செவ்வாய், மார்ச் 07, 2006

Reactions to Varanasi Blasts

செய்தி: ரீடிஃப் | கூகிள் தேடல் | IBNLive : Narendra Nag's Blog

1. நடுநிலைவாதி: கண்டிக்கிறேன்.

2. மறுமொழிவாதி: நன்றி!

3. இடதுசாரி அலசல்வாதி: காசியை இன்னொரு அயோத்தியாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். திட்டமிடுகிறது. நடக்கப்போகும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு அவர்களே குண்டுவெடிப்பைத் தூண்டியிருக்கிறார்கள்.

4. நாத்திகவாதி: கடவுள் காப்பாற்றுவான் என்கிறார்களே... இறந்தவர்களை ரட்சிக்க இறைவனால் முடியவில்லையா?

5. குரூர நகைச்சுவைவாதி: கோவிலுக்கு சென்றால் மோட்சம் கிட்டும் என்றார்களே? இவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

6. ஹிந்துத்வாவாதி: காசி விச்வநாதருக்குப் பக்கத்தில் இருக்கும் மசூதியை இடித்துவிட்டு அன்னபூரணிக்கு புனருத்தாரணம் செய்வது மட்டுமே தீர்வு.

7. அமெரிக்க வெளியுறவுத்துறை: இந்தியாவுக்கு தற்போது செல்லுதல் வரவேற்கத்தக்கதல்ல. பாதுகாப்பு குன்றிய நிலையில், வெளிநாட்டுக்காரர்களின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் சூழல் இந்தியாவில் நிலவுவதால், அமெரிக்கர்கள், உத்தர பிரதேசம், பிஹார், உத்தரான்சல் மாநிலங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

8. முற்போக்குவாதி: இந்த குண்டுவெடிப்பை வரவேற்கிறேன். இது போன்ற வீரதீரச்செயல்களால்தான் நாட்டில் இருக்கும் அவலங்கள் கவனிப்புக்குள்ளாகிறது. பிரச்சினையை மூடி மறைத்து புஷ்ஷை வரவேற்கும் செய்கைகள் உலக அளவில் திரும்பிப் பார்க்கப்படுகிறது. சிறுபான்மையினரை அடக்கியாளும் வரை இவ்வித வெடிப்புகள் தொடரும் என்பதை தேசியவாதிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை.

9. தமிழக பி.ஜே.பி. அரசியல்வாதி: கோவை குண்டுவெடிப்பை மறந்து விட்டோமா? தமிழகம் வாரணாசியாக மாறாமல் இருக்க பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பீர்கள்.

10. ஆளுங்கட்சி: குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தோம். மிகவும் வருந்தத்தக்கது. நாசகார சக்திகளை அடையாளம் கண்டுபிடிப்பதில் காவல்துறை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. கூடிய சீக்கிரமே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். மேலும் பல திட்டங்களை முன்பே அறிந்து முறியடித்து வருகிறோம்.





| |

4 கருத்துகள்:

Balaji

It is a highly insensitive post. Will you dare to post a similar post if Muslims are killed in a similar blast? If you dare, condemn this murderous most inhuman killings otherwise keep quiet atleast. Do you have guts atleast to openly condemn the terrorrists? This is not time for comedy. Look at the photos of the victims. Kashmir, Godhra, Parliament, Coimbatore, Bangalore, Akshardham, Kaasi, where is the end? Instead of raising voices against jihadi forces, you guys are having fun at the perils of innocents. What to say?

Sorry
STR

BALA,

NEENGAL ITHIL YAAR?

STR,

There is nothing insensitive about this post - it presents the standard talking points and ridicules them. The message that it conveys is (to me) similar to the one that you are writing - another such incident happens and another series of stupid pronouncements will be made and life will go on without any real change happening. Formal condemnations are trite, and are no different from the first in the list of Bala's caricatures.

Srikanth

---NEENGAL ITHIL YAAR---

I was shocked & depressed. பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக்கும் எவ்வாளவு பெரிய வித்தியாசம் என்னும் வருத்தம் வந்தது.

ஐ.பி.என்.-இல் இருந்து...
IBNLive : Narendra Nag's Blog: "A Kashmiri militant was caught in Varanasi a few months ago .. but no action was taken at the time. Intelligence sources have also told SIT chief V K Shashikumar as well as Crime Bureau Chief Shiv Pujan Jha that information about such an attack was conveyed to the state government more than a month ago.

Raj Babbar, filmstar and expelled leader of the SP says that UP has a huge law and order problem with criminals ruling the roost. Babbar was expelled from the Samajwadi Party for saying the same.

Uma Bharti says the government is primarily responsible for not controlling certain people. When asked who, she names Muktar Ansari ... calling him an "unsocial element."

இந்த செய்திகளின் பின்னணியில் 'அரசியல்' இருக்கலாம்.

ஆனால், சோனியா காந்தி உயிருக்கு ஆபத்து என்றால், இந்தத் தகவல்கள் எவ்வளவு கர்மசிரத்தையாக ஆராயப்பட்டு, மேற்கொண்டு விசாரிக்கப்பட்டிருக்கும். ஜெயாபச்சானின் பதவி பறிபோவதுதான் உத்தரப்பிரதேசத்தின் தலையாயப் பிரச்சினை போல சமாஜ்வாதி கட்சி நடந்து கொண்டிருக்கிறது.

நிகழ்வு முடிந்து பத்து நாள் கழித்து 'பதினைஞ்சு பேர்தானே செத்தார்கள்' என்னும் அலட்சியத்துடன் அலசல் மட்டும் வரும்.

ரயில்வே பட்ஜெட் பாராட்டப்படும்போது, சென்ற ஆண்டு நடந்த விபத்துக்களையும் உயிர்/கை/கால் இழப்புகளையும் மறந்துவிட்டு 'சரக்கு இருவுள் வாயிலின்' லாபக்கணக்கு மட்டுமே மனதில் தங்குவது போல், வேறெதோ மட்டுமே முக்கியத்துவம் அடைந்து இறந்தவர்களை மறந்து விடுகிறேனே என்னும் சுயபச்சாதாபமும் இதில் உண்டு.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு