How The Da Vinci Code Doesn't Work
1. Howstuffworks : புத்தகத்தை சேரியமாய் எடுத்துக் கொண்டு கழலாக்கட்டை சுற்றுபவர்களுக்காக, 'டா வின்சி கோட்' நாவல் ஒரு கட்டுக்கதை என்பதை இன்ச்... இன்ச்சாக அலசி 'புனைவு'தான் என்பதை நிரூபிக்கிறார்கள். (வலைப்பதிவில் சிறுகதை எழுதியவுடன் 'சொந்த அனுபவமா' என்று கேட்பார்கள்; இது மாதிரி வலைப்பதிவரின் சிறுகதைகளையும் கட்டுடைத்தால் புண்ணியமாப் போகும்).
2. Conspiracy theory : வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு கோபம் வருகிறது.
3. C.S. Lewis's message to "Da Vinci Code" : விசுவாசிகளின் நம்பிக்கையை ஐயுற வைக்குமா?
4. FO : நல்லவேளை... 'இருவர்' திரைப்படத்தை கலைஞர் பார்த்து பரிசீலித்து பதுக்க வேண்டியதை பரிந்துரைத்து, பின் வெளியிட்டது மாதிரி, லியோனார்டா டா வின்சி பார்த்து ஒப்புதல் அளித்தால்தான் 'டா வின்சி கோட்' திரைப்படம் வெளியிட முடியும் என்று தடா போடாமல் விட்டார்களே! (முதல் மூன்றும் படிக்க நேரம் கிடைக்காவிட்டால், இந்த கார்டியன் பத்தியை மட்டும் படிக்கலாம்.)
Sir Ian McKellen suggested that perhaps there should be a warning printed at the beginning of the Bible saying that some of that might be fiction; for example, the walking on the water.
News | Da Vinci Code | தமிழ்ப்பதிவுகள்
>> நல்லவேளை... 'இருவர்' திரைப்படத்தை கலைஞர் பார்த்து பரிசீலித்து பதுக்க வேண்டியதை பரிந்துரைத்து, பின் வெளியிட்டது மாதிரி, >>
ஏன்? 'பம்பாய்' படத்தை எடுக்கும்போதும் - அதன்பிறகு முடித்துவிட்டும் - படத்தை சிவசேனா தலைவர் 'பால் தாக்கரே'விடம் 'ஆலோசனை' பெற்றும்,போட்டுக்காட்டியும் - அனுமதி பெற்றபிறகு வெளியிட்ட அறிவுஜீவி மணிரத்னத்தை உமக்கு நினைவுக்கு வரவில்லையா?
சொன்னது… 5/19/2006 12:56:00 PM
பாலா,
அழகான தொகுப்பு.
//let's end with a simple coded message to the book and the film and to those who insist on taking any of its nonsense seriously: FO.// WOW
நம் வலைப்பதிவாளர்கள் பலரும் டான் பிரவுன் நாவலை கற்பனை என ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதைப்போல ஒரு தொகுப்பை நானும் போட நினைத்தேன், நீங்கள் தந்திருப்பது அருமை.
Conspiracy theoryக்கும் உண்மைக்கும் பல நேரங்களில் வித்தியாசம் தெரிவதில்லை. சில சங்க கால பாடல்களை வைத்துக்கொண்டு கணிணியை தமிழன்தான் கண்டுபிடித்தது எனச் சொல்லுவது எவ்வளவு அபத்தமானதோ அதேபோலத்தான் டான் பிரவுனின் நாவலும் இருக்கிறது.
சொன்னது… 5/19/2006 01:20:00 PM
நியோ... நினைவூட்டலுக்கு நன்றி :-)
சிறில் __/\__
சொன்னது… 5/19/2006 01:35:00 PM
கருத்துரையிடுக