திங்கள், நவம்பர் 29, 2004

அங்கும் எங்கும்

தேங்க்ஸ் கொடுக்கல்-வாங்கல தினம்
சாதாரண அமெரிக்கர்களைப் பொறுத்தவரை நன்றி வழங்குதல் தினம் -- நான்கு நாள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கிறது.

சின்ன வயதில் பொங்கல் என்றால் நாலு நாள் விடுமுறை, சர்க்கரைப் பொங்கல், கணுப்பொடி வைத்தல், பொங்கல் கட்டுரை எழுதுதல் என்பேன். (இன்றும் அதே நிலைதான்.)

தேங்க்ஸ்கிவிங் என்றால் வான்கோழி பிடித்து ஓவனில் சமைத்தல், தொட்டுக்க க்ரான்பெர்ரி ஜெல்லி சாஸ், கொஞ்சம் அசட்டு தித்திப்போடு சாம்பார், உருளைக்கிழங்கும் இன்ன பிறவும் போட்ட கறி -- இதுதான் சமையல்.

வான்கோழியை அதிகம் வேக வைக்க கூடாது. குறைந்து வெந்திருந்தாலும் விஷமாகிப் போகும். பார்த்து டைமர் வைத்து விசிலடித்தவுடன் அடுப்பை அணைப்பது முக்கியம். ஃபில்லிங் எனப்படும் மொறு மொறு கறியை கோழி முதல் உருளை வரை வறுத்து செய்யலாம்.

நண்பர்களையும் உறவினர்களையும் வியாழன் இரவு விருந்துக்கு அழைக்கிறார்கள். அந்தக்காலத்தில் அறுவடை நடந்திருக்கும். தோட்டத்தில் விளைந்த சர்க்கரைப் பூசணிக்காயை கேக்குக்குள் அடைத்து, ஒரு வருடமாக வளர்த்த வான்கோழியை வெட்டி சமைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள்.

முன்னும் ஒரு காலத்தில் இக்கால அமெரிக்கர்களை வரவேற்ற, ஐ.எஸ்.ஐ. அமெரிக்கர்களான செவ்விந்தியர்களுக்கு நன்றி வழங்குதலாக தொடங்கியது. இன்று யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமோ உணவு உண்பதற்கு முன் நவில்கிறார்கள்.

நிறைய அமெரிக்கப் ஃபுட்பால், வியாழனின் மிச்சம் மீதியை திங்கள் மதியம் மட்டும் வெட்டுதல், உள்ளூர் கலாச்சாரத்தை தெப்பத் திருவிழாவாக தரையில் காட்டும் அணிவகுப்புகள், நத்தார் தின சாண்டா பரிசு வழங்கலுக்கான ஷாப்பிங், என அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. • "காதல் தீவிரவாதி
  என்னை நீ கைது செய்
  ஆயுள் தண்டனை ஒன்று
  உன் நெஞ்சில் வாங்கி வை
  "
  என்னும் 'சத்ரபதி' படத்தின் பாடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது. எஸ்.ஏ ராஜ்குமாரின் ஒரு படத்தில் ஒரு ஹிட் என்னும் ஃபார்முலா சரிதான். பாடியவர்கள் யார் என்று சொன்னால் தன்யனாவேன்.
  பாடலைக் கேட்க: Music India OnLine - Chatrapathy (2004)

 • All About Blogger Internationalization: தமிழில் எப்பங்க வரப்போகுது?

 • தள்ளுபடி: சிறுகதை என்றால் 'சொன்ன விதத்தில்' ஏமாற்றம்.

 • இந்தியா டுடேயின் மதிப்பீட்டின் படி தயாநிதி மாறன் ஏழாவது ரேங்கைப் பிடித்திருக்கிறார். அஞ்சல் நிலையங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சீரமைத்தலையும் பி.எஸ்.என்.எல் - எம்.டி.என்.எல் இணைப்பையும் பாராட்டியிருக்கிறது. மத்திய அமைச்சரவை அமைத்தவுடன் பத்ரி அலசல் கொடுத்தது போல், மீண்டும் ஒரு ரிப்போர்ட் கார்ட் கொடுக்கலாம். (பத்ரியின் வலைப்பதிவில் எப்படி தேடுவது? கூகிள் தேடலும் முடியவில்லை; எல்லோருடைய ப்ளாக்ஸ்பாட் பதிவுகளிலும் வரும் ஒட்டுத் தேடல் பெட்டியும் காணவில்லை!)

 • உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இன்றைய பதிவு: தூக்குமரத்தின் நிழலிலிருந்து நாம் கற்கும் பாடம்.

 • 0 கருத்துகள்:

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு