வெள்ளி, ஏப்ரல் 22, 2005

புலம்பல்

சலிப்பான வருத்தம்:
திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

துளியூண்டு சந்தோஷம்: அன்பழகனும் கஷ்டப்பட்டிருக்கிறார்.சலிப்பான வருத்தம்:
'அ - அர்ஜுனன், ரா - ராம், க - கணபதி' என்று ஜார்கண்டில் பாடம் சொல்லித் தரும் ஏகல் வித்யாலயாக்களின் தொடரும் சேவை.

துளியூண்டு சந்தோஷம்: தற்போது எம்.எம்.ஜோஷி மனிதவளத் துறை அமைச்சராக இல்லாமல் இருப்பது.சலிப்பான வருத்தம்:
வருடத்துக்கு முன்னூறு விபத்துக்கள் கொடுக்கும் இந்திய ரயில்வேயின் சமீபத்திய தடம்புரளல். இறந்தவர்களையும் கை/கால் இழந்தவர்களையும் விட்டுவிட்டு லல்லுவின் சுயநலப் பிரச்சாரம்.

துளியூண்டு சந்தோஷம்: ரயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு