வனதேவதை
வனதேவதை க(வி)தையைப் படித்தவுடன் சமீபத்தில் கேட்ட உல்டா கதை ஞாபகம் வந்தது.
மரம் வெட்டிக்கொண்டிருந்தான். கோடரி தவறிப் போய் ஆற்றில் விழுந்தது. தேவதையை வேண்டிகொண்டான். தேவதையும் தோன்றினாள்.
தங்க கோடாரியை காட்டினாள்; இல்லையென்றான்.
வெள்ளிக் கோடாரியை காட்டினாள்; அதுவும் இல்லையென்றான்.
இரும்புக் கோடாரியை காட்டினாள்; ஆமாம் யென்றான் வியாபாரி.
மூன்றையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.
இன்னொரு நாள் குளிக்கும்போது தவறிப்போய் மனைவி மூழ்கி விட்டாள். தேவதையை வேண்டிகொண்டான். தேவதையும் தோன்றினாள்.
முதலில் ஐஷ்வர்யா ராயைத் தூக்கிக் கொண்டு வந்தாள். ஆம் என்றான் மரவெட்டி.
அதிர்ந்து போனாள் தேவதை.
'நீங்க முதலில் ஐஷ்வர்யா ராய்; அதற்கப்புறம் பிபாஷா பாசு என்று கொண்டு வருவீங்க... அப்புறமா மூன்று பேரையும் வச்சுக்கோ என்று கொடுத்துருவீங்க. ஒண்ணை மட்டும் வைத்துக் கொண்டே படும்பாடு தாங்கலை. அதான் முதலில் ஒருத்தி வந்தவுடனேயே தலையாட்டிட்டேன்' என்றான் மரவெட்டி.
குட்டி கதை | தமிழ்ப்பதிவுகள்
ஆகா, கதையை நன்றாகவே உல்டா பண்ணியிருக்கீங்க. :)
பாராட்டுகள்.
இதே மாதிரி தான் காக்கா, நரி, வடை கதையை உல்டா செய்து ஒரு குழந்தை சொன்னது.
நரி காக்காவை பார்த்து, கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, உன் கண்ணு ரெண்டும் என்று பாடி, காக்காவை ஒரு பாட்டு பாடச் சொல்ல, உடனே
காக்கா வடையை காலுக்கு அடியில் வைச்சிக்கிட்டு "ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே, ஏமாறாதே"
என்று பாடி,
"இப்போ என்ன செய்வீங்க், இப்போ என்ன செய்வீங்க" என்று பாடியதாம்.
நரியும் ஏமாந்து போயிட்டதாம்.
சொன்னது… 1/29/2006 10:39:00 PM
காலத்திற்கேற்றபடி கதையை மாத்திட்டாங்க போல... பரஞ்சோதி.
பிரிஸ்டலுக்கு, __/\__
சொன்னது… 1/30/2006 09:09:00 PM
கருத்துரையிடுக