வியாழன், ஜூலை 07, 2005

இந்தியாவும் வான்புலிகளும்

முன்குறிப்பு: Guardian Unlimited | World Latest | Terror Attacks Near 3,200 in 2004 Count: செப். பதினொன்றுக்கு முன்பெல்லாம் அமெரிக்காவை பொறுத்தவரை தீவிரவாத நிகழ்வு என்றால் அயல்நாட்டவர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். பத்தாயிரம் டாலருக்கு மேல் பொருட்சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும். தற்போது தராசு மாறியிருக்கிறது. அரசாங்கத்தைத் தாக்கும் எந்த சம்பவமும் தீவீரவாதமாகக் கருதப்படுகிறது. கடந்த வருடத்தில் 3,192 பயங்கரவாத நிகழ்வுகளில் 28,433 பேர்கள் இறந்தோ, காயமடைந்தோ (கை/கால் இழப்பு?), கடத்தப்பட்டோ இருக்கிறார்கள்.

இலங்கையில் தீவிரவாதம் குறித்த தகவல்கள் அறிய இந்தத் தளம் பயன்பட்டது.

Tamiloviam ::

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் வளர்த்து விடப்பட்ட இயக்கம் அல்-கெய்தா. அதே போல், இந்தியாவால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் எல்.டி.டி.ஈ. உலக வர்த்தக மையத்தை ஒஸாமா பின் லாடன் தாக்கியது போல், மிகப் பெரிய பேரழிவு எதையும் விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு நிகழ்த்தவில்லை.

ஆனால், அவ்வாறான தாக்குதலை செய்யக்கூடிய வாய்ப்புகளை விடுதலலப் புலிகள் மேம்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகள் துவக்கியிருக்கும் விமானப் படை, செப். 11 போன்ற தாக்குதல்களைத் தொடுக்கும் வலிமையை அவர்களுக்குத் தந்துள்ளதாக இந்தியா டுடே (தமிழ்) ஜூன் 8 கட்டுரை விவரிக்கிறது.

ரஷியா அடக்கி வாசிக்கும் இன்றைய பூகோள அரசியலில் சீனாதான் அமெரிக்காவுடன் மல்லுக்கு நிற்கிறது. அமெரிக்க-ரஷிய பனிப் போர் முடிந்தவுடன் ஆயுதங்களின் அணிவகுப்பும் அணு ஆயுதங்களும் குறையும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். பணவீக்கம் ஏற்படும்போதெல்லாம் யுத்தங்களின் மூலம் பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக் என்று சண்டைக்குப் போனது.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற புதியவர்களும் அணு ஆயுத சக்தியுள்ள நாடுகளாக மாறினார்கள். பாதுகாப்புத் துறைக்காக உலக நாடுகள் வருடத்திற்கு நூறாயிரம் கோடி (1 ட்ரில்லியன்) டாலர்களை செலவழிக்கிறார்கள். இதில் வளரும் நாடுகள் மூன்றில் இரண்டு பங்கை வாங்குகிறார்கள்.

உதாரணமாக, தாய்வான் பதினெட்டு பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. தாய்வானை நோக்கி சீனா 610 ஏவுகணைகளை குறி வைத்திருப்பதினாலேயே, தாய்வானின் இராணுவ பட்ஜெட் ஏறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரையும் சிறையில் வைத்து வாட்டும் மியான்மருக்கு இங்கிலாந்து தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதே போல், விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதன் மூலம், இலங்கையும் இந்தியாவும், அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் அதிநவீன தற்காப்பு தொழில்நுட்பத்திற்காக செலவிட ஆரம்பிக்கும்.

இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 1990-ஆம் ஆண்டு 550 மில்லியன் இலங்கை ரூபாவாக (ஒரு இந்திய ரூபாய் = 2.3 இலங்கை ரூபாய்) இருந்திருக்கிறது. 1992-ஆம் ஆண்டு 2000 மில்லியனாக உயர்ந்தது என ரோஹான் குணரத்தினாவின் குறிப்பு கூறுவதாக 'ஈழப் போரட்டத்தில் எனது சாட்சிய'த்தில் சி. புஸ்பராஜா எழுதுகிறார். அவரே தொடர்ந்து, 'வேறொரு குறிப்பு 1981-ஆம் ஆண்டு 661 மில்லியனாக இருந்த செலவீனம் 1992-ஆம் ஆண்டு 18,058 மில்லியனாக உயர்ந்தது' எனக் கூறுவதாகவும் சொல்கிறார்.

தரைப்படையும் கப்பல் படையும் ஏற்கனவே கொண்டிருந்த புலிகள், இப்பொழுது விமானப்படையையும் சேர்த்துக் கொண்டதால், முப்படைகளும் கொண்ட ஒரே கெரில்லா அமைப்பாக இருக்கிறார்கள். ஸெக்கில் தயாரான ஸிலின் ஜீ-143 (ZLIN Z 143) விமானங்கள் பல உபயோகங்கள் கொண்டது. விமான ஓட்டுனர் பயிற்சிக்கும் பயன்படும். அதிரடியாக சென்னை வரை பறந்து சென்று, காரியங்களை முடித்துவரவும் உபயோகமாகும். இந்த விமானத்தில் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். தானியங்கியாக ஆட்டோ-பைலட் முறையில் இயங்கக் கூடியது. 2759 கிலோ மீட்டர் வரை பறக்கலாம். கரடுமுரடான இடங்களிலும் எளிதில் இறக்கமுடியும். பத்து மில்லியன் ரூபாய்க்கு யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

இது தவிர ஆயிரம் கி.மீ., 600 கி.மீ., 200 கி.மீ. என்று வெவ்வேறு தூரங்கள் சென்றுவரக்கூடிய விமானங்களையும் சமாதான காலத்தின் போருக்கான ஆயத்தங்களாக செய்கிறார்கள் என்று இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் நிருபமா ராவ் விவரிக்கிறார். இந்த விமான பலத்தின் மூலம் ஒற்று அறிவது, வேவு பார்ப்பது போன்றவை புலிகளுக்கு எளிதாகும். போராளிகளை, இலங்கை, தென்னிந்தியா மற்றும் தென் கிழக்காசியா போன்ற அக்கம்பக்கத்து நாடுகளுக்குக் கொண்டு விடுவது இயலும். போர் காலகட்டங்களில் வெளியிடங்களில் இருந்து அவசர உதவிகள் தருவிக்கவும்; சிகிச்சைகளுக்கு கொண்டு செல்லவும்; புதிய ராணுவ உதிரி பாகங்களை வெகுவிரைவில் கொண்டு வரவும் உதவலாம்.

ராஜீவ் காந்தி கொலையில் தேடப்பட்டு வருபவரும் தென்கிழக்கு ஆசியாவில் வசிப்பவருமான சண்முக குமரன் தர்மலிங்கம் விமான பாகங்களை உதிரியாகக் கொண்டு வந்து விமானம் கட்டமைப்பதில் சம்பந்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மாதந்தோறும் அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து 8.6 கோடி ரூபாய் வருவதாக இந்திய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. இது விமான எரிபொருள், விமானிப் பயிற்சி போன்றவற்றுக்கும் உபயோகப்படும்.

காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ ஆரம்பம் முதலே இந்திய - இலங்கை ராணுவ ஒப்பந்தத்தை எதிர்த்து வருகிறார். பா.ம.க. ராமதாஸ¤ம் ஒப்பந்தத்தை எதிர்க்கிறார். கம்யூனிஸ்ட்களும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகவே இருக்கிறார்கள். இலங்கை விவகாரங்களில் கடந்த சில வருடங்களாகவே பட்டும்படாமலும் தி.மு.க. இருந்து வந்திருக்கிறது. கூட்டணியின் மற்ற கட்சிகள் சொல்வதைக் கேட்டு, ராணுவ ஒப்பந்தத்துக்கு எதிராகக் கருத்து சொன்னால், அது மத்தியில் ஆளும் காங்கிரஸை எதிர்ப்பது போல் ஆகிவிடுமே என்று தி.மு.க. தலைமை யோசிக்கிறதாக ஜூனியர் விகடன் கழுகு எழுதுகிறது.

விடுதலைப்புலிகளாகட்டும் அல் கெய்தாவாகட்டும். அவர்களின் மிகப் பெரிய பயமுறுத்தும் பலம் அவர்களின் தற்கொலைப் படைகள்தான். எல்.டி.டி.ஈ.இன் தற்கொலைப் படையின் பெயர் கரும்புலிகள். தற்கொலைத் தாக்குதல் என்றாலே உலகின் எல்லா நாடுகளும் முப்படைகளும் நடுங்குகிறார்கள்.

1982-ஆம் ஆண்டில் இருந்து 2002-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிய மரணத்தை சந்தித்த புலிகளின் விபரம்:

ஆண்கள் பெண்கள்
போராளிகள் 13,612 3,767

தரைக்கரும்புலிகள் 59 18

கடற்கரும்புலிகள் 117 46

இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் உள்ள இரணமடு கிராமத்தில் வான்புலிகளின் விமானப்படைத்தளம் அமைந்திருக்கிறது. ஏற்கனவே சோதனையில் இருந்து இந்திய ராணுவத்திற்கு பயிற்சியளிக்கப்பட்ட ஏவுகணைகளில், பிருத்வி மட்டுமே தற்போது இரணமடுவின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். திருச்சியில் இருந்து இருபது நிமிட தூரத்தில் இரணமடு அமைந்திருக்கிறது. இதனால் 'சூர்யா' ஏவுகணைகளையும் இராணுவம் பயன்படுத்த ஆரம்பிப்பது பாதுகாப்பிற்கு வலு சேர்க்கலாம்.

நேபாளத்தில் நீடிக்கும் குழப்பம், பாகிஸ்தானுடன் சேற்றிலொரு கால் பேச்சுவார்த்தைகள், சீனாவுடன் நேசக்கரம், மியான்மரை கண்டும் காணாமல் விட்டிருத்தல், பங்களாதேஷ் ஊடுருவல் போன்ற இன்றைய புவியியல் அரசியலில் இலங்கையையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது இந்தியாவுக்கு மிகவும் அத்தியாவசியமான நிலை. கல்பாக்கம் போன்ற அணு நிலையங்களிலோ அல்லது கேரளா/தமிழ்நாட்டின் முக்கிய இடங்களையோ விடுதலைப் புலிகளிடம் பிணையாகக் கொடுத்து விட்டு பின்னர் வருந்தக் கூடாது.

விடுதலைப் புலிகளின் திறனையும் நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிட்டு மீண்டும் ஏமாறக் கூடாது என்பதற்கு புஸ்பராஜாவின் கருத்து:

"இந்திய இராணுவம் இன்னோர் நாடான பாகிஸ்தானுடன் மோதிக் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பிரதேசத்தை பங்களாதேஷாக உருவாக்கியபோது, அதாவது 1974-ம் ஆண்டு நடந்த இந்த யுத்தத்தில் இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1047-தான். அதாவது ஒரு நாட்டுடன் மோதி இருக்கிறது. இன்னோர் நாட்டை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்துடன் மோதி இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1115".

22 கருத்துகள்:

/இலங்கையில் தீவிரவாதம் குறித்த தகவல்கள் அறிய இந்தத் தளம் பயன்பட்டது./

83 -இலே நடந்த அரசபயங்கர வாதத்தை பற்றி ஒரு பேச்சுக்குகூட குறிப்பிடாத தளமாக உள்ளது இது என்பதுதான் வருத்தப்படவேண்டியது. இந்ததளத்தை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி... தமிழோவியம் கட்டுரையின் பின்னூட்டங்களில் சில முக்கிய கருத்துகளும் இருக்கிறது. அந்த பதில்களும் கவனிக்கவேண்டியவை.

நீங்கள் தந்த இணையத்தளத்திலுள்ள தகவல் இது.
// The Tamil New Tigers existed as a loose group of militants within the overall TULF movement. However in 1996, this group of militants formally separated and renamed themselves the Liberation Tigers of Tamil Eelam. //

எவ்வளவு அபத்தமான தகவல் இது. புலிகளைப் பற்றிய profile இல் இத்தகவலைச் சொல்லும் இணையத்தளத்தை ஆதாரமாக வைத்துத்தானா நீங்கள் கட்டுரை எழுத வேண்டும்?

எவ்வளவோ அன்னியப்பட்ட உங்களுக்கே இது பொய்யெனத் தெரிந்திருக்கும் பட்சத்தில் இதை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் கட்டுரையை எப்படிச் சொல்வது?

/அந்த பதில்களும் கவனிக்கவேண்டியவை/
ஒத்துக்கொள்கிறேன்.

///அந்த பதில்களும் கவனிக்கவேண்டியவை/
ஒத்துக்கொள்கிறேன்.//
பாபா, இப்பொதுதான் தமிழோவிய பின்னூட்டங்களை வாசித்தேன்.
புஸ்பராஜாவை பற்றி மிகக்காட்டமான விமர்சனங்களை பார்த்துள்ளேன்.
பலங்களை ஒப்பீடுவது புரிந்துக்கொள்ள உதவுமென்றாலும், "தேவை"க்கான ஒளிந்துள்ள காரணிகள் பேசப்படுவதில்லை என்பதைத்தான் முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். இதில் ஒரு பக்க மரணத்தைமட்டும் வைத்துக்கொண்டு வாதிடுவதோ, அல்லது இந்தப்பக்க மரணத்துக்கும் அந்த மரணத்துக்கும் கணக்கு போடுவதோ எங்கும் போய்ச் சேர்க்காது என்றே கருதுகிறேன்.
அவரவரின் குறிக்கோள்களை அவரவர் பறைசாற்றிக்கொள்கிறார்கள் என்பதுதான் இதில் மிக அவலமானது. :-(

முன்பு இந்த போஸ்ட்டை படித்தபோது புரியவில்லை. ஆனால் இப்போது உங்கள் போஸ்ட் பார்த்த பின்பு புரிகிறது.

http://koluvithaluvi.blogspot.com/2005/07/blog-post_06.html

கட்டுரையின் மூலம் எனக்கு தெளிவு கிடைக்காத சந்தேகங்களைப் பதிவு செய்தேன்.

>>இதை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் கட்டுரையை ---

அதை மட்டும் ஆதாரமாக வைத்து எழுதவில்லை. பயன்பட்ட மற்ற தகவல்களையும் ஆங்காங்கே சொல்லியிருக்கிறேன்.

இந்தியவிற்கும் இலங்கைக்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் தேவைப்படுகிறதா? அப்படி அவசியமென்றால், இந்த ஒப்பந்தத்தில் புலிகளும் பங்கு கொள்ள வேண்டுமா? அவசியமில்லையென்றால், அற்ற குளத்தைக் கைவிடும் இந்திய அரசுக்கு எவ்வித பாதிப்புகள் எழும்?

இலங்கை அரசுக்கு மட்டும் உதவுவதால், விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு பாதிப்பு நேரிடலாம். அதிகாரபூர்வமான இலங்கை அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்திடாவிட்டால், அண்டை நாட்டுடன் விரோதம் பாராட்டுவது போலாகி விடும்.

//அதிகாரபூர்வமான இலங்கை அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்திடாவிட்டால், அண்டை நாட்டுடன் விரோதம் பாராட்டுவது போலாகி விடும்.//

Did India sign similar treaties with her other neighbours? Why is Sri Lanka so special?

The official Indian statement may be military training, exchange of military intelligence and information, maritime surveillance to prevent illegal activities affecting both countries, official visits and bilateral meetings at different levels, participation in training programs and joint military exercises. India is likely to sell Sri Lanka advanced light helicopters, small arms and ammunitions, artillery pieces, special clothing, and other items.

இது உதவும் என்பதால் இதை இங்கு இடுகிறேன்.

இந்தியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை முழுவதுமாக வளர்த்து விடவில்லை.1970 களில் இலங்கையில் தோன்றிய எல்லா இயக்கங்களுக்கும் இந்தியா தன் சுயநலத்துக்காக ஆயுதப் பயிற்சி கொடுத்தது மட்டுமன்றி அவர்களிடையே வன்மத்தையும் சேர்த்தே வளர்த்து விட்டனர். அதனால்தான் ஆயுதப்பயிற்சி பெற்ற மற்ற இயக்கங்கள் எல்லாம் தமிழீழக் கொள்கையல்லாது போயினர். கடைசியாக ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள்தான் விடுதலைப்புலிகள் அவர்கள் தங்கள் தமிழீழக் கொள்கையில் உறுதியாய் இருந்தமையால்தான் இன்றுவரை தமிழீழ மக்களால் ஆதரிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவுக்கு புலிகள் ஏதாவது செய்துவிடுவார்களோ என்று எழுதுவதுபோல 22 வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தால் பெண்கள் சூறையாடப்டுவார்கள்.மார்பில் வெடிவைத்துக் கொல்லப்படுவார்கள் என்று அங்கும் யாராவது எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - வாசக அனுபவம் - Domesticated Onion

குறிப்புக்களும், சில அவதானங்களும் - DISPASSIONATED DJ

பின் தொடரும் குழப்பம் - நேசமுடன்

நாடும் நடப்பும் - Eelanathan

இந்தியாவுடனான உறவுகள் பற்றிய விடுதலைப்புலிகளின் கொள்கை

நன்றி இந்தியா - sajee

ஈழப்போராட்டத்தின் சாட்சி நூல்கள் : Kavithai

Books on Tamil Eelam - (Google cache) : tamiltigers.net

Tamil Eelam realated books and journals www.eelamstore.com Books

//இலங்கை அரசுக்கு மட்டும் உதவுவதால், விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு பாதிப்பு நேரிடலாம்.//

அமெரிக்கா, சீனா, பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளும் இலங்கை அரசுக்கு மட்டும் தான் உதவுகின்றன, இந் நாடுகளையெல்லாம் விடுதலைப் புலிகள் தாக்க முயன்றால் அதுவே அவர்களின் முழுநேர வேலையாகி விடும். அத்துடன் சில காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கையில் விழக்கூடும் என நோக்கர்கள் கருதிய பொழுது, இந்தியா சர்ச்சைக்குரிய முறையில் சிறீலங்காவின் வேண்டுகோளுக்கிணங்க சிறீலங்காப் படையினரின் உதவிக்கு "மனிதாபிமான அடிப்படையில்" கப்பல் விட முன்வந்தது. அதற்கு விடுதலைப் புலிகள், கேரளாவினதோ/தமிழ் நாட்டினதோ முக்கிய இடங்களை பிணையாகக் கொள்ளவில்லையே!

//அதிகாரபூர்வமான இலங்கை அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்திடாவிட்டால், அண்டை நாட்டுடன் விரோதம் பாராட்டுவது போலாகி விடும்.//
சுந்தரமூர்த்தியின் கேள்வியும் எனக்கெழுந்தது. மேலும் இதில் இலங்கை அரசுடன் விரோதம் பாராட்டா வண்ணம் நொதும நிலைப்பாட்டைக் (neutrality) கைக்கொள இந்திய டிப்ளோமட்மார்களுக்கு நிச்சயம் சாதுர்யம் இருக்கும் என் நம்புகிறேன்.
இலங்கை-தமிழீழ விவகாரத்தில் இந்தியா நொதும நிலை (neutrality) கொள்வதே இந்திய நலனுக்கு நல்லது.
ஏனேனில் இலங்கை அரசுக்கு உதவினால், நாளை தமிழீழம் பிறந்தால், தமிழீழ-தில்லி உறவில் விரிசல் இருக்கக் கூடும். ஆனால் தமிழீழம் பிறகிதோ இல்லையோ, இலங்கை அரசு ஒரு பொழுதும் இந்தியாவுடன் நல்லுறவு கொள்ளாது.
இந்தப் போர் நிறுதத்தின் பின்னர் மட்டும், இலங்கை அரசு இராணுவம் தொடர்பான பேச்சுகளை புஷ்ஷின் அமெரிக்காவுடனும் பின் இப்போ அவர் வெறுக்கும் நாடுகளிலொன்றான ஈரானுடனும் வைத்துள்ளது. இதற்கிடையில் ஏதோ ஒப்பந்தத்தில் சீனாவுக்கு இலங்கையின் வட கடற்பகுதியில் மீன் பிடிக்க அனுமதித்துள்ளது, இப்போ இந்தியாவுடன். இப்படி வலுத்த பகை அல்லது முரணுள்ள நாடுகளுடன் ஒரே நேரத்திலே தன் குறுகிய கால நலன்களுக்காக வெற்றிகரமாக உறவாடுவதில் சிறீலங்கா கைதேர்ந்தது. கடந்த காலங்களிலும் இவ்வண்ணமே செயற்பட்டுள்ளது, எதிர் காலத்திலும் இப்படித்தான் செயற்படும் என நம்பலாம்.

9/11-க்கு பிறகு அமெரிக்க ஊடகங்கள் விழிப்புடன் செயல்பட ஆரம்பித்தன. ஏதாவது குளம், குட்டை, ஏரிக்கு செல்வார்கள். பாதுகாப்பின்றி இருக்கும் ஓடையில், விஷம் கலந்தால், மொத்த நகரமும் அம்பேல் என்பதை உணர்ச்சி ததும்ப விவரிப்பார்கள்.

செய்திக் கோர்வையை பார்ப்பவர்களுக்கு அடிவயிறு கலங்கும். அல்-க்வெய்தாக்காரர்களும் என்ன செய்வதென்று அறியாமல் விழித்திருந்தால், பயன்பட்டிருக்கும்.

அந்த மாதிரி, சும்மாக் கிடக்கிற விமானத்தை பரபரப்பியே பயமுறுத்தறீங்க !

-ரகு

you are fit to write in tuglak now your analysis is stupid is to say the least

ரவி...
>>now your analysis is stupid is to say the least --

ஏன்? எனக்கும் புரிகிற மாதிரி சொல்லுங்க; இல்லையென்றால் நானும் உங்களை மாதிரி quotable
quote போட கை துடிக்குது ;-))

>>Did India sign similar treaties with her other neighbours? Why is Sri Lanka so special? ---

நன்றி. இதுதான் முதல் ஒப்பந்தம் என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

எல்லாவற்றிற்கும் தொடக்கம் இருக்கும்; எல்லாரும் வல்லரசாகிறார்கள்; பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்கிறார்கள். இந்தியாவும் முன்னேறிய (இராணுவப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யும் நாடாக ஆகலாமே) என்னும் எண்ணமாக இருக்கலாம்.

சினேகிதி, பெயரற்றவர், ரகு... நன்றி.

இந்திய தமிழ்ர்கள் இப்படி முட்டாள் தன்மாக எல்லாம் கற்பனை செய்யகூடியவர்கள் என்பதை நிரூபித்து வருகிறீர்கள். புலிகளுக்கு விடுதலைக்கான போரை விட்டு விட்டு உங்கு வந்து தாக்க தான் நேரம் பார்த்து இருக்கிறார்கள். ஆதரம் சொல்லிய தளம் அரச பயங்கர வாத்ததை மூடி மரைத்து புலிக்ளை பற்றி போல்லப்பு சொல்லும் தள்ம்.

// இந்திய தமிழ்ர்கள் இப்படி முட்டாள் தன்மாக எல்லாம் கற்பனை செய்யகூடியவர்கள் என்பதை நிரூபித்து வருகிறீர்கள். //
யாரோ அவர்களே,
தயவுசெய்து இப்படி "முட்டாள்த்தனமாக" பொதுமைப்படுத்தி நம் தமிழக உடன்பிறப்புகளை நோகடிக்காதீர்கள். ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட விடுதலைப் புலிகளின் பாலுள்ள காழ்ப்புணர்வால் (இரசீவ் காந்தி கொலைக்குப் பின்), தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி சரியான புரிதலில்லாதலால், இந்திய இறையாண்மைக்கு ஊறு வரும் என முட்டாள்த்தனமாக அஞ்சுவதால், தாங்கள் தெற்காசியாவுக்கு நாட்டாமையாக விரும்புதலால், சாதியம் (பார்பனீயம்), அல்லது சமயம் (சில வைணவ வெறியர்க்கு சைவர்களைப் பிடிக்காது) போன்ற (சில/அனைத்துக்) காரணங்களால் எங்கள் தமிழீழ விடுதலையை விரும்புவதில்லை. ஆனால் அவர்களுக்கு மேற்கூறிய காரணங்களை நேரடியாகச் சொல்லத் தயக்கம், ஆதலால் ஏதாவது உளறி, தமிழீழ விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பர் (தாம் முட்டாள்களாகத் தோற்றமளிப்பதையும் பொருட்படுத்தாது).
அதற்காக எல்லாத் தமிழ்நாட்டுத் தமிழரையும் அப்படி எண்ணுவது அபத்தம். இங்குள்ள பின்னூட்டுகளிலே கார்த்திக்கிராமசு, சுந்தரமூர்த்தி, இரவி, ... போன்றோர் எம் நிலையை ஓரளவாவினும் புரிந்துள்ள இந்தியத் தமிழர்களே. ஆதலால் மீண்டும் முட்டாள்த்தனமாக அனைத்து இந்தியத் தமிழர்களையும் பொதுமைப் படுத்தாதாதீர்கள்.

- யாழ்த் தமிழன்.

Some tips on arguing from an expert..

I argue very well. Ask any of my remaining friends. I can win an
argument on any topic, against any opponent. People know this,
and steer clear of me at parties. Often, as a sign of their great
respect, they don't even invite me. You too can win arguments.

Simply follow these rules:

1. Drink Liquor. (JD)

Suppose you're at a party and some hotshot intellectual is expounding
on the economy of Peru, a subject you know nothing about. If you're drinking some health-fanatic drink like grapefruit juice, you'll
hang back, afraid to display your ignorance, while the hotshot
enthralls your date. But if you drink several large shots of Jack
Daniels, you'll discover you have STRONG VIEWS about the Peruvian
economy. You'll be a WEALTH of information. You'll argue forcefully, offering searing
insights and possibly upsetting furniture. People will be impressed. Some may leave the room.


2. Make things up.

Suppose, in the Peruvian economy argument, you are trying to prove
Peruvians are underpaid, a position you base solely on the fact that YOU are underpaid, and you're damned if you're going to let a bunch of Peruvians be better off.

DON'T say: "I think Peruvians are underpaid."

Say: "The average Peruvian's salary in 1981 dollars adjusted for the revised tax base is L1,452.81 per annum, which is L836.07 before the mean gross poverty level."

NOTE: Always make up exact figures.

If an opponent asks you where you got your information, make THAT up, too. Say: "This information comes from Dr. Hovel T. Moon's study for the Buford Commission published May 9, 1982. Didn't you read it?" Say this in the same tone of voice you would use to say "You left your soiled underwear in my bath house."


3. Use meaningless but weightly-sounding words and phrases.

Memorize this list:

Let me put it this way
In terms of
Vis-a-vis
Per se
As it were
Qua
So to speak
well, anyhow

You should also memorize some Latin abbreviations such as "Q.E.D.," "e.g.," and "i.e." These are all short for "I speak Latin, and you do not."

Here's how to use these words and phrases. Suppose you want to say:

"Peruvians would like to order appetizers more often, but they don't have enough money."

You never win arguments talking like that. But you WILL win if you say: "Let me put it this way. In terms of appetizers vis-a-vis Peruvians qua Peruvians, they would like to order them more often, so to speak, but they do not have enough money per se, as it were. Q.E.D."

Only a fool would challenge that statement.

4. Use snappy and irrelevant comebacks.

You need an arsenal of all-purpose irrelevent phrases to fire back at your opponents when they make valid points. The best are:

You're begging the question.
You're being defensive.
Don't compare apples and oranges.
What are your parameters?

This last one is especially valuable. Nobody, other than
mathematicians, has the vaguest idea what "parameters" means.

Here's how to use your comebacks:

You say As Abraham Lincoln said in 1873...
Your opponents says Lincoln died in 1865.
You say You're begging the question.

OR

You say Liberians, like most Asians...
Your opponents says Liberia is in Africa.
You say You're being defensive.

5. Compare your opponent to Adolf Hitler.

This is your heavy artillery, for when your opponent is obviously right and you are spectacularly wrong. Bring Hitler up subtly. Say:
"That sounds suspiciously like something Adolf Hitler might say" or

"You certainly do remind me of Adolf Hitler."

You now know how to out-argue anybody. Do not try to pull any of this on people who generally carry weapons.

//DON'T say: "I think Peruvians are underpaid."

Say: "The average Peruvian's salary in 1981 dollars adjusted for the revised tax base is L1,452.81 per annum, which is L836.07 before the mean gross poverty level."

NOTE: Always make up exact figures.
//

Good one Anonymous!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு