வெள்ளி, அக்டோபர் 22, 2004

மீண்டும் புஷ் ஜனாதிபதியாக சில அமெரிக்க காரணங்கள்


  • சம்பாதிக்கும் ஒவ்வொரு அமெரிக்கருடைய வருமான வரிவிதிப்பையும் குறைத்திருக்கிறார்.

  • வேலை கிடைக்காமல் தவிப்போருக்குக் கிடைக்கும் பஞ்சப்படிக்கான காலத்தை அதிகப்படுத்தியிருக்கிறார்.

  • தேசிய பாதுகாப்பை சல்லிசாக எடைபோடாமல், படு சீரியஸான விஷயமாகக் கருதுகிறார்.

  • எதிராளியை கெர்ரி நன்கு குற்றஞ்சாட்டுகிறார். ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசுவது எவராலும் முடிந்த காரியம்.

  • அமெரிக்கா தன்னை வலிமையான நாடாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறது. 91-இல் நடந்த குவைத்துக்கு ஆதரவான மீட்புப்போராட்டத்துக்கே ஆதரவாக வாக்களிக்காத கெர்ரியை, தற்காலத்தில் தேர்தெடுக்க விரும்பாது.

  • இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்.

  • மோசமான பள்ளிக்கூடங்களில் படிப்பவர்களை முன்னுக்குக் கொண்டுவரப்போகும் No Child Left Behind திட்டத்தை சட்டமாக்கியவர்.

  • அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்பதை முன்னிறுத்தி, செயல்படுத்தியும் இருக்கிறார்.

  • வெட்டு ஒன்றில் துண்டு இரண்டாக்கும் கராத்தே மாஸ்டர் ஹூஸேனி போல், தன்னுடைய நம்பிக்கைகளை, வெளிப்படையாக 'ஆம்/இல்லை' என்று போட்டுடைப்பவர். நோ வழவழா... கொழ கொழா.

  • கடவுளுக்குப் பயப்படுபவர்.

  • கன்னாபின்னா விலை கொடுத்து மருந்து வாங்க வசதியில்லாத முதியவர்களுக்கும், விலையுயர்ந்த மாத்திரைகளை எட்டச் செய்தது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு