செவ்வாய், ஆகஸ்ட் 31, 2004

ட்ரீம்ஸ்

தனுஷ், 'குறும்பு' தியா

இசை: பரத்வாஜ்

இயக்குநர்: கஸ்தூரி ராஜா

1. அலை அலையாய் - 1/4 - டிப்பு, மாலதி
மனதில் அலை எல்லாம் எழுப்பிப் படுத்தாமல் பேசாமல் போய்விடுகிறது. ரகஸியா மாதிரி யாராவது ஆட்டம் போட்டு, 'சூப்பர்டா' மாதிரி எவராவது காரைக்குடியில் இருந்து பிரச்சினை எழுப்பும் வரை என்னுடைய மீள் கேட்பு கிடைக்காது.

2. அப்பா அம்மா - 3/4 - நிதிஷ் கோபாலன், ரஞ்சித், மாலதி
காலேஜ் மக்களை வார்ப்புருக்குள் அடைக்கும், "வாலி" படத்தில் வரும் கற்பனை ஜோதிகா குட்டிக்கதை + "உதயம்" படத்தில் வரும் 'ஜகட ஜகட' டைப் என்சாய் செய்யச் சொல்லும் பாடல். படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகிறதா?

3. ஹே பெண்ணே - 1.5/4 - உன்னிகிருஷ்ணன்
காதல் கொண்டதால் -- பிடிக்காமல் போன & உணர ஆரம்பித்த லிஸ்ட். 'எனக்கு இந்தப் பாடல் பிடிக்கவில்லை' என்னும் வரி மட்டும் கவிஞர் எழுத மறந்துவிட்டார்.

4. பையனுக்கு மீசை வந்தா - 2.5/4 - நிதிஷ் கோபாலன்
காதல் பிறப்பிற்கு போஸ்ட் மார்ட்டம் ஆராய்ச்சி சொல்லும் வரிகள். 'ஞாபகம் வருதே'விற்கு சிறப்பான antithesis.

5. உயிரே என் உயிரே - 2.75/4 - ஹரீஷ் ராகவேந்திரா
காதல் தோல்வி ரணப் புலம்பல்கள். வழக்கமான தாலாட்டாக இல்லாமல் ஆங்காங்கே வரும் 'பிட்'கள். ஹரீஷ்க்கு பொருத்தமான பாடல்.

6. உன்னை உன்னை நினைக்கிறேன் - 1.75/4 - கேம்லி, ஹரீஷ் ராகவேந்திரா
நடுநடுவே ஆங்கிலத்திலே இல்லாமல், தமிழிலே துக்கடாக்கள் அசரீரி போல் பயமுறுத்தினாலும், வசீகரமான பாடல்.

நன்றி: RAAGA - Dreams - Tamil Movie Songs

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு