வெள்ளி, மே 19, 2006

Day with a Difference & BlogDesam

Happy Birthday! :: தினம் ஒரு கவிதை யாஹூ குழுமத்தின் மூலம் பரிச்சயம் ஆனவர்களில் ப்ரியாவும் ஒருவர். தினந்தோறும் Day with a Difference என்னும் மின்மடலை கடந்த மூன்று/நான்கு வருடங்களாக அனுப்பி வருகிறார்.

சிந்தையை மேம்படுத்தும் மேற்கோள், புத்தகங்கள்/பதிவுகளில் இருந்து ரசனையான பத்தி மற்றும் அறிவை விசாலப்படுத்தும் தகவலுடன் அனுதினம் அனுப்பி வந்தவர், தற்போது வலைப்பதிந்தும் வருகிறார்.

பிரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!BlogDesam - IndiBlogs Portal

 • சுன்சுனா,
 • மைடுடே,
 • இண்டிப்ளாக்,
 • சுலேகா,
 • தேஸிப்ளாக்ஸ்
  என்று நிறைய பேர் இருப்பதாலோ என்னவோ, ப்ளாக்தேசம் இன்னும் பரவலாகப் புகழ் அடையவில்லை?!

 • கண்ணுக்குப் பழக்கமான, (ஆனால் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமான) வடிவமைப்பு உடையது

 • மற்ற எந்த (ஆங்கிலத் தொகுப்பகங்கள்) வலையகத்திடமும் இல்லாத மறுமொழி நிலவரத்தைக் காட்டுவது

 • வலைப்பதிவரே ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்துவது (பெரும்பாலானவற்றில் வலைப்பதிவை பொத்தாம் பொதுவாக 'அரசியல்', 'விளையாட்டு' என்றுதான் ஒரேயடியாக வகைப்படுத்த இயலுகிறது.)

 • ஒவ்வொரு category-க்கும் தனித்தனியே செய்தியோடை விடுவது

 • வலைப்பதிவை எளிதில் அடையாளம் காட்ட ஒவ்வொரு பதிவுக்குப் பக்கத்திலும் ஆசிரியரின் உருவம் தோன்றுவது

 • வாசகரின் கோபத்தைப் பதிவு செய்வதற்கு '-' வாக்குகளோ, பிறருடன் பகிர நினைப்பதை செயலாக்குவதற்கு '+' வாக்குகளோ போட சொல்வது

 • தமிழ்மணம் போல் இல்லாமல் தானியங்கியாக பதிவுகளைக் கண்டெடுப்பது (manual vs automatic aggregation)

 • கருவிப்பட்டி எல்லாம் நிறுவாமலேயே, மறுமொழி கலவரத்தை வாசகர்களுக்கு பிரகடனம் செய்ய முடிவது...

  சாம்பார் பந்தோக்கு / அஞர் அறிஞர் / உடனடி குளம்பி / கிருபா / ஆண்டி போன்ற பதிவுப்பரிபாகிகளும் ஜோதியில் ஐக்கியமானால் வலை தேசமே களை கட்டும் :-)

  ப்ளாக் தேசத்தில் இணைய...  | | | |

 • புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு