வெள்ளி, அக்டோபர் 28, 2005

மேற்கோள்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - I

சாமிநாதன்: ஹார்ட் கம்பரைவிட்டு வர மாதிரி தெரியலை.

அண்ணாமலை: அவர் மொழிபெயர்ப்பில் போய்விட்டார்.

சு.ரா.: வெளியே விட்டு வரலை என்பதால் மாடர்னிடி தெரியலைன்னு இருக்கா? அவங்களோட டேஸ்ட் அது.

சாமிநாதன்: ஒண்ணு ரெண்டு பேர் இருப்பதால் அவர் அதுலதான் போகஸ் பண்றார். அதனால சொல்றேன். அதை நான் தப்புன்னு சொல்லலே.

சு.ரா.: தப்புன்னு சொல்லலே என்பதைவிட தப்புதான்னு சொல்லணும். ஏன்னா, ஒரு தமிழ் ஸ்காலர் வந்து - அவர் தமிழ் ஸ்காலரா இருந்தார்னா - அவருக்கு எல்லா sides-ம் தெரிஞ்சிருக்கணும். அட்லீஸ்ட் முக்கியமான sides தெரிஞ்சிருக்கணும். எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க இயலாது. நம்மை மாதிரி மாடர்னிடி தெரியும்னு எதிர்பார்க்க முடியாது. ஆனால் முக்கியமானவை தெரிஞ்சிருக்கணும்.

சு.ரா: சிலப்பதிகாரத்தைப் பார்த்தசாரதின்னு ஒருத்தர் மொழிபெயர்த்திருக்கிறார். ரொம்ப எபர்ட் போட்டுத்தான் செஞ்சிருக்கார். செவன் டூ எய்ட் இயர்ஸ் வொர்க் பண்ணியிருக்கார். ரீச் பண்ணலையே. வேர்ல்ட்ல இருக்கற முக்கியமான எத்தனை ஸ்காலர்ஸ் - இங்லீஸ் ஸ்காலர்ஸ் - அதை ரீட் பண்ணியிருக்காங்க. அது முக்கியமான கொஸ்சன்.


சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் - II

ராஜாராம்: இருமொழி திட்டத்தினாலே என்ன பண்ணாங்கன்னா - they did not know the consequences. மும்மொழி திட்டத்திலே - you can make Tamil compulsory. இருமொழி திட்டத்திலே அதைப் பண்ண முடியாது. ஏன்னா, you can choose only two languages.

சு.ரா.: கேரளாவுலே இது நடக்குமா? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. உங்க பக்கத்து மாநிலத்திலே - ஜெயலலிதா மாதிரி ஒரு அம்மா வரமுடியுமா? தூக்கி எறிஞ்சிடுவாங்க. 24 மணி நேரத்திலே தூக்கி எறிஞ்சிடுவாங்க. இந்த ஆட்டங்கள் ஏதாவது அங்க நடக்குமா பாருங்க. நம்ம ஊருக்குப் பக்கத்துல இருக்கற பல இடங்களில் இந்த மாதிரி ஆட்டம் போட முடியாது. அப்படின்னா - இங்க மட்டும் ஆட்டம் போட முடிவதற்கான காரணங்கள் என்ன? அந்த rootsதான் மிக முக்கியமானது. அதை உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா? அப்போதான் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

சு.ரா.: இங்க higher level-ல எவ்ளோ வேணும்னா லஞ்சம் இருக்கலாம். ஆனா, lower level-ல கிடையாது. லஞ்சம் இருக்கா இல்லையா என்பதில்லை. ஒரு ஆபிசுக்குள்ளே நுழைஞ்சதுமே, ஒரு மனுஷன் உள்ளே வந்திருக்கான் அப்படீன்ற எண்ணம் இந்த கன்ட்ரிலே இருக்கு. இந்தியாலே கிடையாது. ஸ்டூலை ஒளிச்சி வெச்சுக்கறான் சார். அங்கே உட்காரக் கூடாதுன்னு. முக்கியமான ஆளுங்க வந்தாதான் ஸ்டூலை எடுத்து வருவான்.முழு கலந்துரையாடல்: 1 & 2 - பி.கே. சிவகுமார் & திண்ணை
| |

2 கருத்துகள்:

According to Su.Ra Jaggi Vasudev is
the one person in Tamil Nadu who is in touch with reality. Who was the other person - perhaps Su.Ra.

சாமியார்களின் சென்சிபிள் சாதுவாக, மேலாண்மையையும் ஆன்மிகத்தையும் இணைப்பவராக கண்டிருப்பாரோ!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு