வியாழன், மார்ச் 03, 2005

ஒன்றுதான்

பாடகர்: டி.எம்.எஸ்.

இரவு வரும்
பகலும் வரும்
உலகம் ஒன்றுதான்

உறவு வரும்
பகையும் வரும்
இதயம் ஒன்றுதான்
---

பெருமை வரும்
சிறுமை வரும்
பிறவி ஒன்றுதான்

வறுமை வரும்
செழுமை வரும்
வாழ்க்கை ஒன்றுதான்
---

இளமை வரும்
முதுமை வரும்
உடலும் ஒன்றுதான்

தனிமை வரும்
துணையும் வரும்
பயணம் ஒன்றுதான்
---

விழியிரண்டு இருந்தபோதும்
பார்வை ஒன்றுதான்

வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்றுதான்
---

(பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் தெரியவில்லை. இடஞ்சுட்டுபவருக்கு என்னுடைய நன்றி)

8 கருத்துகள்:

இந்தப் பாடல் இடம் பெரும் படத்தின் பெயர் "இரவும் பகலும்" என நினைக்கிறேன். ஜெய்சங்கர் நடித்த படம் என ஞாபகம்.

http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4506/year.4/

கூகிள் செய்யாமல் விட்டு விட்டேனே! நன்றி பெயரிலி....

உங்க பெயர் நல்லா இருக்குங்க டுபாக்கூர் ;-)

அது இரவும் பகலும் படம்தான். 1965-ல் பொங்கல் அன்று திரையிடப்பட்டது. ஜெயசங்கர், வசந்தா, நாகேஷ், காந்திமதி ஆகியோர் நடித்தது. ஜெயசங்கரின் முதல் படம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நன்றி டோண்டு. பெயரிலியும் கொஞ்சம் விரிவாக இங்கு எழுதியுள்ளார்: நானும் என்னை ஒட்டிக்கொண்ட சில திரைப்படப்பாடல்களும் -1

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு