சுண்டக்கா முக்கா பணம்
Kamadenu.com
ரொம்ப நாளாச்சே புத்தகம் புரட்டி என்று காமதேனு.காம் தளத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் நப்பாசைபட்டு சில புத்தகங்களை கூடையில் போட்டும் வைத்தேன்.
மொத்தம் 758 ரூபாய்தான். ஜரூராக செக்-அவுட் செய்யும்போதுதான் சுமகூலி (தபால் செலவு) 760 ரூபாய் காட்டியது. அடுத்த முறை இந்தியா செல்லும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று நிர்க்கதியாய் கூடையை விட்டுவிட்டேன்.
காமதேனு.காம் அருமையாக இருக்கிறது. தமிழினி, யுனைட்டடு ரைட்டர்ஸ், காலச்சுவடு என்று பதிப்பாளர்களைக் கொண்டு மேயலாம். எழுத்தாளர்களைக் கொண்டும் தேடலாம்.
இணையத்தளத்தில் பதிவு செய்தவர்கள் புத்தகங்களைக் குறித்து இரண்டு வரி எழுத வசதி செய்யலாம். அமேஸான் போல் விஷ் லிஸ்ட் என்று இன்ன பிறவும் செய்யலாம். ஆனால், ஷிப்பிங் & ஹாண்ட்லிங்கை இன்னும் குறைக்க ஏதாவது வழி இருக்கிறதா!
//அடுத்த முறை இந்தியா செல்லும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று நிர்க்கதியாய் கூடையை விட்டுவிட்டேன்.//
இதுதான் ஷாப்பிங் கார்ட்டுகளில் உள்ள வசதி. மணிக்கணக்கில் தேடி எடுத்து கூடையில் போட்டு விட்டு, பின் வேண்டாம் என்றால் டகால் என்று லாக் அவுட் செய்துவிடலாம். ஆனால், புக்லாண்ட்ஸில் பில் போடும் நேரத்தில் இது போல செய்தால், அடுத்த முறை போகும் போது, சீனிவாசன், மோர் தந்து உபசரிக்க மாட்டார் :-).
[அப்புறம் என் ப்ளாக்லே ஏதோ மேட்டர் கேட்டீங்க இல்லை ?. டைப் பண்ணி, தனி மடல்லே அனுப்பி வைக்கிறேன்,]
சொன்னது… 1/20/2005 02:11:00 PM
கடந்த 2 பதிவுகளும் நன்றாக இருந்தது. (கூறுகளும் கதைகளும், கருத்துகளு, அமெரிக்கா அடுக்கங்களும் ) :)
சொன்னது… 1/20/2005 07:20:00 PM
இதேக் கேள்வியைத்தான் பத்ரிக்கு அனுப்பி வைத்தேன். (Wish list) பத்ரிப் பார்ப்பதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
சொன்னது… 1/21/2005 04:51:00 AM
ஐகாரஸ் - என்னுடைய முன்கூட்டிய நன்றிகள் :-D
புக்லாண்ட்ஸ் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், வேலைக்கு சேர்ந்த புதிதில், என்றெல்லாம் அண்டர்கிரவுண்ட்/நைட் வாட்ச்மேன் செல்லவில்லையோ, அன்றெல்லாம் பெங்களூர் கங்காராம்ஸ் சென்று புத்தகங்களையும் கணினி சம்பந்தமான மேகஸின்களையும் அங்கேயே படித்துவிட்டு வந்துவிடுவேன்.
இங்கிருக்கும் கடைகள் போல் இல்லாமல், உட்கார நாற்காலி எதுவும் இருக்காது. நின்று கொண்டே எம்.எஸ்.ஜே., டி.டி.ஜே. என்று தினமும் படிப்பதால், எங்களைக் கண்டாலே, 'சார்... நீங்க போயிட்டு வாங்க' என்று மரியாதையாக வழியனுப்பும் அளவு உபசரிப்பு கிடைத்தது.
நன்றி கார்த்திக்கு!
அனைவருக்கும் தெரியும்படியான விழைப் பட்டியல் ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும். கண்ணாலம் கட்டிக்கும் கேவியார் தன்னுடைய விஷ் லிஸ்ட்டை ஏற்படுத்தி விட்டால், அன்பளிப்பு கொடுக்க விரும்பும் மரத்தடி, வலை நண்பர்கள் அனைவரும் சென்று ஒவ்வொரு புத்தகமாக கொடுத்து விடலாம் ;-))
நாராய்ணை வழிமொழிகிறேன்.
சொன்னது… 1/21/2005 06:29:00 AM
கருத்துரையிடுக