செவ்வாய், மே 11, 2004

பாம்பே ட்ரீம்ஸ் - டோனி பரிந்துரை

ரீடிஃப்.காம்: அமெரிக்கத் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல், உலகளாவிய நடன/இசை-தியேட்டருக்கு டோனி விருதுகள் வழங்கப் படுகிறது. இன்று காலை டோனிப் பரிந்துரை பட்டியலில் நம்ம இசைப்புயல் பெயர் இருக்கிறதா என்று ஆர்வத்துடன் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. ஏனோ, ரெஹ்மான் எந்த விருதுக்கான பந்தயத்திலும் இல்லை. 'மெய்ன் ஹூன் னா' பட இயக்குனர் பரா கான் இருந்தார். டோனி விருதுகளின் ஐம்பத்தெட்டு ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஒரு இந்தியர். (இவங்க இன்னும் ஆர்.எஸ்.மனோஹர் நிகழ்ச்சிகளைப் பார்த்தது இல்லை போல... அதனால்தான் :)

பாம்பே ட்ரீம்ஸ் முன்று விருதுகளுக்கான ஓட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது:
சிறந்த ஆடை வடிவமைப்பு - மார்க் தாம்ஸன்
சிறந்த நடன அமைப்பு - அந்தோணி வன் லாஸ்ட் & பரா கான்
சிறந்த இசைக்கோர்வை (Orchestrations) - பால் போகேவ்

அடுத்து வரும் 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' போன்றவற்றில் நிச்சயம் ஏ.ஆர்.ஆர். வந்துவிடுவார்.

முழுப்பட்டியல்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு