சிந்தனையைக் கவர்பவர்கள்
மக்களை அதிகம் தாக்கம் செய்யும் புகழ் பெற்ற நூறு பேர்களை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அல் க்வெய்தாவின் அல்-ஸர்காவிக்கும் ஒஸாமாவுக்கும் பக்கத்தில் வாஜ்பேயும், புஷ்ஷ¤ம் இருக்கிறார்கள். ரப்பர் ஸ்டாம்புகளான கோ·பி அன்னானை 'வளரும் நாடுகளின் வாய்' என்றும் கொண்டலீசா ரைஸை 'அடுத்த உள்துறை அல்லது பாதுகாப்பு மந்திரி' என்றும் வருணித்துள்ளார்கள்.
ஆஸ்கார் கொடுக்கப்படும் பிரிவுகள் அனைத்திலும் வென்ற இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், ஹாரி பாட்டர் மூலம் சிறிய வயதிலேயே மக்களை ஆக்கிரமிக்கும் ரௌலிங் பாட்டி, அமெரிக்காவின் 'வணக்கம் தமிழகத்தை' நடத்தும் கேடி கௌரிக், கூட நம்ம ஐஷ்வர்யா ராயுக்கும் இடம் உண்டு.
நிஜமாகவே மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்ட பில் கேட்ஸ், போப், வ்ளாடிமிர் பூடின், நியுஸை கொடுக்கும் ரூபர்ட் முர்டாக், சர்ச்சைகளைக் கிளப்பும் அல்-ஜஸீரா, குப்பை கூளத்தைக் கூட கூவி விற்க செய்த ஈ-பே நாயகி மெக் விட்மான், அகியோர் கூட விப்ரோவின் ஆசிம் ப்ரேம்ஜி இருக்கிறார்.
பிரான்ஸ் சைக்கிள் போட்டியை வென்று கொண்டே இருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங், பாஸ்டன் பாட்ரியாட்ஸின் கோச் பெலிசிக், ஜீசசின் அதிகாரபூர்வ இயக்குநர் மெல் கிப்ஸன், புத்தகம் முதல் எல்லாவற்றிலும் ரசனையை மேம்படுத்தும் கனிவுள்ள ஓப்ரா, கல்யாணம் நிச்சயித்த பிறகு கோப்பையே வெல்லாவிட்டாலும் டைகர் வுட்ஸ், கலி·போர்னியாவின் ம.கோ.ரா. ஆர்னால்ட், அமெரிக்காவின் நிரந்தர காதல் மன்னன் கிளிண்டன், வருங்கால ஜனாதிபதி ஹில்லாரி, கூட நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, டேவிட் பெக்கம் என்று பட்டியல் நீளுகிறது.
இவர்களில் பில் கேட்ஸ், ஓப்ரா, போப், மண்டேலா ஆகியோர் ஏற்கனவே டைம் பத்திரிகையின் 'வருட நாயகர்' பட்டம் சூட்டப்பட்டவர்கள். ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் பட்டியலில் (டொவால்ட்ஸ் தவிர) என்னால் ஒருவரைக் கூட டக்கென்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாததுதான் மிகப் பெரிய வருத்தம்!
ரால்·ப் நாடெர் போல வேற எந்த முக்கியமானவரை விட்டுவிட்டார்கள் என்று ஒரு பட்டியல் போடலாம்.
முழு விவரங்களுக்கு
கருத்துரையிடுக