ரஜினியும் கமலும்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ::
ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன், ஆர்.எம்.வீரப்பன், சத்யஜோதி தியாகராஜன், இப்படி, ரஜினியின் அடுத்தப் படத்தை யார் தயாரிக்கப்போகிறார்கள் என்பதில் ஒரு குட்டி பட்டிமன்றமே நடந்தது கோடம்பாக்கத்தில்.
இப்போது அதற்கு முடிவு கட்டிவிட்டார்கள். அவரது அடுத்தப் படத்தைத் தயாரிக்கப்போவது ஏவி.எம் நிறுவனம். ஷங்கர் இயக்க போகிறார். ஏவி.எம், ரஜினியை வைத்து தயாரிக்கும் ஒன்பதாவது படமாம் இது. ஆக்ஷன் கதைகளில் தூள் கிளப்பும் ஷங்கர், ரஜினிக்காக ஆக்ஷன் பிளஸ் சூப்பர் காமெடி கதையை ரெடிபண்ணி வைத்திருக்கிறாராம்.
கமலை இந்தியன் தாத்தாவாக்கிய ஷங்கர், ரஜினியை என்னவாக்கப்போகிறாரோ?
வம்பு: சுஜாதா, எஸ்ரா, ஜெமோவைத் தொடர்ந்து நமக்கு நன்றாக அறிமுகமான மற்றும் ஒரு முன்னணி எழுத்தாளர் இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வசனுவதாக கிசுகிசுக்கிறார்கள்.

பத்து வேடங்களில் கமல் ::
சினிமாவில் பல சாதனைகளைப் பண்ணிவிட்ட கமல், அடுத்ததாக யாரும் பண்ணாத வகையில் பத்து வேடங்களைப் போடப்போகிறார். தசாவதாரம் என்ற பெயரில் வரப்போகும் இந்தப்படத்தை கே,எஸ்,ரவிக்குமார் இயக்கப் போகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாயகி வேட்டை நடந்து வருகிறதாம். புஷ், ஒஸாமா, சதாம் என்றெல்லாம் நவீன கடவுள்களாக அவருக்கு எத்தனை வேடமோ?
நன்றி: லேஸிகீக் | sify
தமிழ் | Tamil | tamilcinema | Rajini | Kamal
பெயரில்லா சொன்னது… 8/19/2005 10:48:00 AM
பெயரில்லா சொன்னது… 8/19/2005 10:51:00 AM
எனக்கென்னவோ ஷங்கருக்கும் ரஜினிக்கும் ஒத்துவராதுன்னு தோணுது. ரெண்டுபேரும் தன் திருப்திக்கு படம் இருக்கனும்னு நினைக்கிறவங்க. முக்கால்வாசி இந்த கூட்டணி கலைஞ்சிரும் பாருங்க.
Unknown சொன்னது… 8/19/2005 01:58:00 PM
அச்சச்சோ :-(
ரஜினிக்கு படம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே.... நல்ல மசாலாப் படம்; கொஞ்சம் அடிபட்ட/பாவப்பட்ட நாயகன்; கஷ்டப்படுபவன்; தங்கை; வில்லன்கள் :-?
Boston Bala சொன்னது… 8/19/2005 02:07:00 PM
கருத்துரையிடுக