திங்கள், மார்ச் 07, 2005

பால் பத்து

  1. அண்ணாமலையில் ரஜினி பால்காரராக வந்து பாம்பிடம் 'பால்' வாங்குவார். பாம்பு இல்லாமலே குஷ்பூவும் ரஜினியிடம் 'பால்' வாங்குவார். அப்பொழுது முதல்தான் 'பால் வாங்கிட்டேண்டா மச்சி' என்னும் பிரயோகம் ஆரம்பித்ததா என்று தெரியவில்லை.

  2. ஆண்பால், பெண்பால் என சாதி இரண்டொழிய வேறில்லை என தமிழ்நாட்டில் அன்றே 'பால்' வாங்கியிருக்கிறார்கள்.

  3. அமெரிக்காவில் சோயா பால், சாக்லேட் பால், ஸ்ட்ராபெர்ரி பால், ஆட்டுப்பால், மிருகத்தில் இருந்து உண்டாகாத பால், தண்ணீர் கலக்காத பால், ஒரு சதவீதப் பால், இரு சதவீதப் பால், டென்னிஸ் பால், பேஸ்பால், எல்லாம் கிடைக்கிறது.

  4. 'பாலூட்டி வளர்த்த கிளி' எல்லாம் பாடல் பெற்ற பறவையாக திரைப்படத்தில் விளங்குகிறது.

  5. பால்ராஜ் என்னும் ஆசிரியர் எனக்குக் கூட புரிகிற மாதிரி ஏழாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்தார். திரவங்கள் மேலிருந்து ஓட்டை வழியாக வழிவதற்கும் உயரம் குறைவான இடத்தில் இருந்து வெளிவருவதற்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லும் தியரம் ஒன்றுக்கு, 'ஒன்றுக்கிருப்பதை' உதாரணமாக காட்டியதால், மூச்சா போகும் போதெல்லாம் கூட நினைவில் வந்து செல்பவர்.

  6. காம்ப்ளானை பாலில் கலக்காமலே குடிக்காமலாம். ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடலாம். பூஸ்ட்டை பாலில் கலந்தாலே சிறக்கும். மெமரிவிடா குடிக்காததால் எப்படி குடிக்கவேண்டும் என்பது மறந்துபோச்சு.

  7. சாந்திமுகூர்த்தத்திற்கும் பாலுக்கும் உள்ள பொருத்தம் பாகிஸ்தானுக்கும் மேட்ச் ஃபிக்ஸிங்குக்கும் உள்ளது போன்ற இயைபு.

  8. அர்ஜுனுக்கு பாலபிஷேகம் செய்தால் 'முதல்வன்' ஹிட்டாகும். இந்துக் கடவுள்களுக்கு பாலபிஷேகம் செய்தால், செய்தவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அந்தப் பாலை இல்லாதோருக்குக் கிடைத்தால் அவர்களுக்கு அடுத்த வேளை நீராகாரம் கிடைக்கும்.

  9. ஆந்திராவின் விஜயா ஃப்ளேவர்ட் மில்க் எனக்கு இன்றும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மாசக்கடைசியில் சென்னைக்கு செல்லும்போது 'மிரினாயோ' குடித்துப் பார்க்கவேண்டும்.

  10. அர்ஜுன் அம்மா கொடுத்தால் கூட அமெரிக்கப் பூனைகள் பாலை அதிகம் விரும்பி குடிப்பதில்லை.

    கொசுறு:
  11. முன்பெல்லாம் தினசரி 'பால்' வாங்கிக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் வாரயிறுதியில் மட்டும் வாங்கிவைத்துக் கொள்கிறோம்.

5 கருத்துகள்:

eppavum idhae madiri 'pal' maarama iruya.

புள்ளையாரு பால் குடிச்சதை வுட்டுட்டயேபா?

சுஜாதா (பாய்ஸ்) பாஷைல சொன்னா 'பால் பண்ணை' என்றும் 'ஆவின்' எனவும் சிலர் விளிக்கப்படுவரே. தெரியுமா ?

- அலெக்ஸ்

sari vidubba..

innikku setha nalaikku paal!

அலெக்சு.... மறந்தே போச்சே! ஞாபகம் வந்ததே...

'இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்'!! அச்சச்சோ... பிள்ளையாருக்கு எப்பவோ பால் கொடுத்துட்டாங்களா ;-))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு