ஞாயிறு, மார்ச் 05, 2006

78th Oscar - Academy Awards

'தி டெய்லி ஷோ' வழங்கும் ஜான் ஸ்டூவர்ட் சொன்னதில் மனதில் நின்ற சில ஜோக்குகள்


  1. ஆஸ்காருக்கு வோட்டளிக்கும்போது கவலைப்பட வேண்டாம். உங்கள் வோட்டுக்களை ஒழுங்காக கணக்கில் எடுத்துக் கொண்டு, வெற்றியைத் தேர்ந்தெடுப்பார்களே! (ஜார்ஜ் புஷ்ஷுக்கு உள்குத்து)

  2. இங்கே இருக்கும் பெண்மணிகளைப் பாருங்கள். திருட்டு விசிடிப் பிரச்சினையால் போதிய அளவு மாராப்பு கூட போட முடியவில்லை. (பகட்டான ஆடை தரித்தாலும், 'தியேட்டருக்கு கூட்டம் வரலியே' என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்களுக்கு காணிக்கை.)

  3. தைரியமாக அரசாங்கத்தின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்திய ஊடகங்கள் குறித்த படங்கள் எல்லாமே ஏன் பீரியட் படங்களாகவே இருக்கிறது? (தற்காலத்தில் 'குட் நைட் குட் லக்' சொல்பவர்கள் அடங்கிப் போவதை கவனித்தார்.)

  4. ஆப்பிரிக்காவில் பாதி குழந்தைகளை ஏஞ்சலினா ஜோலி-தான் தத்தெடுக்கப் போவதாக நினைத்து பெரிய வெயிட்டிங் லிஸ்ட்டே இருக்கிறது. நான் கூட காத்திருப்புப் பட்டியலில் பதிந்து கொண்டேன்.



  • பச்சை கலர் திரையைப் பின்னால் வைத்துக் கொண்டு 'கிங் காங்' ஜாலம் காட்டுவதைக் குறிக்க பச்சை டிரெஸில் விருது வழங்க வந்தார் பென் ஸ்டில்லர்.

  • 'ப்ரோக்பெக் மவுண்டென்'க்கு முன்பே தற்பால் விரும்பிகளைக் காட்டும் வெஸ்டர்ன் படங்கள் வெளிவந்ததாக நையாண்டி செய்யும் பிட்-ஒட்டிய வெட்டிக் காட்டிய ரீல்கள் சிரிப்பலையைக் கொணர்ந்தது. தொடர்ந்து திரையிடப்பட்ட சீரியஸ் montage-கள் ஜான் ஸ்டூவர்ட்டே self-deprecating-ஆக சொன்னது போல் இதற்கு மேல் காட்டுவதற்கு எதுவுமே இல்லை என்பது போல் அயர்ச்சியை ஏற்படுத்தியது.

  • ஜென்னிஃபர் ஆனிஸ்டன் விருது வழங்குவதற்கு வந்திருந்தார். பிராட் பிட் + ஆஞ்சலினா ஜோலியைக் காணோம்.

  • நாம் காந்தியை மறந்தாலும், பயோகிராஃபி குறித்தப் பதிவின் முடிவாக காந்தியைக் காண்பித்து ஆஸ்காரை சிறப்பித்துக் கொண்டார்கள்.

  • விருது பெற்றதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி நவிலலை அநியாயத்துக்கு ப்ரெஷர் போட்டு, இசையில் அமுக்கி, மைக்கைத் துண்டித்து துரிதகதியில் மேடையை விட்டு விரட்டினார்கள்.

  • விருதுகளை அள்ளிய 'கிராஷ்' படப் பாடலின் முன்னுரையாக
    1. 'காழ்ப்புணர்ச்சிக்கும் அரவணைப்புக்குமான போராட்டம்;
    2. மன்னித்தலும் வருத்தத்துக்கும்;
    3. பாவமும் மீட்சியும்'
    என்று அருமையான முன்னோட்டம் கிடைத்தது.

  • தேர்தலின் போது 'ஜெயலலிதா ஆட்சி அழிச்சாட்டியம்' என்று திமுக-வும்; 'மத்திய ஆட்சி மோசம்' என்று அதிமுக-வும் பிரச்சாரம் செய்வது போல் ஆஸ்கார் பரிந்துரைப் பெற்றவர்கள் குடுமிப்பிடி விளம்பரங்கள் இட்டால் எப்படி இருக்கும் என்னும் கற்பனை அமெரிக்க தேர்தல் கள நிஜத்தை பிரதிபலித்து சிரிக்கவும் வைத்தது.

  • ஜெஸ்ஸிகா ஆல்பா ரொம்ப திருத்தம் :-)

  • புன்னகையரசி என்னும் பட்டத்தை ஜென்னிஃபர் கார்னருக்குத் தரவேண்டும். ஏழு மாச கர்ப்பத்துடன் வழுக்கி விழப் பார்க்கும் ஸ்டண்ட் எல்லாம் அடித்து புன்முறுவல்களுடன் விருது வழங்கினார்.

  • 'I am just trying to matter' - சிறந்த நடிகை விருது வென்ற ரீஸ் விதர்ஸ்பூன

  • 'Art is not a mirror, but it is a hammer' - க்ராஷ் படம் தயாரித்தவர்கள்.

  • நிகழ்சியின் மாஸ்டர்பீஸ் என்பது சிறந்த படத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இசையை எல்லாம் வயலினில் லாவகத்துடன் கொண்டுவந்தவரையே சேரும். ஆப்பிரிக்க இசையைக் கொடுக்கும் 'தி கான்ஸ்டண்ட் கார்டனர்' முதல் வெஸ்டர்ன் சாயல் கொண்ட 'ப்ரோக்பேக் மவுண்ட்டன்' வரை ஒலிக்கவிட்டார்.

  • இசைக்காக விருதை வென்றவர் அர்ஜெண்டைனாவை சேர்ந்தவர். ஏ.ஆர். ரெஹ்மான் எப்பொழுது :-)

  • டிவிடி-யில் படத்தைப் பார்க்க வேண்டாம்; வெள்ளித் திரையில் கண்டால் மட்டுமே படங்கள் ரசிக்கும் என்னும் அறிவுறுத்தலை அகதெமி தலைவர் கொடுத்தார். (ஸ்டூவர்ட் கேட்க மறந்த கேள்வி: பின்ன ஏன் சார் எல்லா திரைப்படங்களும் குறுந்தட்டிலும் வெளியாகிறது? எச்.பீ.ஓ முதல் ஏ.பி.சி வரை எல்லா கன்னல்களிலும் ஒளிப்பரப்பப்படுவதும் ஏன்???)

  • விளம்பரங்கள் நன்றாகவே இருந்தது.
    1. லோரியால்-க்கு இமை சிமிட்டிய ஐஷ்வர்யா பச்சான் ராய்;
    2. அழகிய ஆடைகளில் உலவிய ஜேசி பென்னி மங்கையரின் உடைகள்;
    3. மனோஜ் நைட் ஷ்யாமளனின் கற்பனைச் சிறகுகளை விரித்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்;
    4. டையட் கோக்கினால் டட்ச் தைரியம் பெற்றவனின் காதல் முத்தம்
    5. குரங்குகளுக்கு வேலை பார்ப்பவனை கேரியர்பில்டர்.காம் மூலம் தப்பிக்க சொல்வது





    | |

  • 4 கருத்துகள்:

    'Art is not a mirror, but it is a hammer'


    'Art is not a mirror(that reflects the society), but it is a hammer(that shapes it)' என்று முழுமையாக பதித்திருக்கலாம்.

    John Stewartன் சில உயர்தர ஜோக்குகள் பலரையும் போய்ச் சேரவில்லை என்பது ஒரு வருத்தம். பென் ஸ்டில்லரை புரிந்துகொள்ளவே நேரமெடுத்தார்கள்.

    அந்த ஓப்பணிங் வீடியோ சொல்ல மறந்துட்டீங்களே ரெம்ப நல்லா இருந்துச்சு.

    ஷ்யாமளன் விளம்பரம் அருமையா இருக்குது.

    சட்டுன்னு ஓடிப்போய் டி.விய ஆஃப் பண்ணும் பழக்கமுள்ள என் பையன கட்டுப்படுத்திட்டுத்திட்டு முழு ஒலிபரப்பையும் பார்த்தேன்.

    >>When will AR Rahman win Oscar?
    When he stops getting inspired by other countries music and use them and start using his creativity :).

    ---முழுமையாக பதித்திருக்கலாம்.---

    பத்து செகண்ட் டைம் லிமிட் கொடுத்திருந்தாங்களே ;-) அவசரத்தில் முழுங்கிட்டேன்... விட்டதௌ பூர்த்தியாக்கியதற்கு நன்றி.

    ---ஓப்பணிங் வீடியோ ---

    போட்டுத் தாக்கியிருந்தார். பல பெருந்தலைகளைப் பொருத்தமாக பயன்படுத்தியிருந்தார். I presume hollywood did not like stabs at themselves (like pulling down the statue will be symbolic enough?)

    ---ஷ்யாமளன் விளம்பரம் ---

    class apart; was in similar taste & style of his movies.

    ---start using his creativity ---

    இப்படிக் கவுத்துட்டீரே :-|

    ஆஹா! இன்னும் இந்த CAS கருமாந்தரம் இருக்கறவரைக்கும் டார்ச்சர்தான். புலம்பல்தான்ய்யா! - வேற என்ன சொல்ல முடியும் சென்னையிலிருந்து ;)

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு