எனக்கு வயசாயிடுச்சு போல?
(இது காதல் படத்திற்கான குறிப்புகள். படித்துவிட்டு படம் பார்த்தால், படம் சுவைக்காது போகுமளவு நட், போல்ட் தகவல்கள் இருப்பதால், க்ளைமாக்ஸ் அறியாமல் பார்க்க விரும்புபவர்கள் தவிர்க்கலாம்!)
Anandhavikatan.com
ஒரு படத்தைக் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட விமர்சனங்கள் படிக்கக் கூடாது. அப்படி படித்துவிட்டால், விமர்சனங்கள் நன்கு செரித்தபிறகே படத்தைப் பார்க்க வேண்டும். உடனடியாக படம் பார்ப்பதால், மீனாக்ஸ், பிரசன்னா, ராசா, விகடன், குமுதம் என்று அனைவரின் பார்வையிலும் படம் தென்படும். ஏதோ பார்த்த படத்தையே மீண்டும் பார்க்கும் உணர்வு உண்டாகும். இந்த இமாலயத் தவறை 'காதலு'க்கு செய்தேன்.
விமர்சனம் படித்துவிட்டு பார்ப்பதாவது தேவலை. சன் டிவி திரை விமர்சனம், டாப் 10, திரைவானம், சூப்பர் சீன்ஸ் என்று எல்லாவற்றிலும் போடும் உருப்படியான காட்சிகளை டிவோ-விலோ, டி.வீ.ஆரிலோ பதிந்து தரிசித்து விட்டு, பாட்டுக்களையும் நீங்கள் கேட்ட பாடல், சூப்பர் 10, ஆடலும் பாடலும், பஜாஜ் உங்கள் சாய்ஸ் பார்த்து விட்டு, சுஜாதாவே சொல்லியிருக்காரே என்று ஏக எதிர்பார்ப்புடன் படம் பார்க்க உட்கார்வது இரண்டாவது கஞ்சன்ஞங்கா தவறு.
முடிவு ஏற்கனவே ஓரளவு தெரிந்ததால் அதிர்ச்சியும் இல்லை; அதிர்வும் இல்லை. அந்த மாதிரி தெருவோர கிராக்கிகளை நிறையப் பார்த்திருக்கிறேன். குப்பை பொறுக்கிக் கொண்டு, தானே பேசிக் கொண்டு, சடாமுடி தாடியுடன், பயமாக இருக்கும். அந்த கெட்டப்பில் பழைய காதலனை கண்டுபிடிப்பது எல்லாம் too much ஆக தோன்றியது.
காதலனை ஏமாற்றியதற்கு பிராயசித்தம் தேடும் காதலி, ஏதோ ஒரு மனநலம் குன்றியவனை, கணவரைக் கொண்டு தத்தெடுக்க வைப்பதே கதை.
இதற்கு 'மதுர' முலாம் அழகாகத்தான் இருக்கிறது. கூடப் படிக்கும் பயப்படுகிற பிராமணத் தோழி, ஒரு கை மட்டுமே உள்ள நைச்சியமான சித்தப்பா, சீரியலில் திளைக்கும் திண்டி போத்தி தடி அம்மாக்கள், என்று adjective filled எழுத்தாளர் போல், பழைய காரெக்டரைஸேஷன்களுக்கு நிறைய எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளரின் நுணுக்க உணர்வு இயக்குநருக்கும் இருக்கிறது.
ஒரே பாடலில் தொழிலதிபராகவோ அகில உலக புகழ்பெற்ற பாடகியாகவோ ஆக்கப்பெறும் விக்கிரமன் படத்தின் சாயல்களுடன் -- சந்தோஷ தனிக்குடித்தன வைபவம் இங்கும் உண்டு. இயல்பு நடைமுறை இங்கு என் மனதை தொட்டது.
ஹார்ன் அடித்தே பள்ளிக்கூடத்தில் இருந்து ஒருத்தியே ஒருத்தியை மட்டும் சங்கேத பாஷையில் கூப்பிட்டு அழைத்து ஃபர்லாங் தூரத்துக்குப் பேசுவது, பெற்றோரை இடுப்பில் முடிந்து கொண்டே லவ்வுவது, அர்த்த ராத்திரியில் பைத்தியத்தை குடும்பப் பாட்டு பாடாமலேயே அடையாளம் காண்பது என்று யதார்த்தம்... யதார்த்தம்... யதார்த்தம்...
கேர்ஃப்ரீ-இன் product positioning, மிண்டோ ஃப்ரெஷ் விளம்பரத்தை நியாயப்படுத்தல், குறைந்த செலவில் நிறைவான இரவை சென்னையில் கழிப்பது எப்படி போன்ற பாடங்கள் என்று பொதிந்திருக்கும் விஷயங்கள் ஏராளம்.
படத்தில் நிறைய ஸென் போன்ற தத்துவங்களும் உண்டு. ஓடிப் போனால், காதலியின் வீட்டில் இருந்து முடிந்தவரை 'எடுத்துக் கொண்டு' வரச் சொல்ல வேண்டும். தளுக் புளுக் என்று இருந்தால் ஹீரோவின் லுக் கிடைக்கும். நீங்கள் சைட் அடிக்கும் மேற்கண்ட குஷ்பூ தோற்றம் உடையவரிடம் கடிந்து பேசினால்தான் காதல் கனியும். 'மானே தேனே' வேலைக்கு ஆகாது. பெற்றோர் தொலைக்காட்சி நெடுந்தொடரில் ஆழ்ந்து போனால், பொண்ணு ஓடிப் போவாள்.
திரைப்படம் வெகு வேகமாக செல்கிறது. கனல் கண்ணனின் விநோத அடிதடிகள் கிடையாது. பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது.
அமெரிக்க பாஷையில் சொல்வதானால 'ரொமாண்டிக் காமெடி'.
கோலிவுட் பாஷையில் வெற்றிகரமான காதல் படம் -- தொடர்ந்து
என்று தொடர்ந்து அடுத்த இரண்டு வருடங்களுக்கு திருட்டு விசிடிப் பிரியர்களை காதல் பாயைப் பிராண்ட வைக்கும்.
//எனக்கு வயசாயிடுச்சு போல? //
எனக்கு வாயசாயும் டச்சு போகல? :)
சொன்னது… 1/10/2005 01:48:00 PM
அது யாருய்யா டச்சு? தனலஷ்மியா? டாட் ஸுவா?
சொன்னது… 1/10/2005 02:02:00 PM
இன்னா பெர்சு, ரொம்ப பீலிங்ஸா?! :-))
சொன்னது… 1/10/2005 02:38:00 PM
பழைய நெனப்புதான் பேராண்டீ... பழய நெனப்புதான் :P
சொன்னது… 1/10/2005 09:29:00 PM
கருத்துரையிடுக