புதன், மார்ச் 23, 2005

காலச்சுவடு - மார்ச் 2005

கோகுலக்கண்ணன் கவிதைகள்

மதிப்புரை: ஷோபா சக்தியின் 'ம்' : ஷோபா சக்தியின் இந்நாவல் வாசகனை வெறுமனே மெüனத்தில் ஆழ்த்திவிடாமல், வரலாற்றின் முன் அவன் தன்னையே ஒரு கேலிச் சித்திரமாக உணரவைக்கிறது. இதன் காரணமாகவே தீவிர வாசிப்புக்கும் நுட்பமான ஆய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக விளங்குகிறது 'ம்'.

அவுஷ்விட்ஸின் அறுபது ஆண்டுகள் - திவாகர் ரங்கநாதன் : இனவெறியையும் அதிகாரத்தையும் குறித்த ஒரு பயங்கர எச்சரிக்கையாக வரலாற்றில் ஒரு பெரும் பரப்பைப் பிடித்துக்கொண்டிருக்கிறது அவுஷ்விட்ஸ் முகாமில் நடந்த யூத இன அழிப்பு.

சிறுகதை: வெளிப்பாடு - அரவிந்தன் : காத்திருந்து காத்திருந்து, தவமிருந்து, திட்டமிட்டு, உடல் தேடி, உடல் அடைந்து, இருள் கூட்டி, உடலின் சுருதி கூட்டி, இசையின் லயமும் நடனத்தின் அசைவொழுங்கும் கூடிய இயக்கத்தின் மத்தியில் பேரிடியாய் ஊடுருவி இயக்கத்தின் ஆதார மையத்தைப் பொசுக்கி வீழ்த்திவிடும் ஓசைகள்.

விவாதம்: சிங்கப்பூர்: மறுபக்கம் : பல்வேறு புறக்காரணிகள் வாழ்க்கையை இறுக்கிக்கொண்டிருக்கிற சிங்கப்பூர்ச் சூழலில், இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கிறதா அல்லது மெல்ல மெல்ல இறக்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.

விவாதம்: தலையைத் திருகி : சாமி சிலையைத் தலையைத் திருகியெடுத்துப் புதையல் எடுக்க முயன்று புத்தர் சிலையை உடைத்த வரலாறுதான் நாம் காணும் தலை உடைந்த புத்தர் சிலைகள்.

உ.வே.சா.வை நினைவுகூரல் : உ.வே.சாவிற்கு யோக ஜாதகமில்லை போலும். தமிழ்த் தாத்தாவிற்கு ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று ஆறு ஏழு ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் - பா.ஜ.க. - காங்கிரஸ் என எல்லா அரசுகளுக்கும் எழுதி எழுதி ஓய்ந்துபோயாகிவிட்டது.

விவாதம்: பாசிச அறிக்கை : 13.11.2004 அன்று மதுரையில் தலித் இதழியல் வரலாற்று அரங்கில் வெளியிடப்பட்ட தலித் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை நவீனத் தீண்டாமைக்கு எதிராக என்னும் தலைப்பில் காலச்சுவடு டிச. 2004 இதழில் வந்திருந்தது. அவ்வறிக்கை இரண்டு தளங்களைத் தனது தாக்குதலுக்கு எடுத்துக்கொண்டுள்ளது...

விவாதம்: பசுமைப் புரட்சியின் உண்மையான முகம் : 1950-60 காலப்பகுதியில் ஓர் ஏக்கரில் இரசாயன உரங்கள் ஏதும் பயன்படுத்தாமல் 1400-1500 கிலோ நெல் மகசூல் எடுத்தவர்கள் இன்னும் சிலர் உயிரோடு இருக்கிறார்கள்.

உரைநடை உ.வே.சா.: உதிராத மலர்கள் - ஆ.இரா. வேங்கடாசலபதி : இரயிலறியாத காலம் முதல் விமானத் தாக்குதல் சாதாரணப் போர் நடவடிக்கையாக மாறிவிட்ட காலம் வரை ஒரு நெடுங்காலத்தை உ.வே.சா. நேராகப் பார்த்தறிந்தார். பத்தொன்பது, இருபது என இரண்டு நூற்றாண்டுகளின் செம்பாகமும் அவருடைய வாழ்வோடு ஒட்டி அமைந்திருந்தது.

தலையங்கம்: தமிழ்க் காதல் : பெரியாரியம் பேசும், மத அடிப்படைவாதத்தை எதிர்க்கும் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத் தலைப்பு வைப்பதை எதிர்த்துப் போராடிவரும் இந்தக் கட்சி, இப்போது காதலர் தினத்தைக் குறிவைத்திருக்கிறது.

புரட்சி உருவாகிறது : பெண்களின் முக்கியமான எழுத்துகள் வெளிவரத் தொடங்கும்போதெல்லாம் ஏதோ ஒரு விதமான புரட்சி ஏற்படத் தொடங்குகிறது. இந்தத் தருணத்தில் தமிழில் இதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

கேரள சாகித்திய அக்காதெமி விருது :: அங்கீகாரத்தின் தொலைவு - சுகுமாரன் : சாகித்திய அக்காதெமி விருது அறிவிப்பிற்குப் பின்னர் எல்லா மொழிகளிலும் போல மலையாளத்திலும் சர்ச்சையை எழுப்புவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் அறிக்கைகள் மூலம் சிறிது காலத்துக்கு ஒரு விவாதப்படலம் அலைந்துகொண்டிருக்கும்...

ஊசியைத் தேடுங்கள் : இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு எழுத்துச் சூழலில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்களில் ஒருவர் ஆலேன் (1868-1951). அதிகாரச் சக்திகளை மறுத்து, ஏற்கனவே நிலவிவந்த கோட்பாடுகளுக்கு அடிமையாகாமல் தனித்துச் சிந்திப்பதில் சிறந்து விளங்கினார் இந்தப் பேராசிரியர்.

உ.வே.சா.வும் நாட்டார் வழக்காறுகளும் : சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் எனப் பல தரப்பட்ட செவ்விலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. தாம் பதிப்பிக்கும் நூல்களில் இடம்பெறும் அரிய சொற்களின் பொருளை அறிந்துகொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டவர்.

சிபிச்செல்வன் கவிதைகள்

உ.வே.சா: ஒரு சனாதனியின் நவீனத்துவம் : சைவத் தமிழ் நூல்களைத் தவிர வேறு தமிழ் நூல்களை உயர்வான நூல்களாகக் கருதாத சைவப் பற்றுக் கொண்ட ஆசிரியர், சைவ மட ஆதீனகர்த்தர் ஆகியோரோடு நெருங்கிப் பழகிய உ.வே.சா.வுக்கு இத்தகைய ஆய்வுச் சிந்தனை இருந்தது என்பதே பிற்காலத்தில் அவர் தமிழ்த் தாத்தா ஆக்கப்பட்டதற்கான காரணம்.

உ.வே.சா.வும் பதிப்பு நெறிகளும் : 1887ஆம் ஆண்டு வெளியான சீவக சிந்தாமணி ஐந்நூறு பிரதிகள் அச்சிடப்பட்டன. அவற்றுள் நூறு பிரதிகள் அச்சகத்தாரின் கவனக் குறைவால் வீணாகிவிட்டன. மீதம் நானூறு பிரதிகள் மட்டும் விநியோகிக்கப்பட்டன. மிகப் பெரும் பதிப்பு நிகழ்வு நானூறு பிரதிகளாகத்தான் தமிழகத்தில் உலவியிருக்கிறது.

அசோகமித்திரன் - 50: வாழ்விலே முதல் முறை : 'கடவு' இலக்கிய அமைப்பும் 'கிழக்கு' பதிப்பகமும் இணைந்து நடத்திய 'அசோகமித்திரன் - 50' என்னும் நிகழ்ச்சி குறித்த பதிவுகள்.

முகுந்த் நாகராஜன்: நிராசையின் வலி : அகி என்னும் முதல் தொகுப்பின் மூலம் கவிதை வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்த இளம்கவிஞர் முகுந்த் நாகராஜன். வாழ்க்கைத் தளத்தில் தினம்தினமும் காணவும் உணரவும் நேரும் சின்னச்சின்ன சித்திரங்களை இயற்கையான நிறங்களுடன் தீட்டிக் காட்டுகின்றன இக்கவிதைகள்.

தாமோதரம் பிள்ளையும் சாமிநாதையரும் - எம்.ஏ. நுஃமான் : தன் இறுதிக் காலத்தில் சாமிநாதையர் எழுதிய சுயசரிதையில் தாமோதரம் பிள்ளையின் பதிப்பு முயற்சிகள் பற்றிய சில தகவல்களைக் குறிப்பிட்டுள்ளாரே அன்றி, அவரது பதிப்புத் துறை மேன்மை, அதன் முக்கியத்துவம் என்பன பற்றி சாதகமாக எதுவுமே குறிப்பிடவில்லை.

உ.வே. சாமிநாதையர்: பன்முக ஆளுமையின் பேருருவம் : நூலுக்கு நல்ல ஆராய்ச்சி, முன்னுரை, ஆசிரியர் கால ஆராய்ச்சி, நூல் பேசும் பொருள் பற்றிய ஆராய்ச்சி போன்றவை இடம்பெற வேண்டும். பாடல் மேற்கோள் அகராதி, அருஞ்சொற்பொருள் அகராதி என்று பலவும் அமைய வேண்டும். இந்த நுட்பங்களை ஆங்கிலம் கற்காமல் தாமாகவே உணர்ந்து உருவாக்கியவர் உ.வே.சா.

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

இயற்கையியலாளர் மா. கிருஷ்ணன் கடிதங்கள் : என் துப்பறியும் நவீனத்தை நுட்பமாக மனத்துள் ஆராய்ந்து உருவாக்கிவிட்டேன். 110 பக்கங்கள் (இதுபோன்ற கையெழுத்துப் பக்கங்கள்) எழுதியாய்விட்டது. இன்னும் 20 பக்கங்களுள், 25க்குள் முடிந்துவிடும். அச்சில் சுமார் 75 பக்கங்கள்தானிருக்கும்.

நீரோட்டம் : தமிழ் வாசிப்பு எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்றால், இன்றே குழந்தைகளைத் தமிழ் வாசிக்கச் செய்ய வேண்டும். இன்றைய குழந்தைகளும் இளையர்களும் விரும்பி வாசிக்கத்தக்க நூல்களை எழுத வேண்டும், பதிப்பிக்க வேண்டும்.

பின்கட்டிலிருந்த சொற்கள் : இதற்கு முன் தமிழில் பெண்கள் எழுதியிருந்தாலும் அநேகமாக அவை பொதுமன வெளிப்பாடே. பொதுமன வெளிப்பாடாக இருந்ததால்தான் "பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டாயின் எத்தாலும் கூடியிருக்கலாம், சற்றேனும் ஏறுமாறாயிருப்பின் கூறாமல் சந்நியாசம் கொள்" என்று பெண்ணே எழுதியது.

கோணங்கள்: புலம்பலுக்கு முடிவு கட்டுவோம் - கண்ணன் : கன்னட நாவலான 'பர்வா'வை மொழிபெயர்த்தமைக்காக பாவண்ணனுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. இப்பரிசு பெறப் பாவண்ணன் தகுதியானவர் என்பதால் சாகித்திய அகாதெமியின் இம்முடிவை திறந்த மனத்துடன் வரவேற்கலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு