப்படித்தான் வெளாடுவோம், நீங்க ரொம்ப சீரியசா ஹி ஹி...

மொதல்ல ஒரு ப்லாகர் கமெண்டு போட்டுட்டு,

தோழர், முதலில் விழுந்த கொமண்டு ப்லாகர் ஐடியில் விழுந்துவிட்டது, அதனை அனானியாக போட்டுவிடவும் அப்படீன்னு...

இதுல காமெடி என்னன்னா இந்த ரெண்டாவது பின்னூட்டத்தை வெளியிடறது தான் :)))))))

.//ஈழத்தில் பிரச்சனை அதிகமாயிருச்சா , போடு ஈழம் தோசையை.
அரபில் ஆயில் பிரச்சனையா போடு ஆயில் இட்லியை.
அமெரிக்காவில் கட்டடம் சரிந்தாத போடு அமெரிக்க இடியாப்பத்தை ..இப்படி சும்மா சீசன் டயத்தில் கதை எழுதுபவர்களுக்கு அல்ல. :-))///

மனிரத்னம் மும்பை தாக்குதலை வைத்து இந்த நேரம் கதை பின்னிக்கொண்டிருபார் என்று நம்புகிறேன்...

இசை ஏ.ஆர் ரகுமான்.
அமீர்கானிடம் கூட கால்ஷீர் கேட்டிருப்பார்...அவர் வரலைன்னா ஐஸ்வர்யா ராயின் முன்னாள், இன்னாள் அன்புக்குரிய எதாவது ஒரு நடிகர் ( இதுல மூனு பேரை கொண்டாந்துட்டமுல்ல )

சென்னை புத்ததகக் காட்சி - மனுஷ்யபுத்திரன் (உயிர்மை :: இதழ் 54 - பிப்ரவரி 2008)

செந்தழல்,

----ஸ்கேன் பண்ணி போடுங்களேன்...எதுக்கு டைமை வேஸ்ட் பண்றீங்க ?----

புகைப்படமாகவோ வருடியோ இட்டிருக்கலாம். தட்டி வலையேற்றினால், நாளைக்கு கூகிள் கூட எளிதாக கண்டுபிடித்துக் கொள்ளும் என்னும் நப்பாசை.

----சூப்பர்னா பின்னிட்டீங்க அப்ப்டீன்னு சொல்லறாங்களே ஏன் ?---

சூப்பர் என்றால் சூப் + பர்.

இதில் சூப் என்பது Soup. குடித்திருப்பீர்கள்.

பர் என்பது அஞ்சப்பர் போன்ற உணவகங்கள்.

பின்னி இருந்தால் முடி விழாது. சூப் சுதாகரமாக இருக்க பின்னுங்க என்பதுதான்; சூப்பர்! பின்னிட்டீங்க.

கல்வெட்டு,

----100 புத்தகங்களைப் படித்துக் கிடைக்கும் வாசிப்பு அனுபவம்/அறிவு மட்டுமே வரலாற்றை எழுத போதும் என்றால். நான் ஜூட்.----

போதிய வாசிப்பும் அதற்குப் பின் தேவையான தயாரிப்பும் இருந்தால் 'அமெரிக்காவின் ஆர்நி' போன்ற விகடன் கட்டுரை எழுதப் போதுமானது.

நான் கல்வித்துறையில் குப்பை கொட்டியவன்/கொட்டுகிறவன் இல்லை. என் மகள் பள்ளிக்கு சென்று இருக்கிறேன். பெற்றோர் - ஆசிரியர் அமைப்பில் அவ்வப்போது தலைக்காட்டுகிறேன். டவுன் ஹால் சந்திப்புகளில் விவாதத்தை கவனிக்கிறேன்.

குடியரசு, ஜனநாயகம் என்று இரண்டு கட்சி நிலைப்பாடும் அறிய இரு சார்பு அலசலையும் படிக்கிறேன்.

அந்தக் கட்டுரையில் அனுபவமின்மை வெளிப்பாட்டை விட அதில் இருந்த தடாலடி பயமுறுத்தல் மிகை.

அம்பி,

----உங்களை யாரு வார்த்தைகளால் பின்னூட்டம் போட சொன்னது? ----

இனிமேல் சொற்களாம் மட்டுமே சொல்லப் போகிறேன் ;)

முகமூடி,

நெத்தியடி!

பயங்கரமா விளம்பரம் கொடுக்கறீங்க அவருக்கு. கையூட்டு உண்டா:-)

//சூப் சுதாகரமாக இருக்க பின்னுங்க // அப்படின்னா சூப் சுதாவா (Sudha=nectar)? பின்றீங்க:-)

//பின்னி இருந்தால் முடி விழாது. சூப் சுதாகரமாக இருக்க பின்னுங்க என்பதுதான்; சூப்பர்! பின்னிட்டீங்க.//

////சூப் சுதாகரமாக இருக்க பின்னுங்க // அப்படின்னா சூப் சுதாவா (Sudha=nectar)? பின்றீங்க:-)//

ஒன்னியும் பிரியலை. மண்டை காயுதே!!!

-பொட்"டீ"

:-)
:-(

பாபா..

அடுத்த பதிவையாவது எனக்குப் புரிவதைப் போல் எழுதவும்.)))))))))

பொட்ஸ்! பா.பா. "சூப் சுகாதாரமா" (hygienicஆக, தலைமுடி இல்லாமல்?) ன்னு எழுதியிருந்திருக்கலாம். நான் இருக்குமிடத்திலிருந்து அறியாராய்ச்சி செய்து,
பா.பா. சூப் (சுதாகரமாக) தேனாக இருக்க வேணுமென்று எதிர்பார்க்கிறார்னு சொன்னேன்.

கெக்கேபிக்குணி,

---பயங்கரமா விளம்பரம் கொடுக்கறீங்க அவருக்கு. கையூட்டு உண்டா---

அடுத்த முறை பார்க்கும்போது வாங்கிக்கணும் :)

---அப்படின்னா சூப் சுதாவா ---

இல்லை. சூஃபியிசம் ;) Marudhan: ஒரு கோப்பை சூஃபி

பொட்"டீ",

ரொம்ப சிம்பிள்.

சூப்பருக்கும் அப்பருக்கும் ஓரெழுத்துதான் வித்தியாசம்.

சூப்பர் ஸ்டார் கொண்டை போட்டா அது ஸ்டைலு;
அப்பர் பின்னி விட்டுக் கொண்டால் அது குடுமி ;)

பினாத்தல்,

சிரிக்கறீங்களா? அழறீங்களா/

அழுது கொண்டே சிரிக்கறீரா?

அல்லது பிறரின் வலி நிரம்பிய புலம்பலைக் கண்டு புன்முறுவலிக்கிறீரா? ;)

உண்மைத் தமிழன்,

----அடுத்த பதிவையாவது எனக்குப் புரிவதைப் போல் எழுதவும்
----
நீங்க உங்க ஐடியில் இருந்து நம்பரை பிரிங்க :)

அப்பத்தான் பிரிகிற மாதிரி எழுதுவேன்.

///உண்மைத் தமிழன்,
அடுத்த பதிவையாவது எனக்குப் புரிவதைப் போல் எழுதவும்.//
----
நீங்க உங்க ஐடியில் இருந்து நம்பரை பிரிங்க :) அப்பத்தான் பிரிகிற மாதிரி எழுதுவேன்.///

'எல்லாவற்றுக்கும்' காரணம் நீங்கள்தான் என்று ஒரு பதிவு போட்டுவிட்டு நம்பரை எடுத்துவிடவா?

என்னாச்சி பாபா? பனிப்புயல்ல மனப்பிறழ்.. சீ.. மனம்மாறிட்டீங்களா?

கெக்கேபிக்குணி,

தெளிவாக்கலுக்கு நன்றி.

உண்மைத்தமிழன்,

----பதிவு போட்டுவிட்டு நம்பரை எடுத்துவிடவா?----

நடுவில் வந்ததுதானே ;)

வெட்டிடுங்க

இளா,

வாரயிறுதியும் பிசியாக இருக்கும் போல. எங்களுக்கு ஆறு இன்ச் போடுகிறது.

//---ஜான் மெக்கெயின் இன்னமும் மோசம். முன்னாள் போர் விமானியான இவர், வியட்நாம் மீது டன் கணக்கில் குண்டுகள் வீசியிருக்கிறார்---

நீங்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் வெளியிடும் புத்தகம் எல்லாவற்றுக்கும் நீங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது போல் அமெரிக்க படை சார்பாக அங்கு சென்றவர், இட்ட கட்டளையை நிறைவேற்றினார்.

அவரா போர் தொடுத்தார்?//
can you match this with your comment against sp.tamilselvan?

தமிழ்ச்செல்வன் அனானி,

அமெரிக்க கல்வி அமைச்சர் குறித்து மருதன் எழுத; அதை மறுதலித்து நான் எழுத; அந்தப் பின்னூட்டம் வருமோ/வராதோ பயத்தில் இன்னொரு பதிவெழுத; அதில் இந்தக் கேள்வி பொருத்தமில்லை.

எனினும்.

மெகயின் இராணுவத்தில் பணியாற்றினார். போர்க்களத்தில் பலரைக் கொன்றார். சிறைக்கைதியாக பிடிபட்டார்.

பல்லாண்டு கழித்து தேர்தலில் நின்றார். அப்பொழுது சண்டையில் பங்குபெற்றதைப் பெருமையாக முன்வைக்கவில்லை. சிறையில் வாடியபோது கூட்டாளிகளைக் காட்டிக் கொடுக்கவில்லை என்பதை முன்னிறுத்தினார்.

தான் போருக்கு சென்றதால், போரினால் ஏற்படும் அபாக்கியம் குறித்து நிறைய அறிந்திருப்பதாகவும்; அதனால், சண்டைக்குப் போவதற்கு முன் 1000 முறை யோசிப்பேன் என்றும் சொன்னார்.

போர்வீரருக்கு ஏற்படும் துர்நிலை குறித்தும், எதிரி நாடுக்கு உண்டாகும் சேதப்படுத்தலையும் நினைத்து மட்டும் பார்க்காமல், நேரிலும் கண்டிருப்பதால் போர்தொடுத்தலை விரும்பாதவன் என்றார்.

தமிழ்ச்செல்வன் போராளி அல்லவா?

Great news

Excellent !பாரா பற்றிய உங்கள் ஆதங்கம் புரிகிறது ! ஆனால் இதற்கேத் தமிழகத்தில் அப்படியொன்றும் பெரிதான எண்ணிக்கையில் யாரும் போட்டி இல்லையே?! பெரிய அளவிலான போட்டிகள் இருக்கிற இடத்தில் தான் நீங்கள் சொல்கிற விஷயங்கள் எல்லாம் நடக்கும். பாரா வை நீங்கள் விமர்சிக்கலாம். ஆனால் பாரா வேலையைச் செய்யவே ஆள் இல்லாத தேசத்தில், அவரும் ஒரு (இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாம்.) இலுப்பைப் பூ தான்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு