திங்கள், செப்டம்பர் 19, 2005

தெரிப்பு

சுந்தர ராமசாமி --> பா ராகவன் --> கத்ரீனா --> பெப்ஸி உமா --> ஜான் ஜி ராபர்ட்ஸ்

சுராவின் சந்திப்பை முன்னிட்டு, ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தின நாள் ரிவிஷன் கொடுக்கும் +2 மாணவன் போல், ஆளுமைகள், மதிப்பீடுகள், ஜேஜே, காகங்கள் என்று கலந்துகட்டிப் புரட்டும்போது ஒத்துக்கொள்ளத்தக்க கருத்து பல கிடைத்தது. சுரா சொல்வார்...

இந்தியாவுக்குள் அகதிகளாய் வரும் சீனர்களால் ஆபத்து என்று எல்லா எழுத்தாளர்களும் குமுறிக் கொண்டிருந்தால், சீனர்களின் வருகை எவ்வாறு நன்மை பயக்கும்; குறைவான சம்பளத்தில் உழைப்பவர்களின் அவசியம்; எவ்விதம் அவர்கள் உள்நுழைவதால் பொருளாதாரம் சமனடைகிறது என்றெல்லாம் எழுதத் தோன்றும்.

கொஞ்ச நாள் கழித்து சீனர்களின் வருகை எவ்வாறு பாரதத்தை வீறுநடை போட வைக்கிறது என்று மட்டுமே பார்வை மங்கினால், உடனே அப்பொழுது புதிய கலாசாரத்தின் வருகை எவ்வாறு இந்தியாவை சீரழிக்கும்; உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு பறிப்பு; வோட்டுரிமை மாற்றங்கள் என்று எழுதுவேன் என்னும் அர்த்தத்தில் விளக்கியிருந்தார்.

அட.... நான் சுரா மாதிரி யோசித்திருக்கிறேனே என்று வியப்பு ஏற்பட்டது. சிந்திக்க மட்டுமே செய்திருக்கிறேன். அவரைப் போன்ற ஒளிவு மறைவற்ற அகப்பார்வையை தெளிவான முறையில் முன்வைத்ததுண்டா என்பதையும் சிந்திக்கிறேன்.

பா ராகவனின் கத்ரீனா குறித்த கட்டுரையும் ஒருவித சார்புநிலையைப் படம் பிடித்து வைக்கிறது. தமிழகத்தில் சுனாமியின் போதும் மும்பை முற்றுகையின் போதும் தலையிடாத அரசியலை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கத்ரீனாவை முன்வைத்து குடியரசு கட்சியும் சுதந்திர கட்சியும் தங்கள் அர்ப்பணிப்பையும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகளையும் நவம்பரில் வரப்போகும் இடைத்தேர்தல் அரசியலை அரங்கேற்றியது.

ஐயாயிரம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அனாதரவாக ஐ-10 நெடுஞ்சாலையில் பார்த்ததாக ஜெஸ்ஸி ஜாக்ஸன் வருத்தப்படுகிறார். அடிமைக் கப்பலை போல தோற்றம் அளித்ததாகத் தொடர்ந்து டிவியில் பல பேட்டி கொடுத்து வந்தார். உதவிக்காகத் தொடர்பு கொண்ட தேவாலயங்களில் 'அவர்கள் கறுப்பா? வெள்ளையா?' என்று விசாரித்ததாக வருத்தப்பட்டார்.

ஹஃபிங்டன் போஸ்ட்டை சேர்ந்த ராண்டால் ராபின்சன் அடுத்த நிலைக்கு சென்றார். 'கத்ரீனாவில் பாதிக்கப்பட்ட கறுப்பர்கள் பிணந்தின்னிகளாகிப் போனார்கள். அமெரிக்காவின் இனப் பாகுபாடில் முக்கிய இடத்தை அடைந்திருக்கிறோம். அமெரிக்கா என்பது மிகப்பெரிய பம்மாத்து' என்று எழுதினார். நேரில் சென்று பார்த்த மாதிரி விவரித்ததனால், நேரடியாகப் பார்க்க முடியாதவர்களின் கடுமையான விமர்சனத்தினால் 'இறந்தவர்களை உண்டு வாழ்கிறார்கள்' என்பதற்கு மட்டும் மறுப்பு விட்டார்.

தொலக்காட்சியில் நேரடி ஒளிபரப்பான நிகழ்ச்சியின் நடுவே மைக் மையர்ஸுடன் தோன்றிய கான்யே வெஸ்ட், 'ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கறுப்பர்களைப் பற்றி கவலையில்லை. நம்மை குறிவைத்து சுடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்' என்று பொரிந்து தள்ளினார்.

மைக் லூகோவிச் கார்டூன், கட்சித் தலைவர் ஹோவர்ட் டீனின் பேச்சுக்கள், பார்பரா லீ நேர்காணல்கள், டெட் ரால் கேலி சித்திரம் என்று தொடர்ந்து அடுக்கலாம். பா ராகவனும் விகடனில் எழுதினார்.

என்ன.... பெப்ஸி உமா தொலைபேசியது போல் வெகுஜன மீடியத்தில் எழுதிவிட்டார்.

தொலைபேசியில் வழக்கம் போல் 'நாலைந்து ஸ்பான்ஸர் மாறினாலும், நீங்க எப்படி இவ்வளவு இளமையாக இருக்கீங்க ?', 'வீட்டில் பையன் போன் பேசி விளையாடறானா ?' என்பது போன்ற சம்பிரதாயங்கள் முடிந்தவுடன், ஆங்கிலம் மட்டுமே உசாவும் நமீதாவை விட, தமிழில் சம்சரிக்கும் (முன்னாள் பெப்சி) உங்கள் சாய்ஸ், 'உமா'வை நோக்கி பிரமாஸ்திரத்தை ஏவினார் எல்லே அம்மணி.

'உங்களின் மனதை சூர்யா, அஜீத், விஜய், விக்ரம், ஆர்யா, சிம்பு, தனுஷ், ரவி போன்ற இளம் ஹீரோக்களில் யார் கவர்ந்திருக்கிறார்கள்?'

விவகாரமான கேள்வி. சரியான பதில் 'என் ஆருயிர் கணவன்'.

சமாளித்துக் கொண்ட உமா பதிலளித்தார். 'எனக்கு விப்ரோ ப்ரேம்ஜி, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, சபீர் பாடியாதான் மனங்கவர்ந்தவர்கள். அஃப்கோர்ஸ், என் கணவனை சொல்லியே ஆக வேண்டும்!' என்று முடித்துக் கொண்டார்

பொலிடிகலி இன்கரெக்ட் பதில்.

புக் மீமீயில் அஞ்சு புத்தகம் சொல்லுங்க என்றவுடன் ஐம்பது புத்தகங்கள் சொன்ன கதையாக, அதிகப்பிரசங்கி பதில். அறிவு உள்ளவர்கள்தான் அழகு உள்ளவர்களா? பணம் படைத்தவர்கள்தான் மனங்கவர்பவர்களா? நிறுவன முதலைகள்தான் முதல் தரமா? என்று எதுகை மோனையோடு கேள்வி கேட்க அருமையான வாய்ப்பு.

பா ராகவன் மாட்டிக் கொண்டார். பெப்ஸி உமா (இப்போதைக்கு) தப்பித்து விட்டார்.

எப்பொழுதும் வலைப்பதிவர்கள் வாயில் விழுந்து புரளாமல் இருக்க செனேடர்களிடம் அகப்பட்ட ஜான் ஜி ராபர்ட்ஸ் போல் பதில் சொல்லவேண்டும்:

Senator Charles E. Schumer, Democrat of New York, sarcastically derided the "absurd" nature of Roberts's responses. He wisecracked that if asked, Roberts probably would not even name a movie he liked. "I ask you if you like 'Casablanca,' " Schumer said. "You respond by saying, 'Lots of people like "Casablanca." ' You tell me, 'It's widely settled that ''Casablanca" is one of the great movies.' "


இது ஒருவழிப்பாதை.

ராபர்ட்ஸை ஷுமர்கள் போட்டுத் தாக்கலாம். செனேட்டர்களை குறித்து ராபர்ட்ஸ் இந்த மாதிரி எள்ளிக் கொண்டிருந்தால், அடுத்த அமெரிக்க ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியாது!

12 கருத்துகள்:

// எப்பொழுதும் வலைப்பதிவர்கள் வாயில் விழுந்து புரளாமல் இருக்க செனேடர்களிடம் அகப்பட்ட ஜான் ஜி ராபர்ட்ஸ் போல் பதில் சொல்லவேண்டும் //

:-) :-)

http://photos1.blogger.com/img/216/945/640/Gurumurthy_takes_new_orleans_1.jpg

http://photos1.blogger.com/img/216/945/640/Gurumurthy_takes_new_orleans_Thuglaq_1.jpg

Original & better version of Gurumurthy take on New Orleans-Mumbai @ http://iist.com/tuqlaq21sep2005.zip

உங்க கருத்துகளோட நானும் ஒத்துப்போறேன். பெப்ஸி உமா மேட்டர் தவிர!! :)

ஆமா.. இவ்ளோ எழுதறதுக்கு உங்களுக்கு எங்க இருந்து டைம் கெடைக்குது?? :)

ever hear of "apples with oranges"? :)

அருணா/சரவ்/பரி... நன்றி

---apples with oranges---

அமெரிக்காவையும் இந்தியாவையும் சொல்றீங்களா அல்லது பா.ரா.வையும் டெமொக்ரடிக் கட்சியையும் சொல்றீங்களா ;;-))

you are trying to defend the indefensible.i had pointed out how absurd his piece on africa was.gurumurthy will go on writing nonsense like this for ever.

why am i not surprised?

முன்முடிவுகளோடு அதற்கேற்ற சுட்டிகளைத் தேடியெடுத்துக் கட்டுரை எழுதுற நீங்க, இந்தப் பதிவை எழுதி இருக்கலைன்னாத்தான் ஆச்சரியம். ;)

-மதி

//ever hear of "apples with oranges"? :)//

:p

-Mathy

---defend the indefensible--

:-) கத்ரீனா குறித்து எழுதியதில் ஓரளவு உண்மை இருப்பதாக பட்டது.

---how absurd his piece on africa was.gurumurthy will go on writing nonsense like this for ever.---

அது போலவே, பத்ரி குறிப்பிட்ட செப். 11 கன்ஸ்பிரசி தியரி குறித்த 'ஓபன் டிக்கட்' குறித்தும் நான்சென்ஸ் என்றே நினைத்தேன்.

பாப்லோ நெருதா விமர்சிக்கப்படுவது போல், பெரியாரை சில தலித் எழுத்தாளர்கள் தள்ளுபடி செய்வது போல், இந்த வகை எழுத்துகளுக்கும் இடம் கொடுக்கலாம் ;-)


மதி,

காந்தியின் கிண்டலையும் 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினு'முக்கும் உதாரணமாய் கதையொன்று சொல்வார்கள்.

காந்தியை தாறுமாறாய் விமரிசித்து பிரிட்டிஷ் ஆங்கிலேயர் கடிதம் அனுப்பியிருக்கிறார். முழுவதுமாய் படித்துவிட்டு, பக்கங்களை இணைக்கப் பயன்படும் குண்டூசியை மட்டும் வைத்துக் கொண்டு, கடிதத்தை குப்பையில் போட்டுவிட்டார்.

---முன்முடிவுகளோடு அதற்கேற்ற சுட்டிகளைத் தேடியெடுத்துக் கட்டுரை --

---இந்தப் பதிவை எழுதி இருக்கலைன்னாத்தான் ஆச்சரியம்.---

எல்லாருக்கும் பட்டம் கொடுத்து, அவர்களைப் பரிவட்டத்துடன் பார்ப்பதை விட்டு விட்டு, படிக்க வேண்டுகிறேன். தங்களின் ஆச்சரியம் எனக்கு இலக்கல்ல.

"எவன் செத்தால் எனக்கென்ன... என் சொகுசுக்குக் குறை வந்துவிடக் கூடாது!’ என்கிற மனோபாவம்தான் அமெரிக்கக் கலாசாரமாக இருக்கிறது." என்னும் வரிகள் பலருக்கும் பொருத்தம்.

ஜீனோசைட் என்றால் ஒற்றைப் பரிமாணம், ஜெர்மானிய தேர்தல் வெற்றிக்குப் பின் உள்ள டர்க்கியை ஈ.யூ.க்குள் நுழைய விடாத அரசியல் என்று பல இடங்களுக்கு இந்த கருத்து ஒத்துப் போகிறது. இந்த மாதிரி கட்டுரையின் பல இடங்களில் ஒத்துப் போனதால் நான் இந்தப் பதிவிட்டேன்.

ஸ்மைலி மட்டுமே போடுவது; ஒரு வரி தத்துவம் மட்டுமே நாமகரணமிடுவது; போன்றவற்றுக்கு பதில் கத்ரீனா குறித்த பாராவின் கட்டுரை 'விதயங்கள் தெரியாத கட்டுரை'யாக எவ்வாறு ஆனது என்பதை விளக்கமாக சொன்னால் காந்தியின் குண்டுசி போல் எனக்கும் பயனாக இருக்கும்.

நான் எழுதியதற்கே எனக்கு வக்காலத்து வாங்கவும் சமாளிக்கவும் ஒழுங்காக வராது (டிஸ்க்லைமர் போட்டாச்சு ;-)) இதில், இன்னொருவர் எழுதியதற்கு :-P

தங்களின் பின்னூட்டத்திற்கு என்னுடைய நன்றி :-)

I too wrote about Raghavan's article today. Only after publishing did I read your post. I feel that article was extremely biased.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு