புதன், ஆகஸ்ட் 11, 2004

யாரோ ஒருவன் இடம்மாறி இறங்குகிறான்

விகடன் புக் கிளப் : வாசிகா:

பொன். இரவீந்திரன்

‘கந்தையானாலும்
கசக்கிக்கட்டு
சரிதான்.
அது காயும்வரை
எதைக் கட்டுவது?’



ஒவ்வொரு
இரவு நேரப் பயணத்திலும்
பேருந்தோ
இரயிலோ
யாரோ ஒருவன்
தூக்கம் இழக்கிறான்

யாரோ ஒருவன்
பட்டினி கிடக்கிறான்

யாரோ ஒருவன்
எதையோ
பறி கொடுத்துத்
தவிக்கிறான்

யாரோ ஒருவன்
இடம் மாறி
இறங்கித் தொலைக்கிறான்

யாரோ ஒருத்தி
கணவனுக்குத்
துரோகம் இழைக்கிறாள்

மணமகளாய்
மாப்பிள்ளையுடன்
மகளை
வழியனுப்பி
வீடு வந்த அம்மாவின்
சுருக்குப் பைக்குள்
சுருங்கிக் கிடக்கின்றன
மகளின்
காதல் கடிதங்கள்

(குமரன் பதிப்பகம் - ரூ.40/-)



1 கருத்துகள்:

‘கந்தையானாலும்
கசக்கிக்கட்டு
சரிதான்.
அது காயும்வரை
எதைக் கட்டுவது?’ - ஏற்கனவே கசக்கிய வேறொரு கந்தையை! கந்தை என்றால் ஒரே கந்தைதான் இருக்க வேண்டுமா என்ன? அவசரத்தில் எழுதிய கவிதையாகத் தெரிகிறது.

மனைவிக்குத் துரோகம் இழைக்கும் கணவரை விட்டுவிட்டாரே கவிஞர்!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு