புதன், ஜனவரி 12, 2005

பழைய - கொந்தி - புத்தகம் - கொலை

Manikandan's web page'நல்ல தம்பி'யை சிறு குறிப்பிட்டவர் ஸ்பஷ்டமாக தமிழ் பேசுகிறார். இந்தக் காலத்தில் பழைய படங்களை பேசுபவர்கள் அரிது. அவர்கள் தமிழர்களாக இருப்பது அதனினும் அரிது. அவர்கள் இளைஞியாக இருப்பது அதனினும் அரிது. அவர்கள் சன் டிவியில் வருவது மிக மிக அரிது. அவர்கள் தெள்ளு தமிழில் உரையாடல் எல்லாவற்றையும் விட அரிதுதானே? (படம் : உதவி)


Jax's Book Shelf-ஐ பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. சென்ற வருடத்தில் இவ்வளவு புத்தகங்களைப் படித்து, அவற்றிற்கு குட்டி குட்டி குறிப்பும் கொடுத்திருக்கிறார். ஆங்கில புத்தகம் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் ஒரு நடை போய் வரலாம்.

TAT TVAM ASI (a.k.a) THE ULTIMATE REALITY'நான் பொறுக்கி இல்ல... பழம்' என்று டயலாக் விடாமல் விஷுவல் காட்டியிருக்கிறார். தொடர்ந்து வரும் பொன்மொழியை மணமுடிக்கப் போகும் மேள்-கைண்டுக்கு அர்ப்பணிக்கலாம்.


'காதல் திருமணத்துக்கும் வீட்டில் பார்த்து மணமுடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
தற்கொலைக்கும் கொலைக்கும் உள்ள வித்தியாசம்தான்...'

Privoxy, Tor: An anonymous Internet communication system என்று இரண்டு புதிய நிரலிகளை இன்றுதான் பார்த்தேன். கொந்தி போடுபவர்களுக்கு மட்டுமல்லாமல், எனக்கும் 'ப்ரைவாக்ஸி' பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. மூகமூடிகளுக்கு (மட்டும்) 'டோர்' உபயோகப்படலாம். இனிமேல்தான் விளையாடிப் பார்க்க வேண்டும்.

BugMeNot.com - Bypass Compulsory Web Registration மிகவும் முக்கியமான அமைப்பு. விகடன் ஆரம்பித்து மியாமி ஹெரால்ட் வரை எங்கு பார்த்தாலும் உன் மின்மடலைச் சொல், செல்லப்பிராணி பெயரை சொல், வயசுக்கு வந்துட்டியா, எத்தனை வீடு இருக்கிறது என்று நொரநாட்டியம் செய்வதை பை-பாஸ் செய்ய வழி கொடுக்கிறார்கள். (மார்க்கம்: TriNetre - The Third Eye)

2 கருத்துகள்:

பாபா வாழ்க. bugmenot சூப்பர்.

(இந்த ஆளுகிட்ட கொஞ்சம் விவரமா இருக்கணும்ப்பா)

வெவரம் இருந்தா கொடுங்க காசி... இன்னிக்கு போஸ்டுக்கு உபயோகப் படுத்திப்பேன் ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு