திங்கள், ஏப்ரல் 11, 2005

மிஸ்டர் கழுகு - ஜெயகாந்தன்

Vikatan.com ::

"ஞான பீட விருது பெற்ற ஜெயகாந்தனை, தமிழ் உணர்வோடு நேரில் சந்தித்து வாழ்த்த நினைத்தார் கருணாநிதி. பண்போடும் பரிவோடும் இதைச் செய்ய நினைத்தாலும் ஜெயகாந்தன் தரப்பிலிருந்து வந்த ரியாக்ஷன் அதிரச் செய்ததாக ஒரு தகவல்!"

"என்ன..?"

"கருணாநிதிக்கு உயர் பாதுகாப்பு வளையம் இருக்கிறது. எனவே, அவர் எங்கு போவதாக இருந்தாலும்... அதற்குமுன் பாதுகாப்பு அதிகாரிகள் போய் அந்த இடத்தைப் பார்வையிட்டுத் திரும்புவது வழக்கம். அதன்படி, ஜெயகாந்தன் வீட்டுக்குக் போக நினைத்தார்கள். அதற்குமுன், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் போன் போட்டாராம். 'நாங்க தி.மு.க. தலைவர் வீட்டுல இருந்து பேசுறோம். தலைவர் உங்களைப் பார்க்க திட்டமிட்டு இருக்காங்க. உங்க முகவரி சொல்ல முடியுமா?' என்று கேட்டதுதான் தாமதம். எதிர் பக்கத்திலிருந்து கனமான குரலில், 'என் முகவரி தெரியாதா? முதலில் உங்கள் தலைவரின் முகவரி என்ன, அதைச் சொல்லுங்கள்? அவருக்கு முகவரி உண்டா?' என்று எதிர்க் கேள்வி வந்ததாம். என்ன பதில் பேசுவதென்று தெரியவில்லையாம் அந்த அதிகாரிக்கு. அப்படியே போனை வைத்து விட்டாராம்"

"நிஜமாகவே சொல்கிறீர்?"

"தகவல் கேள்விப்பட்டு தி.மு.க. வட்டாரத்திலும் இதேபோல்தான் அதிர்ச்சி காட்டுகிறார்கள். 'படைப்பாளிகளுக்கு கர்வம் இருக்க வேண்டியதுதான். சில கொள்கைப் பிடிப்புகளும் இருக்க வேண்டியதுதான். ஆனால், அடுத்தவர் மனதைப் புண்படுத்தும் வகையில் வார்த்தைகளை விடுவது நாகரிகமா?' என்று தங்களுக்குள் வேதனையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்!"

10 கருத்துகள்:

விருது வந்ததும்... கர்வம் வந்ததோ...
அல்லது
கர்வம் கொண்டவர்... விருது பெற்றாரோ...?
இல்லை
விருது வந்ததும்... பணிவு சென்றதோ..?

தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்த பாதுகாப்பு அதிகாரிகளால் முகவரியைக் கண்டு பிடிக்க முடியாதா? என்ன விளையாட்டு இது ! :-)

சந்திப்பதற்கான நேரம் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்றிருந்திருப்பார்கள். ஜெயகாந்தனாருக்கு என்ன கடுப்போ? அப்பயிண்ட்மெண்ட் கொடுக்காமல் போட்டுத் தாக்கி விட்டார்...

நீங்க வேற! கலைஞரே போனைப்போட்டு அப்படிக் கேக்கச்சொல்லியிருப்பாரு! எந்தக்காலத்திலும் குறும்பு குறையாத அவர், இன்னும் ஜெ.கே அப்படியேதான் இருக்கிறாரா என்றறிய பார்த்திருப்பார்.

அவர் விடாக்கண்டனன்னா, இவர் கொடாக்கண்டன்!

எம்.கே.

செய்ய வேண்டிய முறை என்று இருக்கிறது. போய் வாழ்த்துக் கூற நினைத்தக் கருணாநிதி அவர்கள் முதலில் தானே நேரடியாகத் தொடர்புக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவருடையக் காரியதரிசி செய்திருக்க வேண்டும். தான் வருவது ஜெயகாந்தனுக்கு சௌகரியப்படுமா எனக் கேட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இவ்வாறு ஒரு போலீஸ் அதிகாரி மூலம் முதல் தொடர்பைச் செய்விப்பதென்பது சரியாகப் படவில்லை. முதற்கண் கருணாநிதி அவர்கள் வந்து வாழ்த்த வேண்டும் என்று ஜெயகாந்தன் எதிர்ப்பார்க்கவில்லை. திடீரென்று ஒரு தெரியாதக் குரல் தான் போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் யார் நம்புவார்கள்? ஜெயகாந்தன் செய்தது சரியே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

//முதற்கண் கருணாநிதி அவர்கள் வந்து வாழ்த்த வேண்டும் என்று ஜெயகாந்தன் எதிர்ப்பார்க்கவில்லை. //
அடேங்கப்பா! டோண்டு சார்..இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியவில்லை?

சிங்கம் கிழடாயிருந்தாலும் காகம் மாதிரியா கத்தப் போகிறது...கம்பீரமாக கர்ஜிக்கத்தான் செய்யும்.. செய்தி உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. சத்யராஜ் குமாரின் கேள்வியிலிருக்கும் லாஜிக்கிற்கு ஒரு ஜே !

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு