வெள்ளி, மார்ச் 26, 2004

நட்சத்திர லைப்ரரி - பாலகுமாரன்

தொகுப்பு : சந்துரு

விஸ்வநாதனின் மனிதநேயம் என்ற கவிதைப்புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. புதுக்கவிதை என்று சொல்லப்பட்டாலும் மரபுக்கவிதை ஒட்டிய அவருடைய எழுத்தில் நல்ல சுவையிருக்கும்.

Baalakumaran‘‘ஏசு நாதரும் விஸ்வ நாதரும்
நேசம் வைத்த நம்
நெஞ்சின் உணர்வுதான்
கன்னி மேரியோ கன்யா
குமரியோ
தன்னை அறிந்தவர் கண் ணில் ஒன்றுதான்
பொய்யை மட்டுமே
போற்றும் வாழ்க்கையில்
தெய்வ உண்மைகள்
தெரிவதில்லைதான்
மண்டைக் காட்டிலே
மனித சக்திகள்
சண்டை போடவா சமயம்
வளர்ந்தது?
பெண்டு பிள்ளைகள் துண்டம்
துண்டமாய்க்
கொண்டு போகவா கோவில்
வைத்தது?
மத வளர்ச்சியா? மனித நேயமா?
எது உயர்ச்சியாய் இவர்க்குப் பட்டது!’

கவிஞர் விஸ்வநாதனுக்குத் தனியாக கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது. அதற்குப் பதில் இதோ, இங்கேயே அதைப் பற்றி எழுதி விட்டேன்.

‘சமரசம்’ என்று ஒரு இஸ்லாமிய மாத இதழ் எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் விடாது படிப்பது வழக்கம். சமீபத்திய சமரசத்தில், ‘ஹாஜிகளே என்ன கொண்டு வந்தீர்கள்?’ என்று பாகிஸ்தானிய சிந்தனையாளர் எழுதிய கட்டுரை ஒன்றை தமிழாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். எல்லா சமயத்திலும் இடித்துரைப்பு நிகழத்தான் வேண்டும் என்பதை எனக்கு அந்தக் கட்டுரை தெளிவாகச் சொல்லியது.

படிப்பது ஒரு பெரிய சுகம். அது நல்ல ஒரு காதற் பெண்ணோடு கைகோர்த்து சுற்றித் திரிவதுபோன்ற இதம்.

நன்றி: குமுதம்.காம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு