வெள்ளி, ஏப்ரல் 30, 2004

ஸ்ரீதேவி ஜோடி ஆவாரா?

ரஜினிகாந்தின் புதிய பட தொடக்க விழா, வருகிற மே 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சித்ராபவுர்ணமி அன்று நடைபெறுகிறது. ஜுலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

நன்றி:
TFM Pages
Daily Thanthi Article Pages
Ravikumar to direct Rajni`s next film - Sify.com

இரண்டு சுந்தர்

கடந்த வாரம் இரண்டு பதிவுகளை மிகவும் உணர்ந்து ரசித்தேன்.

சுந்தரவடிவேல்: நாடக விமர்சனத்தை விட அவர் கிளம்பிய விதமும், விழாவில் நடந்த கூத்துக்களும் அனுபவித்த ஒன்று. ஒரு இடத்துக்கு செல்வதற்கு ஒன்பது மேப் எடுத்துக் கொள்வது; கடைசி நேரத்தில் மனைவியிடம் வரைபடத்தை சரி பார்க்க சொல்வது; அவர்கள் சரியாக சொன்னாலும் நான் தவறான வழியை எடுப்பது; எங்கு சென்றாலும் குழந்தைக்கு ஸ்பெஷல் சாப்பாடு எடுத்து செல்வது; கார் நூறைத் தொடுமா என்று வேகமாக ஓட்டி பார்ப்பது; மாமாவை (போலீஸின் செல்லப் பெயர்) பார்த்தவுடன் பம்முவது; என்று எனக்கு மட்டும் உரித்தான குணாதிசயங்களை சுவாரசியமாக விவரித்திருந்தார்.

சுந்தர்ராஜன்:'குழலூதி மனமெல்லாம்' மற்றுமொரு நினைவுகளை அசை போட வைத்தது. முன்னாள் அமைச்சர்கள் சாதிக் பாச்சா, பொன். முத்துராமலிங்கத்தின் மகன்களுடன் படித்த ஸ்கூல் காலங்கள் நினைவுக்கு வந்தது. மாண்புமிகு மகன்களோடு ஊரை வலம் வருவதின் பலமே தனி. அப்போது முயற்சி செய்த கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்; கொஞ்ச காலம் கழித்து பிலானி மாணவிகளே தம் அடிக்கும் peer pressure-இனால் முயற்சி செய்த மென்தால்-More; ரம்மோடு சேர்ந்த ராத்மேனின் அனுபவமே தனி என்னும் பெங்களூர் சகாக்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுத்தது எல்லாம் நிழலாடியது. ஏனோ, எதுவுமே வெற்றியடையாததால் வளையமும் விடத் தெரியாது; Patch அணிந்து கொள்ளும் பாக்கியமும் கிடையாது. 'ஆட்டோகிராஃபில்' போகிற போக்கில் பட்டியல் போட்டு சென்ற சேரனின் பாடலுக்கு சுந்தரை விட அழகாக யாராலும் பொழிப்புரை எழுத முடியாது!

'பேரழகன்' - காதலுக்கு

புஷ்பவனம் குப்புசாமி பாடும் 'பறை' பீட் பாடல். நடுவில் 'குனித்த புருவமும்' ஷோபனா போல் பாசுரமும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


சுத்துகிற பூமியில எத்தனையோ சாமி உண்டு
ஏதாச்சும் ஒரு சாமி எங்களக் காக்க வேணுமடா
கூடிநிற்கும் சனங்க எல்லாம் கோஷம் போடுங்கடா
கஞ்சி கேக்கும் வயித்துக்காக காசு போடுங்கடா

காதலுக்குப் பள்ளிக்கூடம் கட்டப் போறேன் நானடி
காம்பவுண்டு சுவருல உன்ன ஒட்டப் போறேன் பாரடி
கண்ணகியின் சிற்பம் ஒண்ணு செத்துப்போச்சு சென்னையில
அந்தச் சில உசிரோட நிக்குது என் கண்ணுக்குள்ள

நட்சத்திரத்த நட்டுவச்ச பல்லுடா
கத்திமுனையில் ஏறி நிற்கும் தில்லுடா
பத்துவிரலும் அர்ச்சுனரு வில்லுடா
என்னப் போல எவனிருக்கான் சொல்லுடா

ஆலமரத் தோப்புக்குள்ள வாழமரம் நீயடி
முக அழகப் பாத்து மயங்கிப்புட்டேன் நானடி


யுவன ஷங்கர் ராஜாவின் முழுப் பாடலையும் கேட்க ராகா செல்லலாம்.

'பேரழகன்' பாடல் குறித்த முந்தைய பதிவு.

அருள் - திரைப்பாடல் அறிமுகம்

'அநியாயம் பண்ணினா ஆண்டவனுக்குப் பிடிக்காது; அசிங்கமாப் பேசினா அருளுக்குப் பிடிக்காது' என்று அருள் விக்ரம் உதாருடன் நம்மை வரவேற்கிறார். ட்ரெய்லரில் நிறைய அடிதடி; சண்டை முடிந்தவுடன் வேல் கம்பு; அப்புறம் மேற்சொன்ன வசனம். தொடர்ந்து குத்து சண்டை. டிஷ¤ம் டிஷ¥ம் ம்யுசிக் என்று நிறைய முஷ்டி தூக்கும் ரத்தம்.

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

மருத மலை அடிவாரம் ஒக்கடாத்துப் பப்படாமே: நா. முத்துகுமார் - எல்.ஆர்.ஈஸ்வரி, டிப்பு, தேனி குஞ்சரம்மா - ***/4

காதல் எதிர்ப்பு அருள்வாக்கு டப்பாங்குத்து. கொஞ்ச நாட்கள் அனைவரின் வேதமாக உலாவரும். எல்.ஆர்.ஈஸ்வரி இன்னொரு ரவுண்டு வரவேண்டும்.

'கண்ண பார்த்து
கலர பார்த்து
காதலுன்னு நம்ப வேண்டாம்

லைட்டா நீ சிரிச்சாலும்
லைட் ஹவுஸில் பார்த்தேன்னு
சும்மாவே சுத்துவானே ரீலு

லேசா நீ பார்த்தாலும்
ரோசாப்பூ தூக்குதுன்னு
காதுலதான் வைப்பானே பூவு'


பத்து விரல்: வைரமுத்து - எஸ்.பி.பி., ஸ்வர்ணலதா - *.5/4

வரிகள் புரியும் சாதாரணமான தாலாட்டு. இரண்டு நல்ல பாடகர்கள் கடமையை முடித்திருக்கிறார்கள். ஆபீஸில் கேட்காதது உத்தமம். தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. புதிய அறிவியல் விஷயங்களை சொல்லும் ஆர்வத்தில் பாதரசத்தின் தன்மையை எழுதியிருக்கிறார்.

ஓசையில்லாத பிம்பத்தை போல விழுந்து விட்டாயே மனசுக்குள்ள!

புண்ணாக்குன்னு: நா. முத்துகுமார் - டிப்பு, ஸ்ரீராம் - **/4

காரணமில்லாமலோ காரணத்துடனோ சாமியின் 'வேப்பமரம் பாடல்' நினைவுக்கு வரலாம்.
'கள்ளில் சிறந்த கள்ளு ஒத்த மரத்து கள்ளு
டயரில் பெரிய டயரு லாரியோட டயரு'


ஒட்டியாணம்: வைரமுத்து - ஹரிஹரன், மதுமிதா - **/4

வைரமுத்து இனிப்பான காதல் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார். இப்ப அவருக்கு என்னாச்சுங்க ?

'தங்கத்தோடு நான் தாரேன்
அங்கத்தோடு நீ வாரியா?
மஞ்சக் கயிறு நீ தந்தா
என்ன உரிச்சு தாரேன்யா'


சூடாமணி: ஸ்னேஹன் - ரஞ்சித், ஷாலினி சிங் - **/4

சிட்டி காலத்திற்கு ஏற்ற பாய்ஸ் 'டேட்டிங்' ஆகவும் இல்லாமல், முதல் மரியாதை எசப்பாட்டாகவும் முடியாமல் தவிக்கும் பாடல்.

'ஆம்பளைக்கு எப்பவுமே கை கொஞ்சம் நீளம்
கூட்டத்தில் பொண்ணு இருந்தா சீண்டிப் பார்க்க தோணும்
பொம்பளைக்கு எப்பவுமே வாய் ரொம்ப அதிகம்
ஆம்பளையக் கண்டா எப்பவுமே ஜாடை பேசத் தோணும்'


'மின்னலே' ஹாரிஸ் ஜெயராஜும் தெரியவில்லை; 'சாமி'யும் ஆடவில்லை. இந்த ஒலி நாடாவைக் கேட்காவிட்டால் பெரிதாக ஒன்றும் தவறவிடப்போவதில்லை. கவிதைக்கெல்லாம் கஷ்டப்படாத பாடல் வரிகள். ஆனால், எனக்கு 'கில்லி'யின் பாடல்கள் கூட பெரிதாக ரசிக்கவில்லை. சிலர் இப்பொழுது ரம்மியமான பாடல்கள், புத்திசை கானங்கள் என்று விமர்சிக்க, படம் ஹிட்டானதால் 'கொக்கரக்கோ'வை நூற்றியெட்டு முறை கேட்டதாலும் குழப்பத்தில் உள்ளது போல், இந்தப் பாடல்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றி: தமிழோவியம்

யாஹு க்ரூப்ஸ்

சில தமிழ் சார்ந்த யாஹு குழுமங்களும் அவற்றில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளும்:

ஆதி மரத்தடி - 72
அகண்ட பாரதம் - 276
அகத்தியர் - 516
தினம் ஒரு கவிதை - 1800
எறும்புகள் - 29
ஈ-சுவடி - 272
ஈ-உதவி - 178
பெட்னா - Federation of Tamil Sangams of North America - 1646
க்ளோபல் தமிழ் - 1262
இந்திய மரபுகள் - 518
கலைச்சொல் - புதிய சொல்லாக்கம் - 81
கலைவாணி - 239
மரபிலக்கியம் - 42
மரத்தடி - 379
மெய்கண்டார் - 243
மதுரை திட்டம் - 309
பொன்னியின் செல்வன் - 405
பொ.செ.-வரலாறு - 86
புத்தகப்புழு - 60
ராயர் காபி க்ளப் - 255
ஆர்.கே.கே - கோப்புகள் - 218
சந்தவசந்தம் - 75
தமிழில் அறிவியல் - 36
தமிழ்ல் தொழிற்நுட்பம் - 21
தமிழ்-உலகம் - 541
தமிழ்-ஆராய்ச்சி - 2038
தமிழ்ப் பாடல்கள் - 4822
தமிழ் வலைப்பதிவாளர்கள் (ஆங்கிலம்) - 34
தமிழ் வலைப்பதிவாளர்கள் - 95
தமிழ் லீனக்ஸ் - 427
பாடல் வரிகள் - 1103
சிறுகதை விவாதகளம் - 57
தினம் ஒரு திரைப்பாடல் - 142
தமிழக மீனவர்கள் - 6
தமிழா! உலாவி - 90
'தென்றல்' - அமெரிக்காவில் வெளிவரும் மாத இதழ் - 1273
துளிப்பா - 106
உண்மை - 25
உயிரெழுத்து - 140
வாலி - தமிழ்ப்பாடல் வரிகள் - 582
'ழ' கணினி - தமிழ் பிசி திட்டம் - 69

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்...

காலச்சுவடு கண்ணன்:
தமிழ் சத்திரம் | நேசமுடன் - தமிழோவியம்வலைப்பூக்கள்
தமிழ்வலை சுற்றி: நா கண்ணன் | உதயா | காசி ஆறுமுகம் | அருணா ஸ்ரீநிவாஸன்


எனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன்
வளவ.துரையன் | ஜெயஸ்ரீ

வியாழன், ஏப்ரல் 29, 2004

தீராநதி & குமுதம்


தீராநதி: அந்த ஆளைப் பார்த்தால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் ஜேப்படிக்காரன் போல இருக்கிறது’’ என்று ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த பாராளுமன்ற அங்கத்தினர் ரேணுகா சவுத்தரி சொன்னதாக ஒரு தேசிய ஆங்கில மொழி நாளேட்டில், ‘இவர்கள் சொன்னார்கள்’ பகுதியில் வெளி வந்தது. அந்த ஆள் யார் என்று இன்றைய இந்திய அரசியல் பரிச்சயம் உடையவர்கள் கூறி விட முடியும்; சந்திரபாபு நாயுடு. ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர். இதை அரசியல் விமரிசனம் என்பதைவிட வசை பாடல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தால் ரேணுகா சவுத்தரிக்கு ஒரு பிரதி அனுப்பலாம். பஸ் நிறுத்தங்களில் நிற்பவர்கள் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படக்கூடும்.ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம், ஒரு பாராளுமன்ற அங்கத்தினர் பஸ் நிறுத்தங்களைக் கவனித்திருக்கிறார்!அரசு பதில்கள்
முரு. ராமலிங்கம், திருப்பத்தூர்.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்பதற்கு சமீபத்திய உதாரணம்?

யானையிறவு யுத்தத்தில் எதிரிகளைச் சிதறடித்தவர் அவர். பிரபாகரனின் சொந்த ஊரை ராணுவம் சூழ்ந்தபோது கிழக்கிலிருந்து மாபெரும் படையுடன் புறப்பட்டு வந்து முற்றுகையை உடைத்தெறிந்தவர். கொரில்லா போர் முறையில் கில்லாடியான வீரர். இன்று...? எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்னதான் நடந்தது?

குடிநீர்த் தட்டுப்பாடு நீங்க நிரந்தர வழி - ப.மு.நடராசன்

கட்டுரையாளர்: முன்னாள் துணை இயக்குநர் (நிலவியல்), நீர் ஆய்வு நிறுவனம்.

இந்திய நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்தபடியாக நீர்வளத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலம் தமிழகம் ஆகும். தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வழிகள்:

மழைநீர் சேகரிப்பு: தமிழகத்தின் 70 ஆண்டுகளின் சராசரி மழையளவு 925 மில்லி மீட்டர் ஆகும். இந்த மழை நீரை வீட்டுக் கூரைகள் அல்லது செயற்கை முறை நிலநீர்ச்செறிவு ஆகிய வழிகளில் சேகரிக்க முடியும். தமிழகத்தில் பெய்யும் எல்லா மழைநீரையும் சேகரித்தால் 4,57,900 கோடி கனஅடி தண்ணீர் பெற்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நபருக்கு நாள் ஒன்றிற்கு 5,730 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். தற்பொழுது இங்கு சராசரியாக வழங்கப்படும் 70 லிட்டரைவிட இது 82 மடங்கு கூடுதலாகும்.

தமிழகத்தில் பெய்யும் மழை நீரைச் சேகரிப்பதால் பெரும் பயன் விளைவது உண்மை. ஆனால் தமிழகத்தின் வீட்டுக்கூரையின் பரப்பளவு இம்மாநிலத்தின் பரப்பளவில் சுமார் 5 விழுக்காடு. எனவே 1,850 கோடி கனஅடி நீரைத்தான் வீட்டுக்கூரைகளின் மூலம் சேகரிக்க முடியும். இத்தண்ணீரைக் கொண்டு தமிழக மக்களின் அன்றாட ஆண்டுத் தேவைக்குத் தேவைப்படும் 5,604 கோடி கனஅடி நீரில் சுமார் 33 விழுக்காடு தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

செயற்கை நிலநீர்ச் செறிவு: சுமார் 30 வகைப்பட்ட செயற்கை நிலநீர்ச் செறிவுமுறைகளால், தமிழகத்தின் நிலநீர்ச் செறிவை மேற்கொள்வதன் மூலம் கூடுதலாக 37,500 கோடி கனஅடி நிலநீரைப் பெருக்க முடியும்.

* தமிழகத்தின் மொத்த ஆண்டு நீர்வளம் 1,67,400 கோடி கனஅடி.

* கி.பி. 2025 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த்தேவை 2,42,300 கோடி கனஅடி.

* நீர் இருப்பிற்கும் பற்றாக்கு றைக்கும் உள்ள இடைவெளி 74,900 கோடி கனஅடி - அதாவது 47.74 விழுக்காடு பற்றாக்குறை.

* கி.பி. 2050 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவைக்கும் இருப்பிற்கும் உள்ள இடைவெளி 1,49,900 கோடி கனஅடி - அதாவது 89.55 விழுக்காடு பற்றாக்குறை.

ஆனால் கூரை மழைநீர் சேகரிப்பு, செயற்கை நிலநீர்ச் செறிவு ஆகிய வழிகளில் 39,350 கோடி கனஅடி நீரைத்தான் சேகரிக்க முடியும். எனவே இக்கூடுதல் நீர்வளத்தைக் கொண்டு கி.பி. 2025 ஆம் ஆண்டு மற்றும் கி.பி. 2050 ஆம் ஆண்டின் தமிழக நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது.

இந்திய நதிகளில் ஒவ்வொரு நல்ல பருவமழைக் காலத்திலும் சுமார் 52,54,800 கோடி கனஅடி நீர் கடலில் வீணாகின்றது. கிழக்கு நோக்கிப் பாயும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய தென்னக நதிகளில் நல்ல மழைப் பருவத்தில் சுமார் 2,51,600 கோடி கனஅடிநீர் கடலில் வீணாகின்றது.

* தமிழகத்தின் கி.பி. 2025 ஆம் ஆண்டின் நீர்த்தேவையில் சுமார் 39 மடங்கும்,
* கி.பி. 2050 ஆம் ஆண்டின் நீர்த் தேவையில் சுமார் 25 மடங்கும் இந்திய நதிகளில் வீணாகின்றது.

இதைப்போல மேலே கூறியுள்ள மூன்று தென்னக நதிகளில் தமிழகத்தின் கி.பி. 2050 ஆம் ஆண்டின் நீர்த்தேவையில் சுமார் இரு மடங்கு தண்ணீர் கடலில் வீணாகின்றது. எனவே நதிகள் இணைப்பின் வாயிலாகத் தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை முற்றிலுமாகப் போக்க முடியும்.

கடல்நீரைத் தூய்மைப்படுத்திப் பயன்படுத்துவது ஒன்றே தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை நிரந்தரமாகத் தீர்க்கக்கூடிய மாற்று ஏற்பாடு ஆகும். பல மத்திய கிழக்கு நாடுகள், அவற்றின் தண்ணீர்த் தேவைகளை கடல்நீரைத் தூய்மைப்படுத்தும் பல்வேறு வழிகளில் நிறைவேற்றி வருகின்றன. இவற்றில், குறைவெப்பப் பல்வழி காய்ச்சி வடிக்கும் முறையில் (Low Temperature Multi Effect Distillation Process - MED) ஒரு லிட்டர் கடல்நீரைத் தூய்மைப்படுத்த ஐந்து பைசா செலவாகின்றது. தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க இவ்வழியே மிகவும் சிறந்ததாகும்.

கடல்நீரைத் தூய்மைப்படுத்தி தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாகத் தேவைப்படும் 3,000 கோடி கனஅடி தண்ணீரைப் பெற ரூ. 4,248 கோடி செலவு செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் 8 கோடி கனஅடி நீரைப் பெற ரூ. 12 கோடி கூடுதலாகச் செலவு செய்து கடல்நீரைத் தூய்மைப்படுத்த வேண்டும்.


சென்னை நகரின் குடிதண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தெலுங்கு கங்கைத் திட்டத்திற்குச் சுமார் 1000 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. காவிரியில் தண்ணீர் இருந்தால்தான் வீராணம் திட்டம் வெற்றி பெறும். சென்னையில் தற்பொழுதுள்ள வறட்சியைப் போக்க 700 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனாலும் நிரந்தரத் தீர்வு காண முடியாது. ஆனால் மேலே கூறியுள்ள மொத்தச் செலவையும் கடல்நீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்தினால், 1,734 கோடி கனஅடி நீர்வளத்தைப் பெருக்கி, நபருக்கு நாள் ஒன்றிற்கு 245 லிட்டர் வீதம் சென்னை மக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியும்.

நன்றி: தினமணி - 27-04-2004

ஈ-தமிழில் இப்போது நடக்கும் கருத்து வாக்கெடுப்பு

எது இல்லாமல் இருக்கவே முடியாது?
1. செல்ஃபோன்
2. புத்தகம்
3. இணையம்
4. இசை
5. டிவி


நம்மால் பல விஷயங்கள் இல்லாமல் இருக்க முடியாது. மாலை நேரத்து இஞ்சி டீ, காலையில் 'கௌசல்யா சுப்ரஜா', குளித்தவுடன் ஊதுபத்தி ஏற்றுவது, அப்படியே மூணு நிமிஷம் கண் மூடியோ, தலையில் குட்டிக் கொண்டோ 'இந்த நாள் இனிய நாளாக' கடவுளிடம் வேண்டுகோள், பிபிசி செய்திகளின் மின் மடல், நான்கு மணிக்குக் கொறிக்க முந்திரி பக்கோடா, இத்தாலிய ஓட்டல்களில் வாயில் கரைவதற்காக செய்யப்படும் பதார்த்தங்கள், பர்ஸில் வைக்க மயிலை ஆஞ்சநேயர், சில்லறையாக சில பணத்தாள் என்று ஆளாளுக்கு மாறுபடும்.

எனக்குத் தோன்றிய ஐந்தை வைத்து ஒரு கருத்துகணிப்பு தொடங்கினேன். இப்பொழுது விழுந்திருப்பது என்னவோ ஏழு வோட்டுதான். அதில் நால்வர் 'புத்தகம்' என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களை பனி கொட்டும் பாஸ்டனில் பின்னிரவு இரண்டு மணிக்கு ஓடாத காரில், புத்தகத்தை மட்டும் கொடுத்து காத்திருக்க செய்ய வேண்டும். செல்பேசி இருந்தால் உற்றாரை கூப்பிட்டு நிலையை விளக்கலாம். இணையம் இருந்தால் மின்மடல் அனுப்பியோ, யாஹுவில் யாராவது மாயாவியாக இருக்கிறார்களோ என்று தேடலாம். டிவி இருந்தால் எப்போது பனி நிற்கும் என்பதையாவது அறிந்து கொள்ளலாம்.

கேள்வியின் குறிக்கோள் அது அல்ல என்றே இப்போது தோன்றுகிறது. கொஞ்ச நேரம் நமக்கே நமக்காக கிடைத்தால், வேறு எதுவும் செய்ய முடியாத சமயத்தில் செல்பேசியை எடுத்து யாரையாவது கூப்பிட்டு கதைப்போமா, புத்தகத்தை எடுத்து வாசிப்போமா, இணையத்தில் புகுந்து புரட்டுவோமா, ஜாகிர் உசேன் தபலாவையோ, 'ஜாகீர் உசேன் தபலா இவள்தானா'வையோ ஒலிப்போமா, டிவி முன் டாகுமெண்டரியையோ திரைப்படத்தையோ ரசிப்ப்போமா என்பதே கேள்வியின் குறிக்கோள் என்று தோன்றுகிறது.

இல்லை வெறுமனே உட்கார்ந்து விட்டம் பார்த்துக் கொண்டிருப்போமா?

விமர்சனத்திற்கு பதில்

Dear Sri Balaji,

I was rather disappointed at the review since it somehow seemed to emphasize the negatives a lot more than the positives.

Our whole effort is geared to

(a) keeping the Tamil drama alive here with local talent to the maximum extent possible;
(b) to help deserving non-profit organizations to raise funds; and
(c) to have some fun in the wonderful company of our fellow Stage Friends.

So far, we have raised well over $50K for various such organizations including several Tamil Sangams and temples in the USA and institutions serving the poor and needy in India. As you probably are made aware, this year's entire collections go to Sindanai Sirpigal a non-profit that is building infrastructure in several villages in Tamilnadu.

Our team members spend countless amount of time (e.g. rehearsals each weekend involving signficant travel, building sets, lugging an audio system, etc.) voluntarily and expecting nothing in return besides some solid appreciation and support from the community. All of them have a full time job too.

Thus, while I understand your disappointments with the play and are equally aware of the need "to raise the bar" for ourselves, unfortunately it does not happen overnight, and we ARE trying.

As for the quote, it is from the book "Memoirs of a Mediocre Man" by S.Y. Krishnaswamy who was an ardent lover of the arts and music. The book itself is very readable and humorous and you may find it in India. I will try to find the publisher info for you if I can locate my copy.

The words I quoted were stated in the context of music critics who sometimes concentrate too much on minor lapses of sruti etc in a concert that otherwise is grand and thereby stifle creative attempts and extempore improvisations. He has several pages on them, and in one place he says that a critic who concentrates too much on the negatives is often like a sanitary inspector, who though he has the privilege to enter and roam around grand mansions, is yet condemned to spend most of his time inspecting only the sewers. Nothing would prevent him from enjoying the grandeur of the mansion's other parts.

Ennoda Mookkuthaan; Neelathai KuraikkanumOf course, it goes without saying that his inspection is absolutely essential too. I only wish you had enough positives to balance out the negatives.

Sometime soon, I will send you a copy of an article I myself wrote titled "A crique of critics and criticisms" which was also published in Sruti, the Indian magazine for music and dance. Perhaps, you would remember it while writing your future reviews. Your balanced response to my note indicates you are a thoughtful person quite capable of that.

Hope we will meet some day.

Sincerely,
Ramaswami

புதன், ஏப்ரல் 28, 2004

தமிழோவியம்

என்க்குத் தற்புகழ்ச்சி அவ்வளவாக பிடிக்காது. இருந்தாலும் என்னை ஜீனியஸ் போலத் தெரிகிறதே என்று ஒருவர் சொல்லும்போது சொல்லாமலும் இருக்க முடியவில்லை :)

Thank you for recently taking the IQ Test, your score was: 145
Our test usually gets within 5 points of the professional tests--a
remarkable feat for a 13 minute test.

Our test gives you a quick and fast measurement of your abilities, and
that can indicate directions for you to take.

Average: 85 - 115
Above average: 116 - 125
Gifted Borderline Genius: 126 - 135
Highly gifted and appearing to be a Genius to most others: 136 - 145
Genius: 146 - 165
High Genius: 166 - 180
Highest Genius: 181 - 200
Beyond being measurable Genius: Over 200


தமிழோவியத்தில் இந்த ஐக்யூத் தேர்வை எடுக்க சொன்ன முத்துராமன் முடிவுகளை சுவைபட விளக்கியுள்ளார்

நீங்களும் எடுத்து விட்டு எவ்வளவு நுண்ணறிவுத் திறன் என்று சொல்லுங்கள். பதின்மூன்று நிமிடங்கள் இடையூறு இல்லாமல் இருப்பது அவசியம். அமெரிக்க அளவுகோல்கள் போன்றவை தெரிந்திருத்தலும் அவசியம்.முத்தொள்ளாயிரம் - எளிய தமிழில் - என். சொக்கன் : நம் இல்லத்தரசிகள் ·பில்டர் கா·பியை நன்றாக ஆற்றித் தரும்போது, தம்ளரின் நுனியில் கொஞ்சம் நுரை பொங்கியிருக்கும் - அதேபோல், கள்ளை ஊற்றிய கோப்பையின் நுனியிலும், இயல்பாகவே நுரை படிந்திருக்கும் - கள் அருந்துபவர்கள், அந்த நுரையை வழித்துக் கீழே போட்டுவிட்டு, மொடமொடவென்று குடிப்பார்கள் !

சேரனின் நாட்டில், இப்படிப்பட்ட பெருங்குடியர்கள் வழித்தெறிந்த நுரை, தெருவெங்கும் படிந்திருக்கிறது - அரசனின் யானைகள் அந்த வழியே நடக்கும்போது, அவற்றை மிதிக்க, வீதியெல்லாம் சொதசொதத்து, சேறாகிவிடுகிறது !

MIFF 2004

சென்னை ஆன்லைன் இன்றைய பக்கம்:

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மும்பை சர்வதேச ஆவணப்பட & குறும்பட விழா பிப்ரவரி 3 - 9 வரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த விழாவுக்கு தமிழகத்திலிருந்து
ரேவதி இயக்கிய 'உங்களில் ஒருத்தி';
ஜெயபாஸ்கரனின் - 'சென்னப்பட்டணம்',
விஸ்வனாதனின் - Water Boy;
புவனாவின் - தேடல்;
அருண் சாதாவின் - சுயம்;
கனகராஜின் - The beginning of a journey;
ஜேடி - ஜெர்ரியின் 'Kalamkari - A natural Dye painting;
முதலியவை இடம் பெற்றிருந்தன.

அருண் சாதா வடநாட்டவர்; இவர் தமிழகத் திலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பற்றி எடுத்திருந்தார். கனகராஜின் படம் வித்யா சாகரின் பணிகளை விவரிக்கிறது; விஸ்வநாதனின் Waterboy, சுத்திகரிக்கப்பட்ட வாட்டர்கேனை விநியோகிக்கும் பையன், தன் தேவைக்கு லாரித் தண்ணீருக்கு ஓடுவதை சித்தரித்திருந்தது. தமிழகத்திற்கு வெளியே வட இந்தியாவில் இருந்து கொண்டு தொடர்ந்து ஆவணப் படங் களை எடுத்து வரும் பக்கிரிசாமி, புதுக் கோட்டையைச் சேர்ந்தவர். இவரது 'The March of Time' அருணாசல பிரதேசத்திலுள்ள பழங் குடிகளைப் பற்றிய படம் - இந்த விழாவில் கலந்து கொண்டது.

படவிழாவில் எல்லோராலும் பாராட்ட பட்ட படம் ‘Mistake ஹோகயா’ இரண்டேகால் நிமிட படம். ஓடுகிறவனை ஒரு கும்பல் துரத்துகிறது. அவன் ஓடிக்கொண்டே போய் முட்டுச் சந்தில் மாட்டிக் கொள்கிறான். கும்பல் அவனை கத்தியால் குத்தி கொல்கிறது. பின்னர் அவன் பேண்ட் ஜிப்பை திறந்து பார்த்து, "mistake ஹோகயா!'' என்கிறது.

திண்ணை - ஞானி

யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?

“கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !

ஓடாமல் இருப்பதே ஆச்சரியம்

பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?

அமெரிக்காவை ஆளுவது யார் ?

ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.

அன்புள்ள மனுஷ்யபுத்திரன்

காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்

கல்பாக்கம்

கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்

பேய் அரசுசெய்தால்

கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?

கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?

உயிர்ப்பலியும் பெரியாரும்

முரசொலி மாறன்

பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)

நெடுமாறன்

காமராஜர் 100

அய்யா

கேன்சர் கல்பாக்கம்: முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம்

அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்

பரீக்ஷா தமிழ் நாடகக்குழு வௌ¢ளி விழா கொண்டாடுகிறது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்

இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.

காம்ரேட்கள் தைரியசாலி ஆவது எப்படி?

அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு

அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு

அன்புள்ள ......... ஜெயலலிதா அவர்களுக்கு

மஞ்சுளா நவநீதன் மன்னிப்பு கோர வேண்டும்

மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.

ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்

பாபா: படம் அல்ல பாடம் !

ஓ போடு ! - அசல் முகங்கள்

மறுபக்கம்: என் அமெரிக்கப் பயணம்

சமரசமன்று : சதியென்று காண் !

என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்

பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை

"நந்தன் வழி" பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்

கண்ணகியும் திருவனந்தபுரம் மெயிலில் வந்த சேர நாட்டு இளம் பெண்ணும்.

கலைஞர்-ஜெயமோகன்

கண்ணப்ப தம்பிரான் - அஞ்சலி

நூலகம்

கவிஞர் கனல்மைந்தன் (அக்கினிபுத்திரன்) அவர்களோடு பேட்டி

இருவர் - கவிதை
மற்றவை

எதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt - மனுஷ்ய புத்திரன்

ஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள் - மஞ்சுளா நவநீதன்

மன்னியுங்கள், ஞாநி - மஞ்சுளா நவநீதன்

ஞாநிக்கு மீண்டும் - மஞ்சுளா நவநீதன்

கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள் - சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா

ஞாநியின் "கான்சர் கல்பாக்கம்" கட்டுரையில் தவறான சில கருத்துக்கள் - சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா

மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்! - சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா

ஞாநியின் "கான்சர் கல்பாக்கம்" கட்டுரையில் தவறான சில கருத்துக்கள் - சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா

மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி... - அரவிந்தன் நீலகண்டன்

நூல் அறிமுகம் - வினோதினி

பெண்ணே நீ- Sify.com:

பெண்மைக்கு இணையுண்டோ? - தங்கம்மா அப்பாக்குட்டி

இந்த நூலை எழுதிய தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாருக்கு எழுபத்தேழு வயது. யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார். "சங்ககாலப் பெண்மை, வள்ளுவர் காட்டிய பெண்மை, கச்சியப்பர் காட்டிய பெண்மை, கம்பர் காட்டிய பெண்மை, பரஞ்சோதி முனிவர் காட்டிய பெண்மை, பாரதி காட்டிய பெண்மை, பிற்காலப் பெண்மை" என்ற தலைப்புகளில் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளது.

வெளியீடு : மணிமேகலை பிரசுரம் - விலை: ரூ. 40/

நட்சத்திர தாகம் - ஆரிசன்

காக்கும் கடவுளையும்
அழித்துப் பசியாறின
கரையான்கள்

வெளியீடு : சங்கீதா பதிப்பகம் - விலை : ரூ. 40/


முகங்கள் : தினகரன்

Kanimozhi (c) Dinakaranசந்திப்பு - வைதேகி

சட்ட நிபுணர் அஜிதா
சித்ரா
ஷாலினி
ரமணி சந்திரன்
ஷோபா சந்திரசேகர்
அனுராதா ஸ்ரீராம்
கனிமொழி

செவ்வாய், ஏப்ரல் 27, 2004

This Election... That Poll

Opinion poll predicts 'edge' for DMK front: திமுக 123-130 வரை வெல்லும்.

All eyes on voter turnout: வாக்கு சதவிகிதம் அதிகரித்தால் ஆளுங்கட்சி தோற்கும்.

Opinion polls are a Karunanidhi ploy: Vaiko: மதிமுகவை அழிக்கக் கருத்துக் கணிப்புகளை கலைஞர் பயன்படுத்துகிறார் என்று வைகோ குற்றச்சாட்டு.

It is difficult to work with AIADMK: Naidu: 'அதிமுகவுடன் எந்த கட்சியும் ஒத்துப் போவது ரொம்ப கஷ்டம்' - வெங்கையா நாயுடு.

Online poll fever: குமுதம் முதல் அம்பலம் வரை.

நன்றி: தி ஹிந்து

தினமணி நாளிதழ்


ஆந்திரம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியில் 18 சதவீத வாக்குப்பதிவு. பா.ஜ.க உடனான உறவு மறுபரிசீலனை: திரிணமூல் சூசகம்.ரஜினியை "பயமுறுத்திய' பத்திரிகையாளர்கள்!

புதுதில்லி, ஏப். 27: தேர்தல் ஆணையத்துக்கு வந்த ரஜினிகாந்த், தில்லி பத்திரிகையாளர்களின் மோதலைக் கண்டு திகைத்து நின்றார். ரஜினி, கேட்டுக்கு உள்ளேயே நின்றுகொண்டார். தொலைக்காட்சி கேமராமேன்கள், மைக்கைக் கம்பி வழியாக உள்ளே நீட்ட, அங்கு நின்றபடியே பேட்டியளித்தார் ரஜினி. பல நிருபர்களால் அதைக் கேட்க முடியவில்லை. பேசிவிட்டு தனது வாடகை வாகனத்தில் ஏறி வெளியே வந்தார் ரஜினி. ஆனால், நிருபர்களும், கேமராமேன்களும் வழியை அடைத்துக் கொண்டு அவரிடம் பேசுவதற்கு முண்டியடித்துச் சென்றனர். இருந்தபோதிலும், ரஜினி வாகனத்தின் டிரைவர் மிக சாமர்த்தியமாகக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னேறினார். அந்த நேரத்தில், சில நிருபர்கள் வாகனத்தின் ஓரத்தில் ஏறி, மேல் இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த், தனது காரின் கண்ணாடியை இறக்கினார். அந்த நேரத்தில் தனது கையை உள்ளே நீட்டிய ஒரு நிருபர், மிகவும் கோபமாக, "மரியாதையாக வண்டியை நிறுத்து, குத்திவிடுவேன்' என்று டிரைவரைப் பார்த்து ஆவேசமாகக் கத்தினார். போலீசார் அவரை மிகவும் கஷ்டப்பட்டு வண்டிய விட்டுப் பிரித்தனர். இந்த தள்ளுமுள்ளுக்கு இடையில் இன்னொரு நிருபர், தனது விசிட்டிங் கார்டை ரஜினி மீது தூக்கிப் போட்டு அடிதடியிலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளப் படாதபாடுபட்டார்.மயிலை ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய 80-ம் ஆண்டு நிறைவு விழா

சென்னை, ஏப். 27: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் சுவாமிகளும் அலர்மேலுமங்கையும் சமேதராக பிரதிஷ்டை செய்யப்பட்டு 80 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. இதனைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களும் காலை, மாலை இருவேளைகளிலும் சிறப்பு ஹோமம் நடைபெறும். 30-ம் தேதி டோலோஸ்தவமும், மே 2-ம் தேதி பூர்ணாஹுதி யும் நடைபெறும்.

ஸ்தல வரலாறு: இந்த ஆலயம் 1924-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டாலும், பூர்வாங்கமாக 1832-ல் ஸ்தாபிக்கப்பட்டது. தாமல் வில்லிவலம் வீரராக வச்சாரியார் தானமாக அளித்த நிலத்தில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, ஸ்ரீ வேதாந்த தேசிகர் மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவர் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த ஆலயத்தின் வேதபாராயண சபை 1905-ல் உருவாக்கப்பட்டது. 1975-ல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கான மூலவரும், உற்சவமூர்த்திகளும் செய்யப்பட்டன. ஸ்ரீசுதர்சன ஆழ்வாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராஜகோபுரமும், சன்னதிகளுக்கு மேல் விமானங்களும் அமைக்கப்பட்டன.

மவுஸ் போன போக்கில்

ஆய்த எழுத்து


'ஆய்த எழுத்து' வலைத்தளத்தை வாராவாரம் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஹிந்தி 'யுவா'வுக்கும் தமிழுக்குமாக ஒரே போஸ்டராக இருக்கட்டுமே என்று மொத்தமாக ஆங்கிலத்திலேயே கொடுப்பது சோம்பேறித்தனத்தை காட்டுகிறதா அல்லது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆங்கிலத்தில் கொடுத்தால் மட்டுமே புரியும் என்று நினைத்தார்களா என்று தெரியாது.

அஜய் தேவ்கன், விவேக் ஓபராய், அபிஷேக் பச்சான் என்று மூன்று நாயகர்கள். சேரி, மாடி, மிடில் கிளாஸ் என ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவர். 'செல்வநாயகமாக' பாரதிராஜா (ஹிந்தியில் ஓம் பூரி?). மூன்று ஹீரோக்களுக்கு மட்டுமே லைம்லைட். ஏன் ஹீரோயின்களுக்கும் ட்ரெயிலர்களிலோ, டீஸர்களிலோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை? சுகாசினி அடக்கி வாசிக்கிறார் போல. ரொம்ப மூக்கை நீட்டினால் சரிகா போல் அகிவிடுமோ என்று நினைத்திருப்பார்.

தமிழில் இன்பசேகராக மாதவன் தாதாத்தனம் காட்டுகிறார்.

'எனக்குப் பணம் வேணும்
பவர் வேணும்'
பதவி வேணும்'

என்ற மிரட்டலுடன் உருட்டுகட்டைகளுடன் தொண்டர் புடைசூழ புஜம் காட்டுகிறார்.

அவருடைய ஜோடி 'சசி' என்று செல்லமாகக் கூப்பிடப்படும் ரன் ஜாஸ்மின். நடுத்தர குடும்பம். எல்.ஐ.சி வேலை செய்யும் சமத்து அப்பாவின் சுட்டிப் பெண். கல்லூரிக்கு ஒழுங்காக சென்று படிப்பில் முதல் மார்க் எடுக்கும் இன்னொரு ரேவதி. 'மௌன ராகம்' கார்த்திக் போன்ற அடியாள் மாதவனுடன் காதல். அவன் அவளுக்காக உலகைக் கொண்டு வர தயார். மணி ரத்னம் பட கதாநாயகிகள் போல் அவளுக்கு அவன் சாதாரண மனிதனாக வேண்டும்.
'மைக்கேல் வசந்த்' சூர்யாவுக்கு ஜோடி 'கீதாஞ்சலி' இஷா தியால். ஐந்து வயது வித்தியாசம். ஆனால், அஞ்சாவது வயதில் இருந்தே நட்பு; வயதுக்கு வந்த பின் காதலாக உருமாற்றம் 'கீது' (சூர்யா இப்படித்தான் கூப்பிடுவார் என்று நம்பலாம்) பொலிடிகல் சயின்ஸ் படித்துக் கொண்டு ப்ரெஞ்ச் கற்றுக் கொடுக்கிறாள். அவள் அவனுக்காக பெசண்ட் நகர் பீச், பனகல் பார்க், ஸ்பென்ஸர் ப்ளாசாவின் ·புட் கோர்ட் என்று காத்திருக்கிறாள். அவனோ ரத்தகளறியாய் உதைபட்டு வந்து சேருகிறான். அவளுக்கு 'மில்ஸ் அண்ட் பூன்' காதல். அவனுக்கோ திருமணம் என்னும் instituition மீது நம்பிக்கை கிடையாது (கொஞ்சம் 'அலைபாயுதே'?). ஆனால், இருவரும் ஒருவர் மீது இன்னொருவர் தூய காதலில் உள்ளார்கள்.


'இந்த அமெரிக்கன் ஸ்காலர்ஷிப் எனக்கு வேண்டாம்
நான் போக விரும்பலை
தமிழ்நாட்டிலேயே இருக்க விரும்பறேன்'

'அர்ஜுன் பாலகிருஷ்ணன்' என்னும் சுத்த ஐயர் பெயரை வைத்துக் கொண்டு அமெரிக்க கனாக்களுடன் 'பாய்ஸ்' சித்தார்த் (ஹிந்தியில் வரும் விவேக் ஓபராய் பின்னுவார் என்று தோன்றுகிறது). ஜோடியாக மீரா - த்ரிஷா.


'என் ·பிலாஸபி ரொம்ப சிம்பிள்
நாம நம்மளப் பாத்துக்கணும்
உலகம் தானா தன்னை பாத்துக்கும்'


இன்றைய இளைய் தலைமுறையை கொஞ்சம் ஸ்டீரியோடைப் செய்ய நினைத்துள்ளார். காதலிப்பார்கள்; பைக்கில் ஊர் சுற்றுவார்கள்; துணையின் பிறந்த நாளை மறக்க முடியாத பரிசுகளுடன் கொண்டாடுவார்கள்; கல்யாணம் என்று வரும்போது வேறொரு துணையை சிரித்துக் கொண்டே தேர்ந்தெடுத்து நண்பர்களாக விலகி விடுவார்கள். They have better things to worry than love.
ஏ.ஆர். ரெஹ்மானின் இசையில் பாடல்கள் நல்ல ஹிட். சுஜாதாவின் வசனம், பல வெற்றிப் படங்களின் சாயலில் கதை சுருக்கம், பொறாமைப்பட வைக்கும் நட்சத்திர அணிவகுப்பு என்று நாம்தான் அதீத ஆர்வக் கோளாறில் நிறைய எதிர்பார்த்து ஏமாற்றமடையக் கூடாது.
இது தேர்தல் காலம்
India won in Pakistanவாஜ்பேய் ஜெயிப்பது அனேகமாக உறுதிதான். அவருக்கு எதிராக நட்சத்திர வேட்பாளராக ராம் ஜெத்மலானி போட்டியிடுகிறார். ராஜீவ் காந்திக்கு எதிராக ஒரு நாளைக்கு இருபது கேள்விகள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இப்பொழுது தாத்தா வாஜ்பேய்க்கு ஒரு கேள்வி முன் வைத்துள்ளார். ஊர்ந்து ஊர்ந்து கஷ்டப்பட்டு நகரும் ஒருவர் எப்படி பிரதம மந்திரியாக அல்லது எம்.பி.யாக எப்படித் திறம்பட செயல்பட முடியும்?


'வாஜ்பேய்க்கு வேண்டுமானால் நான் நண்பராக இருக்கலாம்;
அவர் எனக்குத் தோழர் அல்ல!'
- ராம் ஜெத்மலானி (சொன்னதாக 'சன் நியுஸ்')
கருணாநிதிக்கு மூக்குமேல்
கோபம் வருவது தெரிந்த விஷயம்தான். அதுவும் 'ஞாபகம் வருதே' போல் கணக்குக் கேட்டு பத்தாண்டு வனவாசம் அனுப்பிய ம.கோ.ரா.வையும் தற்போதைய கழுவுற நீரில் நழுவுற மீன் ரஜினியையும் முடிச்சு போட்டால்? வெடித்து விட்டார். கருணாநிதியை யாராலும் அசைக்க முடியாதாம். 'தளபதி' படத்தில் சூர்யாவிடம் அடிபட்டு குற்றுயிராகக் கிடக்கும் தேவாவின் நிலையை குறித்து விசாரிப்பார் அவரது மனைவி.


'சூர்யா' ரஜினி: 'தேவாவுக்கு ஒண்ணும் ஆகாதாம்'.

கீதா: 'டாக்டர் சொன்னாங்களா?

சூர்யா: 'தேவாவே சொன்னான்!'


ஆனால், நிருபர்களுக்கு செய்திகளைத் திரித்துத் தருவதுதான் வேலை. அடுத்த குடுமிப்பிடி சண்டை எப்படி ஆரம்பித்து வைப்போம் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். சச்சின் எடுக்கமுடியாத ஆறு ரன்னை முதல் கேள்வியாகக் கேட்டு வாயில் போட்டுக் குதப்ப ஜர்தா கிடைக்குமா என்று தேடுவார்கள்.

'முதல் கேள்வியாக "ஆறு ரன் எடுக்க முடியாததில் வருத்தமா" என்று கேட்பார்கள். உண்மையாக 'ஆமாம்' என்று சொன்னால் எனக்கும் அணித் தலைவருக்கும் தகராறு என்று ரிப்போர்ட் செய்வார்கள். என்னுடைய சுய விருப்பு வெறுப்புகள் வேறு; அணியின் நன்மைகள் திட்டங்கள் வேறு'.
- சச்சின் டெண்டுல்கர்.

டெண்டுல்கர் நின்றால் ஓட்டுப் போடுவோம் என்று இளைய தலைமுறை சொல்லாத குறைதான். 'ஆய்த எழுத்தின்' அர்ஜுனாக 'எனக்கு என்ன நன்மை' என்று கேட்கிறார்கள். இந்தியாவில் எப்படி இவ்வளவு செல்லாத வோட்டுகள் என்ற சந்தேகம் எப்போதும் எனக்கு உண்டு. மிண்ணனு வாக்குப்பதிவு வந்தாலும் செல்லாத வோட்டுத்தான் போடப்போகும் இவர்களால்தான் என்று இப்போதுதான் அறிந்து கொண்டேன்.

அவர்கள் வோட்டு அளிப்பதில் இல்லை பிரச்சினை. சாதி சார்பில்லா வேட்பாளர்களாக அரசியலில் நுழைந்து மனங்கவர் முகத்துடனும் மிஸ்டர். க்ளீனாகவும் இருப்பார்களா?

- பாஸ்டன் பாலாஜி

நன்றி: தமிழோவியம்.காம்

அண்ணாச்சி(அமர)காவியம் - குரோம்பேட்டைக் கவிராயர்

Jeeva Jyothiமரபிலக்கியம்:

இட்லி சாம்பாரும் இடியாப்பக் குருமாவும்
லட்டுமிட்டாயும் விற்றிருந்தான் - கெட்ட
சனிதசை கண்டு சகவாசம் பலகொண்டு
இனிமீளா இடம் ஏகினான்.

0
குலவிளக்காய் ஒருமனைவி குடிகெடுக்க அன்றே
அளவெடுத்து வேறொருத்தி நீகொணர்ந்தாய் - விலைகொடுத்து
வேறொன்றும் வாங்க விதியுன்னைத் துரத்தியதால்
பார், இன்று பரதேசிநீ!

Thatstamil செய்திகள்: நேற்று ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு, ஜீவஜோதி கடத்தல் வழக்கில் இன்று 3 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

திங்கள், ஏப்ரல் 26, 2004

சொல்லும் பொருளும்

நெட்டுரு நம் அனைவருக்கும் தெரிந்த சொல். சின்ன வயதில் மனப்பாடம் செய்யும் போது 'நெட்டுருப் போடாதே' என்று கண்டிப்பார்கள். இதற்கு உரிய மற்றொரு பொருள் என்ன?

1. நல்ல நிறம்
2. உயர்ந்தோன்
3. பெரியவர்கள் வசிக்கும் மனை
4. அழகிய அசுர உருவம்
5. .NET வடிவமைப்பு

பின்குறிப்பு - மனுஷ்ய புத்திரன்

திட்டவட்டமாய் எழுதி
இறுமாப்புடன் கையெழுத்திட்டாலும்
எதற்கும் வைத்திருங்கள்
சின்னதாய் ஓரிடத்தை

தேவைப்படலாம்
ஒரு பின்குறிப்பு

பாசாங்குகளில் கசியும் விஷம்
தாழ்வுணர்ச்சியின் கண்ணீர்த் திவலைகள்
நீ கைவிட்ட உன் சொந்த இதயம்
அனைத்திற்கும் அடியில்
துடிக்கும் ஒரு பின்குறிப்பு

ஞாபகத்தின்
பழக்கத்தின்
அதல பாதாளத்திலிருந்து
இசையின் குரலால் பீறிட்டெழும்
சிலிர்ப்பின் குறிப்பு

பிறகு நீ இழந்துவிடுவாய்
உன் உள்ளடக்கத்தை

எதிர்பாராமல் வந்த
காதல் அல்லது மரணத்திற்கு நிகராய்த்
திகைப்பூட்டும் குறிப்பால்

நன்றி: என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்; உயிர்மை பதிப்பகம்
mailto:uyirmmai@yahoo.co.in

திங்கள்கிழமை வேலை அதிகம்

1. Tamil Writers Association நடாத்திய சிறுகதைப் போட்டியில் ஜெயந்தியின் பொம்மை கதை இரண்டாவது பரிசைப் பெற்றுள்ளது.: வாழ்த்துக்கள்... (அந்தக் கதை எங்கு கிடைக்கும்???) தனி மடலிலாவது அனுப்ப வேண்டுகிறேன். அட்வான்ஸ் நன்றிகள்.2. சிலப்பதிகாரத்தில் இலக்கியம்: மருதத்தில் இந்திர விழா , பாலையில் கொற்றவை வழிபாடு, குறிஞ்சியில் முருகன் வழிபாடு, முல்லையில் திருமால் வழிபாடு, நெய்தலுக்குரிய வருணன் வழிபாடு என்று வகைப்படுத்தினார்.

ஐந்திணைகள் ஒரு அடையாளத்துக்கும், அழகுக்கும் தான் என்று சொல்லி அருண் தொகுத்த வலைப்பதிவுகள்:
நெய்தல் - சிரித்து வாழ வேண்டும்!
- கொசப்பேட்டைக் குப்சாமி, டுபுக்கு, இட்லி வடை, புண்ணாக்கு, பரி, முத்து, சந்திரவதனா
பாலை - போவோமா ஊர்கோலம்
- ஐகாரஸ், வெங்கட், நாட்டாமை, மாலன், ரஜினி, சுந்தரவடிவேல், சாமான்யன், ராஜா, குமரேசன், சுவடு, தங்கமணி
மருதம் - தினம் தினம்
- 'என் மூக்கு', காசி, பத்ரி, பாஸ்டன் பாலாஜி
முல்லை - வலை வலம்
- ஜான்போஸ்கோ, குறும்பூ, முத்துராமன்
குறிஞ்சி - வலைப்பதிவுகள் குறித்த முதல் கட்டுரை
- பவித்ரா, ராதாகிருஷ்ணன், ஈழநாதன், 'எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்', துடிமன்னன்

என்னுடைய கருத்து எதற்கு; தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் :)

தொல்காப்பியம் - பொருளதிகாரம்:
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
காரும் மாலையும் முல்லை. 6
குறிஞ்சி,
கூதிர் யாமம் என்மனார் புலவர். 7
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப. 8
வைகறை விடியல் மருதம். 9
எற்பாடு,
நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும். 10
3. சாரு நிவேதிதா - கோணல் பக்கங்கள்:
"You Kiss by the book..." - ரோமியோ ஜூலியட்டின் மூலம், ஒரு இத்தாலியக் கதை. Arthur Brooke எழுதிய The Tragical History of Romeus and Julietஐத் தான் ஷேக்ஸ்பியர் தனது ஆதாரமாகக் கொண்டார். சொல்லப்போனால் ஷேக்ஸ்பியரின் எந்தப் படைப்புமே அவரால் சுயமாக புனையப்பட்டவை அல்ல. 1476ம் ஆண்டு Masuccio Salernitano எழுதிய Cinquante Novelle என்ற கவிதை தான் ரோமியோ ஜூலியட்டின் மூலம் என அறியப்படுகிறது. 1562ம் ஆண்டு ஆர்தர் ப்ருக் எழுதிய நெடுங்க விதை. இதுவே ஷேக்ஸ்பியரின் நாடகத்துக்கு அடிப்படை. ஷேக்ஸ்பியர் செய்த ஒரே மாற்றம் ஜூலியட்டின் வயது. ப்ருக் ஜூலியட்டின் வயது 18. ஷேக்ஸ்பியர் ஜூலியட்டுக்கு வயது 13. ஷேக்ஸ்பியர் இந்த நாடகத்தை 1595ம் ஆண்டு எழுதினார்.

இளவேனில் துவங்கி விட்டது... - சமீபத்தில் நண்பர் ப்ரதாப் போத்தனின் வேண்டுகோளுக்கு இணங்க ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தைப் படித்தேன். படிக்கும் போதே பல இடங்களில் கண்ணீர் விட்டேன். இதை தமிழில் சினிமாவாக எடுக்க இருக்கிறார் ப்ரதாப். "ஜூலியட் பாத்திரத்தில் நடிக்க பதினேழு வயதில் ஒரு பெண் தேவை' என்றார். எனக்குத் தெரிந்து பதினேழு வயதான நகரத்துப் பெண்களுக்கு தமிழ் தெரியுமா என்றே சந்தேகமாக உள்ளது.

ஓர் ஆன்மீக அனுபவம்: ரோமியோ ஜூலியட் நாடகத்தை முறையாகப் படித்தவர்கள் அதன் நுணுக்கமான அழகுகளைப் பற்றி அறிந்திருந்தாலும் எனக்கு எழுதலாம். அமெரிக்காவில் வாழும் தமிழர் பலர் பொழுது போகாமல் எங்கள் அண்ணா, லேடி கில்லர் என்று சினிமாவுக்குச் சென்று தங்களின் கலைத்தாகத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர். தமிழ் சினிமாவில் வரும் இரட்டை அர்த்த வசனங்களைப் போல் ஷேக்ஸ்பியர் வரிக்கு வரி பயன்படுத்தியிருக்கிறார். கத்தி என்பதற்கு ஷேக்ஸ்பியர் தரும் இரண்டாம் அர்த்தம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸீரோ டிகிரி மின் நாவல் விற்பனை நின்று விட்டது. விற்ற எண்ணிக்கை 60. விலை: ஐந்து டாலர். ஆனால், 2000 பேரிடம் இந்த நாவலின் மின்நாவல் பிரதி இப்போது கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தக் கட்டுரைகள் 'உயிர்மை'யிலும் வெளிவருகிறது.
4. ஜிம்பாப்வேயின் கிரிக்கெட் அரசியல்: இப்பொழுது இலங்கை அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இதுவரை நடந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வேக்கு தோல்வி. இப்பொழுதுள்ள ஜிம்பாப்வே அணியை பங்களாதேஷ் கூட எளிதாகத் தோற்கடித்து விடும்!

நேற்று ஜிம்பாப்வே முப்பத்தைந்து ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து விட்டது. இது உலகக் கோப்பையில் கனடாவின் மிகக் குறைந்த ரன் எடுக்கும் சாதனையான 36-ஐ முறியடிக்கிறது. '4, 4, 7, 0, 0, 2, 4, 0, 4, 0, 3' என்னும் தலைப்போடு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை வெளியிட்டதாக நண்பர் சொல்கிறார்.
5. ப்ரியமுடன் பிகேபி நாளை கிசுகிசு சொல்வார்!
வசந்த கால வருகைஆண்:
மொட்டுகளே மொட்டுகளே
மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள்
காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது

பெண்:
நீ ஒரு பூ கொடுத்தால்
அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும்
பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்

ஆண்:
உன் வீட்டு தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்
ரோஜாக்களை விட்டுவிட்டு முட்கள் திருடிப் போவேன்

பெண்:
நீ ஆகட்டும் என்றே சொல்லிவிடு
இன் சட்டையில் பூவாய் பூப்பேன்

ஆண்:
காதலி மூச்சு விடும்
காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும்
தேநீர் தீர்த்தம் என்பேன்

பெண்:
கடற்கரை மணலில் நமது
பெயர்கள் எழுதிப் பார்ப்பேன்
அலைவந்து அள்ளிச் செல்ல
கடலைக் கொல்ல பார்ப்பேன்

ஆண்:
உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்
நான் வெயிலை வெட்ட பார்ப்பேன்


RAAGA - Roja Koottam - Tamil Movie Songs

ஞாயிறு, ஏப்ரல் 25, 2004

பாஸ்டனில் 'வீட்டுக்கு வீடு வாசப்படி'

'குடும்பம் ஒரு கதம்பத்தின்' தழுவல் என்று தெரிந்தாலும் மீண்டும் ஒருமுறை நாடகத்தைப் பார்க்க சென்றேன். லிபர்டியில் அந்தப் படத்தை நான் பார்த்தபோது பத்து வயதுதான் இருந்திருக்கும். டைட்டில் பாடல் மட்டும் நிறைய கேட்டு நினைவில் இருந்தது. படத்தின் காட்சிகளோ வசனங்களோப் பெரிதாக நினைவில் இல்லை. ஆனால், நாடகம் வளர வளர deja vuதான் மிஞ்சியது.

மூன்று குடும்பங்கள். வேலைக்கு செல்லும் கண்ணன், உமா தம்பதியினருக்கு போர்டிங் ஸ்கூலில் படிக்கும் மகன். ப்ரோக்கர் பரமசிவத்துக்கு குடும்பத் தலைவியாக பார்வதி. கமலா காமேஷ் (லட்சுமி)க்கு கையாலாகாத விசு கணவன். மது, மைதிலி என்று இரு குழந்தைகள்.

பைத்தியாகாரனுக்கு வைத்தியம், காலில் பேண்டேஜ் போட்டதும் கால் கட்டு என நிறைய விசு வரிகள். ஏற்கனவே பலரால் அறியப்பட்ட வசனங்களையும், ஓரள்வு வெற்றிகரமாக ஓடிய படத்தின் நடிகர்களின் தாக்கத்தில் இருந்து வித்தியாசப்படுத்துவது கடினமே. ஆனால், ஸ்டேஜ் ·ப்ரெண்ட்ஸ் யுஎஸ்ஏ குழுவினர் விசுவின் குழப்பியடிக்கும் tongue-twisterகளையும் பன்ச்களையும் சூப்பராக அரங்கேற்றினார்கள்.

பிராமாணாள் வீட்டு காரியங்களுக்கு சமைக்கப் போகும் ஏழை லட்சுமியின் மடிசாரின் மடியில் செல்·போன் ஒட்டிக் கொண்டிருந்தது காலத்தின் கட்டாயம். ஆனால், அமெரிக்காவில் நாடகம் போடும்போதும் அதே அழதப் பரசான வேலைக்குப் போகும் மனைவியா, போகாத ஆணாதிக்க சமூகமா, பொறுப்பற்ற இளைய தலைமுறை, பத்து நாட்கள் வீட்டில் அடுப்பெரியாதது போன்ற விஷயங்களை எடுத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமல்ல.

அமெரிக்கத் தமிழர்களை மிகவும் பாதிக்கும் பிரச்சினைகளாக பல இருக்கும் - இந்தியா திரும்ப செல்வது, சொந்தமாகத் தொழில் தொடங்குவது, நட்புகளை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திப்பது, பெற்றோர்களை இரு வருடத்துக்கு ஒரு முறையெடுத்து மாமியார்-மாமனார் என்று சுழற்சி முறையில் இன்பச் சுற்றுலா கொண்டு வருவது என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்னும் போன தலைமுறை சமாசாரங்களை ரீ-மிக்ஸ் கூட செய்யாமல் பழைய குடுவையில் பழைய கள்ளைத் தந்திருகிறார்கள்.

தற்கால இருப்பிலும் நகைச்சுவை சம்பந்தங்களுக்குப் பஞ்சமேயில்லை. சந்தேகமாயிருந்தால் காசியின் வலைப்பதிவுகள் போல் மேய்ந்தால் அமெரிக்காவில் கார் வாங்கும் போதும், ஓட்டும் போதும் நடப்பவை, பிரிட்டிஷ் ஆங்கிலமும் சரியாகத் தெரியாமல், அமெரிக்க ஆங்கிலமும் புரியாமல் செய்யும் திண்டாட்டங்கள், அலுவலகத்தில் அடிக்கும் கூத்துகள், சமையல் செய்து கையை சுடும் அனுபவங்கள் வைத்து காமெடித் தோரணமே கட்டலாம். அனேகமாகப் பலரும் அவற்றை நேரடியாக ஒன்றிப் போய் ரசிக்கவும் முடியும்.

பரமசிவமாக நடித்தவரும் விசுவாக நடித்தவரும் மிகச் சிறப்பாக செய்தார்கள். அனேகமாக அனைவரின் இயல்பான நடிப்பினால் மட்டுமே இரண்டு மணி நேரமும் உட்கார முடிந்தது. உமாவாக நடித்தவர் கொஞ்சம் (அந்தக்கால)
சிவாஜி நிறைய பார்ப்பார் போல. கொஞ்சம் ஓவர்-ஆக்டிங். இளைய பெண்ணாக முக்கியமான ரோல் கொண்ட மைதிலி cat-walk செய்ய ஏதுவானவர். அவரை தாவணியில் உலாவ விட்டும், அமெரிக்கன் accentஓடு உணர்ச்சிவசப்பட்டதும் கொஞ்சம் சீரியஸான சீனில் நகைச்சுவையைத் தேவையில்லாமல் கொண்டு வந்தது. உமா கண்ணனின் ஜோடிப் பொருத்தம் இன்னொரு சைட் காமெடியாகப் பட்டது.

மூன்று வீடுகளைத் தனித்தனியாய் காட்டினாலும், மைதிலி சில முறை தவறாக பரமசிவம் வீட்டிற்குள் சென்றதையும், பரமசிவத்தின் பாத்திரங்களை லட்சுமி அவர்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்றதும் எளிதாக தவிர்த்திருக்கலாம். அமெரிக்காவில் தமிழ் நடிகர்களுக்காப் பஞ்சம்? சின்ன சின்ன ரோல்களே ஆனாலும், ஒரிருவரே நான்கு ஐந்து வேடங்களில் வந்தார். காரெக்டரைஸேஷன் என்பதை குறித்துப் பெரிதாகக் கவலைப்படாவிட்டாலும் புதியவர்களை அறிமுகப்படுத்தவும், ஸ்டேஜ் அமைப்பிற்கும் ஒரு வேடத்திற்கு ஒருவரே என்னும் கொள்கை நல்லது.

நாடகத்தில் மிகவும் ரசித்தது இசை. இரண்டாவதாக அரங்க அமைப்பு. இடைவெளிகளில் பொறுக்கியெடுத்த context-sensitive பாடல்கள்; நாடகம் நடக்கும்போது அடக்கி வாசித்த பிண்ணனி என்று கலக்கினார். 'கண்மணியே காதல் என்பது', 'கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', என்று சிறப்பான தேர்ந்தெடுப்பு + திறமை. அரங்க அமைப்பும் அதற்கு வைத்திருந்த சின்ன சின்ன விஷயங்களும் மிகவும் பாராட்டத்தக்கது. தினமணி, பத்து ரூபாய் நோட்டு, காந்தி படம் என்று பார்த்து பார்த்து செய்திருந்தார்கள்.

என்னதான் சிறப்பான நடிகர்களைக் கொண்டிருந்தாலும் அச்சில் வார்த்தெடுத்த வசனங்கள், 26 ரூபாய் வாடகை, தமிழோவியத்தில் சொன்னது போல் 'தே..யாத்தனம் செய்யலைப்பா' போன்ற யதார்த்தமற்ற காட்சிகள் வைத்ததனால் நாடகம் எடுபடவில்லை. ஏன் இன்னும் நியு ஜெர்ஸி (அல்லது அமெரிக்கத்) தமிழ் சங்கம் இப்படி விசு, சோ, க்ரேஸி நாடகங்களை உல்டா செய்கிறார்கள்? தமிழோவியம் இந்த நாடகத்திற்காக பரிசு போட்டி வைத்திருந்ததில் இன்னும் பலரை ஆர்வமாகக் கலந்து கொள்ள செய்திருக்கலாம். அல்லது அதற்கு வந்த படைப்புகளில் இருந்து ஒன்றிரண்டை கலந்து ஒரு சூழ்நிலைக்கு ஏற்ற, எங்கள் சுவைக்குத் தக்க, பார்க்காத படத்தையும் கேட்காத வசனங்களையும் வைத்து நாடகம் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வெள்ளி, ஏப்ரல் 23, 2004

பாஸ்டனில் 'வீட்டுக்கு வீடு வாசப்படி'ecdf.jpgதமிழோவியம்: ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ் குழுவினரின் 11 வது படைப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற நாடகம் நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் மூலம் பாஸ்டனிலும் அரங்கேறுகிறது.

விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் எனும் திரைப்படத்தின் மூலக்கதையை அருமையாக நாடகமாக்கியிருந்தார் டைரக்டர் ரமணி. 3-D எபெக்டில் செட் அமைத்து அட்டகாசம் செய்திருந்தார்கள். நாடகத்திற்கு பெரிய துணை சிம்பொனி ரமணி மற்றும் கார்திக்கின் இசை. சரியான இடத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் பாடலை இசைத்து ஒரு சின்ன சஸ்பென்ஸ் கொடுத்தார்.ஜெயகாந்தனாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜெயமோகன்: ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் - 1
ஜெயகாந்தன் படைப்புகள் உரத்த குரல் கொண்டவை, வாதாடக் கூடியவை, பிரச்சார நெடி அடிப்பவை , நேரடியாக அப்பட்டமாக தன் உள்ளுறைகளை விரித்துப்போடும் தன்மை கொண்டவை ,ஆகவே கலைத்தன்மை குன்றியவை என்பது நம் சூழலில் பொதுவாக உள்ள கருத்து. இக்கருத்தை உருவாக்கியவர் க.நா.சுப்ரமணியம். மிக வலுவாக பரப்பியவர் சுந்தர ராமசாமி. இருவருமே ஜெயகாந்தனை விரிவான ஆய்வுக்கு உள்ளாக்கவில்லை என்று யோசிக்கும்போது துணுக்குறல் ஏற்படுகிறது.

[அக்கினிப்பிரவேசம்] அவள் அதன் பிறகும் ஒரு சூயிங் கம்மை மென்றபடி இருக்கிறாள். அவன் அவளுக்கு தந்தது அது. அந்த சூயீங் கம்மை அவள் அந்த உடலுறவுக்கு பிறகு தான் வாயில் போட்டிருக்கவேண்டும் ! களங்கமின்மை என்பது மேல்மனதின் ஒரு பாவனைதானா? ஆழ்மனதில் அவள் அவ்வனுபவத்தைத்தான் ' அசை ' போடுகிறாளா? அம்மாவின் பதற்றமும் அழுகையும் நிகழும்போது சூயிங் கம் மென்று கொண்டிருக்கும் அவளுக்குள் வேறு ஒரு பெண் புன்னகை செய்துகொண்டாளா? 'அம்மன் சிலையாக' தன்னை ஆக்கிய அனைத்துக்கும் எதிரான புன்னைகை?

ஜெயகாந்தனை அவர் கடைப்பிடித்த முற்போக்கு அழகியலை மதிப்பிட முற்போக்கு அழகியலில் சாதனை படைத்த யஷ்பால் [ இந்தி ] பிமல் மித்ரா [வங்கம்] நிரஞ்சனா[ கன்னடம்] தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] ஆகியோரையே ஒப்பீடுகளாகக் கொள்ளவேண்டும். ஜெயகாந்தன் மார்க்ஸியத்தை கோட்பாட்டளவில் ஏற்றுக்கொண்ட முற்போக்குப் படைப்பாளி. நம் சூழலில் பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், விந்தன் முதலியோரை மார்க்ஸியத்தை ஏற்காத முற்போக்கினர் எனலாம். இவர்களிடமிருந்து அழகியலைப்பெற்றுக் கொண்டு விலகி கோட்பாட்டளவில் மார்க்ஸியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன்.

கௌரிப்பாட்டி [யுக சந்தி] போன்ற சுயசிந்தனையை முன்வைத்து சமூகத்தை ஒட்டுமொத்தமாக எதிர்த்து நிற்கும் 'முதுகெலும்புள்ள ' கதாபாத்திரங்களைத்தான் அவர் அதிகம் படைத்துள்ளார். மனிதன் அவன் வாழும் சமூகத்தின் துளி, அவனது சிந்தனை அக்காலகட்ட சிந்தனைகளின் ஒரு விளைவு என அவரது கதைகள் சொல்வது இல்லை. தகழி சிவசங்கரப்பிள்ளை , பி.கேசவதேவ், பிமல் மித்ரா ஆகியோரின் ஆக்கங்களில் வருகிற 'உறுதியான முதுகெலும்புள்ள பாட்டாளி ' இந்திய சமூகத்தை மிக மிகக் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் . அக்கதாபாத்திரங்களை திரையில் வலிமையக நடித்துக் காட்டிய சத்யன் [மூலதனம், நீங்கள் என்னை கம்யூனிஸ்டு ஆக்கினீர்கள், அனுபவங்கள் தவறுகள், அடிமை போன்ற திரைப்படங்கள் வழியாக] கேரள மனதில் ஓர் ஆழ்படிமமாகவே உறைந்துவிட்டார். தமிழில் பாட்டாளி என்பதற்கு பதிலாக ரட்சகன் என்ற படிமம் திரையில் உருவாக்கப்பட்டது.

நவீனத்துவ இலக்கியம் அதன் இருத்தலிய அடிப்படையில் மனிதனை காமமும் வன்முறையுமாக குறைத்துவிட்ட போது இலட்சியவாதம் ஒருவகை அதிகப்பிரசங்கமாக , வெற்றுக் கனவாக , அசட்டுத்தனமாக கருதப்பட்டது. ஜெயகாந்தன் மட்டுமல்ல இலட்சியவாத கதாபாத்திரங்களைப் படைத்த ப. சிங்காரம் [ புயலிலே ஒரு தோணி] எம் .எஸ். கல்யாணசுந்தரம் [ முப்பது வருடங்கள்] போன்ற படைப்பாளிகள் கூட இங்கு புறக்கணிப்புக்குத்தான் ஆளாகியிருக்கிறார்கள்.

முற்போக்கு அழகியலில் இருவகையான போக்குகள் உண்டு. அவற்றை யதார்த்தவாதம், இயல்புவாதம் என்று தோராயமாக வகைப்படுத்தலாம். யதார்த்தவாதம் என்பது எழுத்தாளந்தான் கண்ட யதார்த்தத்தின் சித்திரத்தை அளிக்கமுயல்வது . புறவுலகத்தின் தகவல்களுக்கு சமானமாகவே எழுத்தாளனின் சுயமும் அங்கே இடம் பெறுகிறது. ஜெயகாந்தன் யதார்த்தவாத எழுத்தாளர் என்றால் ஆர் ஷண்முக சுந்தரம், பூமணி பெருமாள் முருகன் கண்மணி குணசேகரன் போன்றவர்கள் இயல்புவாத எழுத்தாளர்கள். பூமணியின் படைப்புகளில் உள்ள அமைதியை நாம் ஜெயகாந்தனின் கதைகளில் எதிர்பார்க்கமுடியாது. ஜெயகாந்தன் படைப்புகளில் அவரது ஆளுமையே முதன்மையாக வெளிப்படுகிரது, அவரது பார்வையே மையமாக உள்ளது. அப்படி இருக்கக் கூடாது என்று அவரது எழுத்துக்கு நிபந்தனை போட விமரிசகனுக்கு உரிமை ஏதும் இல்லை. ஜெயகாந்தன் முற்போக்கு அழகியலில் செயல்பட்டவர். அவரை நவீனத்துவ அழகியல் கொள்கைகளினால் அளவிடும் அசட்டுத்தனத்தை முதலில் செய்தவர் நகுலன். சுந்தர ராமசாமி அவ்விமரிசனத்தை மிகவும் தீவிரப்படுத்தினாலும் எழுதவில்லை. நேர்ப்பேச்சில் தொடர்ந்து பல வருடங்கள் அதை வெளிப்படுத்தினார்.

ஜெயகாந்தனின் மரபுத்தொடர்பு இரு தளங்களில். ஒன்று நமது சித்தர் மரபுடனான அவரது ஈடுபாடு. இரண்டு நம் மரபின் லௌகீகமான அறம் குறித்த அவரது புரிதலில். என் பார்வையில் அவரது மிகச்சிறந்த இலக்கிய ஆக்கமான 'விழுதுகள் ' இந்த ஈடுபாட்டின் விளைவே. முற்போக்கு என்பது ஒரு முடிவற்ற முன்னகர்வு என்றும் நேற்றைய முற்போக்குச்சக்திகளுடன் இன்றைய முற்போக்குசக்திகள் ஆன்மீகமான ஒரு தொடர்பைக் கொண்டுள்ளன என்பதற்கும் சிறந்த உதாரணமாக அமையும் படைப்பு அது. மௌனி, தி.ஜானகிராமன், லா.ச.ரா ஆகியோரின் ஆன்மீகம் பற்றிய மன உருவகங்கள் லௌகீகத்துக்குள் நின்று அடையப்பெற்றவை, முதிர்ந்த லௌகீக நிலையாக ஆன்மீகத்தைக் காண்பவை. நகுலன் நீல பத்மநாபன் ஆகியோரின் படைப்புகளில் ஆன்மீகம் வெற்று பக்தியாக வடிவம் கொள்கிறது . கி.ராஜநாராயணன், சுந்தராமசாமி, ஜி.நாகராஜன் ஆகியோரிடம் ஆன்மீகத் தேடல் என்ற அம்சமே இல்லை. அவர்கள் உலகின் தத்தளிப்புகள் மீது ஓங்கூர் சாமியின் உக்கிரச் சிரிப்பு அலையடிக்கிறது.

ஜெயகாந்தனை இக்கட்டுரையில் முதலில் வகுத்தது அவர் மீறும் இடங்களை அடையாளம் காண்பதற்காகவே.
நன்றி: முழு கட்டுரைக்காக - திண்ணை & நினைவூட்டியதற்காக - பிகேஎஸ்

படித்ததில் பதிந்தது

பிரபல எழுத்தாளர் ராஜ ஸ்ரீகாந்தன் காலமானார்: மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபாடு கொண்ட ஸ்ரீகாந்தன், எழுத்தாளர் அழகு சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளைத் தமிழாக்கம் செய்து 'நீதிபதியின் மகன்" என்ற தலைப்பில் புத்தகமாக்கினார். அதற்காக அவருக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. சிறுகதையாசிரியராக ஆற்றிய பணிகளுக்காக, அவருடைய சிறுகதைத் தொகுதியான 'காலச்சாளரம்" என்ற நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது. இதுவரை, நான்கு நூல்களை வெளியிட்டுள்ள ராஜ ஸ்ரீகாந்தன், 'சூரன் கதை" (வதிரிப் பெரியர் சூரன் பற்றியது) என்ற நூலை வெளியிடவிருந்தார். மூன்று நாவல்களை அச்சுக்கும் கொடுத்திருந்தார்.
நன்றி: ஈழ இலக்கியம்வல்லிக்கண்ணன் - வண்ணநிலவன்: உரையாடல்கள் என்பவை பலவகைப்பட்டன. சிலருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, பேச்சுக்குப் பேச்சு தங்களுடைய அபிப்பிராயத்தை சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் எதிரே இருப்பவருடைய அபிப்பிராயம் எவ்வளவுதான் வித்தியாசப்பட்டாலும் அதை வெளியே சொல்லாமல் மௌனமாக இருப்பார்கள். சிலர் நாசூக்காகத் தாங்கள் நினைப்பதைச் சொல்லிவிட்டுச் சும்மா இருப்பார்கள். சிலருடன் பேசும்போதே, உரையாடல் என்பது முறுக்கேறி விவாதமாகி, இனி நேரில் பார்த்துப் பேச முடியாதபடி, பகையாகவே முற்றி விடும்.
வ.க. எதையும் ஆணித்தரமாக, முகத்திலடிக்கிற மாதிரி பேசவே மாட்டார்கள். அவர்களது கட்டுரைகள் கூட இப்படித்தான் இருக்கும். கட்சி கட்டி நிற்கிற உத்தேசமே வ.க.வுக்கு கிடையாது. எதையும் ஸ்தாபிக்க வேண்டும், தன் வாதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே வ.க.வுக்குக் கிடையாது.

வ.க.வின் கட்டுரைகள் மேம்போக்கானவை, ஆழமில்லாதவை என்று கூறப்படுவதற்குக் காரணம், வ.க.விடம் வாதம் செய்கிற போக்கு அறவே இல்லாமல் போனதுதான். பெரும்பாலும் எல்லாவற்றையும் ரசிக்கிற மனோபாவம் வல்லிக்கண்ணனுடையது. தன்னைப் பற்றிய தகவல்களைக் கூட ஒரு மூன்றாவது மனிதன் சொல்வதைப் போலத்தான் வ.க. சொல்வார்கள். ஒரு விட்டேற்றியான மனம். அதேசமயம் பிறருடைய கஷ்டங்களைக் கண்டு உருகிவிடும் மனம் வ.க.வுடையது.
நன்றி: சமாச்சார் தமிழ்


ஒரு நல்ல விமர்சனம் என்பது எப்படி இருக்கவேண்டும் - மனுஷ்ய புத்திரன்: நல்ல விமர்சனம், மோசமான விமர்சனம் என்று எதுவுமில்லை. எல்லா விமர்சனங்களும் சார்பானவை. நோக்கங்களுள்ளவை. படைப்பைப்போலவே விமர்சனத்திற்கும் எல்லைகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை நல்ல விமர்சனம் என்னைப் பாராட்டி எழுதப்படுபவை.
நன்றி: மரத்தடி


பழம்பெரும் மரபினோரே!
வருக, வருக! எனக்கும் ஹரிக்கும் இதைவிடப் பேருவகை இருக்கமுடியாது. மரபின் வளத்தில் ஆழவேரூன்றிப் புதுமை விழுதுகளை விடவேண்டியவர் நாம்.

பழமை பழமை என்று
பாவனை பேசலல்லால்
பழமை இருந்த நிலை - கிளியே
பாமரர் ஏதறிவார்?

என்றான் பாரதி. உணர்ச்சி வசப்பட்டு (காரணமறியாமல்) என் பாரம்பரியம்தான் உயர்ந்தது என்று உரக்கக் கூவுவதோ, அல்லது முற்றிலும் வீண் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டுப் 'புதுமை படைக்கிறேன்' என்று கிளம்புவதோ இரண்டும் அறிவீனம். மரபை அறிவோம் - விருப்பு வெறுப்பின்றி. அதன்பின் அவரவர் விருப்பம். இது ஒரு திறந்த மன்றம். பரிமாறல் மிக அவசியம். அவரவர் புரிதலை அவரவர் சொல்லுங்கள். மொத்தத்தில் எல்லோரும் வளம்பெறுவோம். அவரவர் ஐயங்களைப் பொதுவில் இடுவோம். ஆளுக்கு ஒரு கைகொடுத்தால் எந்தத் தேரையும் நகர்த்தலாம்.

மரபிலக்கியம் ஒரு தங்கச்சுரங்கம். ஆனால் அவ்வளவே உழைப்புத் தேவை. பயனோ அளவற்றது!

வாருங்கள், சேருங்கள், வளம் பெறுங்கள், வளப்படுத்துங்கள்.
அன்புடன்
மதுரபாரதி
ஹரிகிருஷ்ணன்
Yahoo! Groups : marabilakkiyam

வியாழன், ஏப்ரல் 22, 2004

ஒரு கடிதம் - சிபிச்செல்வன்

உயிர்மையில் டிசம்பர் இதழில் 53ஆம் பக்கத்தில் 'கவிதைத் திருவிழா' என்ற நிகழ்வைப் பற்றிய குறிப்பில் என்னுடைய "நீண்ட கட்டுரை பார்வையாளர்களின் பொறுமையைக் கடுமையாகச் சோதித்தது" என்று உள்ளது.

நான் படித்த கட்டுரையின் தலைப்பு 'எண்பதுகளில் தமிழ்க் கவிதையின் போக்குகள்'. 80களிலிருந்து 90 வரை தமிழ்க் கவிதைகளின் போக்கைக் குறித்து சுமார் 100 கவிதை நூல்களை வாசித்து ஒன்பது பக்கங்கள் எழுதப்பட்ட கட்டுரை அது. பத்து ஆண்டுகள் என்பது 'நீண்ட காலம்'. என் கட்டுரை 'நீண்டது' என்பதையும் இத்துடன் சேர்த்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். மிக விரிவாக 100 பக்கங்களுக்குக் குறையாமல் எழுதப்பட வேண்டிய கருத்துகளை 9 பக்கங்களுக்குள் எழுதியிருக்கிறேன்.

கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளில் அதிக எதிர்வினைகளை எழுப்பிய கட்டுரையும் என்னுடையதே. அந்த எதிர்வினைகளுக்கான பதிலையும் அந்த அரங்கத்திலேயே கூறினேன். இவை தவிர அரங்கிற்கு வெளியிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அக்கட்டுரையின் 'அதிர்வுகள்' பரவியுள்ளன. சிலர் தங்கள் பெயர்கள் அக்கட்டுரையின் சேர்க்கப்படவில்லையென்று வருத்தப்பட்டார்கள். சிலர் தங்களை விமர்சித்திருந்தமைக்காக வருத்தப்படவும் செய்கிறார்கள். இவையெல்லாம் அக்கட்டுரையின் முக்கியத்துவத்தைக்
காட்டுகின்றன. 'பொறுமையச் சோதித்த' கட்டுரையையும் சிலர் கவனமாகக் கேட்டு எதிர்வினையாற்றிவிடுகிறார்கள்.

சிபிச்செல்வன்
சென்னை

நன்றி: உயிர்மை/சன. 2004

வேட்டு வைத்த பூண்டு - ஆனந்த் சங்கரன்

வலைப்பூவில் அமெரிக்க உணவு வகைகள், உணவகங்கள் பற்றி படித்த பொழுது எனக்கு என்னுடைய அலுவலகத்தில் நடந்த இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது.

சுமார் ஒன்னறை ஆண்டுகளுக்கு முன் நான் பிரபல அமெரிக்க கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தேன். ஐநூறுக்கும் மேற்பட்டோர் வேலை செய்த அலுவலகத்தில், நம்மவர்களின் (இந்தியர்கள்) எண்ணிக்கை நிறைய உண்டு. இந்தியர்கள் நிறைய இருந்தாலும் தென்னிந்தியர்கள் ஒரு சிலரே இருந்தோம். மற்றவர்கள் வடநாட்டினர். (எனக்கு பேஸின் ப்ரிட்ஜை தாண்டினாலே வட நாடுதான்).

எனக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி ஒரு தமிழ் பேசும் கன்னடரும் இருந்தார். வேலையில் கில்லாடி. கொடுத்த வேலையை திறம்பட செய்யக்கூடியவர். ஆனால் அவருடைய பிரச்சனையே அவருடைய பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளாததுதான். வீட்டில் எப்படி பேசுவாரோ அதே போல் சத்தமாக தொலைபேசியில் உரையாடுவார் (அதுவும் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில்). அருகில் இருப்போருக்கு கேட்குமோ அவர்களுக்கு எரிச்சலாக இருக்குமே என்று துளியும் யோசிக்கமாட்டார். போதாத குறைக்கு அனைவரிடமும் நட்பாக பேசுகிறோம் என்று நினைத்துக் கொண்டு அனைவரின் பர்சனல் விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார். எனக்கே இது பல முறை எரிச்சல் மூட்டியுள்ளது. ஒரு முறை அவரிடம் இதைப் பற்றி பேசப்போக அதில் இருந்து என்னிடம் 'காய்' விட்டுவிட்டார்.

இதெல்லாம் கூட தேவலை, ஆனால் தினமும் காலையிலும் மதியத்திலும் அவர் செய்யும் அலும்பு இருக்கிறதே ! யப்பா.. தாங்காது.

வந்ததும் வராததுமாய் ஊறுகாய் பாட்டிலை (பூண்டு ஊறுகாய் அவர் மேஜை மீது எப்பொழுதும் இருக்கும்) திறந்து வைத்துக் கொண்டு அந்த அறையையே நாறடிப்பார். எனக்கும் பூண்டு பிடிக்கும்தான் ஆனால் ஒரு அளவு இருக்கிறது. அந்த அறையில் வேலை செய்யும் மற்ற அமெரிக்க நண்பர்களுக்கு தாங்காது. அவர்கள் முகம் சுளிப்பார்கள் - வெளியே எழுந்து போவார்கள். ஆயினும் இவர் அதை ஒரு பொருட்டாகவே எண்ண மட்டார்.

அமெரிக்கர்களிடம் ஒரு நல்ல குணம் (அதுவே வேட்டு வைக்கும் குணம்) இருக்கும். தனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால் அதை முகத்தில் அறைந்தார் போல் சொல்ல மாட்டார்கள். பேசாமல் இருந்துவிட்டு அதை வேறு விதமாக காட்டுவார்கள். எனது நண்பர் விஷயத்திலும் இதுதான் நடந்தது.

அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்த பொழுது அந்த நண்பர் வேலை போயிற்று. இத்தனைக்கு மிக முக்கிய பணியை அவர் செய்து வந்தார். அவருடைய இழப்பு கம்பெனிக்கு பெரிய நஷ்டம். ஆனாலும் அவர் வெளியே அனுபப்படார். எனக்கும் கத்தி வருமோ என்று பயந்தேன். நல்ல வேளையாக தப்பித்தேன்.

ஆட்குறைப்பிற்கு ஒரு நாள் நானும் என் மேனேஜரும் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, என்னிடம் விளையாட்டாக 'உன் அருக்கில் இருப்பானே அந்த பேமானிக்கு ஏன் வேலை போச்சு தெரியுமா ?' என்று நக்கலாக கேட்டார். நான் வெறும் புன்முறுவல் செய்தேன். 'அவனுடைய வேலை நன்றாக இருந்தாலும் அவனுடைய பூண்டும், பேச்சும் அவன் வேலைக்கு வேட்டு வைத்தது.' என்று கூறி மற்றொரு பேமானியை உபயோகித்தார்.

மேலிடம் செய்தது சரியா தவறா என்ற ஆராய்ச்சியை விட நாம் கவனமாக இருப்பது நமக்குதானே நல்லது !!

காதல் சொல்லும் பாடல்

'பேரரகன்' சூர்யாவே பேசியிருக்கும் சுவாரசியமான வசன கவிதை ராகாவில் மனதைக் கவர்ந்தது.


அவன்:
ஒரு அழகான பொண்ணு இருந்தா
அதவிட ஒரு அழகான பையன் இருந்தான்
அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க

அவள்:
என்னது...?

அவன்:
அவளுக்குத் தமிழே வராதுடி

அவள்:
போடா...

அவன்:
ஹே... ஒகே.. ஓகே...
அவளுக்கு அவனப் பிடிச்சது
ஆனா சொல்லலை
ஏன்னு தெரியலை

அவள்:
என்ன...?

அவன்:
ஓண்ணுமில்லே...

அவள்:
சொல்லு!?

அவன்:
அந்தப் பொண்ணு பேசுவா.. பேசுவா...
பேசிட்டே இருப்பா
ஆனா
அது அவனுக்குப் பிடிச்ச ராகம்
அவனுக்கு தூரத்தில இருந்தா தெரியாது
பரவாயில்லை
தன்னுடைய உலகத்தை அவளோடப் பெரிய பெரிய கண்களில் பார்த்தான்
அவ கையெழுத்துக் கிறுக்கல்
ஆனா
அதை எடுத்து
பைத்தியமா இருந்தான்
அவ நடக்கிறப்பக் கொஞ்சம் கசமுசா என்றிருக்கும்
ஆனா அவ முடி அசையறதைப் பார்த்தால்
அந்தக் காற்றுக்கேப் பொறாமை வரும்

அவள்:
ஹே...
நிறுத்து... நிறுத்து

அவன்:
You know Priya
He just loved everything about Her

அவ முடி
அவ நெற்றி
அவ கண்
அவ மூக்கு
அவ கன்னம்
அவ உதடு
அவ கழுத்து
அவ ....

கோரஸ்:
த்தநந...த்தநந...

அவன்:
அவளப் பத்தின நிறைய விஷயம் அவனுக்குப் பிடிக்கலே
அவ பேசற விதம்
ஸ்மோகிங்
The way she behaves
இப்படி நிறைய

நிறையக் கிண்டல் பண்ணியிருக்கான்
அவளப் பிடிச்சிருக்கு
அவன யாருக்கும் பிடிக்கலே

He was really bad Priya

ஆனா தனியா
எப்பவும் தனியா இருந்தான்
அவளுக்கு அவனப் பிடிச்சது ப்ரியா
Don't know Why

ப்ரியா...!
ஏன் ப்ரியா...?
ஏன் என்னை?
கல்யாணம் பண்ணிக்கோ
எப்பவும் உன்கூடயே இருக்கணும்
உன்னைக் காதலிக்கணும்
உன்னைத் தொல்லை பண்ணனும்
உனக்காக வீட்டுக்கு வரணும்
உன் மடியில் தூங்கணும்

இதே மாதிரி எனக்கொரு குட்டி ப்ரியா வேணும்
அவளை பார்த்துகிட்டே எனக்கு வயசாயிடும்
நான் உன்னோடுதான் சாகணும்
அப்படியில்லேன்னா
சாகணும்
இங்கே...
இப்போ

இளவேனில் கால வாழ்த்துக்கள்


பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி

புஞ்சையும் நஞ்சையும்
இந்த
பூமியும் சாமியும்
இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும்
பூ வாசம்

சின்னக்கிளிகள் பறந்து ஆட
இன்று கவிகள் குயில்கள் பாட

புது ராகம் புது தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்


வாய்க்கலையும் வயற்காட்டையும்
படைத்தான் எனக்கென
கிராம தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தால்
இனித்திடும் வாழும்நாள் வரை
குழந்தைகள் கூட
குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது
மலையமாருதம் பாடுது
ஊ...

நான் தூங்கியே
நாளானது
அது ஏன்...
எனக்கொரு மோகம் வந்தது
பால்மேனியும் நூலானது
அது ஏன்...
அதுக்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி
நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஓ...


பாஸ்டனில் கொஞ்சமாக ஸ்பிரிங் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன...! மேலேயுள்ள படம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் 'சுட'பட்டது.


நன்றி: RAAGA - Varusham 16 - Tamil Movie Songs

ரஜினி பொம்மையா?

Rajni Toys

பிரமிள்

Introduction to lesser known authors in thamizh:

தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள், 04-20-39 இல் இலங்கை திருகோணமலையில் பிறந்து வளர்ந்தவர்; எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இந்தியா வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலுர் அருகிலுள்ள கரடிக்குடியில் 11-6/97இல் மறைந்தார்.

தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த 'எழுத்து' பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளாராகவே மதிக்கப் பட்டார். இலங்கை எழுத்துலகமும் இவ்வாறே இவரை கணித்து வந்துள்ளது.

நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும், புதுமைபித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள் ஆவார். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஒரு உயர்ந்த பட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்தவர்; இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. 'படிமக் கவிஞர்' என்றும், 'ஆன்மீகக் கவிஞர்' என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும்.

அவரின் சில கவிதைகளுக்கும், முழு விவரங்களுக்கும் ஃபாரம் ஹப் செல்லவும்.

ஆறாம்திணை கவிதைத் தொகுப்பு:
திசை மாற்றம் பட்டகம்"ஒரு இலக்கிய முயற்சி உருவாவதற்கு மூன்று சக்திகள் துணை புரிகின்றன. இவைகளின் மூலபுருஷர்கள் முறையே எழுதுபவன், வாசகன், பிரசுரிப்பவன் இந்த முறை தான் சரியான முறை. ஆனால் யதார்த்த நிலையில் பிரசுரிப்பவன், வாசகன், எழுதுபவன் என்று மாறியிருந்தால் இலக்கியப் படைப்புகள் தரம் தாழ்கின்றன" - நகுலன்.


விடுகதை:
நீயும் நானும் பார்த்திருக்க
பொன்னாங்கண்ணி பூத்திருக்க - அது என்ன?


புதன், ஏப்ரல் 21, 2004

சென்னையில் ஒரு வெயில் காலம் - 3

ருசியுற உண்ட அனுபங்களை சொல்லி நாலு மணிக்கே பசியைக் கிளப்பிய 'வலைப்பூ' ஆசிரியருக்கு இன்றைய சென்னை அனுபவங்கள் சமர்ப்பணம்.

சென்னையில் எல்லாரும் குளிக்கிறார்கள்; நிறைய தண்ணீர் குடிக்கிறார்கள்; இன்ன பிற சமாசாரத்துக்கும் தண்ணீர் உபயோகிக்கிறார்கள். ஒரு வாளி தண்ணீருக்கு காலணா முதல் ஒண்ணரை ரூபாய் வரையும், ஒரு லாரி தண்ணீருக்கு முன்னூறு ரூபாயும் அதன் சார்ந்த அதிகப்படி விலைகளிலும் விதவிதமான அளவுகளில், வகைகளில், ஏரி தண்ணீர், கலர் தண்ணீர், கடல் தண்ணீர், பிஸ்லேரி, கேன் தண்ணீர் என்று வகையாகக் கிடக்கிறது. ஆழதுளைத்து bore-pump போடுவதை அரசு தடுத்து விட்டது. சில இடங்களில் தொண்ணூறு அடி, நூறடிக்கு மோட்டார் போட்டு உப்பு தண்ணீர்
கிடைக்கிறது. கடல் நீரில் தினசரி விட்டிலேயே குளித்தேன். லிரில் முதல் மைசூர் சாண்டல் வரை என்ன உபயோகித்தாலும் நுரை வராது. சென்னை மக்கள் அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. பிரும்மாண்டமான சிண்டெக்ஸ் டாங்குகள் அருகே குடம் அடுக்குகிறார்கள். சிலர் அபார்ட்மெண்டுகளுக்கேத் லாரியை வரவழைத்து விடுகிறார்கள். வேலைக்கும் சென்று கொண்டு வீட்டையும் கவனித்துக் கொண்டு குடத்தையும் ரொப்புவது பெண்மணிகள்தான்.

தொலைக்காட்சியில் நான் பார்த்ததிலேயே மிகவும் ரசித்தது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான 'மதன் பார்வை'. ஞாயிறு இரவு எட்டு மணிக்கு வருகிறது. நூறு எபிசோடுகள் முடிந்து விட்டதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடினார்கள். நூறு வாரத்திலும் அவர் விமர்சித்தப் பார்வைகளில் இருந்து முக்கியமான கருத்துகள்; அயல்நாடுகளில் சினிமா எப்படி அலசப்படுகிறது என்ற சிதறல்கள்; தற்கால சினிமாவின் வளர்ச்சியை எப்படி 'பிதாமகனும்' 'காக்க காக்க'களும் முன்னெடுத்து செல்கின்றன் என்ற ஒரு நிமிடத் துகள்கள்; நல்ல திரைப்படத்தை எப்படி பட்டறிவது என்ற பகிர்வுகள் என்று நான் பார்த்த முதல் வாரம், நான் பார்க்காத நூறு வாரத்தை சுருக்காக காட்டியது.

அடுத்த வாரம் தமிழ்ப் பட உலகின் who is who-க்களுடன் ஒரு கலந்துரையாடல். எந்த நடிகை எந்த சோம பானத்தை அருந்துகிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பதிலேயே மதன் கேட்ட தர்மசங்கடமான ஆனால் நாகரிகமான கேள்விகளும், அவற்றுக்கு சத்யராஜ், கமல், தரணி, மணி ரத்னம், சேரன், குஷ்பூ போன்றோர் சொன்ன வித்தியாசமான பதில் வாதங்களும் மறந்தே போச்சு. டிடி மலையாளத்தில் பார்த்த படம் ஒன்றின் பெயரை இன்னும் தேடுகிறேன். துறவறத்திற்குக் கொடுக்கப்படும் சிறுவன் ஒருவனின் வாழ்க்கையை பம்மல் கே சம்பந்தத்தில் நடித்த தாத்தா போன்ற சில தெரிந்த முகங்களுடன் காட்டிய நல்ல படம். மடத்தை விட்டு பையன் ஓடிப்போவது, அப்பா 'சிறிய பெரியவரின்' காலில் விழுந்து வணங்குவது, துறவறம் பூண்டபின் சிறுவர்கள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு தனது கடமைகளை உணர்ந்து தொடர்வது என்று சினிமாத்தனம் இல்லாமல் சொன்ன படம்.

ஊர்வசி நடத்தும் stand-up-ஆன 'டேக் இட் ஈஸி' வெகு ஜோர். வாரிசு அரசியலைத் தாக்குவது, சன் டிவி டாப் டென்னை சதாய்ப்பது, 'வண்க்க்கக்கமை' வாறுவது, அன்றாட செய்திகளை உல்டா செய்வது, எதிர்கட்சி, ஆளுங்கட்சி, சினிமா ஹீரோ, சீரியல் தொடர் என எல்லாத்தையும் பகிடி செய்வது என நான் ஜே லேனோவும், ஜான் ஸ்டூவர்ட்டும் பார்க்காத குறையை தீர்த்தவர். ஆனால், நேர்முகத்தில் டென்னிஸ் மில்லர் தொடுக்கும் கிண்டல் கேள்விகள் வேண்டாம்; டேவிட் லெட்டர்மேன் செய்யும் குறும்பு சேஷ்டைகள் வேண்டாம்; கேடி கௌரிக் கேட்பது போல் சகஜமாகப் பேசிக் கொண்டிராமால், கையை அழுந்தக் கட்டிக் கொண்டு சோபாவில் இறுக்கமாக சாய்ந்து கொண்டு முகத்தை படு சீரியஸாக வைத்துக் கொண்டு தொடர்ச்சி இல்லாமல் வினாக்களை சொல்கிறார். முதல் பாதியில் இருக்கும் நட்புத்தனம், பின்பகுதியில் நாடகமாகி விடுகிறது.

சென்னையில் ஃபுட் கோர்ட்கள் பார்த்தது பொறாமையாக இருந்தது. எங்க ஊர் mall-களில் கிடைக்காத சரவண பவன் மெனுக்களுடனும், செட்டிநாடு ஐயிட்டங்களும் பீட்ஸா ஹட்டுடனும் பர்கருடனும் சமபந்தி போஜனத்துக்கு அழைத்தன. அபிடைசராக குழிப்பணியாரமும், சிக்கன் மன்சூரியனும், குடிக்க மாதுளம்பழ ஜூஸ், மெயின் கோர்ஸ¤க்கு காஷ்மீரி புலவ், தொட்டுக்கக் காளான் கறியும் கோழிக் குழம்பும், கடைசியாக எம்.டி.ஆர் பகாளா பாத், க்விக்கீஸ் தரும் குளிர்ந்த மெட்ராஸ் ·பில்டர் காபி என்று ஒரே இடத்தில் வெட்டலாம்.

கோமளாஸ் தரும் பஃபே ரகங்கள், பார்க் ஷெராடனில் ஆந்திரா ஸ்டைல் வேஷ்டி கட்டிக் கொண்டு, தமிழ் பேசிக் கொண்டு கட்டை கட்டையான தடி மெனுக்களைத் தரும் சிப்பந்திகள், அறுபத்தி ஆறு விதமான பழ ரச (சைவ) காக்டெயில்களையும் மில்க் ஷேக்குகளையும் தரும் தெருவோர பெட்ரோல் பங்க் கடைகள், 'குறையன்றுமில்லை'யை வட்டில் ஓட்டாமல், நேரடியாக நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இசைக்கும் வீணைகளின் பிண்ணனி, நெய் விட்டுத் தரலாமா என்று என்னைப் போன்ற போலி diet-conscious அன்பர்களிடம் கேட்கும் பரிவு, புரியாத பெயர்களின் தெரியாத பதார்த்தங்களைப் பாங்குறப் பரிமாறும் லாவகம், என்று என்னுடைய உணவின் சுகமான மயக்கங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆட்கள் வந்து டேபிளில் உட்கார்ந்தால் மட்டுமே ஃபேனை ஸ்கேலால் தட்டி ஓட்டுவது, நட்சத்திர ஓட்டல்கள் பேக்கேஜ்ட் குட்ஸ் செய்து அவற்றைத் தள்ள பார்ப்பது, நாம் முன்பே வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் சரவணாஸில் சாப்பிட்ட பிறகே பழரசம் கொண்டு வந்து கொடுப்பது, சின்ன ஓட்டல்களில் மெனு சொல்லாமல் வாய்ப்பாடாக ஒப்பிப்பது, டிப்ஸ் கொடுக்க வேண்டாம் என்று எழுதியிருப்பது என்று பல விஷயங்கள் இன்னும் தொடர்கிறது.

தேர்தல் குதிரைகள் - விகடன்

1. முலாயம் சிங்
2. லல்லு பிரசாத்
3. பி ஏ சங்மா
4. மாயாவதி
5. சரத் பவார்
6. சந்திரபாபு நாயுடு
7. ஜார்ஜ் பெர்ணாண்டஸ்
8. பால் தாக்கரே
9. மம்தா பானர்ஜி
10. பிரமோத் மகாஜன்
11. ஜெய்பால் ரெட்டி
12. ராம்விலாஸ் பாஸ்வான்

வலைசஞ்சிகைகள்

நம்ம பதிவுக்கு வலைப்பதிவுகளின் குமுதம் என்னும் பெயர் அடிக்கடி அடிபடுகிறது. அதே போல் வேறு சிலரின் பதிவுகளும் மனதில் தோன்றிய பத்திர்கைகளும்:

அருண் - ஜூனியர் போஸ்ட்
பத்ரி - இந்தியா டுடே
இட்லி வடை - துக்ளக்
நா. கண்ணன் - குமுதம் ஜங்ஷன்
கார்த்திக்ராமஸ் - புரட்சிப்பாதை
காசி - மஞ்சரி
முத்து - கல்கண்டு
பவித்ரா - ஆனந்த விகடன்
ராதாகிருஷ்ணன் - ரிப்போர்ட்டர்
பாரா - ஜூனியர் விகடன்
'பெயரிலி' ரமணீதரன் - நக்கீரன்
சபாநாயகம் - காலச்சுவடு
'மூக்கு' சுந்தர் - குங்குமம்
வாமதேவர் - சக்தி விகடன்
வலைப்பூ - உயிர்மை
தோழியர் - மங்கையர் மலர்
வெங்கட் - கணையாழி

விகடன் புக் கிளப்!

ஆனந்த விகடன்.காம்:

ஆதவன் தீட்சண்யாவின் ‘பூஜ்யத்திலிருந்து துவங்கும் ஆட்டம்’ கவிதைத் தொகுப்புக்கு, கோவை தேவமகன் நினைவுப் பரிசும், ‘கவித்தூவி’ விருதும் கிடைத்துள்ளன.

எழுத்தாளர் கோணங்கி ‘பாழி’ நாவலைத் தொடர்ந்து ‘பிதுரா’ என்ற நாவலை எழுதி முடித்திருக்கிறார். இரண்டு யாத்ரீகர்களைச் சுற்றி வருகிற கதையாம்!

எழுத்தாளர் இந்திராவின் ‘சித்திரக்கூடு’ நாவலைத் தொடர்ந்து, அவரது சிறுகதைத் தொகுப்பு ‘ஒற்றை வாசனை’ வெளியாகவுள்ளது.

பாடலாசிரியர் யுகபாரதி ‘படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் வரப்போகிறது.

பாடலாசிரியர் கபிலனின் ‘நகர்பறை’ என்ற கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாகிறது.

பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.

திருவாசகம் - மாணிக்க வாசகர்

சிவபுராணம் :

புல்ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்..........30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்;எம்பெருமான்,


ஐந்து பூதங்களுக்கும் நிறங்கள் உண்டு. அவை மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும், நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும் வானுக்குப் புகைமையும் எனச் சாத்திரங்கள் கூறும். ''பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிகப்பு வன்கால் கருமை, வளர்வான் தூமம்''என்பது உண்மை விளக்கம். மேலும் சிவபெருமானின் திருமுகங்கள் ஐந்தும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம் உடையதாய் இருப்பதையும் இதுகுறிக்கும் என்பர்.

ஈசானம்- படிகநிறம்; தத்புருஷம்- பொன்நிறம்; அகோரம்-கருநிறம்; வாமம்-குங்குமம் அல்லது செந்நிறம்;
சத்யோசாதம்- அதிவெள்ளை நிறம்.சிவன் கோவில்களில் பள்ளியறை தீபாரதனையின் போதும், பிரதோஷ காலங்களிலும் சொல்ல கேட்டிருக்கிறேன். கலிவெண்பாவில் அமைந்தது, போன்ற தகவல்களுடன் வெ.சுப்பிரமணியன் என்பவர் அகத்தியரில் எழுதி வருகிறார். எளிமையான கருத்துள்ள பாடல். 'பிறந்திளைத்தேன்' போன்ற சொற்றொடர்கள் மனதைக் கவர்ந்தது. பிறந்து + இளைத்தேன் என்றால் வாழ்க்கையை நினைத்து வருத்தப்படுவதாகவும், பிறந்து + திளைத்தேன் என்றால் வாழ்க்கையை ரசிப்பதாகவும் பொருள் வருவதாகத் தோன்றும்.


செவ்வாய், ஏப்ரல் 20, 2004

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் - எஸ்.பாபு

பிகேஎஸ் எழுதிய சந்திப்புகள் படித்தவுடன் சமீபத்தில் படித்த இந்தக் கவிதை நினைவில் வந்தது.

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல்

முதற் சந்திப்பின்போது
அவரவர்க்குள்ளிருக்கும்
சுவர்களுக்கப்பால்
பதுங்கி இருந்தோம்
எதிராளிக்கு ஏதுந் தெரியாதபடி

அடுத்தடுத்த சந்திப்புகளில்
உவகை தராத
உதட்டுச் சொற்களுக்கு நடுவே
இருவருக்கும் பொதுவான
உணர்வுப் பொறியொன்று
தெறித்து விழுந்த கணத்தில்
உடைக்கத் தொடங்கினோம்
நம் வெளிச்சுவர்களை

கூப்பிடவுடன் வந்துவிடுகிற
குழந்தையைப்போல
எதிர்பாராத இனிய அதிர்ச்சியாய்
அமைந்துவிட்ட சந்திப்புகளில்
மேலும் மேலுமென சுவருடைத்து
உறவின் இடைவெளி
சிறுக்கக் கண்டு களித்திருந்தோம்

அதன்பின்
பெருஞ்சுவரொன்று
பெயர்ந்து விழுந்தது
பலகீனங்களையும் பிழைகளையும்
நாம் பகிர்ந்து கொண்டபோது

மிச்சம் மீதி இருக்கும்
அந்தரங்கத் திரைகள் கிழித்து
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
உள்ளிறங்கி
விரல் நுனிவரை
வியாபித்து விட முடியாதெனவும்
தெரியும் நமக்கு.

நன்றி: காளான் பூக்கும் காலம் - எஸ்.பாபு
தமிழினி ரூ. 25/-


பிகு: இதற்கும் பின்தொடர்தல் போட பயமாக இருக்கிறது. எனக்கு ஹிட்ஸ் தேவை
என்று போட்டீர்கள் என்று கிண்டல் செய்து கண்ணடித்து விடுவார் சிவகுமார்.

;-)

பிகேஎஸ்,
உங்க வலைப்பதிவை அவசரமாய் படித்தாலும் அவசியமாய் படிப்பவன். அவசரம் என்பதை பல வகைகளில் நோக்கலாம். நான் அவசியம் செய்யவேண்டியவை, அவசரமாய் செய்யவேண்டியவை என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டால், உங்களின் (மற்றும் அந்தப் பட்டியலில் நான் கொடுத்துள்ள மற்றவர்களும்) எந்த quadrant-இல் வருகிறார்கள் எனப் புரியும். எனது குழந்தைக்கு டயாபர் மாற்றும்போது I do it in a hurry. எனது வேலையின் வாரயிறுதி டைம்ஷீட் கொடுப்பதற்கு I do hurry. அதைப் போன்ற வலைப்பதிவு என்று சொல்ல நினைத்தேன். எல்லாருக்கும் ஔவையார் போலவும், திருவள்ளுவர் போலவும் சுருங்க சொல்லி விளங்க வைக்க முடிவதில்லையே :)

கொட்டாவி என்று குறிப்பிட்டது, நான் நீண்ட கேள்வி கேட்டு குழப்பி, உங்களின் எண்ணங்களை மீண்டும் பதிய வைப்பதற்குள் உங்களுக்குக் கொட்டாவியை வரவழைத்து விடுவேனோ என்ற பயம்தான். காரெக்டர் லிமிட் என்று எல்லாம் இருக்கும் பின்னூட்ட பெட்டியில் மீண்டும் சுருங்கச் சொல்லும் முயற்சி ஃபெயிலியர் :(

ட்ராக்பேக் நீங்க வசதி செஞ்சிருக்கும் போது அதை பயன்படுத்துவதுதானே முறை :) ஹார்வார்ட் பல்கலையில் பெண்கள் அதிகம் சேருகிறார்கள் என்று எழுதியிருந்தீர்கள். அதற்கு அவர்கள் எப்படி அவர்களின் பலத்தைக் காண்பிக்கிறார்கள் என்று காட்ட நினைத்தேன். சம்பந்தமுள்ளது போல் தோணிச்சிங்க... தவறாக இருந்தால் தயவு செய்து நீக்கிடுங்க :)

நம்ம ப்ளாகுக்கு ஹிட்ஸ் தேவைதான். நான் மறுக்கவில்லை. நீங்க இப்பொழுது எழுதியது போல வாசகர்களே வலைப் பதிவாளர்களும் கூட. டைனோ, பிரபு போன்ற ஒரு சிலர் தவிர! உங்களுக்கு வருகிறவர்கள் எனக்கும் வருவார்கள்; கதவையும் திறப்பார்கள்; இட்லி-வடையும் சாப்பிடுவார்கள் இத்யாதி..... ஹிட்ஸ் வேண்டுமேன்றால் நான் சொல்லும் உத்திகள் இரண்டுதான்:
1. செக்ஸ் தளம் ஆரம்பிப்பது
2. ஆங்கிலத்தில் வலைப்பதிவது

இரண்டாவது முயற்சியை செய்து வருகிறேன். எது எப்படியோ, நம்ம வலைப்பதிவுக்கு நீங்க வந்து போனதுக்கு மகிழ்ச்சி; தொடர்ந்து வாங்க; குற்றம் குறை இருந்தால் (வழக்கம் போல்) ;-) நிறைய கண்ணடிப்புடன் சொல்லுங்க. நன்றி பிகேஎஸ்.

சென்னையில் ஒரு வெயில் காலம் - 2

சுங்கத்துறை அதிகாரிகளை வில்லன் போல் சித்தரித்த சில பதிவுகளை பார்த்திருக்கிறேன். அனேகமாக அவர்கள் எல்லாரும் பம்பாய் அல்லது டில்லியை மட்டுமே சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்கக் குடிபுகலை விட வேகமாக நகரும் க்யூ, குழந்தைகளை வைத்துக் கொண்டிருப்பவருக்கு என தனி வரிசை, வாயிலில் இன்முகத்துடன் 'காமிரா ஏதாவது உள்ளே இருக்கா? லேப்டாப் திரும்ப எடுத்துண்டு போயிடுவீங்க இல்லியா?' என கனிவான விசாரிப்பு என்று சுறுசுறுப்பாகவும் சினேக உணர்வோடும் வரவேற்கிறார்கள். 'Shining India' உண்மையோ இல்லையோ; 'Discover India' என்பது நிதர்சனம்.

பிரிட்டிஷ் ஏர்வேசில் வந்தால் பெட்டி படுக்கை வரத் தாமதமாகலாம். மற்ற (ஐரோப்பாவில் இருந்து தொடங்கும்) விமானங்கள் சீக்கிரமே கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள். எஸ்கலேட்டர் பாட்டுக்கு பெட்டிகள் இல்லாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்க, அதற்கு அருகில் ட்ரா·பிக் ஜாமில் மாட்டிக் கொண்டிருக்கும் கார்கள் போல், வரிசையாக அடுக்கப்பட்ட பெட்டிகளின் நடுவே 'இரும்புக் கோடரி' கண்டுபிடித்தது போல் என்னுடைய லக்கேஜ்களை கண்டுகொள்வது எளிது. வெளியே எடுத்து வருவதற்கு தினசரி ஜிம் பயிற்சி தேவை.

நடுநிசி தாண்டிய இரவில் வீட்டுக்கு செல்லும் வழியில் தேர்தல் ஜோர் தெரியவில்லை. பத்து மணிக்கு மேல் புது டில்லியில் நாய் கூட ரோந்து சுத்தாது. பெங்களூர் எம்.ஜி. ரோடும், கல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட்டிலும் அப்பொழுதும் சில பாதசாரிகளைப் பார்க்கலாம். சென்னையின் எல்லா தெருக்களிலும் பலவிதமான போக்குவரத்தைக் காண முடியும். அது இன்னும் அமைதியாகத் தொடர்கிறது. ஆனால், பிரும்மாண்டமான கட்-அவுட்கள், தோரணங்கள், போஸ்டர்கள் எல்லாமே கொஞ்சம் அடக்கி வாசிக்கபட்டது போல் இருந்தது.

சில தேர்தல் சுவரொட்டிகளை பத்ரி படம் பிடித்துக் கொண்டிருந்தார். நான் பிடிக்க வேண்டும் என்று நினைத்து மறந்த ஒன்று: 'பதிமூன்று மாதங்களில் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் அவர்கள் (உம்மணாமூஞ்சி ஜெ.ஜெ. புகைப்படம்); நிலையன ஆட்சியைக் கொடுக்க வைத்தவர்கள் (கலைஞர் சிரிக்கிறார்)'. என்ன சொல்ல வருகிறார்: 'எங்களைத் தேர்ந்தெடு... மீண்டும் பிஜேபிக்கோ காங்கிரசுக்கோ ஆதரவு தந்து கொண்டே ஆட்சி பீடத்தில் தொடருவோம்' என்கிறார்களா? திமுகவின் கண்ணகி சிலை பளிச்சென்று முகத்தில் அறைகிறது. காமராஜர் சாலையில் சீரணி அரங்கமும், கண்ணகியும் இல்லாதது அழகு சேர்த்தது போல்தான் இருக்கிறது.

கோட்டையை பார்க்க நிறைய வெள்ளையர்கள் வந்திருந்தார்கள். சென்னை எங்குமே வெளிநாட்டினரை அதிகம் பார்க்க முடிந்தது. ஸ்பென்சர் ப்ளாசாவில், ஷாப்பிங் அரங்குகளில் என்று எல்லாவிதமான இடங்களிலும் தென்பட்டார்கள். ஆட்டோகாரர்கள் மாதிரி விஷயம் அறிந்தவர்கள் எவருமே இருக்க முடியாது. ரேடியோ மிர்ச்சியில் வரும் எழுபதுகளின் பாடலாசிரியரை சொல்கிறார்கள். சிம்ரன் மீண்டும் நடிக்க வருவது குறித்து அலசுகிறார்கள். ப.சிதம்பரத்தின் அரசியல் இயலாமையை அங்கலாய்க்கிறார்கள். விஜய்காந்த் நேர்மையானவர்; ஈகோ பார்க்காதவர்; கலைஞருக்குப் பின் அரசியலுக்கு வருவார் என்றும் மன்மோகனாமிக்ஸையும் அருண் ஜெட்laaw-வையும் தொட்டு புஷ்-ஒசாமா வரை தொட்டு 'கனவு மெய்ப்பட வேண்டுமை' திருட்டு விசிடியில் பார்ப்பேன் என்று திருவான்மியூர் டு திருமங்கலம் செல்லும் வரை அலுக்காமல் பேசுகிறார்கள்.

நான் படித்த சாந்தோமில் அனைவரும் ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவது கட்டாயமாகிவிட்டது. இன்னும் தமிழ் மீடியம் உள்ளது. ஆனால், அங்கு படிப்பவனும் ஆங்கிலத்தில்தான் அளவளாவுகிறான். பத்தாவது பரிட்சை நடந்ததால் படிப்பில் காட்டும் ஆர்வம் அதிகம்; அதற்கு ஈடாக தோழிகளின் படிப்பிலும் அவர்களுடன் செல்லும் கோடை கால camp குறித்தும், பரிட்சை முடிந்து அழைத்து செல்லப் போகும் ட்ரீட்களுக்குமான திட்டமிடுதலில் காட்டும் ஆர்வமும் நிறைய.

சாந்தோம் தேவாலயத்தின் ஞாயிறு காலைகளில் கூட்டம் வாயிலைக் கடந்து நுழைவாயிலை எட்டிப் பிடிக்கிறது. கபாலீஸ்வரர் தேர் திருவிழாவில் இன்னும் என்ஜின் எதுவும் இழுக்காமல் வடம் பிடித்து, முட்டுக்கட்டை போட்டு, ·ப்ளாட் மாடிகளில் இருந்து பிஸ்லேரி தண்ணீர் பக்கெட் பக்கெட்டாக இழுப்பவர்கள் மேல் ஊற்றி, ரங்கராட்டினம் சுற்றி, பஞ்சு மிட்டாய் வாங்கி, கல் உப்பு கொட்டி, நான் எட்டாவது படிக்கும்போது பார்த்த அதே பொம்மைகளை விற்றுக் கொண்டாடுகிறார்கள். பக்தர்கள் செருப்போடு விபூது, குங்குமம் வாங்கிக் கொள்வது மட்டுமே மாற்றம். 'உயிர்மை'யில் ஜெயமோகன் சொல்வது போல் 'விஷ்ணுபுர' களியாட்டங்கள் தேர் திருவிழா முன் எதையும் நான் பார்க்காதது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால், ரிஷபத்தின் முன் 'குருவி குடைஞ்ச கொய்யாப்பழ' டான்ஸ் போல் கரகாட்டம் இருந்தது. சூடான இசை, அதை விட sugestive nuance movements என்று கொஞ்சம் எசகுபிசகாக சாமிக்கு முன்பு இரவு ஒரு மணிக்குக் கூத்து நடந்து கொண்டிருந்தது. அறுபத்து மூவருக்காக நீர்மோர், சாம்பார் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், சுண்டல், முறுக்கு, பட்டாணி என்று சகலமும் சகலாமானோரும் அளித்தார்கள். அடுத்த நாள் பிஷாடனராக இறைவனார் வந்தார். ஆனால், யாரும் எதுவும் விநியோகிக்கவில்லை.

(தொடரலாம்)

நீங்கள் நார்ஸிஸவாதியா?

Beliefnet.com - Are You a Narcissist?:

"0 - 40 : Selfless spirit. You don't think much of yourself--literally--and it's probably helped you get along with people and reduce the anxiety in your life.

41 - 80 : Occasional narcissist. You occasionally think too highly of yourself; catch yourself whenever it seems like the world revolves around you.

81 - 120 : Ego-maniac. You're prone to delusions of grandeur that may hurt your relationships. Get over yourself!"

என்னுடைய ஸ்கோர் தெரியவேண்டும் என்று பிரியப் படுபவர்களுக்கு, 45-தான் எடுக்க முடிந்தது. எல்லாருமே நார்சிஸ்ட் என்று சிலரும் இந்த நோயைக் கண்டுபிடிப்பது எப்படி என்று நண்பர்களைப் பழிக்கும் ஒருவனின் கதையை சொல்லியும் கலைஞர்களுடனான ஈராயிரம் வருடத் தொடர்பையும் விளக்குகிறார்கள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

மும்பை பதிப்பு

விமர்சகரும் வாசகரும்

பிகேஎஸ் என்ன சொல்ல வருகிறார் என்று நினைக்கிறீர்கள்?
1. பொருள் குற்றம், சொற் குற்றம், இலக்கணக் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது.
2. சுய விருப்பு வெறுப்பு சார்ந்து படைப்புகளை விமர்சிக்கிறார்கள்.
3. படைப்புகளைப் பாராட்டுபவர்கள் நார்ஸிஸ மனப்பாங்குடையவர்கள்.
4. வாசகரின் அறிவும் திறனும் படைப்புகளை விட குறைந்து இருந்தால்தான் ரசிக்க முடியும்.
5. விமர்சனங்களால் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் எவ்வித நன்மையும் கிடைக்காது.
6. எழுதிய எழுத்தாளரைவிடவும் சிறப்பாகவும் நுட்பமாகவும் எழுத்தாளரின் படைப்பை அனுபவித்து ரசிக்க வேண்டும். (ஆனால் எழுத்தாளருக்கு அறிமுகமாகியிருக்கக் கூடாது; படைப்பையும் பாராட்டக் கூடாது).
7. தமிழில் விமர்சகர்கள் பெருகி விட்டார்கள். வாசகர்கள் குறைந்து விட்டார்கள்.
8. விமர்சனம் என்கிற பெயரில் எழுதாமல், வாசக அனுபவங்கள் என்று தலைப்பிடவும்.

திங்கள், ஏப்ரல் 19, 2004

சென்னையில் ஒரு வெயில் காலம்

பெங்களூரில் இரண்டு வருடம், டெல்லியில் ஒரு வருடம், கல்கத்தாவில் இரண்டு மாதம், ராஜஸ்தானில் நான்கு வருடம், என்று இந்தியாவை க்ளோசப்பில் பார்த்தாலும் சென்னையோடு இருக்கும் love-hate தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டேன். வழக்கமாக ஒரு நாள் மட்டுமே சென்னையில் தங்கி பாஸ்டன் திரும்பிவிடும் எனக்கு இந்த முறை நீண்ட விடுமுறை. பத்து நாட்கள் இருந்தாலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா என திகட்டாத இருப்பு.

போன முறை ஏ.ஆர்.ரெஹ்மானையும் அதற்கு முந்திய முறை ரஞ்சிதாவுடனும் விமானத்தில் சிறிய சந்திப்புகள் கிடைத்தது. இந்த முறை மனைவி+குழந்தை. 'ஆண்ட்டி என்ன கேட்டா' என்று ஏர் ஹோஸ்டஸ் ஆங்கிலத்தில் கேட்டதை மொழி பெயர்த்தும், 'அங்கிள் என்ன சொல்றா' என்று பைலட் ஜெர்மனில் பேசுவதை விளக்கியும், மஞ்ச பொத்தானை அமுக்காதே என்று சொல்லியும் அமுக்கியதால் வந்து கோபத்துடன் 'என்ன வேணும்' என்று வினவிய விமான-விருந்தோம்பியிடம் மன்னிப்பு கேட்டும், மேகங்களையும் பாலைவனங்களையும் வேடிக்கை காட்டியும் விமானப் பயணம் சென்றது.

எனது celebrity meeting disorder syndrome-ஐ த்ரிஷா தீர்த்துவைத்தார். பார்க் ஷெராடன் வாசலில் பேசாத செல்·போனை ரொம்ப நேரம் காதில் வைத்துக் கொண்டு சோகமாகக் காத்திருந்தார். ரொம்ப நேரம் காத்திருந்தும்
பேசுவதாகவும் தெரியவில்லை; செல்பேசியைக் காதை விட்டும் எடுக்கவில்லை என்பதால் பொறுமையிழந்து நகர்ந்தேன்.

சென்னையில் ட்ரா·பிக் நன்றாக நகர்கிறது. பாஸ்டனையோ வேறு வளர்ந்த அமெரிக்க நகரங்களின் downtown-களுடன் ஒப்பிட்டால், ஆனந்தக் கண்ணீரே வருகிறது. பாரிமுனையாகட்டும், திரையரங்குகள் நிறைந்த அண்ணா சாலையாகட்டும், கடைகள் மட்டுமே உள்ள தியாகராய நகர் முதல் ஸ்டெர்லிங் ரோட் வரை எல்லா இடங்களிலும் வெகு எளிதாக ஆட்டோவும், காரும், டூ-வீலர்களும் ஓட்டப்படுகின்றன.

அமெரிக்கர்களுக்குக் கலாசார அதிர்ச்சி ஏற்படும் என்று முன்பு சொல்வார்கள். இப்பொழுது அந்த மாதிரி ஏதும் நிகழாது என உறுதியாக சொல்லலாம். பெண்கள் சுதந்திரமாக க்விகீஸ் காபி கடை வாசல்களிலும், மாண்டியத் ரோட் சந்திப்புகளிலும், இன்ன பிற upscale hangout-இன் திறந்தப் பிரதேசங்களில் ஊதித் தள்ளுகிறார்கள். லை·ப்ஸ்டைல், க்ளோபஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் என எல்லாப் பிரதேசங்களிலும் ஸ்லீவ்லெஸ் மினி டாப்களும், மைக்ரோ ஸ்கர்ட்களும் பாய் ·ப்ரெண்ட்களால் வாங்கித்தரப்படுகின்றன.

பைக்களில் முன்பு குழந்தையை இடுக்கிக் கொண்டு சேலையைப் பிடித்துக் கொண்ட மனைவியை பின்புறம் அமர்த்திய பேண்ட்-ஷர்ட் கனவான்களைப் பார்ப்பேன். அவர்களுடன், டை கட்டிய வாலிபர்கள் கொஞ்ச நாள் முன்பு பார்த்தேன். இப்பொழுது இவர்களுடன் காதில் கடுக்கண் அணிந்த, கறுப்பு பனியன் அணிந்த, அரை நிஜார் அணிந்த வாலிபர்களையும் அவர்களை இறுகப் பற்றிய இறுக்கமான ஆடைகளை அணிந்த வாலிபிகளையும் புதிதாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஐயங்கார் கல்யாணங்களில் இன்னும் 'சாத்தமுது வேணுமா' என விசாரிப்புகளுடன் (காதல் செய்தாலும்) விரிவான கல்யாணங்கள் நடைபெறுவது; கோவில்களில் எக்கச்சக்க கூட்டத்தினால், திடகாத்திரமாக இருந்து தள்ளுமுள்ளு தெரியாவிட்டால் பிரதோஷக் காலங்களில் கபாலி கோவில் உள்ளே கால் வைக்க முடியாமல் இருப்பது; லேண்ட்மார்க் அருகே 'பார்க்' என்று நண்பருடன் பேசிக் கொண்டு செல்லும்போது உரிமையோடு மக்கள் 'பார்க் ஹோட்டல்
இங்கே இல்லையே... வழி தவறிட்டீங்களா?' என நட்போடு வழி காட்ட முயல்வது; என்று பலவிதத்தில் சென்னையின் flavor intact-ஆக இருக்கிறது.

நிறைய ஆர்ட் காலரிகள்; அவற்றில் விதவிதமான கண்காட்சிகள். ரசனைக்கேற்றவாறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், திருவிழாக்கள், பொருட்காட்சிகள் என்று ரசிக்கத்தக்க சுவாரசியமான இடம்.

உணர்வுத் தளத்தில் விரியும் உன்னதப் படைப்பு - வையவன்

அமுதசுரபி - சிஃபி: உணர்வுத் தளத்தின் முழு வெளிப்பாடு மட்டுமே கலையாகி விடுவதில்லை. வெளியீட்டு நயம், சிந்தனை, சொந்தக் கால் தடங்களின் வழியே கடந்து செல்லும் புலனுணர்வுகள், இப்படிக் கனிந்த பக்குவத்தை எட்டினால்தான் கலைஞன் தான் அனுபவித்துப் பதிவு செய்யும் ஆனந்தம் கிட்டும்.

வரைந்த படம் வேறு; அனுபவிக்கும் பிரத்யட்சம் வேறு. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நுட்பமான இடை வெளியை இல்லாமல் ஆக்குவதே கலையின் வெற்றி. பாரதிபாலன் இந்தக் தொகுதியில் அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறார். அவரது கிராமம், ஒளி, ஒý சுவை, அசைவு கணங்கள் என்ற மிகைப்படுத்தப்படாத ஸ்பஷ்டமான பதிவுகளோடு இந்தத் தொகுதியில் வெளிப்படுகிறது.

வண்ணத்துப் பூச்சியைக் கொன்றவர்கள் - பாரதிபாலன்,
பக்கங்கள் : 219, விலை : ரூ 80/- வெளியீடு: சந்தியா பதிப்பகம்

உலகமெலாம் தமிழோசை - திருப்பூர் கிருஷ்ணன்

அமுதசுரபி - சிஃபி:"ஒருமுறை என் சகோதரியுடன் பேருந்தில் கேரளப் பயணம் மேற்கொண்டேன். அவளுக்காக வழியில் இறங்கிப் பூ வாங்கினேன். அதற்குள் பேருந்து புறப்பட எத்தனித்தது. அவசர அவசரமாகப் பூவுடன் பேருந்தில் ஏறினேன். "பூவா!' என்று உரத்த குரýல் கூவினார் நடத்துநர். "ஆமாம்!' என்றேன் நானும் பதிலுக்கு உரத்த குரýல்! என் சகோதரியின் முகமெல்லாம் முறுவல். என்ன செய்ய? "பூவா' என்றால் "போகலாம்!' என்று அர்த்தம் என்பதும் நடத்துநர் ஓட்டுநரிடம் போகலாம் என்பதைத்தான் உரத்த குரýல் தெரிவித்திருக்கிறார் என்பதும் அப்போது எனக்குத் தெரியவில்லை!

இந்தி மக்கள், மிக ஆதரவான வர்கள். நாம் சுமாரான இந்தியில் பேசினால் கூட, அன்போடு சிரித்தவாறே பதில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் பேசினால் அவர்களிட மிருந்து பதில் கிடைப்பது சிரமம். ஆங்கிலம் பெரும் பாலானவர் களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல; தெரிந்த சிலரும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கூடத் தெரிந்ததாகக் காட்டிக்கொண்டு அதில் பெருமையும் அடைபவர்கள் தமிழர்கள் மட்டுமே. இந்தியர்கள் இருவர் எங்கு சந்தித்தாலும் தாய்மொழியில் பேசிக்கொண்டால் அவர்கள் மலையாளிகள் என்றும் தப்புத் தப்பான ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் தமிழர்கள் என்றும் சொல்வதுண்டு.

தாய்மொழியைத் தவிரக் கூடுதலாக ஓரிரு மொழிகள் தெரிந்துகொள்வது எல்லோருக்கும் நல்லது. குறிப்பாக எழுத்தாளர்களுக்கு மிக மிக நல்லது. எழுத்தாளர்கள் ராஜம்கிருஷ்ணனைப் போல அதிகப் பயணங்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் மனம் விசாலமடையும். தமிழ் மட்டுமே தெரிந்து தமிழகத்தில் மட்டுமே உழன்று கொண்டி ருக்கும் எழுத்தாளர்களால் குறுகிய கண்ணோட்டங்களிýருந்து மீள இயலாது. அடிமனத் திலேயே குறுகிய கண்ணோட் டங்கள் தவறு என்று அவர்கள் உணராதவரை வெறும் அறிவுபூர்வ விவாதங்களால் அவர்களை மாற்றவும் இயலாது. அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்கள், ஜாதி, மதம் போன்ற குறுகிய பார்வைகளை விட்டுவிட்டு மேலான தளத்தில் மனிதனை மனிதனாகப் பார்த்து எழுதப் பல காரணங்கள் உண்டு. அவர்கள் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதும் அதற்கான முக்கியமான காரணமாய் இருக்கக்கூடும். நாட்டின் பல பாகங்களையும் உலகின் பல பாகங்களையும் போய்ப் பார்த்து வருகிற போது மனம் சுலபமாய் விசாலமடைகிறது. "யாதும் ஊரே!' என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த் தைகளை உண்மையாகவே அனுபவித்து உணர்ந்தால்தான் "யாவரும் கேளிர்!' என்ற அடுத்த வார்த்தைகளின் ஆழம் புரியும்."


புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு