வியாழன், ஏப்ரல் 13, 2006

Attention Grabbed News

சமீபத்தில் என் சிந்தனையை உசுப்பேற்றிய அல்லது அடர்த்தியான விஷயகனம் நிரம்பிய அல்லது 'டக்கரா யோசிக்கறியே கண்ணு' என்று 'அட' போடவைத்த சில ஆங்கில செய்திக் கோர்வைகள்:


  • நியு யார்க் டைம்ஸ்: இந்தியாவில் நடைபெறும் மாவோப் போராட்டங்கள் குறித்த பதிவு.

  • நியு யார்க் டைம்ஸ்: www.zunafish.com பண்டமாற்றுக்கு குக்கூரல் இடுகிறது.

  • ஹெரால்ட் ட்ரிப்யூன்: வலைப்பதிவு மூலமாக நாலு காசு சம்பாதிக்க வழி காட்டுறாங்க.

  • கார்டியன் புத்தக அறிமுகம்: Are Women Human? எழுதிய Catharine MacKinnon உடன் பேட்டி.

  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: அக்னி நட்சத்திரத்துக்கும் சுற்றுச்சூழல் வெப்பமாவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் என்று சொன்னால் அறிவியலாளர்களுக்கு ஆப்படிக்கப்படுகிறது.

  • அராபிய செய்திகள்: சவூதியில் உள்ளாடைகளை விற்பதற்கு இனி பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்கிறார்கள்.

  • நியு யார்க் டைம்ஸ்: நான் விரும்பிப் பார்க்கும் 'வெஸ்ட் விங்' முடிவுக்கு வருகிறது.

  • சூழலியல் தூய்மை: மகிழுந்தில் இருந்தும் நச்சுப்பொருட்கள் என்னவென்று தெரியுமா?

  • ஆன்லைன் வாய்ஸ்: எழுத்தாளர் சுஜாதாவுடன் செவ்வி.

  • எம்.ஐ.டி. vs கலிஃபோர்னியா பல்கலை: திருட்டு படவா என்று சொல்லலாமா? (கல்லூரிகள் பெண்களைக் கவர்வதில்தான் சண்டை வரும்; இவர்கள் கவர்ச்சியில்லாத பீரங்கியை அல்லவா கடத்துகிறார்கள்.)



    | |

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு