செவ்வாய், மார்ச் 23, 2004

யார் எழுதிய கவிதை?

ஈ-தமிழுக்காக நண்பர் ஒருவரிடம் கவிதை கேட்க, அவர் கொடுத்த கவிதை இது.

ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க
மெய்யா வயிறு வலிக்குதுங்க ஐயோ என்செய்ய
ஆசுபத்திரி போயி நீயும் ஊசி போட்டுக்கோ
அதுக்கு நானும் என்ன செய்ய அழகுசாமியே
ஆசுபத்திரி செல்ல எனக்கு காசு வேணாமா
பீசுகேட்டா என்ன செய்ய ஓசி டாக்டரா
காசு இல்லை என்றுதானே கவலைப்படுகிறாய்
இந்தா காசு எடுத்துக்கொண்டு உடனே சென்றிடு
காசு கொடுத்து பீசு கொடுத்து ஊசி எதுக்குங்க
காசிக்கடை அல்வா போதும் காசு குடுங்க

நாளை முதல் நடக்கும் கருத்துக் கணிப்பில், யார் எழுதிய கவிதை என்று சொல்லுங்களேன்.

பாஸ்டன் பாலாஜி / சொக்கன் (நாகாஸ்) / ஹரன் பிரசன்னா / மீனாக்ஸ் / பிரகாஷ் / பா ராகவன் / (பெயரிலி) ரமணீதரன் / பிகே சிவகுமார் / உஷா / யாரும் இல்லை

(நாளை முடியும் பின்னூட்டங்கள் கருத்துக் கணிப்பில் அனைவரும் கிட்டத்தட்ட சம வாக்குகள் பெற்றுள்ளனர் :)

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு