சனி, மே 06, 2006

Engal Anna Supports Vijayakanth & Murasu Icon



அறிஞர் அண்ணா ஆதரிக்கும் முரசு ஒலி


  1. இசைக்கு அடுத்தபடியாகத் தமிழரின் செவிக்கும் சிந்தனைக்கும் இனிமை பயப்பதாகும்

  2. போர்க் கருவியாக மட்டுமல்ல, புகழ்க்கருவியாக, கொடை அறிவிக்கும் கருவியாகக் கொள்ளப்பட்டு தமிழகத்தில் ஏற்றம் பெற்றிருந்த ஒன்றாகும்.

  3. கேட்டுத் தமிழர் இன்புறுவர்; மாற்றார் மருளுவர்; இறுதி வெற்றி பெற்றுத் தமிழர் மகிழ்ச்சி கொள்வர்.

  4. வீரத்தினை விளக்கிற்று; வீண் ஆரவாரத்தை ஆர்ப்பரிப்பைக் காட்டும் கருவியாக இருந்ததில்லை.

  5. கேடு களைந்திட விழைவோருக்கு, நாடு வாழ்ந்திட வழி காண விரும்புவோருக்கு, தேவைப்படும் எழுச்சியைத் தரவல்லது.

  6. தம்பியின் முரசு தன்னைச் சிறிது போழ்து தட்டி மகிழ்கின்றேன்.

  7. இன்று மீண்டும் தமிழர் தன்னரசு பெற்றுத் தரணியில் தலை நிமிர்ந்து வாழ்ந்திட நடாத்தப்பட்டு வரும் விடுதலைக் கிளர்ச்சிக்கு ஓர் எழுச்சி முரசாக அமைந்து பணியாற்றி வருகிறது.

  8. இன்று நமது நாடு, மலர்த்தோட்டமாகவுமில்லை; நமது அரசும் நடத்திடவுமில்லை. எனவேதான் 'முரசு' தேவைப்படுகிறது.

  9. 'போர் முரசு' - இதன் மூலம் கிடைக்கும் எழுச்சி, வீடெல்லாம் விழா என்று கூறத்தக்க விடுதலையைப் பெற்றிட, நமக்கு ஆர்வம் தரும் - தந்து வருகிறது. அந்த ஆர்வத்தின் வளர்ச்சி, வெற்றியை நமக்கு அளித்திடும். அந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறோம்.

அண்ணாதுரை
நன்றி: 1960, 61, 62 - முரசொலி - பொங்கல் மலர்கள்

நமீதா அறிமுகம் செய்த 'எங்கள் அண்ணா' விஜய்காந்த்தின் முரசு ஒலிக்க செய்வீர்.




| |

2 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு