புதன், மே 12, 2004

ஒக சினிமாலு... ஒக கமெண்டரிலு...


'கனவு மெய்ப்பட வேண்டும்' குறித்த பிபியின் விமர்சனம் படு ஜோர். விலாவாரியாக படித்துவிட்டதால் படம் பார்த்தபோது ஏமாற்றம் கொடுத்தது. மாதவன் போல் ஸ்மார்ட்டான ஹீரோ; ஒழுங்காக நடிக்கவும் வருகிறது. அடுத்த தரணி படத்தில் விக்ரமிடம் வில்லத்தனம் செய்யாமல் தொடர்ந்து நல்ல வெயிட்டான ரோல்களை செய்ய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

படம் பார்த்தவுடன் தோன்றியவை:


  • மோகன் இரண்டாம் முறையாக பஸ்ஸில் இருந்து இறங்கி, ஊர் சீர்பட்டதை பார்த்தவுடனேயே, 'வணக்கம்' போட்டிருக்க வேண்டும். அதற்கு மேல் வருபவை எல்லாம் superfluous.

  • 'ரமணா', 'முதல்வன்' போன்ற ரட்சக ஹீரோவுக்கும் இந்தப் படத்தின் மாகஸஸே விருது பெறும் நாயகனுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

  • இயல்பான நகைச்சுவை இரண்டு மூன்று இடங்களில் தென்பட்டது. படம் நெடுகவே sitcom போன்ற காமெடியை தூவியிருக்கலாம்.

  • மோகனை விட அவருடைய மனைவி அதிக வயதுள்ளவராகத் தென்படுகிறார். இன்னும் கொஞ்சம் பொருத்தமானவரை நடிக்க வைக்க மெனக்கெட்டிருக்கலாம்.

  • ஆரம்ப காட்சியான அடி உதை வாங்கும் பத்திரிகை ஆபீஸுக்கும், படத்துக்கும் என்ன சம்பந்தம்?

  • தங்க மடல் மாணவன், தற்செயலாக அம்மாவை சந்தித்தல், சுயேச்சையாக வெற்றிபெறுதல் போன்ற அசாதரண நிகழ்வுகளை நம்பவைக்குமாறு காட்சியமைத்திருந்தாலும், சினிமாத்தனம் ஜொலிக்கிறது.

  • ரம்யா கிருஷ்ணனுக்கு அறுபுதமான குரல் (தாழம்பூவே வாடா). தொடர்ந்து பாட வேண்டும்.

  • 'குட்டி' போன்ற நம்பக்கூடியக் கதையையும் நிஜப் பிரசினையையும் எடுத்துக் கொண்ட அதே இயக்குநரின் படம் என்பதை நம்ப முடியவில்லை.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு