உங்க சாதி என்ன? - FeTNA கேட்கிறது
தொடர்புள்ள பதிவு: அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டும் பெட்னா?
முதலில் இந்தக் குறும்படத்தை பார்க்கலாம்:
அடுத்ததாக ஃபெட்னா வலையகத்திற்கு செல்லலாம்
http://www.fetna.org/index.php/2011-12-22-16-59-30/2011-12-22-16-59-32/item/145-tamilmatrimony
சாதிக்குள்ளேயே மணம் முடிப்பது, குலம் பார்த்து மருமகன் பிடிப்பது போன்ற வழக்கங்களை அமெரிக்கா வந்தும் விட்டுத் தொலைக்க முடியாத சூழலுக்கு பெட்னா இட்டுச் செல்கிறது.
அமெரிக்காவின் ஒவ்வொரு வீடாக சென்று, “நீங்கள் கோத்திரம் பார்க்கக் கூடாது; மதம் பார்த்து கல்யாணம் கட்டக் கூடாது!” என்று பிரச்சாரம் செய்வது கஷ்டம்.
ஆனால், தன் வீட்டில், தன்னுடைய சங்கமத்தை ஒழுங்காக செய்யலாம்! அனைத்து தமிழர்களும் ஒன்று கூடும் இடத்தில் ‘உங்கள் ஜாதி என்ன? தங்களின் மதம் எது? என்ன பிறப்பு? அந்த குறுகலுக்குள்தான் பொண்ணும் மாப்பிள்ளையும் கிடைக்கும்!” என்று நெறிக்க வேண்டாம்.
மிக மிக எளிமையாக, சாதி, இனம் போன்ற வளையங்கள் கேட்காமல்தான் பதிவுகள் நடக்க வேண்டும் என்று தமிழ் மேட்ரிமொனி.com தளத்தை கேட்க வேண்டும்.
தன்னுடைய இடத்தில் சாதி கேட்டு, இனம் வினவி அந்தந்த குழுக்களுக்குள் மணம் புரிந்து வைக்கும் அமைப்புகளுக்கு பெட்னா இடம் தரக் கூடாது. நல்லகண்ணுவை முகப்பில் நிறுத்திவிட்டு, பின்னணியில், உங்கள் ஜாதி என்ன, குலம் சொல்லுங்க என்று கேட்க கூடாது. அவ்வாறு கூட வலியுறுத்தாமல், தன்னுடைய மாநாட்டில், தமிழ் மேட்ரிமொனி என்ன அசிங்கம் வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடாமல், தைரியமாக தடுக்க வேண்டும். இல்லை என்றால், காந்தி குல்லா போட்டு வாக்கு வாங்கும் ஊழல்வாதிகளே மேல்.
மிக எளிமையான வேண்டுகோளை அமெரிக்க தமிழ் சங்கங்கள் முன்வைக்கலாம்:
1. FETNA மூலமாக ரெஜிஸ்தர் செய்பவர்களுக்கு ஜாதியையும் மதத்தையும் கேட்க கூடாது.
2. FeTNA சாதி சார்ந்த திருமணங்களை ஊக்குவிக்கவில்லை என்றால், அவ்விதமான நிலைக்கு சாதகமான இடத்தை ஏற்பாடு செய்யாமை.
இந்த மாதிரி கூட ஃபெட்னா வற்புறுத்தாமல், அமெரிக்காவிலும் தமிழர்களின் சாதியையும் இனத்தையும் கேட்டு அடையாளம் கண்டுதான் திருமண பந்தங்களை ஏற்படுத்த உதவுமா?
ஆஹா இதெல்லாம் வேற நடக்குதா, யாருமே இதைப்பற்றிலாம் மூச்சே விடலை, நீங்களாவது சொன்னீங்களே, இல்லைனா அமெரிக்காவில இருக்கவங்க எல்லாம் அறிவு சீவிங்க, முற்போக்கானவங்கன்னு வழக்கம் போல நம்பிக்கிட்டு இருந்து இருப்போம்.
முற்போக்கு என்பது உடையில் மட்டும் தான் போல!
சொன்னது… 6/21/2012 12:09:00 AM
தெளிவான கொள்கைகள் இல்லாத பொழுது போக்கு அமைப்பு இது. கூட்டம் சேர்க்க என்ன வேண்டுமானலும் செய்யத்துணிந்தவர்கள். ஃபெட்னா ஒரு வெளங்கா வெட்டி அமைப்பு என்பதை எவ்வளவு முயன்று/வலிந்து மறைத்தாலும் பல்லிளிக்கிறது.
http://www.asiantribune.com/news/2012/03/03/spilt-fetna
வழக்கம்போல் இந்த வருடமும் டமிள் வயிக்கிறார்கள்.
கன்னடப் பைங்கிளி
முன்னணி நடிகை
ஸ்ரீஸ்ரீசாமியார்
‘விஜய்டிவி’ புகழ் ஏதோ ஒருவர்
.....
கொள்கை: தமிழால் பிழைக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் சாமியார் முதல் நடிகை வரை யார வேண்டுமானலும் வரவழைத்து கூட்டம் சேர்ப்போர் கழகம்.
கடுப்பைக் கிளப்பும் - FeTNA சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம் வாங்க ப்ளீஸ்
http://kalvetu.blogspot.com/2010/06/fetna.html
சொன்னது… 6/21/2012 06:22:00 AM
Silver Jubilee Convention, July 6&7, Baltimore, MD
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின், அமெரிக்க தமிழ்த்திருவிழா 2012இக்கு அனைவரும் வருக. ஜூலை 5 மாலை துவக்கம், ஜூலை 8ஆம் நாள் வரை நிகழவிருக்கும் திருவிழாவினைக் கண்ணுறுவோம்!
திருவிழாவின் போது இடம் பெறவிருக்கும் பதிவர் சந்திப்பிலும் பங்கேற்க வாருங்கள்.
எல்லாவற்றையும் கண்டுவிட்டு, உள்ளதை உள்ளபடி விபரமாக விமர்சிக்கலாம்.
திருவிழா குறித்த கூடுதல் தகவலுக்கு: http://fetna.org/index.php/fetna-2012-tamil-vizha
சொன்னது… 6/21/2012 07:12:00 AM
பாலா,
நீங்கள்தான் இந்த எழுத்தாளர்களையெல்லாம் ஊர் சுற்றிக்காட்டும் பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். இராமகிருஷ்ணன் போன்றோர் யார் கூப்பிட்டாலும் வந்துவிடுவார்களா? எப்படி அவர்கள் அழைப்பிதழை ஏற்கிறார்கள்? ஊர் சுற்றும் ஆசை அல்லது மேடை கிடைத்தால் போதும் என்ற மனோநிலையா?
ஒருமுறை வைரமுத்து வந்து (அட்லாண்டா ) தேவருக்கு சிலை வைக்க வேண்டும் போட்டோ வைக்கவேண்டும் என்று பேசினார்.
இராமகிருஷ்ணன் என்ன பேச இங்கு வருகிறார். அஜென்டா?
.
சொன்னது… 6/21/2012 09:25:00 AM
எல்லா அமெரிக்கர்களையும் அவ்வாறு சொல்ல முடியாது;நாங்கள் இதற்கு போகாததால் அவர்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை என்றாலும்----இது மாதிரி செய்வது இப்ப இங்கு வந்தவர்கள் மாதிரித்தான் தெரிகிறது.
நான் இதைப் பற்றி இங்கு எழுதியுள்ளேன்; பாருங்களேன்...
"கேள்விகள்:Federation of Tamil Sangams of North America (FeTNA)."
link:
http://www.nambalki.com/2012/06/federation-of-tamil-sangams-of-north.html
இங்கு வருவதற்கு நடிகர் வடிவேலு அதிகமாக பணம் கேட்டதாக குறைப்பட்டுக்கொண்டார்கள். இது என்ன நியாயம்? வியாபாரம் என்றால் இரு பக்கமும் அவரவர் தகுதிக்கேற்ப லாபம் இருப்பது தானே முறை?
சொன்னது… 6/21/2012 10:51:00 AM
//நீங்கள்தான் இந்த எழுத்தாளர்களையெல்லாம் ஊர் சுற்றிக்காட்டும் பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். //
எனக்கு விருப்பமான சிலர் இங்கே வரும்போது, விடுமுறை எடுத்துக் கொண்டு, அவர்களுடன் ஊர் சுற்றுகிறேன். மனதிற்கு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் தருகிறது.
//இராமகிருஷ்ணன் போன்றோர் யார் கூப்பிட்டாலும் வந்துவிடுவார்களா? //
இயல் விருதிற்காக கனடா வருகிறார். அப்படியே ஃபெட்னாவிற்கும் செல்கிறார். டொரொண்டோ வராவிட்டால், பெட்னாவிற்கு வந்திருக்க வாய்ப்பில்லை.
//எப்படி அவர்கள் அழைப்பிதழை ஏற்கிறார்கள்? ஊர் சுற்றும் ஆசை அல்லது மேடை கிடைத்தால் போதும் என்ற மனோநிலையா?//
ஆ இரா வெங்கடாசலபதி போன்றோர்களுக்கு பல்கலைக்கழக அழைப்புகள் கிடைக்கின்றன. காலச்சுவடு தேவிபாரதி போன்றோருக்கு நல்கை வருகின்றன.
எஸ் ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களை தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதாவது கவனிக்கிறதே என்பதில் மகிழ்ச்சி.
சொன்னது… 6/21/2012 10:59:00 AM
பாலா,
நீங்கள் யாருடனும் சுற்றலாம் உங்கள் விருப்பம். :-))))
நகைக்கடை திறப்புவிழா துணிக்கடை திறப்புவிழா மாதிரி அமலா பால் முதல் இராமகிருஷ்ணன் வரை வருகிறார்கள். இப்போது சிரி சிரி சாமியும் வருகிறார் யோகா கற்றுக்கொடுக்க.
ஒருவர் அழைக்கும்போது, ஏன்? எதற்கு என்னால் என்ன பேசப்படவேண்டும்? அதற்கான சரியான மேடையா என்று கவனித்துதான் வருகிறார்களா? என்ன தலைப்பில் பேச ஒப்புக்கொண்டு வருகிறார்கள்? என்று தெரிந்துகொள்ளும் ஆவலிலேயே கேட்டேன். அதுவும் இராமகிருஷ்ணன் என்பதால். எழுத்தை தாண்டி நல்ல பேச்சாளர் என்பதால்.
ஆண்டுதோரும் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது சடங்கு. அதுதாண்டி கள்ளழகருக்கும் மதுரைக்கும் சம்பந்தம் இல்லை . அதுபோலவே வருடம் தோறும் இந்த சடங்கு நடப்பதால், சடங்கிற்கு வரும் இவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் ஆவலில் கேட்டேன். :-))
நன்றி பாலா.
சொன்னது… 6/21/2012 11:36:00 AM
அறிவு நாணயமற்ற கூழ் முட்டை வாதம்.தனது நிகழ்வு நிரலில் இல்லாத ஒன்றை FeTNA செயவதாக பொய்யுரைப்பது அதுவும் நெஞ்சறிய.
மலினமான வனமத்தனம்.
நல்லவேளை FeTNA தான் சாதியையே அமெரிக்காவில் உண்டாக்கியது என சொல்லவில்லை.நிகழ்வை பயன்படுத்தி தனது வணிபத்தை விரிவு செய்யும் பல நிறுவனங்களில் ஒன்றின் வழமையான செயலை FeTNA
மீது திணித்துரைப்பது கயமை தன்மையது. யாரையும் வலிந்து சாதியை சொல்ல தமிழ்மணஅமைப்பகமும் கட்டாயபடுத்துவதாக இல்லை.பயனாளர்களின் தன்விருப்ப செயலை குறையென சுட்டும் யோக்கியார் தான். பாலா சாதிமறுப்பாளர் ?!
சொன்னது… 6/21/2012 07:38:00 PM
இது முற்றிலும் வணிகத்தனமான செயல்பாடு. ஃபெட்னாவுக்கு விளம்பரக்க்ட்டணம் வருகிறது த்மிழ் மேட்ரிமனி.காம்-இடமிருந்து. அவ்வளவுதான் விஷயம்.
இந்த சாதி பாகுபாடுகள் இந்துக்களிடம் மட்டுமல்ல, முசல்மான்கள், கிறித்துவ்ர்கள் ஆகியோரிடத்திலும் உள்ளது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என நினைப்பவர்கள் ஜாக்கிரதையாகத்தான் செயல்படுவார்கள். இதில் சாதியின்மை என்ற இல்லாத ஒரு லட்சியத்தை குருட்டுத்தனமாக பிடிக்கும் காலணா பெறாத இணைய தாசில்தார்கள் மூக்கை நுழைக்கவில்லை என யார் அழுதார்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சொன்னது… 6/21/2012 08:12:00 PM
I am re-posting the same thing that I did earlier in your facebook because it is not worth my time to write a new one.
-----
Baba, do you try to talk like a kid here :-)
It is an advertisement when clicked sends the user to the advertiser's site which makes the user to login. Once you are out of FeTNA website, FeTNA can't dictate anything to you. Once you are logged in to Tamil Matrimony, then you become a customer of them and it is between you and them to decide what to share and what not to. No one other than you and them, leave alone FeTNA, knows what information it collects from you after logging in. If you don't agree with them, then log out and get out of their site. This is the 101 lesson which a net genius like you knows very well.
Now second part, I think FeTNA website has put an advertisement from Tamil Matrimony for few hundred or thousand dollars. Even if a casteist like you pay $1000, they may put an advertisement with your face as long as they don't know what you do inside your home :-)
Stretching this non-issue into a big issue everywhere, you look like a fool here, but you are not. We all know that you are very intelligent. Try to think of something intelligent to malign FeTNA. Don't go so silly :-)
----
The Hindu newspaper has been asking and publishing caste names (including your favorite ones too) for decades. Don't stop reading that newspaper because it will not fit your hidden brahminical agenda :-)
சொன்னது… 6/21/2012 08:58:00 PM
இது மற்றவர்களுக்காக :-)
http://fetnathiruvizha.blogspot.com/
சொன்னது… 6/21/2012 09:03:00 PM
நம்பள்கி,
குழந்தைகள் தமிழ் பேசுவதற்கும் சினிமா சாதி ஃபெட்னாவிற்கும் சம்பந்தம் இல்லை. பெற்றோர்கள் வீட்டில் எடுக்கும் முயற்சியும், ஃபெட்னா சார்பில்லாத ஆசிரியர்களின் முயற்சியுமே இதற்கு காரணம்.
உதாரணத்திற்கு இத மாணவர்களின் பட்டி மன்றம் பாருங்கள்.
வீட்டுப்பாடம் சுகமா? சுமையா? பட்டிமன்றம்
http://tamilpaper.gtamil.org/
இந்த ஆண்டு ஃபெட்னாவில் இவர்களை அழைத்து "பாருங்கள் ஃபெட்னாவில் அமலாபாலின் அருகே தமிழ்" என்று ஃபில்டப் வந்தாலும் வரலாம.
.
ஃபெட்னா இல்லாவிட்டாலும் தமிழ் வளரும். இதே தமிழ்மணம் காசி ஒன்றும் ஃபெட்னாவின் அடிப்பொடி அல்ல. அவரின் ஆர்வம் இதை உண்டாக்கியது. தனிப்பட்ட மனிதர்கள் தமிழுக்காக உழைக்கிறார்கள்.
ஃபெட்னா அமைப்பாக அமலாபாலை கூப்பிட்டு கூட்டம் சேர்க்கிறது. நடிகைகளுடம் சாப்பிட போட்டோ எடுக்க என்று அலையும் கூட்டத்திடமும், சாதி பார்த்து சாமியாடும் கூட்டத்திடமும் காசு வாங்கி ஏதோ நடத்துகிறார்கள்.
.
சொன்னது… 6/22/2012 03:57:00 AM
டோண்டு,
உங்களுக்கு விளங்கவில்லை என நினைக்கிறேன்.
உங்கள் வீட்டில் ஒரு விழா நடக்கிறது. அங்கு வருபவர்களுக்கு உணவு பரிமாறுகிறார்கள். யார் யார், எங்கெங்கு உட்கார வேண்டும் என்று சாப்பாடிற்கு உட்காரும் மேஜை ஓன்ரால் தீர்மானிக்கப் படுகிறது.
”நீ பாப்பாத்தீ... நீ அங்கதான் உட்காரணும். நீ கொம்மவாரு... அதனால உனக்கு இந்த இடம்.”
என்று விழாத் தலைவரின் உணவு உபசரிப்பு இன் சார்ஜ் சொன்னால் எப்படி இருக்கும்
தங்களுக்கு பிடித்தமான நண்பர்களுடன் சேர்ந்து அருந்துவோமா? விழாவினரின் கெடுபிடிக்கு உட்பட்டு அவர்கள் கைகாட்டுவோருடன் மட்டும்தான் உரையாடுவோமா?
சொன்னது… 6/22/2012 04:43:00 AM
பன்னீர் (ஹாரிஸ்பான்),
//தனது நிகழ்வு நிரலில் இல்லாத ஒன்றை FeTNA செயவதாக பொய்யுரைப்பது அதுவும் நெஞ்சறிய.//
பெட்னா விளம்பரம் செய்வதைத்தான் சொல்கிறேன்.
இங்கே பார்க்க:
1. FeTNA 2012 - Silver Jubilee Year - Federation of Tamil Sangams of North America (FeTNA):
தங்கள் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்க்கைத் துணை தேடுவதில் உதவும் நிகழ்ச்சி இருக்கிறது.
2. இங்கு இதற்கு பதிவு செய்ய வேண்டும்: Singles Meet Login Page
மேலே உள்ள பக்கத்தில் பெட்னாவின் லோகோவும் வருமாறு வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு தங்களின் நிகழ்ச்சியில் சாதியைக் கேட்பதை ஊக்குவிக்கிறார்கள்.
சொன்னது… 6/22/2012 04:49:00 AM
ஏது எப்படி இருந்தாலும் இந்து மத கார்பரேட் யோகா சாமியார் இங்கு வருவது தவறு!
எதற்கு கார்ப்பரேட் சாமியார் இந்த விழாவிற்கு? சாமியார்களை நம்பாத தமிழர்கள் இங்கு ஏராளம். அமெரிக்காவில் இருந்து கொண்டு அமெரிக்காவின் மிக மிக முக்கியமான கொள்கையான "Separation of church and state" -ஐ எப்படி மறந்தீர்கள்? இது அரசாங்கம் சம்பந்தப் பட்ட விழா அல்ல என்பது சரியான பதில் இல்லை!
இது தமிழர்கள் விழாவாக இருந்தாலும்,"இந்து மத யோகாவிற்கு" இங்கு என்ன வேலை? இந்து மத சாமியார்கள் எதற்கு? தமிழர்களில், கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள், வள்ளலார்கள் கிடையாதா அல்லது Atheists or Agnostics யாரும் கிடையாதா? அடுத்தது "அழகாக பவனி" வரும் ராகு காலமும் எம கண்டமும்; அப்புறம் அது பின்னாலேயே வரு....தயவு செய்து அமெரிக்காவில் அமெரிக்கனாக வாழுங்கள்!
இந்த சாமியார் பிசினஸ்சை இந்தியாவில் வைத்தால் எவனும் கேள்வி கேட்க மாட்டான். அமெரிக்காவில் இது தவறு தான்;
அமெரிக்காவில் இவ்வாறு ஒரு மத சாமியாரைக் கூப்பிடுவது தவறா இல்லையா என்று நீங்கள் ACLU - வை கேட்டுப் பாருங்கள்!பிறகு பேசலாம்!
சொன்னது… 6/22/2012 04:53:00 AM
சுடலை மாடன்,
தமிழ் மேட்ரிமொனிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது, அடிமைகளை சுரண்டி எடுக்கும் வைரத்தை நான் வாங்குவதற்கும் சியரா லியோனில் குழந்தைகள் சாவதற்கும் சம்பந்தமில்லை என்பதை விட மோசமானது.
தமிழ் மேட்ரிமொனியை நான் திருந்த சொல்லவில்லை. பெட்னாவையும் அவர்களுக்கு திருந்துமாறு ஆலோசனை சொல்ல கேட்கவில்லை.
என் விண்ணப்பம் மிக எளிமையானது: நாங்கள் நடத்தும் விழாவில் நாட்டுக்கோட்டை செட்டியார், தேவேந்திர குல வெள்ளாளர் என்று பிரிவு பார்த்து திருமணம் முடிக்க அனுமதி கொடுக்காதீர்கள்.
இதைக் கேட்க திராணியில்லாத அமைப்பின் கொண்டாட்டங்களில் பங்கு பெறுவதற்கு பெரியாரும் அம்பேத்காரும் பிறந்த நாட்டில் இருந்து வந்தவன் என்ற முறையில் அருவறுப்பாக இருக்கிறது.
அதை விட மாபெரும் வருத்தம் என்னவென்றால், வருடா வருடம் பெரியார் குறித்த கட்டுரைகளை விழா மலரில் வெளியிட்டு விட்டு, அதன் பின்னே, இந்த மாதிரி குலம் சாந்த குறுகல்களை ஊக்குவிப்பது.
உங்களுக்கு மகளோ, மகனோ இருந்து, அவர்களை எந்த மதத்தில் எந்தப் பிரிவு என்று விண்ணப்ப படிவத்தில் கேட்டால், சுருக்கென்று இல்லாவிட்டால், அச்சம் கலந்த கோபம் நிச்சயம் எழவேண்டும்.
சொன்னது… 6/22/2012 05:04:00 AM
Links are not there in previous comment: இங்கே பார்க்க:
1. FeTNA 2012 - Silver Jubilee Year - Federation of Tamil
Sangams of North America (FeTNA):
தங்கள் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்க்கைத் துணை
தேடுவதில் உதவும் நிகழ்ச்சி இருக்கிறது.
2. இங்கு இதற்கு பதிவு செய்ய வேண்டும்: Singles Meet Login Page
மேலே உள்ள பக்கத்தில் பெட்னாவின் லோகோவும் வருமாறு
வைத்திருக்கிறார்கள்.
சொன்னது… 6/22/2012 05:08:00 AM
சுடலை மாடன்,
//Even if a casteist like you pay $1000, they may put an advertisement with your face as long as they don't know what you do inside your home :)//
பாலா சாதிப்பற்றாளரா இல்லையா என்று தெரியாது எனக்கு... இணையம் வரை மட்டுமே பழக்கம். :-)))
ஆனால் நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் காசுக்காக ஃபெட்னா பக்சே விளம்பரத்தைக்கூட போடும்போல. என்ன கொடுமை இது? :-(((
ஏதாவது ஒரு கொள்கை ஒன்று இருந்தால் அந்த கொள்கைக்கு பாதகம் செய்யும் ஸ்பான்சர்கள் மில்லியன் கொடுத்தாலும் ஏற்ககூடாது என்பது ஒரு எதிர்பார்ப்பு.
இப்போது சிரி சிரி சாமியார் வரை வந்துவிட்டது..அடுத்து காமகோடியா? அவர் ஃபிளைட் ஏறி கடல்தாண்ட மாட்டார் வேண்டுமானால் நித்தி.
கூட்டம் சேர்ப்பது என்பதே நோக்கமாக தெரிகிறது. நடிகை சாமியார் சாதி விளம்பரக்கம்பெனி காசு ...:-((
.
சொன்னது… 6/22/2012 05:11:00 AM
பெட்னாவில் ஸ்ரீ ஸ்ரீ யை அழைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கின்றது. போகவேண்டுமா என்பதை மறு பரிசீலனை
செய்ய இருக்கின்றேன். நான் பலமுறை சென்றிருக்கின்றேன். தமிழ் மொழி, தமிழ் உணர்வு போன்ற விஷயங்கள் எல்லாம்
ஊறுகாய்ப் போலதான் இருக்கும்.
சொன்னது… 6/22/2012 05:51:00 AM
கல்வெட்டு,
உங்களுக்குத்தான் விளங்கவில்லை. சுடலைமாடன் கூறியது போல விளம்பரத்தில் க்ளிக் செய்யத்தான் ஹைப்பர்லிங்க்.
அதை செய்த பின்னால் மேட்ரிமனி தளத்துக்கு சென்று விடுவார்கள்.
இஷ்டம் இருப்பவர்கள் சாதியை பார்த்து திருமணம் நிச்சயிக்கிறார்கள். இதில் உங்கள் விருப்பு வெறுப்பு எங்கே வருகிறது?
ஃபெட்னா வேண்டுமானால் தமிழ் மேட்ரிமனி விளம்பரத்துக்கான தொகையை திருப்பித் தந்து விட்டு அந்த லிங்கை நீக்கட்டும் என ஆலோசனை சொல்லிப் பாருங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சொன்னது… 6/22/2012 06:09:00 AM
அன்புள்ள டோண்டு,
நான் உங்களிடம் எந்தக் கேள்வியும் (உங்களை விளித்து) கேட்கவில்லை உங்களுக்கு எந்தப்பதிலும் சொல்லவில்லை. இங்கே உங்களுக்கு பதில் சொல்லியிருப்பவர் பாலா.
நன்றி!
சொன்னது… 6/22/2012 06:43:00 AM
இந்து மத சாமியார் அவரது வியாபாரத்தைப் பெருக்க வருகிறார். நான் ஒரு முஸ்லிம், கிருத்து, அல்லேலுயா, பணம் வைத்துள்ள பீடி சாமியார், பாட்டில் சாமியார் மற்றும் இதர சாமியார்களை (தமிழ் என்ற முக மூடியுடன்) கூட்டிக் கொண்டு வரட்டுமா?
ஏழைக்கு ஏத்த எள்ளுரண்டை; எனக்கு கோடாங்கி சாமியார் தான் வேணும். உங்களுக்கு பூஜய்ம்-பூஜ்சம் ரவி சாமியார் என்றால் எனக்கு பூஜ்யம் பூஜ்யம் 1-2-3 பாட்டில் சாமியார். சரியா?
இங்கு யாரும் இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை: எப்படி அமெரிக்காவில் ஒரு மத சாமியாராக கூப்பிட முடியும்?
அப்ப separation of state and church என்ன வெறும்...
A question: when you have moderation, do you need CAPTCHA ?
சொன்னது… 6/22/2012 06:59:00 AM
FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America | Snap Judgment
சொன்னது… 6/22/2012 01:56:00 PM
பாலா Snap Judgment
"FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America"
http://snapjudge.wordpress.com/2012/06/22/fetna-finances-venues-whitepaper-on-federation-of-tamil-sangams-of-north-america/
திவில் பின்னூட்டம் இட முடியவில்லை. அதற்கான பின்னூட்டம் இங்கே....
---------------------
வட அமெரிக்கா (நாடு அல்ல கண்டம் .நாட்டின் பெயர் யுனைடெட் ஸ்டேஸ் ஆஃப் அமெரிக்கா) பேரவை அடுத்து மெக்சிகோவில் மாநாடு நடத்துமா ,அதுவும் அவட் அமெரிக்கா கண்டம்தானே என்றெல்லாம் நீங்கள் கேட்பது அநியாயம். :-))))
**
இது இப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்றே நினைக்கிறேன். "நீண்ட வார இறுதி"யில் சும்மா நடிகையுடன் சாப்பிட படமெடுக்க , நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்க என்று போவோர்களே அதிகம்.
மக்களுக்கு இதுதான் பிடிக்குது என்று மசாலா படம் எடுக்கும் இயக்குனர்கள் போல இவர்களும் இதே பாணி அவியலைத்தான் தருவார்கள்.
**
இந்த சினிமா/டான்ஸ்/நடிகைகளுடன் சாப்பாட்டிற்கு எக்ஸ்ட்ரா காசு/ நடிகைய பாக்க காசி /தனியாப் பேச தனிக்காசு/ சாமிக்கு தனிக்காசு ...என்ற இத்யாதிகள் முடிந்த கையோடு ... அடுத்த சினிமாக் கச்சேரியை எங்கு வைக்கலாம் என்று முடிவு செய்து அடுத்த வருடம் முழுவதும் உழைப்பார்கள்.
அடுத்த வருடம் இந்த நேரத்தில் விளம்பரம் ஆரம்பித்து அடுத்த கூத்திற்கு தயாராகிவிடுவார்கள்.
--------------
"இது சும்மாங்காட்டியும் மனமகிழ்மன்றம்தான், கூட்டம் சேர்க்க , பிசினஸ் சிறக்க எந்தவிதமான குட்டிக்கரணக்களும் இங்கே அடிக்கப்படும்" என்று சொல்லிவிட்டால் பல்லில் நாக்குப்பட ஒருபயலும் விமர்சிக்க முடியாது. ஆமா
**
சரியான தொகுப்பு. நல்ல ஆவணமாக இருக்கும். நன்றி பாலா!
சொன்னது… 6/22/2012 03:32:00 PM
@Kalvettu
Sorry sir, it was a genuine mistake.
Regards,
Dondu N. Raghavan
சொன்னது… 6/22/2012 05:22:00 PM
கருத்துரையிடுக