Bombay - Mani Rathnam
ஞாயிறு மதியம் சன் டிவியில் திரையிடப்பட்ட 'பம்பாய்'. முதல் முக்கால் மணி நேரம் தவறவிட்டுவிட மிச்சத்தை அணு அணுவாக DVR-இல் ரசித்து பார்க்க முடிந்தது. படத்தின் இறுதியில் cliche-வாக கமலும் கபீரும் பெற்றோருடன் இணைந்தாலும், உணர்ச்சிகரமானப் பாடலில், நம்பிக்கையையும் சோகத்தையும் பச்சாதாபத்தையும் கலவையாக நிறுத்தி மௌனித்திருந்தேன்.
ரொம்ப இயல்பான வசனங்கள்:
'ராம்' என்னும் பெயர் பொறித்த செங்கற்கள் வேண்டுமென்று பாயிடம் கேட்கும் தெனாவெட்டு ஆகட்டும்; அதே பாய், தன்னை அண்ணன் என்று சொல்லிக் காப்பாற்றியவுடன் 'எப்படிய்யா' என்று நெகிழ்வதில் ஆகட்டும்; கிட்டி வந்து விட்டார் என்று தெரிந்தவுடன் உருத்திராட்சக் கொட்டையுடன் விபூதிப் பட்டை போடும் குறும்பில் ஆகட்டும்; சைவப் பிள்ளையாக நாசர் கோபத்தையும் வெறுப்பையும் மனிதத்தையும் நிறுத்தினார்.
படத்தின் இறுதியில் ஒலிக்கும் 'மலரோடு மலர்'-இன் கடைசி வரி...
மொழியோடு மொழி சேரட்டும் : Malarodu Malar - Bombay
Tamil | Bombay | Sun TV
uh...oh... :-((
'விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்' என்பதுதான் சரி. நன்றி!
[சுய குறிப்பு+ப்ரிஸ்க்ரிப்ஷன்: சாதனா சர்கம், உதித் நாராயண் தமிழில் பாடுவதைக் கேட்டுக் கேட்டு உச்சரிப்பு புரிதலே மறந்து போயிருக்கிறது; தொடர்ச்சியாக நாலு நாளைக்கு 'உங்கள் சாய்ஸ்' உமா, 'நினைவுகள்' அம்மு, 'திரை விமர்சனம்' ரத்னாவின் தமிழை மட்டும் கேட்டு வரவும்]
சொன்னது… 6/09/2006 08:38:00 AM
நல்லா இருக்கு.
ஆனாலும் கவுண்டமணி காமெடி போல அர்விந்த்சாமி பர்தா அணிந்து மனீஷா கொய்ராலாவோடு படகில் போவது, கூட வரும் பெண்கள் அவரை அவர்கள் நண்பி என்று நினைத்து, பானுவை பத்திரமா புடிச்க்கோடி என்று சொல்வது எல்லாம்.. ரொம்ப ஓவர்.
மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் இதை செய்யலாம், மணிரத்னம் ??
பெயரில்லா சொன்னது… 6/09/2006 08:53:00 AM
நாசர் : நா உயிரோட இருக்கிறவரை, இந்த கல்யாணம் நடக்காது.
அரவிந்தசாமி : அது வரைக்கும் என்னால காத்திட்டு இருக்க முடியாது.
இதான் என் ஃபேவரைட்
சொன்னது… 6/09/2006 09:56:00 AM
அந்த படத்தின் அனைத்து வசனங்களும் அருமையான மற்றும் யோசிக்க வைக்கும் வசனங்கள் தான். இதில் என்ன ஆச்சரியம், மணிரத்னம் படத்தில் எப்பொழுதும் Short and Sharp வசனங்கள் தானே.
சொன்னது… 6/10/2006 01:39:00 AM
இந்த படத்தில் ஒரு beauty.
முஸ்லீமான நாசர் இந்துவாகவும், இந்துவான கிட்டி முஸ்லீமுமாகவும் நடித்திருப்பர்.
சொன்னது… 6/10/2006 03:27:00 AM
//இந்த படத்தில் ஒரு beauty.
முஸ்லீமான நாசர் இந்துவாகவும், இந்துவான கிட்டி முஸ்லீமுமாகவும் நடித்திருப்பர்.//
அது ப்யூட்டி இல்லை சீனு சார்.. அது தான் அரசியல்..
இந்துவாக நடித்த முஸ்லீம் நாசர் முஸ்லீம் மதத்தை திட்டுவார்..
முஸ்லீமாக நடித்த இந்து கிட்டி இந்து மதத்தை திட்டுவார்..
எந்த வித பிரச்சனைகளுமின்றி.. அவர்களைக்கொண்டே அவர்கள் பிறந்த மதத்தை திட்டவிடுவது தான் அரசியல்..
anban
யெஸ்.பாலபாரதி
(எடுத்த பணியை முடியும் வரை லாகின் செய்ய மாட்டேன் என்று ப்ளாகர் சாமி மீது சத்தியம் செய்திருப்பதால்.. அனானியாக வரவேண்டியதாகிப்போச்சு)
பெயரில்லா சொன்னது… 6/12/2006 07:00:00 AM
கருத்துரையிடுக