திங்கள், ஏப்ரல் 17, 2006

Dalit's State in Tamil Nadu's (un)Reserved Constituencies

இன்றைய பிபிசி தமிழோசையில் இருந்து:

பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் :: தலித் பிரிவைச் சார்ந்த மக்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இப் பிரிவை சேர்ந்த மக்களுக்காக தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் தலித் பிரிவுகளைச் சார்ந்த வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.

பொதுத் தொகுதிகளில் தலித்துகள் நிற்பதற்கு தடை ஏதும் கிடையாது என்றாலும் பெரும்பாலான சமயங்களில் அரசியல் கட்சிகள் தத்தம் கட்சிகளில் உள்ள தலித் மக்களுக்கு பொதுத் தொகுதிகளில் நிற்க வாய்ப்புக் கொடுப்பதில்லை. இந் நிலையில் பொதுத் தொகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள இரண்டு தலித் வேட்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த பெட்டகமத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

தயாரித்து வழங்கியவர்: டி என் கோபாலன்.


பிபிசியை இன்றே கேட்கத் தவறியவர்களுக்காக, ஒலிக்கோப்பு: மெகா அப்லோட்எம்பி3 பதிவை இறக்கிக் கொள்ள விரும்புபவர்களுக்கு சில குறிப்புகள்:
1. மெகா அப்லோட் தட்டியவுடன் 'Please Wait for 45 Seconds' என்று படுத்துவார்கள்.

2. காலமெல்லாம் காத்திருந்தபின் 'AdBrite'இன் விளம்பரம் பிரதானமாகத் தெரியும். (MegaUpload Links என்று சோத்தாங்கை பக்கம் கேர்ள்ஃப்ரெண்ட், முடிகொட்டல், மங்காத்தா விளம்பரங்கள் தெரியும்.)

3. விளம்பரங்களில் தடுமாறி சுட்டாமல், ஆரஞ்சு மிட்டாய் கலர் 'X' அழுத்தி அந்த சாளரத்தை மட்டும் மூடவும்.

4. திரை விலகியதும் 'Click here to download' என்னும் பொத்தான் கிடைக்கும்... அப்பாடா... இறக்க ஆரம்பித்த பின் குளம்பி அருந்த செல்லலாம் (Filesize: 12.2 MB).


பிகு: டோட்டல் ரெக்கார்டர், மெகாஅப்லோட் போன்ற படுத்தல்கள் இல்லாத ஒலிப்பதிவு செய்யும் நிரலி, கோப்புகளை ஏற்றும் வலையகம் சொல்வோருக்கு முன்கூட்டிய வணக்கங்கள்.
| |

2 கருத்துகள்:

பாலா, அது பிரிமியம் அக்கவுண்ட் கேட்குதுப்பா :(, உங்ககிட்ட இருக்கா? இருந்தா கொஞ்சம் கொடுங்கப்பா, நான் யார் கிட்டயும் சொல்லல :), இல்லையானா zshare தளத்தில் போட்டு இணைப்பு கொடுங்கப்பா, அது கொஞ்சம் ஈஸியா வருது :(
ஸ்ரீஷிவ்...

Please try the following:
1. click on the link: http://www.megaupload.com/?d=QSLXDL2O
2. There will be a button - 'Click here to proceed' : Either click on it (or) wait for some time
3. 'Please Wait 45 seconds' box on the right side
4. Once patiently waited, close (X) the Megaupload Links (The AdBrite frame window on the right hand side)
5. 'Click here to Download' button will be beneath this 'AdBrite' window. (& the link will be like: http://www25.megaupload.com/files/36e3e5ce2a962b0e454f825ce2f4e1ad/Dalit_state_Thani_BBC.mp3 - Note: the above MP3 link is session based; so will expire soon)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு