செவ்வாய், மார்ச் 15, 2005

சந்தேகம் (2)

நேற்று பக்கத்து வீட்டு தெலுங்கு நண்பர் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் விழித்தேன். இன்னும் கூகிளின் உதவியை நாடவில்லை. திண்ணை போன்ற தளங்களையும் இனிதான் பார்க்க வேண்டும். இண்டாலஜி போன்ற யாஹு குழுமங்களையும் அலசவில்லை.

'ஆந்திரா, கர்னாடகா, தமிழ்நாடு, கேரளா எல்லாம் பக்கத்து பக்கத்து மாநிலங்கள். ஆனால், தமிழுக்கும் மலையாளத்துக்கும் வரிவடிவில் ஒற்றுமை நிறைய. தெலுங்கு படிக்கத் தெரிந்தால், அர்த்தம் புரியாவிட்டாலும் கன்னடம் படித்துவிடலாம். ஏன் இப்படி? எவ்வாறு இப்படி ஆகிப் போனது? எது ஆதி மொழி? எந்த மொழியில் இருந்து, எப்படி இவ்வாறு கிளைகள் முளைத்தது?'

நான் நிறைய முழித்துவிட்டு, 'தமிழ்'தான் என்று சொல்ல நினைத்தேன். எனினும் லிங்விஸ்ட், மொழி ஆராய்ச்சி எல்லாம் படித்துவிட்டு மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினேன். தொடர்புள்ள சுட்டிகள் கொடுப்பவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு