செவ்வாய், டிசம்பர் 13, 2005

வலைத்தடம்

1. கோட்டை விட்ட ஜெயலலிதா: பதினைந்தாயிரம் கோடி (எத்தனை சைபர்?) ரூபாய் செலவில் புதிய பேட்டை அமைப்பதில் களத்தில் இருந்த நொய்தா, கொல்கத்தா, பெங்கலூரு, ஹைதராபாத், சென்னை நகரங்களில், முதல்வரும் மத்திய அமைச்சருக்குமான சண்டையில் சென்னை வாய்ப்பை தவறவிட்டது. (வழி)



2. இராணுவத்தில் பாலியல் புகார்: கடந்த வருடத்தில் ஆறேழு முறை பணி மாற்றப்பட்ட அஞ்சலி குப்தா பாலியல் புகார் கொடுத்ததால், கைது செய்யப்பட்டு, கண்காணிப்பில் அடைக்கப்பட்டார். மிக விரைவாக எந்த விதமான இராணுவ நலன்களும் மரியாதகளும் கிடைக்காதவகையில் பணிநீக்கம் Spoof Story by Vikadan on Kushboo with Vijayganth's Kid with Suhassini as Wifeசெய்யப்பட்டார். (வழி)



3. சொல்லாமல் விட்டது - உதா பார்த்திபன்: ட்ரேஸ் எடுக்கத் தெரிந்த ஓவியரும் கிளுகிளுப்பான ஆசிரியரும், சாதாரண கதைக்கு, அர்த்தபுஷ்டி நிறைந்த படத்தால், கொழுப்பை காட்டியிருக்கிறார்கள்.



4. இந்திரா பார்த்தசாரதி தொலைகாணல்: பேசவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவுடன் ஒப்புக்கொண்டு, பொறுமையாக பேட்டி கொடுத்தவருக்கு நன்றிகள்.



5. Opinmind: எது சொன்னாலும் எதிரும் புதிருமான கருத்துக்கள் வருவது இயற்கை. கூகிள் எதிர்மறையான வலையகங்களை முதன்மையாக தேடலில் கொடுப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. 'ஓபின்மைண்ட்' இரு பக்கங்களையும் ஒருங்கே காட்டுகிறது.



6. இணையத்தில் எழுதி புலிட்சர் வாங்கலாம்: வலையில் எழுதுபவர்களுக்கும் புலிட்சர் பரிசு கிடைக்குமாறு வகை செய்திருக்கிறார்கள். ஆனால், வாரமொருமுறையாவது வெளிவரும் அச்சு பத்திரிகையில் எப்பொழுதாவது எழுதியிருக்க வேண்டும் என்று பொடி வைத்திருக்கிறார்கள். (வழி)



7. gada.be: பல வலையகங்களில் இருந்தும் தேடல் வசதி; வந்த முடிவுகளை ஓ.பி.எம்.எல். ஆக மாற்றலாம்; எளிமையாகத் தேட இன்னொரு நிரலி.



8. InBubbleWrap: அமெரிக்காவில் இருப்போருக்கு இலவசமாக புத்தகங்களும் இன்ன பிறவும் அனுப்புகிறார்கள். ஆம்... முற்றிலும் இலவசம்! (எனக்கு ஏற்கனவே இரு புத்தகங்கள் வந்து சேர்ந்தாச்சு.)



9. உறை விற்க தடை விதிக்க கோருகிறார்கள்: தானியங்கி ஆணுறை விற்பனை மையங்களை நிறுவுவதற்கு முஸ்லீம் முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்துகிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.



10. rsstroom reader - toilet paper printer!: பயோமெட்ரிக்ஸ் முறையில் யார் 'ஆய்' போகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்களின் செய்தியோடைகளை கழிவறைக்கோப்பாக அச்சடித்துத் தரும் சாதனைத்தை இணையத்தில் விற்கிறார்.

தமிழ்ப்பதிவுகளை நக்கலடிக்கவில்லை என்று மன்னிப்பு கோரிவிட்டார்.






| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு