'சிட்டி' பெ. கோ. சுந்தரராஜன்
பிறப்பு: ஏப்ரல் 20, 1910
மறைவு: ஜூன் 24, 2006
வாழ்க்கை
திரைப்பட விமர்சகர்
பட்டதாரி ஆசிரியர்
அகில இந்திய ரேடியோ வானொலி இதழ்ப் பொறுப்பாசிரியர்
அ.இ.ரேடியோ முதுநிலை நிருபர்
வானொலி பணி நிறைவு: 1968
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக சோ. சிவபாதசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றியவர்.
1875இல் "ஆதியூர் அவதானி" - முதல் தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டவர் (சிவபாதசுந்தரத்துடன் கண்டுபிடித்து வரலாற்று முறையிலான முன்னுரை எழுதி 1994இல் வெளியானது)
விருதுகள்
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் இந்தியப் பிரதமரால் கௌரவிக்கப்பட்ட தமிழறிஞர்
பிரபல மணிக்கொடி எழுத்தாளர்
1989இல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 'ரோல் ஆஃப் ஹானர்' விருது வழங்கப் பெற்றவர்.
'தமிழ் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்' - சோ சிவபாதசுந்தரத்துடன் எழுதிய நூலுக்கு 'இலக்கியச் சிந்தனை' விருது பெற்றவர்.
நூல்கள்
அந்தி மந்தாரை (சிறுகதைத் தொகுப்பு)
சில விஷயங்கள் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
கண்ணன் என் கவி (கு.ப.ரா.வுடன் சேர்ந்து பாரதியார் படைப்புகள் பற்றி எழுதிய திறனாய்வு)
தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி (சிவபாதசுந்தரத்துடன் சேர்ந்து எழுதிய இலக்கிய வரலாறு)
நடந்தாய் வாழி காவேரி (தி ஜானகிராமனுடன் சேர்ந்து எழுதிய பயணநூல்)
தமிழ் மொழிபெயர்ப்புகள்
கே ஏ நீலகண்ட சாஸ்திரி
Verrier Elwin
Lester Brown
JS Pruthi
ஆகியோர் நூல்கள்
ஆங்கிலப் படைப்புகள்
தி லைஃப் ஆஃப் சத்தியமூர்த்தி
தி பரமாச்சார்யா
சிட்டி | Tamil Literature | Chitti
'சிட்டி' பற்றி சிரத்தையோடு பல தகவல்/கட்டுரைகளை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.
சொன்னது… 6/24/2006 06:38:00 AM
கருத்துரையிடுக