உடல் பருமன்
'தொப்பை கண்ட்ரோல்' ஆயில் என்று ஒரு விளம்பரம் சன் டிவியில் வருகிறது. கடந்த மாதத்தில்தான் தோன்றினாலும், உடனடியாக கவனத்தைக் கவர ஆரம்பித்தது. 'அம்மா பாசம்', 'அல்வா தொப்பை', 'எடை பார்க்க முடியாத தொப்பை', என்று அன்றாட சபலங்களினால் ஏற்படும் குண்டு விளைவுகளை நகைச்சுவையாக சொல்கிறார்கள்.
கடைசியாகத் தொப்பையை குறைக்க சன்ஃப்ளவரோ, சன்பீமோ (Brand recognition பதிய வைக்காத விளம்பரம் எல்லாம் ஒரு விளம்பரமா... லட்சங்களை செலவழித்து என்ன பயன்?) ஏதோவொன்றை காண்பித்து பயன்படுத்துமாறு அட்வைஸ்.
எண்ணெயை கண்ணால் பார்த்தாலே ஊளைச் சதை உண்டாகும். அதற்காகவே அவர்களின் மேல் பொதுநல வழக்குப் போடலாம்.
வியர்க்க விறுவிறுக்க சோர்ந்து போகுமளவு உடற்பயிற்சி செய்தால் மட்டுமே தொப்பை கரையும். அப்படியும் எண்ணெய் வேண்டுமென்றால் ஆலிவ் ஆயில்தான் உகந்தது. மணி-பர்ஸுக்கு உகந்ததாக இல்லையே என்றால் கனோலா எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளலாம்.
MyPyramid.gov பக்கம் போனால் உங்களுக்கான தொப்பை கண்ட்ரோல் முறையை சொல்கிறார்கள். (தப்பித் தவறி MyPyramid.org சென்று விடாதீர்கள்; தொப்பை வலிக்க சிரிக்க மட்டும்தான் வைத்து அனுப்புவார்கள் ;-))
மங்கையர் மலரில் இருந்து:
சென்னை அடையார் நேச்சர் க்யூர் சென்டர் :: கீழ்க்கண்ட உணவு முறைகளை கையாண்டால் மாதம் குறைந்தது 5 கிலோ குறையும்.
காலையில் எழுந்ததும் சூரியக் குளியலை ரசித்தபடி 6 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அல்லது இரவு ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் பத்து கிருஷ்ணா துளசிகளைப் போட்டு ஊறவைக்கவும். காலையில் துளசிகளை அதிலிருந்து வெளியே எடுத்து துளசி குணம் நிறைந்த நீரை மென்சூடாக்கி பிறகு வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
காப்பிக்குப் பதில் பால் இல்லாத சுக்குக் காப்பி சிறிது பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சை பழம் பிழிந்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.
காலை 8.30 - 9.30 மணியளவில்: காலையில் எந்தவிதமான மாவு ஆகாரமும் சேர்க்கக் கூடாது. பசி தாங்க முடியாதவர்கள் 1 தம்ளர் கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம்.
சாத்துக்குடி ஜூஸை கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம். 2 கேரட்களை கொதிக்கும் வெந்நீரில் போட்டு, கொதிக்க வைத்து, ஆறவைத்த தண்ணீரில் கழுவி சிறு துண்டுகளாக்கி சிறிது மிளகு தூள் போட்டுச் சாப்பிடலாம்.
காலை 10.30 - சாம்பல் பூசணி ஜூஸ் அல்லது முள்ளங்கி ஜூஸ்
காலை 11.00 - ஊறவைத்த அவல் + நாட்டுச் சர்க்கரை + பொடி செய்யப்பட்ட வாழைப்பழம் + வாசனைக்காக ஏலக்காய்... அனைத்தும் கலந்து அப்படியே சாப்பிடவும். (பச்சை வாழைப்பழத்தைக் கவனமாகத் தவிர்த்து விடவும்).
மதியம் சாப்பாடு: மதியம் சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன் காய்கறி சாலட் சாப்பிடவும்.
மதிய உணவிற்கு கீரையைப் பாதி வேகவைத்த நிலையிலேயே சமைத்து அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பு சேர்த்து அரிசியைக் குறைத்து நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.
மாலை 3 - 4 மணி : முளைவிட்ட தானியங்கள் ஏதாவதொன்றை 4 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு அதில் கொத்துமல்லி, புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். காப்பிக்குப் பதில் சுக்கு, கொத்துமல்லி கலந்த காப்பி சாப்பிடவும்.
மாலை 6 மணி : சிறிது வேகவைத்த முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடவும். பால் கலக்காத டீ சாப்பிடலாம்.
இரவு 7.30 மணி: சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு பச்சைக் காய்கறிகள் சாப்பிடுங்கள். கவனம், எண்ணெயில் குளிப்பாட்டும் உணவுகளைத் தவிர்த்த இரவு உணவு இருக்க வேண்டும்.
பசும்பாலுக்குப் பதில் சோயா பால் சாப்பிடலாம்.
பாலா,
நல்ல கட்டுரை.. நீங்கள் சொன்ன நேர அளவுகளில் சாப்பிட வேன்டுமென்றால், அலுவலகத்துக்கு சிற்றுந்து நிறைய உணவு எடுத்துப்போக வேண்டும் போல இருக்கிறதே..
அன்புடன் விச்சு
சொன்னது… 6/01/2005 01:28:00 PM
அந்த தொப்பை விளம்பரம் எனக்கு பிடித்திருந்தது.
சொன்னது… 6/01/2005 06:27:00 PM
அப்ப ஐஸ்கிறீம் சொக்கிளேட் இவையெல்லாம் சாப்பிடோலாதோ?
சொன்னது… 6/02/2005 12:21:00 AM
>>அலுவலகத்துக்கு சிற்றுந்து நிறைய உணவு
அதெல்லாம் நடக்கிற காரியமா :-)
சோற்றுக்கு சமமாக காய்கறிகள், இனிப்புக்கு பதிலாக பழங்கள் என்று வைத்துக் கொண்டால் போதும்.
>>அந்த தொப்பை விளம்பரம் எனக்கு பிடித்திருந்தது
என்னைப் பற்றியே அவர்கள் சொல்வது போல் இருந்துச்சா... எனக்கும் ஒரே பாசமாகிப் போச்சு :P)
>>ஐஸ்கிறீம் சொக்கிளேட்
ஐஸ்கிரீமிலும் கொழுப்பு நீக்கி, சர்க்கரை இல்லாமல் என்று கிடைக்கிறது; சுவை இருக்குமா என்று தெரியவில்லை ;-) வாரத்துக்கு ஒரு தடவை என்று வைத்துக் கொள்ளலாம்; ஆனால், என்னை மாதிரி வாரத்துக்கு ஒரு நாள்தானே என்று முழு haagen-daaz-ஐயும் கபளீகரம் செய்யாவிட்டால் சரிதான்!
சொன்னது… 6/02/2005 08:48:00 AM
தயவுசெய்து விளக்கம் தரவும்
சுக்கு காப்பி
கேழ்வரகு
நாட்டுச்சக்கரை
சாம்பல்பூசனி
ஆடை நீக்கிய பால் அவசியம் உடலுக்குத் தேவை என்று எனது குடும்பவைத்தியர் கூறியிருக்கிறார்.
முயற்சி செய்கிறேன் தொப்பை குறைந்தால் சரி. இல்லாவிட்டால் தங்கள் மேல் வழக்குத் தொடுப்பேன்.
சொன்னது… 6/02/2005 09:06:00 AM
//என்னைப் பற்றியே அவர்கள் சொல்வது போல் இருந்துச்சா... எனக்கும் ஒரே பாசமாகிப் போச்சு :P)//
அட தொப்பை ஆசாமிகளுக்கெல்லாம் ஒரே மெண்டாலிட்டி தான் போல. இது நானாக வளர்த்த தொப்பை இல்லை பீரால் தானாக வளர்ந்த தொப்பை. சாரி ஐஸ்கிரீம் சாப்பிடும் கெட்டப்பழக்கம் எல்லாமில்லை.
சொன்னது… 6/02/2005 09:07:00 AM
'கேழ்வரகில் நெய் வடியுது...' என்று ஒரு பழமொழி சொல்வார்களே... அந்த மாதிரி நீங்களும் கேட்கறீங்க :-))
சுக்கு காப்பி - dry ginger herbal
நாட்டுச்சக்கரை - brown sugar (Probably unprocessed & not-whitened cane sugar mixed with jaggery?)
சாம்பல்பூசணி - பரங்கிக்காய், ஸ்க்வாஷ், தர்பூசணி, pumpkin என்று விதவிதமாய் அழைக்கிறார்கள்; அதில் ஏதோ ஒன்று?
கேழ்வரகு - Ragi
சொன்னது… 6/02/2005 09:37:00 AM
>>ஐஸ்கிரீம் சாப்பிடும் கெட்டப்பழக்கம்
லத்தீனோ இசையுடன் வரும் அந்த 'கார்னெட்டோ' விளம்பரமும் பார்த்திருப்பீரே? அதன் பிறகும் கோன் ஐஸ் ஆரம்பிக்கவில்லையா ;-)
சொன்னது… 6/02/2005 09:39:00 AM
Thanks
சொன்னது… 6/02/2005 10:49:00 AM
"உடல் பருமன்"
I do not have this problem :)
சொன்னது… 6/02/2005 10:57:00 AM
>>I do not have this problem
குண்டாக இருப்பவர்களுக்கு இளகிய மனசு என்று எங்கோ படித்த ஞாபகம் :P
சொன்னது… 6/02/2005 11:18:00 AM
What is your problem
enRenRum-anbudan.BALA?
Show us your picture then.
சொன்னது… 6/02/2005 11:27:00 AM
கூல் டவுன் கறுப்பி... அருகம்புல் ஜூஸ் குடியுங்க :-) (டயபடீஸ்/ஷுகர் குறையும் என்கிறார்கள்; அமெரிக்காவில் அருகம்புல் சில சீனக்கடைகளில் கிடைக்கிறது.)
சொன்னது… 6/02/2005 12:02:00 PM
I don't have sugar problem. "Arruham pullu juice"? hmmm sounds good.
சொன்னது… 6/02/2005 12:18:00 PM
karuppi,
It may sounds good,but taste??????
..aadhi
பெயரில்லா சொன்னது… 6/02/2005 01:04:00 PM
மருத்துவம்: உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்?:
ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் வயது உயரம் இவற்றிற்கு ஏற்ப உடல் எடை இருப்பது அவர்களுக்கு நோய், நொடி வராமல் தடுக்கும்.இந்த குறிப்பிட்ட எடைக்கு மேல் சுமார் 10 சதவீதம் அதிகமாக இருப்பவர்கள் உடல் பருமன் உள்ளவர்கள் எனக் கருதப்படுவார்கள். உடல் பருமன் ஒரு நோயல்ல. நோய் வருவதற்கு ஒரு அறிகுறி.
உடல் பருமனாக இருந்தால் உடýன் பல்வேறு உறுப்புகளும், இரத்தக் குழாயும் அதிகமாகத் தங்கள் வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். இதனால் பல்வேறு வியாதிகள் இளம் வயதிலேயே வந்து விடுகிறது. குறிப்பாக டயாப்படீஸ் எனும் சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு, சிறுநீரகம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயýழப்பு வர வாய்ப்புண்டு. இதைத்தவிர மூட்டு வý, இடுப்பு வý, கை கால் குடைச்சல் போன்ற தினசரிப் பிரச்சனைகளும் தோன்றும். சுமார் 30 வயதிலேயே 50 அல்லது 60 வயதைப் போன்ற உணர்வு ஏற்பட உடல் பருமன் ஒரு முக்கிய காரணம். உங்கள் இளமை-யைப் பேணி பாதுகாக்க, உடல் பருமனைக் குறைப்பது முக்கியம்.
சில நேரங்களில், குறிப்பாகப் பெண்களுக்கு ஹார்மோன்களின் அதிக சுரப்பு காரணமாக உடல் பருமன் ஏற்பட்டாலும், 100லிக்கு 99 பேர்களுக்கு உடல் பருமன் உண்டாவது ஒரே ஒரு காரணத்தில்தான்.
நமது உடல் தேவைக்கு மேலே நாம் உணவு உண்ணுவதும் மற்றும் பானங்களை அருந்துவதால்தான் நம் உடல் பருமனாக மாறுகிறது. நமது உடல் தனது கடமையை ஆற்ற, அதாவது மூச்சு விடுதல், இரத்த ஓட்டம், உடல் உஷ்ணம் ஒரே அளவில் இருத்தல், உண்ணும் உணவு செரித்தல், கழிவுகள் நீங்கல் என உடல் தனது கடன்களை ஆற்ற உடலுக்கு சுமார் 1500லி2000 கலோரிகள் சக்தி தேவை. இந்த சக்தியைத்தான் நாம் உணவாக உண்ணுகிறோம். இதற்கு மேலே நாம் உண்ணும் உணவுகள் குடிக்கும் பல்வேறு திரவங்கள், உடýல் சேர்க்கப்படும்பொழுதுதான் உடல் பருமன் அதிகரிக்கிறது. இது திடீரென ஏற்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் உண்ணும் அதிக உணவுகள், உடýல் கொழுப்பாக மாறி, உடல் பருமனை அதிகரிக்கிறது.
நம் உடýல் இந்த அதிக கொழுப்புகளை சேமிக்க லட்சக்கணக்கான கொழுப்பு செல்கள் உள்ளன. பலூனில் காற்று ஊதுவதுபோல, இந்த கொழுப்பு செல்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.
சரியான முறைகளை அறிந்து கொண்டால் ஆண், பெண் இரு பாலருமே உடல் பருமனை குறைக்க முடியும். சிறிய அளவிலேயே அதிக கலோரி கொண்ட உணவு வகைகள் வெகு விரைவாக உடல் எடையை அதிகரிக்கும்.
நாம் விரும்பி சாப்பிடும் பல்வேறுவித இனிப்புகள், கேக் வகைகள், பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்றவைகளுடன் எண்ணெயில் வறுத்தெடுத்த பல்வேறு விதமான பொருட்கள் முறுக்கு, சீடை வறுவல் போன்றவையும் எடையை அதிகரிக்கும்.
இப்பொழுது பெருகிவரும் "ஃபாஸ்ட்லிஃபுட்ஸ்' என்று அழைக்கப்படும் புதிய உணவு வகைகள், குளிர் பானங்கள், மது வகைகள் போன்றவையும் உடல் எடையை அதிகரிக்கும். தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், நார்ச்சத்து தவிர கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்து, புரோட்டீன் எனும் புரதச்சத்து, ஃபேட்(எஹற்) எனப்படும் கொழுப்பு சத்து இவை கலந்த கலவையே உணவாகும். இவற்றில் புரத சத்து மிகவும் தேவையான சத்துணவு. ஆனால் நாம் அதிகம் உண்பது மாவுச் சத்தும், கொழுப்பு சத்தும் கலந்த உணவு. நமது உடல் தேவைக்கேற்ற கலோரிகளை மூன்று வகை உணவுகளையும் கொண்டு உண்பது நல்லது. கொழுப்பு சத்து மாத்திரம் தான் உடல் எடையைக் கூட்டும் என நாம் நம்புவது தவறு. கொழுப்பு சத்து மற்ற இரண்டு சத்துக்களை விட ஒரே அளவில் அதிக கலோரி கொண்டது. ஆகவே இதை மிதமாக நமது உணவில் சேர்க்க வேண்டும். ஆனால் உடல் எடை அதிகரிக்க கொழுப்பு சத்து மாத்திரம் காரணமல்ல. மாவு சத்தும் உடல் எடையை அதிகரிக்கும். குறிப்பாக இந்திய உணவுகளில் மாவு சத்து அதிகமாக இருப்பதால் இவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உடல் பயிற்சிகள் நிச்சயமாக உடற்பருமனை குறைக்கும். சுமார் அரை மணி நேரம் நடந்தால் சுமார் 100லி150 கலோரிகள் இதற்கு செலவாகும். ஆனால் உடற்பயிற்சியும் செய்து கொண்டு, அதிக உணவும் அருந்தினால் உடல் பருமன் குறையாது. உணவில் மாறுதல்கள் செய்வதுதான் உடற்பருமனைக் குறைக்க நிச்சய வழி.
அமெரிக்கா மற்றும் வளர்ந்துவிட்ட நாடுகளில் இன்று உடல் பருமன் பெரிய ஆரோக்கியப் பிரச்சனையாக மாறி விட்டது. ஆகவே மாபெரும் அறிவியல் ஆய்வுகள் அங்குதான் அதிகம் நடைபெறுகிறது. இதற்கு கோடிகணக்கான டாலர்களை செலவு செய்து பல்வேறுவித நுணுக்கமான தகவல்களை உடல் பருமன் குறித்து இன்று உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. பொதுவாக நாம் உண்ணும் இந்திய உணவுகள், உடல் பருமனை வெகு சுலபமாக அதிகரிக்கும் தன்மை கொண்டவை. ஆனால் அதே நேரத்தில் நாம் உண்ணும் உணவில் சிறிய மாறுதல்கள் மாத்திரம் செய்து உடல் பருமனை குறைக்கும் வழிமுறைகள் இப்பொழுது நடைமுறையில் சாத்தியமாகும்.
இதற்கு தேவை உடல் பருமனை குறைக்க வேண்டும் என்ற ஆசையும் திடமனமும் தான். பூஜை, விரதம் என்று பழக்கப்பட்ட நம் இந்திய மண்ணிலே இது ஒன்றும் கடினமல்ல. சிறிய மாறுதல்களை மாத்திரம் செய்து உடல் பருமனை நாம் நிச்சயமாகக் குறைக்க இயலும்.
நன்றி : இன்றைய மருத்துவம்
சொன்னது… 6/16/2005 11:52:00 AM
ஆமாங்க....யாராவது கொஞ்சம் உடல் எடையை கூட்ட என்ன செய்யனும்னு சொல்றிங்களா?...நான் ரொம்ப எடை கம்மியா இருக்கேன்....அதுவும் சைவம்தான் நான்...ஐடியா சொன்னா கோடி புண்ணியமா போகும்...
சொன்னது… 1/05/2006 08:30:00 AM
try to the nutrition food from herbalife for easy weight lose, easy weight regain..etc
பெயரில்லா சொன்னது… 8/03/2010 09:58:00 AM
கருத்துரையிடுக