திங்கள், டிசம்பர் 12, 2005

துரியோதனாதிகள்

Operation Duryodhana, a COBRAPOST-AAJTAK investigation unearths 11 MPs accepting cash to table questions:: நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக பதினொன்று எம்.பி.க்கள் பணம் வாங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் எம்.பி. ஒருவரும், ஐந்து பிஜேபி எம்.பி.க்களும், இரு பிஎஸ்பி எம்பி.க்களும் தாற்காலிகமாக தங்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

பங்காரு லஷ்மண், ஜார்ஜ் பெர்னாண்டஸ், லஞ்சம் வாங்கியதை டெஹல்கா வெளிச்சத்திற்கு கொண்டு வந்தபிறகு பரப்பாக சில மாதம் முன்பு ஷக்தி கபூர் போன்ற திரைப்படத்துறை சார்ந்தவர்களின் பெண்ணாசையை ஒளிபரப்பினார்கள்.

போன மாதம்தான் அமெரிக்காவில் 'ஆஜ் தக்' ஒளிபரப்பைத் தொடங்கியது. தற்போது இந்த 'கோப்ரா ஸ்டார்' விவகாரம், அதன் புகழை பரப்ப உதவும். அமெரிக்க ஊடகங்களிடையே பெயர் வாங்கவும் வைக்கலாம்.

கேள்வி கேட்க ஊக்கத்தொகை வாங்கியவர்கள்:

நரேந்திரா குஷ்வாலா (பிஎஸ்பி) ரூ. 55,000
எம் கே பட்டீல் (பிஜேபி) ரூ. 45,000
சத்ரபால் சிங் லோதா (பிஜேபி) ரூ. 15,000
மஹாஜன் (பிஜேபி) ரூ. 35,000
மனோஜ் குமார் (ரா.ஜ.த.) ரூ. 110,000
சுரேஹ்ச் சந்தல் (பிஜேபி) ரூ. 30,000
ராஜாராம் பால் (பிஎஸ்பி) ரூ. 35,000
லால் சந்திர கொல் (பிஜேபி) ரூ. 35,000
பிரதீப் காந்தி (பிஜேபி) ரூ. 55,000
சந்திர பிரதாப் சிங் (பிஜேபி) ரூ. 35,000
ராம்சேவக் சிங் (காங்.) ரூ. 50,000

பாராளுமன்ற உறுப்பினர் நிதிக்காக கிடைக்கும் லஞ்சங்களை நரேந்திரா குஷ்வாலா பகிர்ந்துள்ளார். எம்.பி.க்கான கையூட்டாக பத்து சதவிகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி கான்பூரில் படித்த எம் கே பட்டீல் லஞ்சத்துக்கு எதிரியாக தன்னை சித்தரித்து வந்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட்ட விளையாட்டான கேள்விகள் கூட, ஆதார உண்மைகள் ஆராயப்படாமல் எழுப்பப்பட்டு, கடிதம் மூலம் உரிய அமைச்சரவையிடம் சேர்ப்பிக்க வகை செய்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வை செய்ததன் முடிவாக 'உங்களுக்கு யாரைத் தெரியும் என்பதை வைத்துதான் காரியத்தை சாதிக்க முடியும்' என்பதை உணர்வதாக அனிருத்தா பஹல் கூறுகிறார்.

வேறு சில இடைத் தரகர்களை அணுகியிருந்தால், தமிழக எம்.பிக்கள் கூட வெளிப்பட்டிருக்கலாம்.


தொடர்புள்ள சுட்டிகள்: India Uncut | DesiPundit » Operation Duryodhana: Why Was Desipundit Denied Permission To Invest In SSIs?



| |

3 கருத்துகள்:

Sooperub!

ரெண்டு நாளா இங்க திடீர்னு ஆஜ்தக் தெரியுது.. நான் கூட விளையாட்டா பே சேனல அமுக்கிட்டோமோ என்னமோன்னு நினைச்சேன்... அதுல பாத்தா எப்ப பாத்தாலும் காரே பூரேன்னு பணம் பரிமாறது நடக்குது... இந்தி புரியாம என்னவோ அரசாங்க ஆபிஸ்லதான் மேட்டர் பண்ணிட்டாங்க போலருக்கு தெகல்காலன்னு நினைச்சேன்... ஓ இதான் மேட்டரா...

திருந்தவே மாட்டானுங்க இவனுங்க...

21 வரை இலவசம் :-)

(கேள்வி கேட்பதற்கு பணம் வாங்குவது தவறில்லை என்ற ரீதியில் நில அலசல்கள் வர ஆரம்பித்திருக்கிறது. இவை தனிப்பட்ட நலன் சார்ந்தவை. பொதுமக்களுக்காக உழைப்பதுதான் எம்.பி.க்களின் கடமை. சட்டம் இயற்றுவது, நாட்டை சுபிட்ச பாதையில் கொண்டு செல்வது போன்றவற்றிற்கு காசு கேட்டால் தவறு என்று எழுதியிருக்கிறார்கள்.)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு