புதன், டிசம்பர் 03, 2008

2008ல் உங்களைக் கவர்ந்த இந்தியர்

விட்டுப்போனவர்களை, சேர்க்க வேண்டியவர்களை பரிந்துரைத்தால், தேர்தலில் நிற்க வைத்து விடலாம். • அன்புமணி - புகை பிடிக்காதோருக்கும் புற்றுநோய் தருபவர்களை கட்டுக்குள் கொணர்ந்தவர்.
 • அபினவ் பிந்த்ரா - நான்கு வருடத்திற்கொருமுறை ஒலிம்பிக்ஸ் வருகிறதே என்று குதூகலிக்கும் மொக்கைப் பதிவர்களுக்கு நாமம் போட்டவர்.
 • விஸ்வநாதன் ஆனந்த் - சதுரங்க ஆட்டம் என்றால் உலகிற்கு முதலில் நினைவுக்கு வருபவர்.
 • கே பத்னாபையா - பேச்சுவார்த்தையில் இன்னும் நம்பிக்கை துளிர்க்க வைப்பவர்
 • ராஜேந்திர கே பச்சௌரி - ஆல் கோர் ஜனாதிபதிக்கு நின்றார்; இவர் நோபல் பரிசு மட்டும் வாங்கினார்.
 • ரேணுகா சௌத்ரி - வடக்கில் பிறந்திருந்தால் பிரதம மந்திரியாகி இருக்க கூடியவர்.
 • ப சிதம்பரம் - உள்துறையாயிட்டாரே! பொருளாதாரமும் அமெரிக்கா அளவு சரியாமல் காப்பாற்றியவர்.
 • லாலு பிரசாத் யாதவ் - இருவுள் பொக்கீடு வரும்போது வானளாவ புகழ் எய்தியவர்.
 • மாயாவதி - நடுவணசை காப்பாற்ற வைத்தவர்.
 • சோம்நாத் சாட்டர்ஜி - கட்சியை விட நாடாளுமன்றம் பெரிது என்றவர்.
 • அர்விந்த் அடிக - இந்தியாவைத் தூற்றி புத்தகம் எழுதி புகழ்பெறுபவர்களில் புதியவர்.
 • கமல்ஹாசன் - எல்லாம் இன்ப மயமாக ரசிகர்களை மயக்குபவர்
 • ஓவியர் ஆதிமூலம் - காந்தியும் கோட்டோவியமாக தூரிகையில் நிலைத்திருப்பவர்
 • மம்தா பேனர்ஜி - டாடா காட்டியவர்
 • என் எஸ் ஜி ஜே பி தத்தா - இன்னும் உயிரோடிருக்கிறார்
 • ஜி மாதவன் நாயர் - அடுத்ததாக சந்திரனில் இந்தியரை இறக்கி விடுபவர்.
 • கிரண் பேடி - டெல்லி காவல் ஆணையர் ஆக்கப்படாவிட்டாலும் சேவையில் ஈடுபடுபவர்.
 • ஹேம்ந்த் கர்கரே - ஹிந்துத் தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை அம்பலமாக்கியதாலோ என்னவோ? சாகடிக்கப்பட்டவர்.
 • கிருஷ்ணம்மாள் சங்கரலிங்கம் - இந்தியா இன்னொரு நிலக்கிழாரிய பாகிஸ்தானாக ஆகாமல் இருக்க -- வயதான காலத்தில் அக்கடா என்றில்லாமல்; களப்பணியில் சோர்வுறாமால் தொண்டு செய்பவர்.

27 கருத்துகள்:

I wish You should Include
JP Dutta also. மூணு வோட்டு போட்டேன், மூனும் வந்திருந்தா Form மாத்த வேண்டி இருக்குமே :((

இந்த வம்பு புடிச்ச வேலைதானே வேண்டாம். அண்ணன் பேரைப் போடல என்டு பையன்கள் அரிவாளோடு அமெரிக்கா வரப்போறாங்களாம். என்ட பேரையும் சேர்த்திடப்பா. தலை வேணுமில்ல?

புள்ளிராஜா அண்ணாச்சி

இளா,
இந்த J. P. Duttaவா?

இந்த வருடத்தில் புதுப்படம் எதுவும் வரவில்லை என்பதாலா ;)

பு.ரா. :)

“வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்பதற்கு இந்தப் பட்டியலே ஆதாரம். அது சரி. சம்பந்தமில்லாம ப.சிதம்பரம் பேர் எதுக்குச் சேத்தீங்க? :-o அதோட கலைத்துறையைக் கண்டுக்காம விட்டுட்டீங்க போல!

1. இந்தியாவை சந்தியாவுக்கு.. சீ... சந்திரனுக்கு அனுப்பிய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர்.

2. தசாவதாரம் தந்த வாழும் வரலாறு கமல், 62 வயதிலும் “கண்ணால் பேசும் பெண்ணே” பாடி சிறந்த பாடகர் விருதைப் பெற்ற பாலு.

இது தவிர பிரபல வெளிச்சத்துல விழாம ஆனா மிகச் சிறந்த செயல்களைச் செய்துக்கிட்டு வர்ற இந்தியர்கள் ஏராளமாவே இருப்பாங்க. இம்மாதிரி பட்டியல் போட்டு ஒருத்தரைத் தேர்ந்தெடுக்கிறது அவ்வளவு சரியாப் படலை! பாரபட்சமில்லாத தேர்வு சாத்தியமான்னு தெரியலை!

NSG Chief J.P. Dutta

சுந்தர்,

---“வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்பதற்கு இந்தப் பட்டியலே ஆதாரம்---

கேரளா, கர்நாடகா விட்டுப்போச்சோ! ஆந்திராவுக்கு ரேணுகா இருக்காங்க :)

---சம்பந்தமில்லாம ப.சிதம்பரம் பேர் எதுக்குச் சேத்தீங்க? :-o ---

உள்துறையாயிட்டாரே! பொருளாதாரமும் அமெரிக்கா அளவு சரியவில்லையே?

---கலைத்துறையைக் கண்டுக்காம விட்டுட்டீங்க போல!---

இந்த வருடம் இறந்தவங்கதான் இந்தப் பட்டியலில் இடம் பிடிக்க பொருத்தமானவர்கள்; என்றாலும் தசாவதாரம் கொடுத்த மசாலா கமலையும் இணைத்திருக்கோமே ;)

இளா,

சேர்த்தாச்சு (அவர் இடத்தில் யார் இருந்தாலும் இதைத்தானே செஞ்சிருப்பாங்க?)

சுந்தர்,

சினிமாக் கேள்விகள் தாங்கிய Questions - Blog: Tamil Movies & Songs கணிப்பில் 814 பேர் கருத்தை சொல்லியிருக்காங்க.

இத்தனை பெரிய வாக்கு இதற்கும் விழுந்தால், ஒரளவு நம்பகமானதாகலாம்.

வலையுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் பாஸ்டன் பாலாவை நான் பரிந்துரைக்கிறேன்.

என் பேரைப் போடவே இல்லையே! ;-)

கொத்ஸ்,

---வலையுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் பாஸ்டன் பாலாவை நான் பரிந்துரைக்கிறேன்.---

"ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென"

புறநானூற்றில் ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிய மாதிரி எம்மை சொல்லிய செய்நன்றியை மறவோம் :)

பாடல் உதவி: marabilakkiyam : Message: Re: simply a doubt (from Maraththadi mail group - in Unicode)

பொன்ஸ்,

நடக்கும் விஷயங்களுக்கெல்லாம் கருத்து கந்தசாமியாகி கணினிக் குறிப்புகளாக நிரப்பாமல் இருந்ததற்காவே -- உங்கள் பெயரை அவசியம் சேர்த்துவிட வேண்டும் :)

ஓசைப்படாம நல்லது செஞ்சுக்கிட்டு இருக்கும் மக்களை விட்டுட்டீங்களே பாபா.

எடுத்துக்காட்டு வேணுமா?

போங்க பாபா......
சுயவிளம்பரம் எனக்குப் பிடிக்காது:-))

துளசி :)

உங்களுக்கு தன்னடக்கம் அதிகமாக இருக்கு... நாமே நம்மைப் பற்றி சொல்லாவிட்டால், கூகிளால் திரட்டப்படாத பக்கமாக குடத்திலிட்ட விளக்காயிடுவோம் :P

ஒரு வரீல, யார் யார் என்னென்ன சாதிருச்சுக்காங்கன்னு சொன்னீங்கன்னா, யோசிக்க நல்லாருக்கும் :))

சர்வேசன், செய்து விடலாம்

Surveysan,

done. Disclaimer: The one liners are my opinions and might not reflect the ordering of the names in the list :)

பாபா ,கிருஷ்ணம்மாள் சங்கரலிங்கம் பேரையும் சேருங்க. அவங்கள பத்தி இங்க போய் படிக்கவும்.

http://www.rediff.com/news/2008/oct/01award.htm

Thanks for the Great hat-tip Radha Sriram. added now

ஆனாலும் எங்கள் தன்மான தமிழனை, பெரியார் வழி தோன்றலை, சமுக நீதி காவலனை, ஏழை பங்காளனை, எண்பத்தி நான்கு வயதிலும் தமிழனை உய்பிப்பதே தன் கடமை என்று, தமிழே என் மூச்சு என ஊண் உறக்கம் இன்றி பாடுபடும் தலைவரை விட்டு விட்டீங்களே ஐயா!

ஒட்டு போட்டாச்சு..

சுயநல அரசியல் நடத்தாமல், தன் நேர்மையை வெளிப்படுத்திய சபாநாயகருக்கு போட்டாச்சு...

இந்து தீவரவாதிகளை அடையாளம் காட்டியதால் தான் ஹேம்ந்த் கர்கரே கொல்லப்பட்டார் என்று சொல்ல வறீங்களா பாபா. அப்படி எடுத்துக் கொண்டால் இந்த சம்பவமே அவரை குறி வைத்து தான் நடந்தாக ஆகிறது.

மீண்டும் யோசிங்களேன்....

நாகை சிவா, நன்றி!

---இந்து தீவரவாதிகளை அடையாளம் காட்டியதால் தான் ஹேம்ந்த் கர்கரே கொல்லப்பட்டார் என்று சொல்ல வறீங்களா---

சமரசம் செய்யாமல் இயங்கும் ஒன்றிரண்டு பேரும் இவ்வாறு பலியாகிறார்களே என்னும் ஆதங்கம்தான்; ஆனால், நீங்கள் சொல்லும் தொனியும் வருகிறது.

உஷா __/\__

கி வீரமணியைத்தானே சொல்றீங்க ;)

பாபா,

என்னதான் கிரிக்கெட் என்ற விளையாட்டை குட்டுவது in-thing என்றாலும், தோனி இந்தப் பட்டியலில் இருக்க வேண்டும்.

மேலும், சந்திரயான் திரு.அண்ணாதுரை தலைமையில் நடந்த project என்று நினைத்தேன். உண்மையானால், அவர் பெயரும் வரவேண்டுமல்லவா!

ஹேமந்த் கர்கரே - பட்டியலில் போடுங்கள்; விடுங்கள் - ஆனால் அவர் இறந்ததில் சதி ஏதும் இல்லை என்பது இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா படித்தால் புரியும். அந்துலே போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு கிடைத்த இரண்டு நாள் அவல் கர்கரே.

ஷீலா தீக்ஷித் கூட இடம் பெறலாம். ரேணுகா? on what grounds?

அனுஜன்யா

நன்றி அனுஜன்யா.

அவசியம் சேர்த்துவிடுகிறேன்.

ரேணுகாவிற்கு பதில் ஷீலா தீக்சித்தையும் மாற்றிவிடுகிறேன்

வணக்கம் நண்பரே!

உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
யாழ் மஞ்சு

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு