திங்கள், மார்ச் 29, 2004

கண்ட கண்ட பசங்கள - தேவன்

இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், எஸ்.என் சுரேந்தர்


Devanகண்ட கண்ட பசங்கள எல்லாம்
மேல ஏத்தும் கடவுளே

கெட்ட கெட்ட பசங்கள எல்லாம்
மேல ஏத்தும் கடவுளே

எங்களையும் கொஞ்சம் மேல ஏத்துங்க
உங்க ஓரக் கண்ணால் பார்த்து வச்சு லேசாத் தூக்குங்க

மேல இருக்கிறவனை இறக்க வேணாங்க
அட... எங்களப் போட்டு தரைக்குக் கீழே அமுக்க வேணாங்க

நாயரு மேயராகும் எழுத்து மாறினா
லோயரும் அப்பருதானே எழுத்த மாத்தினா

சின்னச்சின்னத் தலையில் நீ எழுதும் எழுத்தில
என்னன்னமோ நடக்குதிங்கே ஒண்ணும் புரியலே

பென்ஸ் கேக்கலே
டொயோடா காரு கேக்கலே
ஜிப்ஸி கேக்கலே
சாண்ட்ரோ கார் கேக்கலே

டிவிஎஸ்ஸு சுஜுகி தந்தா இடஞ்சலாகுமா
இந்த உலகத்தில உனக்கு எதுவும் குறைஞ்சிப் போகுமா?

இடஞ்சலாகுமா
உனக்கு என்னா குறஞ்சிப் போகுமா?

பத்து மாடி வீட்டுக்குள்ள ஏஸி ரூமு கேக்கவில்ல
பொறந்த நாளுக்கெல்லாம் கேக்குகளும் கேக்கவில்ல

என்னாப்பா கேட்டோம்
நாங்க ஹவுஸிங் போர்டா கேட்டோம்
ஒத்தக் குடிச அவுட்டரிலும் கொடுக்கலியே எங்களுக்கு

----
யாரு யாரையோ சினிமா ஹீரோ ஆக்கறே
வெத்து வேட்டையும் எம்.எல்.ஏ மந்திரி ஆக்கறே

டிவியில சீரியலு நடிக்க மாட்டோமா
ஒரு கவுன்சிலரா ஆகிப்புட்டா அடிக்கமாட்டோமா

நடிக்க மாட்டோமா
நாங்க எதுவும் அடிக்கமாட்டோமா

உசந்து போனவனும் ஆடுறான் பேயாட்டத்தில்
வசமா மாட்டிக்கிட்டோம் வாழ்க்கையென்னும் போராட்டத்தில்

நீ எழுதி வச்ச கணக்கா
இது உனக்கு நல்லா இருக்கா

நீ எங்கள மட்டும் கழிச்சுவிட்டு
கூட்டிவிட்டா கணக்கா?


இந்தப் பாடல் ஏனோ பிடித்திருக்கிறது. சொல்லப்பட்டிருக்கும் கருத்து, வார்த்தைகளின் எளிமை, எண்பதுகளின் இளையராஜா ட்ரேட்மார்க் இசை, சென்னை மொழி, உன்னிகிருஷ்ணன் குரல், அதிகமாக சன் டிவியில் ஒளிபரப்பாமை, என எல்லாமே சரி விகிதாசாரத்தில் அமைந்த பாடல். ராகா.காமில் கூட கிடைக்காமல் இருப்பது வருத்தம்தான்.

பாடலைக் கேட்க

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு