செவ்வாய், செப்டம்பர் 28, 2004

பராக்கு பார்த்தது

  • குஷ்பூ பிறந்தநாள் வாழ்த்து

  • தமிழில் சந்தி இலக்கணம் - டாக்டர் இரா விஜயராகவன்

  • மதம் மாறாதே என்று உபதேசித்தால் மட்டும் போதுமா? - சின்னகுத்தூசி பக்கம் : "புதுவை சொம்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த செல்வி தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாள்.

    பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் அழைத்து எல்லோரும் வருவாய்த்துறையிலிருந்து ஜாதிச் சான்றிதழ் வாங்கி வரவேண்டும்; இல்லாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்று கண்டிப்பாக கூறி இருக்கிறார்கள். "உனக்கு ஜாதிச் சான்றிதழ் தர எங்களுக்கு தர அதிகாரமில்லை. புதுவை அரசு பழங்குடி இன மக்களை அங்கீகரிக்கவில்லை; ஆகவே எங்களால் உனக்கு ஜாதிச் சான்றிதழ் தர இயலாது" என்று வருவாய்த்துறையினர் சட்டத்தினைக்காட்டி கையை அகல விரித்துவிட்டார்கள்."

  • நான்காவது குரங்கு - ரவிக்குமார் : "பிரமாண்டமான மரத்தினாலான செருப்பு, சமயத்தில் இரண்டு முகங்களைக் காட்டும் மனிதர்களைப் பிரதிபலிக்கும் மரத்தினாலான சிற்பம், நசுக்கி எறியப்பட்ட பெப்ஸி டின்னைக் கல்லிலேயே செதுக்கியிருக்கிறார்கள். எல்லாப் புலன்களையும் "மூடியபடி காட்சியளிக்கும் நான்காவது குரங்கு' என்னும் மரச்சிற்பம், கடந்த காலத்தை அசைபோட்டபடி அசையாமல் அமர்ந்திருக்கும் முதியவரின் சிற்பம், கண்ணாடிகளின் பரப்பில் வரையப்பட்ட இனம்புரியாத இதமளிக்கும் "அக்ரலிக்' தெளிப்புகள்.... என, கண்காட்சியில் ஒருமுகமானவர்களின் பல முகங்கள் வெளிப்பட்டிருந்தன."

  • முதல் நூறு நாள்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கியச் சாதனைகளாக நீங்கள் கருதுவது? : "பல்லாண்டு கோரிக்கையான தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் தர முடிவு செய்தது; சென்னைக் குடிநீர்த் திட்டத்துக்கு 1000 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது; சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியிருப்பது ஆகிவற்றை முக்கியமான சாதனைகளாகக் கருதுகிறேன். தவிர, மணிப்பூர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் முதலில் வேறுமாதிரித் தோன்றினாலும் இறுதியில் சுமூகமாக முடித்திருக்கிறது. அங்கு காங்கிரஸ் அரசு இருந்தும், விட்டுக்கொடுக்காமல் தேசத்தின் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதி மத்திய அரசு செயல்பட்டிருப்பதும் கவனத்திற்குரியது. பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தவும் பெருமுயற்சி எடுத்து வருகிறது. இவற்றுடன் ஈராக்கிலிருந்து இந்தியப் பிணைக் கைதிகளை மீட்டதை சமீபத்திய சாதனையாகக் கருதுகிறேன்."

  • நூல் அரங்கம்: டி.கே.சி. ராமாயணம் : "கம்பனின் காவியத்தில் மூழ்கி முக்குளித்தவர் ரசிகமணி. கம்பன் பாடல்களில் பெரும்பகுதியை இடைச்செருகல் என்று நிர்தாட்சண்யமாக நிராகரித்தவர். அவர் செருகுகவிகள் என்று நிராகரித்ததும், திருத்தங்கள் செய்ததும் தமிழறிஞர்கள் பலருக்கும் உடன்பாடில்லாத போதிலும், கம்பன் எழுதிய உண்மையான பாடல்கள் என்று டி.கே.சி. எடுத்துச் சொன்னவை கம்பனின் மிக மேலான பாடல்கள் என்பதை ஒப்புக்கொள்வர். இந்த முரண்பாடுகளை மறந்துவிட்டு, கம்பனின் பத்தாயிரம் பாடல்களையும் படிக்க அவகாசமில்லாதவர்கள், அவனது சிறந்த பாடல்களைப் படிப்பதற்கு இந்நூல் பெரும் துணையாக அமையும்."

  • புதுக்கவிதை வரலாறு - ராஜமார்த்தாண்டன் : "தமிழகப் புதுக்கவிதை வரலாற்றோடு நின்றுவிடாமல், ஈழத்துப் புதிய கவிதைகளின் வரலாற்றுத் தகவல்களும் தரப்பட்டுள்ளன."

  • புதிய கோணங்கள் - ஆர்.வெங்கடேஷ் : "இந்தப் பலன்களில் தான் என்ன தேடுகிறோம் என்றும் ஒருமுறை யோசித்திருக்கிறான் கல்யாண். ஒன்றுமில்லை. அன்று நாள் நன்றாக இருக்கும் என்று உற்சாகம் தந்துவிட்டால் போதும். அதைவிட, பார்ப்பதற்கு முன் உள்மனத்தில் வேறொரு பயம் அலைக்கழிக்கும். அன்று நாள் நல்லபடியாக இருக்கவேண்டுமே."

  • கல்கி வளர்த்த சிரிப்பலைகள் - சுஜாதா: "ஒரு கருத்தை மற்றொரு கருத்தோடு முரண்பட வைத்து (Conflict), அதன் மூலம் எதிர்பாராத ஒரு சந்தோஷத்தை - பரவசத்தைக் கொடுப்பது. (அப்பரவசம் திடீரென்று ஒரு Explosion போல் வரவேண்டும்) முடிந்தால், நம் சிந்தனைத் திறனையும் உயர்த்துவது. மிக உயர்ந்த நகைச்சுவை, நம் சிந்தனையை - சமூகத்தை உயர்த்தும் நோக்கிலே அமைய வேண்டும். இன்னொரு விஷயம் - இருவேறு கருத்துக்களையும் தனித்தனியா பார்த்தால் நகைச்சுவை இருக்காது, இருக்கக்கூடாது என்றே சொல்லாம்."

  • மரபின் தாக்கமும் நவீன ஆக்கமும் - ஞானக்கூத்தன் கவிதைகள்: ஒரு விரிவான பார்வை : சிபிச்செல்வன்

1 கருத்துகள்:

சின்னக் குத்தூசியின் கட்டுரை தகவல்கள் நிரம்பிய சுவரஸ்யமான ஒன்று. நன்றி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு