பீடி - (மீறல் வகைமையில் ஒரு சிறுகதை): கோபி கிருஷ்ணன்
சிறுகதைகள் மீது என்னுடைய பார்வை, ஒரு சிலரின் கவிதை மேலான கருத்து போல் ஆகி வருகிறது. குமுதம்/விகடனாலோ அல்லது இணையத்தில் காணப்படும் கதைகளினாலோ, இப்படி ஒரு எண்ணம் மேலோங்கி விட்டது. (இவ்வாறு தோன்றுவதற்கும் நான் கதை எழுத ஆரம்பித்ததுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை ). ரசிக்கும்படியான கதைகளை படித்தல் அரிதாகி வரும் தருணங்களில், நான் படித்ததில் பிடித்த ஒன்றில் இருந்து சில பகுதிகள்:
"பீடி ஒரு கலாச்சாரக் குறியீடு... கலாச்சாரப் பாதுகாவலர்கள் மன்னிக்காவிட்டால் பாதகமில்லை.
சூழலியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவும், ஓஸோன் படலத்தில் பொத்தல். மனப்படலத்தில் ஏராளமான பொத்தல்கள் . வாயில் சதா நிக்கோட்டினை நாடும் விழைவு.
புகைத்தலின் உதயம் : 16.10.68 இரவு. காரணம் அந்தரங்கமானது. என் மீது நானே அருவருப்பு கொள்ளச் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட களங்கம்.
புகைத்தலின் மறைவு : என் மறைவு நாள். என் பிணத்துக்கு எரியூட்டும் போது ஒரு கட்டு சந்திரிகா பீடியை என்னருகில் வையுங்கள். என் இறுதி ஆசை இது மட்டும்.
1975 தாம்பரத்தில் ஒரு ராத்தங்கலுக்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். படுக்கையில் கிடந்தவண்ணம் புகைத்துக்கொண்டிருந்தேன். யதேச்சையாகக் கூரையைப் பார்த்ததில் 'உங்கள் சாம்பலை எங்கு அனுப்ப?' என்ற ஆங்கில வாசகம் தென்பட்டது. இருப்பினும் அமைதியாக புகைத்தல் தொடர்ந்தது.
பீடி ஒரு குறியீடு."
நன்றி: ஆறாம்திணை
கருத்துரையிடுக